recent posts...

Monday, October 01, 2007

உச்சநீதி மன்றத்த மிதிக்கலாமா, அமெரிக்காவுக்கு வழி பண்ணலாமா?

ஒருபக்கம், ஆட்சிப் பொறுப்புல இருக்கரவங்க என்னாத்துக்காக பந்த்து பண்ணனும்னே புரியல.

இன்னொரு பக்கம் 'ராமர் (கட்டாத) பாலம்' உடைக்கப்பட்டு கப்பலு போக வழி பண்ணனுமா வேணுமான்னு புரியல.

என்னதான் தெய்வ நம்பிக்கை இருந்தாலும், ராமர கொத்தனார் ஆக்கர கதையெல்லாம், பீலா மட்டுமேங்கரது நல்லாவே புரியுது.

கடலுக்குள்ள இருக்கர பாரைய இடிச்சா, தெய்வ குத்தமெல்லாம் ஆகாதுன்னும் நல்லாவே புரியுது.

பாரைய ஒடச்சு ஆழம் பண்ணி கப்பலு போக வழி விட்டா, அந்த ஆழம் அப்படியே எவ்வளவு நாளுக்கு இருக்கும்னு புரிய மாட்டேங்குது.

துபாய்ல கடலுக்குள்ள ஒரு ஏழு-ஸ்டார் ஹோட்டலு கட்டினாங்க. டிஸ்கவரில காமிச்சான். சும்மா ஒரு கட்டடம் கடலுக்குள்ள கட்டவே, எம்மாம் செலவு. அவனுங்க தோண்டல, கடல்ல மண்ணு போட்டு மேடு பண்ணி, கட்டடம் கட்டுனாங்க. மணல் அரிக்க அரிக்க, அது மேல போட்டுக்கினே இருக்கணுமாம், ஆயுள் முழுக்க.

நம்மளால அந்தளவுக்கு, மெயிண்டெயின் பண்ண முடியுமா? செலவு பிடிக்காது? லாபகரமா இருக்குமா? ஒன்னியும் புரியல.

ஒரு ஹார்பர் உருவாக்கி, நெறைய கப்பலு வந்து நிக்கர மாதிரி அமஞ்சா, அதனால ஊருக்கு பயங்கரமான லாபம் இருக்கும்னு நல்லாவே புரியுது.

துபாய் ஷேக்கு பணம் போட்டு கட்டரது, கடலுக்குள்ள போச்சுன்னா, மேஸ்த்ரி, கொத்தனாரு எல்லாரோட கையையும் எடுத்துடுவான். அந்த பயத்துலயாவது, ஷ்ரத்தையா, மூழ்காத ஹோட்டல கட்டுவான் அங்க.

இங்க அப்படி முடியுமா? நோண்டர பாரைய, ஸைட்ல விக்கரது முதல் கொண்டு, இவ்ளோ ஆழத்துக்கு இம்புட்டு கமிஷன்னு, பிரிச்சு மேயர கூட்டமில்ல இருக்கு (அடிக்க வராதீங்கப்பா, அம்மா சொன்னதத்தான் சொல்றேன் ;) ). ஒவ்வொரு இன்ச் ஆழத்துக்கு ஒரு கமிஷன்னு போட்டா, தோண்டி தோண்டி, அமெரிக்காவுக்குப் போகவே வழி வந்துடுமே :)

டைட்டிலுக்கே திரும்ப வாரேன்.

பந்த் எதுக்காகங்க பண்றாங்க? ஆட்சீல இருக்கரவங்க, திட்டத்த கரீட்டா போட்டு, "டேய் இதப் பண்ணா நல்லதுடா"ன்னு திட்ட வட்டமா சொல்லிட்டா, நோண்டிட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதானே. அத்வானி என்ன சொன்னா என்னா? ராமர் பேர சொல்லி ஓட்டுப் பிச்சை வாங்கரவருதான் அந்தாள்னு நல்லாவே தெரியுமே. அப்பரம் எதுக்கு மேட்டர இன்னும் ஊதிப் பெருசாக்கி, அத்வானிக்கு இத்த ஆதாயமா மாத்தோணும்?
எவ்வளவோ விஷயம் தெரிஞ்ச மொதலமைச்சுருக்கு இந்த சூட்சமம் கூடவா தெரியாது?

அது சரி, பந்த் பண்ணி பொதுமக்களுக்கு எந்த இடைஞ்சலும் செய்யக் கூடாதுன்னு ஆணித்தரமா ஒரு தீர்ப்பு சொல்லியிருக்காங்க உச்சநீதி மன்ற நாட்டாமைகள்.

லேட்டா சொன்னாலும், நச்சுனு ஒரு தீர்ப்பு இல்லியா இது? கொண்டாட வேண்டிய விஷயமில்லயா அது?

ஆனா வூனான்னா பஸ்ஸ நிறுத்தி, சாதாரண முனுசாமி,குப்புசாமி, கந்தசாமிக்கு டார்ச்சர் கொடுக்கர இந்த பந்த்து இனி எந்தப் பயலும் பண்ண முடியாதுங்கரது சூப்பர் மேட்டராச்சே கண்ணுகளா.

அத்த ஏன் நம்ம ஆளுங்க சில பேர் எதிர்க்கறீங்க? ஒன்னியும் பிரிய மாட்டரதே.

கட்சி ஆளா பாக்காம, சாதாரண ப்ரஜையா யோசிச்சு சொல்லுங்களேன்.

நானு எஸ்கேப்! நீங்க யோசிச்சு வாக்குங்க! :)



நல்லாருங்க!

பி.கு: ராமாயணம் நடந்துருக்குமோன்னு ஒரு டவுட்டு தருமியின் இந்த பதிவப் பாத்தப்பரம் வருது. அதப் பத்தி அப்பாலிக்கா ஒரு பதிவு போடறேன் ;)

13 comments:

Anonymous said...

என்ன தீர்ப்பு போட்டு என்ன பண்ண. பஸ்ஸு ஓடலல்லா.

SurveySan said...

ஓடலியா? ஓட விடலல்லா ;)

PRINCENRSAMA said...

நீங்கள் கொடுத்திருக்கும் வாய்ப்புகளிலேயே உங்களின் கருத்து இருக்கிறது.
'சூப்பர் தீர்ப்பு' என்றொரு வாய்ப்பு!
'மகா மட்டமான தீர்ப்பு. பந்த்து எங்கள் பிறப்புரிமை' என்று இன்னொரு வாய்ப்பு... இதுவா சர்வே செய்வதன் லட்சணம்.

இரண்டாவது வாய்ப்பு- முற்றிலும் நோக்கத்தைக் கேலி செய்வது.
பந்த் செய்ய வேண்டும் என்பதல்ல எங்கள் நோக்கம்; அல்லது அதுவல்ல எங்கள் பிறப்புரிமை.
எங்கள் பிறப்புரிமைகளைப் போராடிப் பெறும் ஒரு வடிவம் தான் பந்த். ஆக, இரண்டாவது வாய்ப்பு உங்கள் கருத்தையே வலியுறுத்துகிறது..
எனவே, நான் புறக்கணிக்கிறேன் உங்கள் வாக்கெடுப்பை!

SurveySan said...

ப்ரின்ஸ்,

//இரண்டாவது வாய்ப்பு- முற்றிலும் நோக்கத்தைக் கேலி செய்வது.
பந்த் செய்ய வேண்டும் என்பதல்ல எங்கள் நோக்கம்; அல்லது அதுவல்ல எங்கள் பிறப்புரிமை.
எங்கள் பிறப்புரிமைகளைப் போராடிப் பெறும் ஒரு வடிவம் தான் பந்த்//

கிண்டல் செய்யப் போட்டதல்ல இரண்டாவது ஆப்ஷன்.
உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்க்கும் பதிவர்கள் நம் மத்தியில் இருப்பதனால், 'பந்த் ஒரு பிறப்புரிமை' அதை தடை செய்ய யாருக்கும் தகுதி இல்லை என்ற கண்ணோட்டத்தில் போட்டது 2nd option;)

sorry, if it didnt come out as I expected it to ;)

மாசிலா said...

//அமெரிக்காவுக்கு வழி பண்ணலாமா?"//
இதுக்கு இன்னாங்க அர்த்தம்?

இத பத்தி பதிவுல ஒன்னும் பேசாமலே விட்டுட்டீங்களே! வேண்டுமென்றே சும்மா வெளையாட்டுக்கு மறந்துட்டீங்களா?

SurveySan said...

மாசிலா,

இத்த கவனிக்கலியா?

//ஒவ்வொரு இன்ச் ஆழத்துக்கு ஒரு கமிஷன்னு போட்டா, தோண்டி தோண்டி, அமெரிக்காவுக்குப் போகவே வழி வந்துடுமே :)
//

;)

சுட்டுவிரல் said...

திரு.மு.க மதநம்பிக்கையைப் புண்படுத்திவிட்டதாகப் பேசுபவர்கள் சிந்திக்கவேண்டிய கருத்து என்னவென்றால் 'மதநம்பிக்கை' என்ற பெயரில் புண்ணாக்கு காரணம் காட்டி நாட்டின் வளர்ச்சியைத் தடுப்பதன் மூலமாவது மத அரசியல் செய்து தாங்கள் முன்னிலை அடைய நினைத்த பரிவாரக்கூட்டத்துக்கு பதிலடியாகத்தான்.

இப்படி கடினமாகப் பேசியிருக்காவிட்டால், இல்லாத இராமர்பாலத்தை அடிவாரமாகக் கொண்டு மதவெறி வன்முறைக் கும்பல் தமிழ்நாட்டிலும் தன் அரசியல் இருப்பைக் கட்டத்துவங்கிவிடும் என்பதால்...
'எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது' என்று ஏற்றுக்கொள்ளவேண்டியது தான்.

சர்வே போடுவதில் சிறந்து விளங்குவதாக நீங்கள் நினைத்தால்....

ஆதாம்பாலம் என்பது
1). இராமர் கட்டியது..
2). அறிவியலாளர் சொல்வது போல கடலில் உள்ள 800 மணற்திட்டுக்களில் ஒன்று - அவ்வளவு தான்
3). கருத்தில்லை

என்று கருத்துசர்வே வையுங்களேன்.

SurveySan said...

SuttuViral,

சற்றுமுன் ஏற்கனவே அந்த சர்வே போட்டுட்டாங்க.

சிவபாலன் said...

Surveysan,

Dredging is continuous process. It will be billed in each ship crossing by. It will done by the Dredging ships periodically. in each ports we have to do this no matter whether you are a rich or poor country.

One important things, which Ms.Jey, rightly pointed out is "FLAG SHIP". If you want to use the Sethu, then the Ship has to use Flag Ship. (Which is normally happened in Ports.. But not more than 10 NM.)

But, Using the Flag ship for entire Sethu, may be cost consuming.

But, still, lot of ships prefer to. Again I guess so..(This may be big question mark)

So pls, do not jump into any conclusion. Please.. eventually it may lead to misguide your valuable readers .

Hope you understand this..

Thanks

Regards
Sivabalan

சிவபாலன் said...

NM means nautical mile. A unit of length used for maritime and aviation purposes.

1 nautical mile = 1852 metres exactly.


Thanks

Sivabalan

SurveySan said...

Sivabalan,

Thanks for the thoughtful comments.

I wasnt trying to mislead anyone. I raised my concerns on this whole issue.

I understand dredging will have to be a continuous process.

But, if we are doing things against nature, we will have spend a lot more money to keep things as desired.

some countries can afford it. I am not sure about ours. hope we get enough traffic lined up to pay for all this.

SurveySan said...

results in 2 days.

Anonymous said...

result announce pannaliyaa?