recent posts...

Wednesday, October 17, 2007

பொஹத் பொஹத் அச்சீ ஸாங் ஹே!

1960ல் வெளி வந்த Mughal-E-Azam படம் பாத்திருக்கீங்களா? சமீபத்தில், அந்த படத்தை black & whiteலிருந்து, கலருக்கு மாற்றி ரீ-ரிலீஸ் செஞ்சாங்க.

கருப்பு வெள்ளையில் இருந்த ஒவ்வொரு ஃபிலிமுக்கும், கலர் கொடுத்து, வண்ணப் படமா மாத்திருக்காங்க. இந்த படத்துக்கு செஞ்ச வேலையைப் பார்க்கும்போது, நம்ம ஷங்கர் ரஜினிய 'வெள்ளைத் தமிழனா' ஆக்கினது பெரிய மேட்டரே இல்லன்னு தெரியுது.

அந்த காலத்துலயே ப்ரமாண்டமான முறையில் எடுக்கப்பட்ட படம் மொகல்-ஈ-ஆசாம்.
அக்பரின் புதல்வன் ஜஹாங்கீருக்கும், நாட்டியத் தாரகை அனார்கலிக்கும் இடையிலான காதலும், அதை அக்பர் எதிர்ப்பதும், காதலர்கள் பிரிவதும் கதைக் களம்.

Naushad தெரியுமில்ல? பின்னோ பின்னுன்னு பின்னியிருப்பாரு பாடல்களை.

ஒன்பது வருஷம் எடுக்கப்பட்ட படமாம். Sholay வரும்வரை, அதிக வசூல் பெற்ற படமாய் இருந்தது. இப்பொழுது, இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

பலரின் Top 10ல், கண்டிப்பாய் இடம் பெற்றிருக்கும் படம் இது.

அனார்கலியாக நடித்த மதுபாலா ரொம்ப அழகா இருப்பாங்க.

லதா மங்கேஷ்கரின் ஒவ்வொரு பாடலும் தெவிட்டாத இன்பம்.

(டைட்டில்ல, நம்ம பி.சுசீலா பேரும் போட்டாங்க. அவங்க இந்த படத்துல என்ன பாட்டு பாடியிருக்காங்கன்னு யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க).

இனி வருவது, லதா மங்கேஷ்கரின் மயங்க வைக்கும் குரலில், Naushadன் இசையில், Pyar Kiya Tho Darna Kya பாடலைப் பாருங்கள். பரவசமடையுங்கள்.



இந்த படத்தை எடுத்த ஆசீஃபுக்கு இது இரண்டாவது படமாம். 47 வயதிலேயே மரணத்தை தழுவிவிட்டாராம் இந்த ஜீனியஸ்.

7 comments:

கானா பிரபா said...

நெளஷத் அலி நினைவாக நான் தந்த படையல் இதோ, இப்படத்தின் தமிழ் வடிவத்தையும் பாடலோடு சொல்லியிருக்கிறேன்.

http://radiospathy.blogspot.com/2007/04/blog-post.html

SurveySan said...

மொஹப்பத் கி ஜூட்டி, லதா பாடினதாச்சே?
இந்த படத்துல சுசிலா பாடிருக்காங்களா?

Anonymous said...

பொஹத் பொஹத் அச்சீ ஸாங் ஹே!

SurveySan said...

//பொஹத் பொஹத் அச்சீ ஸாங் ஹே!//

yaya

இலவசக்கொத்தனார் said...

பொஹத்தா? பஹூத்தா? தெரிஞ்ச நாலு வார்த்தைக்குள்ள கன்பியூஷன் பண்றீங்களேப்பா....

SurveySan said...

கொத்ஸ்,

பொஹத்னு தான் நம்ம SPB பாடினாரு.
அந்த பாட்ட கேட்டு வளந்தவன் நானு.

இக்கட சூடு.
http://www.youtube.com/watch?v=ccFWU0h4fDo

Anonymous said...

福~
「朵
語‧,最一件事,就。好,你西.......................................................................................................................................................................................................................................................................................................