recent posts...

Friday, October 12, 2007

75 வருஷத்துல வந்த டாப் 10 தமிழ் படங்கள்

கடந்த 75 வருட தமிழ் சினிமாவின், சிறந்த பத்து படங்கள் இவைன்னு, குமுதத்தில் வரும் அரசு பதில்களில் சொல்லியிருக்காங்க.

1. சந்திரலேகா
2. நெஞ்சில் ஓர் ஆலையம்
3. அவள் அப்படித்தான்
4. தண்ணீர், தண்ணீர்
5. உதிரிப் பூக்கள்
6. பதினாறு வயதினிலே
7. மூன்றாம் பிறை
8. முதல் மரியாதை
9. நாயகன்
10. காதல்

எல்லாம் முத்தான படங்கள் தான். ஓவர் சினிமாத் தனம் இல்லாத, ஓரளவுக்கு, யதார்த்த படங்கள்.

எல்லா படமும் பாத்துட்டீங்களா? உங்களுக்குத் தெரிஞ்ச டாப் 10 எது?

சொல்லிட்டுப் போங்க.

நல்ல படங்கள் தந்த எல்லா படைப்பாளிகளுக்கும் சல்யூட்ஸ்!

55 comments:

கோவி.கண்ணன் said...

தில்லானா மோகனாம்பாள் இல்லாத கருத்துக்கணிப்பா ?

நான் வரலை !
:)

SurveySan said...

கோவி, கருத்துக் கணிப்பில்லீங்க இது.
வெறும் கருத்து மட்டும் :)

தி.மோகனாம்பாள் 'நல்ல சினிமா' கெடையாது. 'நல்ல நாடக சினிமா'ன்னு வேணா சொல்லிக்கலாம்.

maruthamooran said...

நான் பார்த்த பத்து சிறந்த படங்கள்.

1. நெஞ்சில் ஓர் ஆலயம்
2. உதிரிப் பூக்கள்
3. பதினாறு வயதினிலே
4. நாயகன்
5. ஆட்டோகிராப்
6. முதல் மரியாதை
7. மொழி
8. காதல்
9. அழகி
10. வெயில்.

SurveySan said...

மருதமூரான்,

நல்ல லிஸ்டு.
ஆனா, உங்களின் மூன்று படங்கள் அரசு லிஸ்டில் இருக்கும் மூன்று படங்களோட அளவுக்கு இல்லன்னே நெனைக்கறேன்.

சந்திரலேகா = ஆட்டோகிராப்
தண்ணீர் தண்ணீர் = அழகி
அவள் அப்படித்தான் = வெயில்

maruthamooran said...

நண்பர் சர்வேசன்,
நான் குறித்த மூன்று படங்களையும் பார்க்கவில்லை.
நான் பார்த்தவற்றில் சிறந்த தமிழ் படங்களையே குறிப்பிட்டுள்ளேன்.

தென்றல் said...

//தில்லானா மோகனாம்பாள் இல்லாத கருத்துக்கணிப்பா ?
//
அதான?!

SurveySan,

//தி.மோகனாம்பாள் 'நல்ல சினிமா' கெடையாது. 'நல்ல நாடக சினிமா'ன்னு வேணா சொல்லிக்கலாம்.//

அப்படியா? கி.மோகன் சொன்னதையும் கொ சம் பாருங்க..
Why I like... Thillana Mohanambal

SurveySan said...

மருதமூரான்,,

//நண்பர் சர்வேசன்,
நான் குறித்த மூன்று படங்களையும் பார்க்கவில்லை.
நான் பார்த்தவற்றில் சிறந்த தமிழ் படங்களையே குறிப்பிட்டுள்ளேன்//

ஓ.கே. நான் ஏதாவது சொல்லணும்முல்ல. அதான் சொன்னேன் ;)


தென்றல்,
தி.மோகனாம்பாள் தகவலுக்கு நன்றி.
நல்ல படம்தான், ஆனா, டாப்10ல் இருக்க்கும் படங்களுடன் ஒப்பிடும்போது, கொஞ்சம் பின் தங்கிதான் இருக்குதுங்கரது என் கருத்து.
;)

K.R.அதியமான் said...

What about Mahaanadhi, Varumayin Niram Sihappu, Hey Raam ? also Keladai Kannmani, Rytham, Anbe Sivam..

is Kaadal so remarkable ?

SurveySan said...

Adhiyaman,

//What about Mahaanadhi, Varumayin Niram Sihappu, Hey Raam ? also Keladai Kannmani, Rytham, Anbe Sivam..//

we are talking about the TOP10 since we started making movies.
All the movies you mentioned are good ones ( except HeyRam, Rhythm ;) as per me ) - but not as good as the ones in TOP10. I liked Keladi Kanmani. it was very subtle. mahanadhi was good too - but not as good as nenjil or aalayam ;)

//is Kaadal so remarkable ?//

Kadal was awesome - no black spots.

Sundar Padmanaban said...

குமுதத்துல அதைப் பார்த்தேன். எல்லாப் படங்களையும் பாக்காமயே Top 10 எவையென்று என்னால் சொல்ல முடியாது. பார்த்த வரையில் சட்டென்று தோன்றிய படங்களை (பிடித்தவை என்ற தகுதியின்கீழ்) மட்டும் கீழே பட்டியலிட்டிருக்கிறேன்.

1. மகாநதி
2. சலங்கை ஒலி
3. தண்ணீர் தண்ணீர்
4. வீடு
5. தேவர் மகன்
6. குருதிப்புனல்
7. பேசும் படம் (இதை எந்த மொழியின் Top10-லும் சேர்க்கலாம். :-))
8. அழகி
9. அபூர்வ சகோதரர்கள்
10. ஹே ராம்

கமல் ரசிகனாக இருப்பதில் ஒரு பெரும் பிரச்சினை இருக்கிறது! :-(

SurveySan said...

வற்றாயிருப்பு சுந்தர்,

குருதிப்புனல் அருமை.

தேவர் மகன் - god father மாதிரி ஒரு trend setter movie ஆகியிருக்கவேண்டிய படம். ஆனா, சில காட்சிகள், லோ-பட்ஜெட்ல எடுத்து சொதப்பிட்டாங்க. dam ஒடஞ்சு வீடு நாசமாகரது எல்லாம் சொதப்பல்ஸா எடுத்திருப்பாங்க.

அபூர்வ சகோதரர்களை டாப்10ல் சேர்த்ததை வன்மையாக கண்டிக்கிறேன் ;)

Anandha Loganathan said...

எதன் அடிப்படையில் (criteria) குமுதத்தில் தேர்வு செய்தார்கள் என்று தெரியவில்லை. இருந்தாலும் என்னோட தேர்வு இதுதான் (பார்த்த படங்களில்)

1) சந்திரலேகா
2) நாடோடி மன்னன்
3) அன்பே வா
4) பதினாறு வயதினிலே
5) உதிரிப்பூக்கள்
6) அபூர்வ சகோதரர்கள்
7) தேவர் மகன்
8) குருதிப் புனல்
9) சேது
10) அழகி

வெற்றி said...

1.வீர பாண்டிய கட்டப்பொம்மன்
2.திருவிளையாடல்
3.தில்லானா மோகனாம்பாள்
4.தண்ணீர் தண்ணீர்
5.வீடு
6.வைதேகி காத்திருந்தாள்
7.தவமாய் தவமிருந்து
8.மூன்றாம் பிறை
9.பராசத்தி
10.உத்தமபுத்திரன்

சர்வேசரே! 10 க்குள்ள சொல்லமுடியாதய்யா...இன்னும் எவ்வளவோ இருக்கு...பட்டியலை 25 ஆக உயர்த்துங்கோ. :-))

இராம்/Raam said...

வருங்கால சூப்பரஸ்டார்களான விஜய்,சிம்பு,தனுசு,குறளரசன் ஆகியோர் படங்கள் இல்லாத இந்த டாப் 10'ஐ நான் புறக்கணிக்கிறேன்...... :))

இராம்/Raam said...

போன பின்னூட்டத்திலே தெரியாதனமாக ஸ்மைலி போட்டுட்டேன் போலே?? அந்த பின்னூட்டதை படிக்கிற எல்லாரும் அதை சிரிப்புக்கு சொன்னதுன்னு நினைச்சுக்க போறாங்க.....

அந்த ஸ்மைலியை மட்டும் மறைச்சிற முடியுமா சர்வேஸ்....


இதிலே ஒரு ஸ்மைலியும் இல்ல, ஸோ இதுவும் சீரியஸ் பின்னூட்டம், இதுக்கு முந்தினதும் சீரியஸ் பின்னூட்டந்தான்.....

Anonymous said...

Please replace Nayagan with god father from the list. Even they copied the camera angle!

SurveySan said...

ananda loganathan,

//எதன் அடிப்படையில் (criteria) குமுதத்தில் தேர்வு செய்தார்கள் என்று தெரியவில்லை//

criteria - "best movie in the last 75 years." :)

Vetri,

//சர்வேசரே! 10 க்குள்ள சொல்லமுடியாதய்யா...இன்னும் எவ்வளவோ இருக்கு//

naraya irukku. aanaa top10 la paththu dhaan irukkanum ;)

Raam, taken it seriously.
seriously, the so-called future super-stars, orutharum nalla padangal listukku theramaataanga ;)


anony, Nayagan is probably 10% inspired from god-father. copynnaalum, nayagan is very nicely made.

வந்தியத்தேவன் said...

டாப் 10 ல் வரும் படங்கள் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் படங்களாக இருக்கவேண்டும். இந்த வரிசையில் காதலைச் சேர்க்கமுடியாது. ஒரு தடவை பார்க்கலாம் ஆனால் மீண்டும் மீண்டும் பார்க்கும் அளவுக்கு காதல் இல்லை என்பது என் கருத்து.

தில்லான மோகனாம்பாளும் அதே தான். மீண்டும் மீண்டும் பார்க்கக்கூடிய படம் என்றாலும் டாப் 10 ற்குள் வரத் தகுதி குறைவு.

என் படவரிசை 10.
1. சந்திரலேகா.
2.வீர பாண்டிய கட்டப்பொம்மன்
3. பராசக்தி
4. முள்ளும் மலரும்
5. அன்பே சிவம்
6. நாயகன்
7. மொழி
8. காதலிக்க நேரமில்லை ( தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த நகைச்சுவைப் படம் )
9. அழகி
10. மகாநதி

SurveySan said...

//டாப் 10 ல் வரும் படங்கள் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் படங்களாக இருக்கவேண்டும்//

agreed!

3. பராசக்தி
7. மொழி

adikkadi paakka mudiyumaa?
sandhegamdhaan.

Kadhal - I can ;)

சதுக்க பூதம் said...

எஙக ஊரு பாட்டுகாரன், தவசி

SurveySan said...

//எஙக ஊரு பாட்டுகாரன், தவசி
//

what????????? ;)

Doctor Bruno said...

என் கருத்து

1. அன்பே சிவம்
2. சிறைச்சாலை
3. இந்தியன்
4. பேசும் படம்
5. இயற்கை
6. லேசா லேசா
7. பைவ் ஸ்டார்
8. அவ்வை சண்முகி
9. வானமே எல்லை
10. வேதம் புதிது

இன்னும் சில படங்கள்
11. பாரதி
12. இருவர்
13. சேது
14. அலைபாயுதே
15. ஆறிலிருந்து அறுபது வரை

Anonymous said...

Varumayin Niram Sivappu.

SurveySan said...

Dr. Bruno & anony,

We are talking about all-time Top10.
I dont think,
3. இந்தியன்
5. இயற்கை
6. லேசா லேசா
7. பைவ் ஸ்டார்
8. அவ்வை சண்முகி
9. வானமே எல்லை
10. வேதம் புதிது
14. அலைபாயுதே
15. ஆறிலிருந்து அறுபது வரை


are all-time TOPpers :)

Varumayin Niram Sivappu - Nallap adam, but, not all-time topper ;)

வெற்றி said...

சர்வேசர்,
எனது பட்டியலில் சொல்ல மறந்த ஒரு படம் "புதிய பறவை". தமிழ்த் திரை உலகில் அது போல வேறொரு படம் வந்ததாக எனக்கு நினைவு இல்லை. அருமையான பாடல்களும் உள்ள படம்.

படத்தின் கதாநாயகந்தான் கொலையாளி. படத்தில் வரும் M.R.ராதா, செளகார் ஜானகி, சரோஜாதேவி போன்றோர் பொலிஸ் அதிகாரிகள் என்பது படத்தின் கடைசி நிமிடம் வரை தெரியாது. அருமையாக, சஸ்பென்சுகள் நிறைந்த படம் என்பது என் கருத்து.

எனவே அப்படம் கட்டாயம் அதிசிறந்த 10 படங்களுக்குள் வரவேண்டும்.:-))

வெட்டிப்பயல் said...

பராசக்தி இல்லாத லிஸ்டா???

டூ பேட்...

இதுல இருக்குற எல்லா படங்களை விடவும் அது சிறப்பான படம்...

SurveySan said...

வெற்றி,

புதிய பறவை, அருமையான படம். ஆனால், ரொம்பவே சினிமாத்தனம், கடைசி 30 நிமிடங்களில். குறிப்பா, சௌக்கார் மாதிரியே இன்னொருவரை வைத்து சிவாஜியை மடக்குவது கொஞ்சம் ஓவர்.

வெட்டி, பராசக்தி நல்ல படம்தான். ஆனால், டாப்10 all-time?
I doubt it. கோர்ட் சீனும், வசங்களும், சிவாஜியும், ஏ-க்ளாஸ். ஆனா, ஒரு ஸ்டேஜ் ட்ராமா பாக்கர மாதிரி இருக்கும்.

;)

வெட்டிப்பயல் said...

//வெட்டி, பராசக்தி நல்ல படம்தான். ஆனால், டாப்10 all-time?
I doubt it. கோர்ட் சீனும், வசங்களும், சிவாஜியும், ஏ-க்ளாஸ். ஆனா, ஒரு ஸ்டேஜ் ட்ராமா பாக்கர மாதிரி இருக்கும்.

;)//

சர்வேசன்,
இதே மாதிரி இந்த பத்து படத்தையும் நொட்டை சொல்லலாம்...

பராசக்தி ஒரு ட்ரெண்ட் செட்டர்... அதுல வெறும் கோர்ட் சீன் மட்டும் வெச்சி நான் சொல்லலை...

மேலும் தெரிந்து கொள்ள என் விமர்சனம் இதோ

SurveySan said...

வெட்டி,

//பராசக்தி ஒரு ட்ரெண்ட் செட்டர்... அதுல வெறும் கோர்ட் சீன் மட்டும் வெச்சி நான் சொல்லலை...//

பராசக்தி நல்ல படம்தான். ஆனா, ஓஹோங்கரளவுக்கு என்ன இருக்குன்னு புரியல. சிவாஜியின் நடிப்பையும், கருணாநிதியின் வசனுமும் தவிர, வேறு ஒன்றும் பெருசா தெரியல.
ட்ரெண்ட்-செட்டரா? அந்த ட்ரெண்டுல வந்த மத்த படங்கள் என்ன?

எனக்குத் தெரிஞ்சு நொட்டை இல்லாப் படம்னா "நெஞ்சில் ஓர் ஆலையம்" சொல்லலாம். அலட்டலில்லா அற்புதப் படம். ;)

நீங்க பராசக்தி பத்தி அனுபவிச்சு எழுதினது நல்லா இருந்தது.

வெட்டிப்பயல் said...

//SurveySan said...

வெட்டி,

//பராசக்தி ஒரு ட்ரெண்ட் செட்டர்... அதுல வெறும் கோர்ட் சீன் மட்டும் வெச்சி நான் சொல்லலை...//

பராசக்தி நல்ல படம்தான். ஆனா, ஓஹோங்கரளவுக்கு என்ன இருக்குன்னு புரியல. சிவாஜியின் நடிப்பையும், கருணாநிதியின் வசனுமும் தவிர, வேறு ஒன்றும் பெருசா தெரியல.
ட்ரெண்ட்-செட்டரா? அந்த ட்ரெண்டுல வந்த மத்த படங்கள் என்ன?

எனக்குத் தெரிஞ்சு நொட்டை இல்லாப் படம்னா "நெஞ்சில் ஓர் ஆலையம்" சொல்லலாம். அலட்டலில்லா அற்புதப் படம். ;)

நீங்க பராசக்தி பத்தி அனுபவிச்சு எழுதினது நல்லா இருந்தது.//

சர்வேசன்,
பராசக்தி, 16 வயதினிலே எல்லாம் ட்ரெண்ட் செட்டர்...

வெறும் ராஜா கதைகள் வந்த காலத்தில் சமூக சிந்தனையோடு வந்த படம் பராசக்தி...

ஜேம்ஸ்பாண்ட் கதைகள், கௌ பாய் படம்னு (ஜெயசங்கர், ரவிச்சந்திரன் படம் நிறைய இந்த டைப் தான்) வந்த காலத்துல நம்ம மண்ணோட கலச்சாரத்தோட வந்த படம் 16 வயதினிலே...

அடுத்து தெய்வ மகன் அருமையான படம்... நடிகர் திலகம் படங்கள் நிறைய சொல்லலாம்...

SurveySan said...

வெட்டி,

//வெறும் ராஜா கதைகள் வந்த காலத்தில் சமூக சிந்தனையோடு வந்த படம் பராசக்தி...//

ஹ்ம். I agree.

டாப்10ல வரலாமான்னு, படத்தை இன்னுமொரு தரம் பாத்துட்டு சொல்றேன். பாத்து ரொம்ப வருஷமாச்சு.

நெஞ்சில் ஓர் ஆலயம் பாத்திருக்கீங்களா? பராசக்திக்கு நெ.ஓ.ஆ படம் கம்பேர் பண்ணா எவ்ளோ மார்க் போடுவீங்க?


;)

VSK said...

1. சந்திரலேகா
2. கப்பலோட்டிய தமிழன்
3. பாசமலர்
4. உதிரிப் பூக்கள்
5. மூன்றாம் பிறை
6. 16 வயதினிலே
7. முதல் மரியாதை
8. நெஞ்சில் ஓர் ஆலயம்
9. கல்யாண பரிசு
10.பாட்ஷா [The ultimate movie in the real sense!]

SurveySan said...

VSK,

//10.பாட்ஷா [The ultimate movie in the real sense!]///

I have to totally agree with you on this :)

பாட்ஷா மட்டும் இன்னும் கொஞ்சம் துட்டு போட்டு ஹை-பட்ஜெட் படமா எடுத்திருந்தா. god father எல்லாம் பிச்சை வாங்கியிருக்கணும்.
அற்புத கதைக் களம், சீப் துப்பாக்கி, சீப் வெடிகுண்டு, சீப் ஒட்டு தாடி, இதெல்லாமால பெரிய அளவுல வராம போயிடுச்சு.

இன்னிக்கும், படத்த முழுசா பாக்காம அங்க இங்க எழுந்து போக முடியாத படி ஈர்க்கும் படம் ;)

வசந்தன்(Vasanthan) said...

ஹேராம்,
அன்பே சிவம்.
இவையிரண்டும் முதன்மையானவை.

பிறகு மிச்ச எட்டுக்குள்ள 'கமல் இல்லாத படமாகப்' பாத்தால்,
குட்டி,
கருவேலம்பூக்கள்,
முகம்,
ஜூலி கணபதி,
சிலநேரங்களில் சில மனிதர்கள்,
சொல்ல மறந்த கதை
என சில வரும்.

பொழுதுபோக்குப் படமென்று பார்த்தால்
மும்பை எக்ஸ்பிரஸ் எப்போதும் முதலாவதிடத்தில்.
(அடிக்க வராதீங்கப்பா. எனக்கென்னவோ மிகச்சிறந்த நகைச்சுவைப்படமாக இதுதான் இன்றுவரை தெரிகிறது, வெளிவந்த காலத்தைக் கருத்திற்கொண்டால் 'காதலிக்க நேரமில்லை' முந்தலாம்.)

முதன்மை ஐந்துக்குள் தில்லுமுல்லு வரும்.

வற்றாயிருப்பு சுந்தரைப்போல் கமல் ரசிகனென்று சொல்லமாட்டேன். படங்களின் இரசிகன். அவ்வளவே.

SurveySan said...

Vasanthan,

//ஹேராம்,
அன்பே சிவம்.
இவையிரண்டும் முதன்மையானவை.//

ஹ்ம். எனக்குத் தெரிஞ்சு, No Way!

//
ஜூலி கணபதி,
சொல்ல மறந்த கதை
//

அப்படியா? வித்யாசமான ரசிகை உங்களுக்கு.

//பொழுதுபோக்குப் படமென்று பார்த்தால்
மும்பை எக்ஸ்பிரஸ் எப்போதும் முதலாவதிடத்தில்//

நான் இன்னும் பாக்கல. நண்பர்களின் அட்வைஸை ஏற்று. :)

வெட்டிப்பயல் said...

//SurveySan said...

வெட்டி,

//வெறும் ராஜா கதைகள் வந்த காலத்தில் சமூக சிந்தனையோடு வந்த படம் பராசக்தி...//

ஹ்ம். I agree.

டாப்10ல வரலாமான்னு, படத்தை இன்னுமொரு தரம் பாத்துட்டு சொல்றேன். பாத்து ரொம்ப வருஷமாச்சு.

நெஞ்சில் ஓர் ஆலயம் பாத்திருக்கீங்களா? பராசக்திக்கு நெ.ஓ.ஆ படம் கம்பேர் பண்ணா எவ்ளோ மார்க் போடுவீங்க?


;)//

நெஞ்சில் ஓர் ஆலயம் பார்த்திருக்கேங்க. அருமையான படம். இப்ப காதல் மாதிரி ரியாலிஸ்டிக்கான படம் தான். பராசக்தி ஒரு பக்கம்னா பாசமலர், நெஞ்சில் ஓர் ஆலயம் எல்லாம் இன்னொரு பக்கம்...

நான் விட்டதை தலைவர் VSK சொல்லிட்டாரு...

பாட்ஷா நான் நூறு தடவைக்கு மேல பார்த்திருப்பேன். இப்பவும் பார்ப்பேன்... பாட்ஷா நூறு தடவை பார்த்தா ஒரு தடவை பார்த்த எஃபக்ட் தான் ;) அலுப்பே தட்டல...

அதே மாதிரி மைக்கல் மதன காமராஜன், பலே பாண்டியா, காதலிக்க நேரமில்லை, எதிர் நீச்சல், உன்னால் முடியும் தம்பி, தில்லு முல்லு, ஆண்டவன் கட்டளை, உலகம் சுற்றும் வாலிபன், தெய்வ மகன், கேப்டன் பிரபாகரன், நாயகன், அஞ்சலி, இருவர் எல்லாம் நம்ம ஃபேவரைட்...

இது எல்லாம் எத்தனை தடவை வேணா பார்ப்பேன்...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

1. வீடு
2. சந்தியா ராகம்
3. அக்கிரஹாரத்தில் கழுதை
4. உதிரிப் பூக்கள்
5. குருதிப் புனல்
6. ரத்தக் கண்ணீர்
7. புதுப் பேட்டை
8. தில்லு முல்லு
9. பாட்ஷா
10. அவள் அப்படித்தான்.

தறுதலை said...

i1. சிவாஜி
2. அபூர்வ ராகங்கள்
3. பம்பாய்
4. சிவகாசி
5. கரகாட்டக்காரன்
6. நாட்டாமை
7. சின்ன தம்பி
8. சின்னக் கவுண்டர்
9. முதல் பாவம்
10. மாமனாரின் நியாமான இன்ப வெறி

------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது

மர்ம வீரன் said...

வீராசாமி
திருமகன்
பேரரசு
தமிழன்
நரசிம்மா
சிட்டிசன்
பாபா
ஐ லவ் இந்தியா
மீரா
நாட்டுக்கு ஒரு நல்லவன்

இராம்/Raam said...

/Raam, taken it seriously.
seriously, the so-called future super-stars, orutharum nalla padangal listukku theramaataanga ;)//


அப்பிடிங்கீறீங்க... :))

சரி என்னோட லிஸ்ட் சொல்லுறேன்....


1) ஆறிலிருந்து அறுபது வரை
2) 16 வயதினிலே
3) அந்த ஏழுநாட்கள்
4) முதல்மரியாதை
5) நாயகன்
6) வீரபாண்டிய கட்டபொம்மன்
7) பாசமலர்
8) உதிரிபூக்கள்
9) ஆட்டோகிராப்
10) மொழி

தறுதலை said...

1. பராசக்தி
2. புதிய பறவை
3. ரத்தக் கண்ணீர்
4. 16 வயதினிலே
5. உதிரிப் பூக்கள்
6. மூன்றாம் பிறை
7. அன்பே சிவம்
8. நாயகன்
9. முதல் மரியாதை
10. காதல்


-------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது

ஜோ/Joe said...

என்னது ? பராசக்தி படத்துல என்ன இருக்கா ? கிழிஞ்சது கிருஷ்ணகிரி .

ஹேராம் ,அன்பே சிவம் படங்கள் no way -யா? நல்ல ரசனையப்பா உங்களுக்கு!

பாரதிய நவீன இளவரசன் said...

டாப் டென்னில் உள்ள அத்தனை படங்களுமே அருமையானவை...

சினிமா விமர்சனம் பற்றிய ஏறக்குறைய ஒண்ணரையாண்டுகளுக்கு முன்பு நான் இட்ட வலைப்பதிவுல் உள்ள எனது டாப் டென் பட்டியலுடன் இந்தப் பட்டியல் ஒத்துப்போகிறது.

http://bharateeyamodernprince.blogspot.com/2006/04/blog-post_13.html

அந்த எனது பதிவுற்குப் பின்னூட்டமிட்ட சகோதரர் இளங்கோவன் தனது உளப்பதிவில் முதல் இடம் பெற்றிருக்கும் படமாக 'நெஞ்சில் ஓர் ஆலையம்' படத்தைக் குறிப்பிட்டார்.

நீங்களும் அவர் "நெஞ்சில் ஓர் ஆலயம், என் லிஸ்டில் சேர்க்க மறந்த ஒரு fantastic and technically stunning movie.

அந்த மாதிரி touching மூவி அதுக்கப்பறம் வந்ததான்னு தெரியல." என்று சொல்லியிருந்தீர்கள்.

இப்போ.. குமுதம்.

SurveySan said...

Joe,

//என்னது ? பராசக்தி படத்துல என்ன இருக்கா ? கிழிஞ்சது கிருஷ்ணகிரி .

ஹேராம் ,அன்பே சிவம் படங்கள் no way -யா? நல்ல ரசனையப்பா உங்களுக்கு!//

I meant HeyRam, Anbe Sivam are not worth enough to be in Top10, especially HeyRam.

They are good movies - not best.

SurveySan said...

Bharathiya Prince,

//இப்போ.. குமுதம்.//

idhu eppo vandha padam? kelvip padave illiye. i will check it out.

thanks :)

சிவபார்கவி said...

ஹலோ ஒரு நிமிஷம் ...

பாரத விலாஸ்
பாசமலர்
அன்பே வா
ஜானி
முந்தானை முடிச்சூ
முதல் மரியாதை
கடலோர கவிதைகள்
ஒரு கைதியின் டைரி
அழகி
கஜினி

இந்த படங்களையும் மிஸ் பண்ணக்கூடாது சரியா..
துரை-தியாகராஜ்

சிவபார்கவி said...

ஹலோ ஒரு நிமிஷம் ...

பாரத விலாஸ்
பாசமலர்
அன்பே வா
ஜானி
முந்தானை முடிச்சூ
முதல் மரியாதை
கடலோர கவிதைகள்
ஒரு கைதியின் டைரி
அழகி
கஜினி

இந்த படங்களையும் மிஸ் பண்ணக்கூடாது சரியா..
துரை-தியாகராஜ்

சிவபார்கவி said...

ஹலோ ஒரு நிமிஷம் ...

பாரத விலாஸ்
பாசமலர்
அன்பே வா
ஜானி
முந்தானை முடிச்சூ
முதல் மரியாதை
கடலோர கவிதைகள்
ஒரு கைதியின் டைரி
அழகி
கஜினி

இந்த படங்களையும் மிஸ் பண்ணக்கூடாது சரியா..
துரை-தியாகராஜ்

சிவபார்கவி said...

ஹலோ ஒரு நிமிஷம் ...

பாரத விலாஸ்
பாசமலர்
அன்பே வா
ஜானி
முந்தானை முடிச்சூ
முதல் மரியாதை
கடலோர கவிதைகள்
ஒரு கைதியின் டைரி
அழகி
கஜினி

இந்த படங்களையும் மிஸ் பண்ணக்கூடாது சரியா..
துரை-தியாகராஜ்

சிவபார்கவி said...

ஹலோ ஒரு நிமிஷம் ...

பாரத விலாஸ்
பாசமலர்
அன்பே வா
ஜானி
முந்தானை முடிச்சூ
முதல் மரியாதை
கடலோர கவிதைகள்
ஒரு கைதியின் டைரி
அழகி
கஜினி

இந்த படங்களையும் மிஸ் பண்ணக்கூடாது சரியா..
துரை-தியாகராஜ்

manju said...

What is a survey which doesn't have Iruvar in the list ? In my opinion, Iruvar is the best movie ever produced in India. Can Kadhal or Azhagi or Ghazini ever compete with it ??? NO WAY !!!

SurveySan said...

Manju, Iruvar is a good movie.

But, I dont think its that good compared to other Mani movies.
Each scene was very 'dramatic' like a stage show.

வாக்காளன் said...

பராசக்தி
துலா பாரம்
முள்ளும் மலரும்
சலங்கை ஒலி
அன்பே சிவம்
மொழி

சிவபார்கவி said...

முள்ளும் மலரும்
சலங்கை ஒலி
அன்பே சிவம்


.....!?

Anonymous said...

Some movies from my side
மொழி
அஞ்சலி
காக்க காக்க
And the best one is
கன்னத்தில் முத்தமிட்டால்