recent posts...

Friday, March 23, 2007

சர்வேசனின் மறுபக்கம் - வியர்டு பட்டியல் + அழைப்பிதழ்

உங்க கிட்ட இருக்கர weird பழக்கவழக்கங்களை பட்டியலிடுங்கன்னு சிறில் கிட்டயிருந்து அழைப்பு வந்தது. (அதென்னய்யா weird? weird spellingஏ weirdஆ இருக்கே. wierd?).

(Weird = Of a mysteriously strange and usually frightening nature)
அதாகப்பட்டது, வியர்ட் - ஒரு வித்யாசமான, மற்றவர்களை திடுக்கிட வைக்கும் பயக்கம்.
உ.ம், சில பேர் தனக்குத் தானே பேசிப்பாங்க - தூர நின்னு வேடிக்க பாக்க தமாஷா இருக்கும். ஆனா, பாவம் அவங்களுக்கு என்ன ப்ரச்சனையோன்னு நினைக்கும்போது வருத்தமா இருக்கும்.
இப்ப blue-tooth உதவியால, நானும், 'தனக்குத் தானே' பேசிக் கொள்ளும் ஆட்களைப் போல், பல இடங்களில், பல பேருக்கு, வியர்டா காட்சி தருகிறேன். :)

வியர்ட் என்ற வார்த்தையை கேட்டவுடன் நினைவுக்கு வருபவர் நம்ம Jim Carrey தான். உங்களுக்கு Jim Carrey பிடிக்குமா? எனக்கு பயங்கரமா பிடிக்கும்.
அவர் ஒவ்வொரு படமும் பாத்து விழுந்து விழுந்து சிரிப்பேன். அதுவும், Ace Ventura, Dumb & Dumber - அடேங்கப்பா, செம தூள்!

வியர்டுக்கு அகராதில, Jim Carrey னு மாத்தி கூட எழுதிடலாம்.
சேம்பிளுக்கு ஒண்ணு இங்க பாருங்க: Jim Carrey the great.

சரி, நம்ம விஷயத்துக்கு வருவோம்.

செய்யரது weirdனு தெரிஞ்சா, தொடர்ந்து செய்வோமா என்ன? தெரியாம சில பயக்கவயக்கம் அப்டியே maintain ஆயிருக்கும்.
ஹ்ம். யோசிச்சு யோசிச்சு பாத்ததுல வந்த மேட்டர, கீழ கொடுத்திருக்கேன்.
எல்லாமே வியர்ட்னு சொல்ல முடியாது. சில கெட்ட பயக்கமும் கொடுத்திருக்கேன்.

மொதல் மேட்டரு, நான் அதிகம் பேசரவன் கிடையாது. ஒரு வார்த்தை வாய விட்டு உதிரணும்னா, என்னமோ ஒரு லட்சம் செலவாயிடுங்கர ரேஞ்சுல தான் பேசுவேன்.
'Man of few words'னு எங்க ஆபீஸ் வட்டாரத்துல ப்ரபலம்.
தல போற விஷயம் விவாதிச்சாலும், telegraph கொடுக்கர மாதிரி, தேவையானத மட்டும் தான் பேசுவேன்.
நட்பு வட்டாரத்துல இந்த வியர்ட்னெஸ் அவ்வளவா தெரியாது.
சில நேரத்துல இது வியர்ட், பல நேரத்துல அறிவு ஜீவித்தனம் மாதிரி தெரியரதால, நானும் ரொம்ப கண்டுக்கரதுல்ல :)

பள்ளி நாட்கள்ள, ஆனா வூனான்னா, மொட்ட மாடீல போய் ஒக்காந்துருவேன்.
வானத்த பாத்துக்கிட்டு, ஒரே திங்கிங் தான். இது அதுன்னெல்லாம் கிடையாது, சகலமும் 'திங்க்'குவேன்.
வீட்ல இல்லன்னா மாடீல இருப்பேன்னு 'default'ஆ புரிஞ்சுப்பாங்கன்ற அளவுக்கு மொட்ட மாடியே கதின்னு இருப்பேன். (என்னது? பக்கத்து வீட்டு பிகரா? அதெல்லாம் இல்லீங்க :) ). இப்ப இந்த மொட்ட மாடி மேட்டர் விட்டாச்சு - இப்பெல்லாம் வானம் எங்க தெரியுது? ஹ்ம்!

ஏற்கனவே சொன்ன மாதிரி, பேச்சு கம்மி - அதனால, keeping-in-touch என்ற பழக்கமே கிடையாது. ஊர் மாறும்போதும், வேலை மாறும்போதும், பழைய ஆட்கள அப்படியே மறந்துடுவேன். ஒரு சில விதிவிலக்குகள் உண்டு. but, still, very bad weirdity இதுதான். அது என்னமோ தெரியல, ஒரு மேட்டர் இல்லாம, ஒருத்தர phoneல கூப்பிடணும்னா, சுத்தமா புடிக்கரதுல்ல. :)

சாப்பாட்டு விஷயத்துல வியர்டா ஒண்ணும் பெருசா தோணல - தயிர் சாதம் சாப்பிடலன்னா சாப்பிட்ட மாதிரி இருக்காது; சின்ன வயசுல, சிக்கன், fish-fry, முட்டை இதெல்லாம் சாப்டாம தட்டு ஓரத்துல அப்படியே மெயின்டெய்ன் பண்ணி, தயிர் சாதம் சாப்பிட்ட அப்பறம் ஒரு வெட்டு வெட்டுவேன் :)
தயிர் சாதத்துல ரசம் ஊத்தி சாப்பிடுவேன் (ட்ரை பண்ணி பாருங்க, ஒரு விதமான சூப்பர் காம்பினேஷன் அது).
spriteல உப்பு போட்டு குடிச்சா நன்னாருக்கும். ( cokeல பெப்பர் போட்டு குடிக்கரவங்க தள்ளி ஒக்காருங்க :) )
half-boil விரும்பிச் சாப்பிடுவேன்.

தானா எதுவும் படிக்க பிடிக்காது. ரொம்ப ரொம்ப தேவைன்னா மட்டும் ad-hoc reading செய்வேன்.

கடவுள் நம்பிக்கை இருந்தாலும், கோயிலுக்கு கெளம்பணும்னா ரொம்ப யோசிப்பேன். மூணு மாசத்துக்கு ஒரு தடவ, உண்மையாவே ஒரு பீலிங் வந்தாதான் போவேன்.

சிரிச்ச முகமாவே இருக்கியேடா, ஓவரா சிரிக்கரடா, சொல்லிட்டுச் சிரி, இல்ல சிரிச்சிட்டு சொல்லு - இப்படி பலவிதமா சொல்லியிருக்காங்க நம்மள பாத்து. மொத்தத்துல அவ்வளவா கவலைப்படாத 'டேக் இட் ஈஸி' ஆளுங்க நானு. ஹோப் இட் ஸ்டேஸ் தட் வே.

சரி, இப்போதைக்கு இது போதும். அடுத்ததா நம்ம வியர்டிட்டி continue பண்ண, நம்ம hall-of-fame ஆளுங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். (ஏற்கனவே வியிர்டிட்டீங்கன்னா உங்க லிங் சொல்லுங்க போட்டுடலாம்).

1) வெட்டிப்பயல் - வியர்டிட்டாரு பாருங்க
2) நெல்லை சிவா
3) பெருசு
4) Aparnaa - வியர்டிட்டாnga பாருங்க
5) சந்தோஷ்பக்கம் - - வியர்டிட்டாரு பாருங்க

வந்தது வந்தீங்க, நான் எழுதின கதை படிச்சீங்களா?

சீனு - mini கதை

மினி கதைப் போட்டி நடக்குதே தெரியுமா? ஷைலஜா, நானு, உஷா, ஷக்தி, பெனாத்தல் சுரேஷ், நானானி எல்லாரும் கோதால இருக்கோம். க்ளிக்கி படிங்க.

பாட்டுக்கு பாட்டயும் கண்டுக்கோங்க

அரட்டையும் அடிங்க




மொத்தத்துல நல்லா இருங்க! :)

9 comments:

Anonymous said...

Idhula weird enna irukku?

Radha Sriram said...

//தயிர் சாதத்துல ரசம் ஊத்தி சாப்பிடுவேன் (ட்ரை பண்ணி பாருங்க, ஒரு விதமான சூப்பர் காம்பினேஷன் அது).//

எங்க வீட்லயும் இதே விசேஷமான காம்பினேஷன நடக்குது!!!

நான் ட்ரை பண்ணதில்ல!

SurveySan said...

ராதா ஸ்ரீராம்,

நல்ல ரசனையான விஷயங்க அது.

அந்த டேஸ்டே அலாதி. ட்ரை பண்ணுங்க :)

Santhosh said...

//
பள்ளி நாட்கள்ள, ஆனா வூனான்னா, மொட்ட மாடீல போய் ஒக்காந்துருவேன்.
வானத்த பாத்துக்கிட்டு, ஒரே திங்கிங் தான். இது அதுன்னெல்லாம் கிடையாது, சகலமும் 'திங்க்'குவேன்.//
ஒரு காலத்துல பில்கேட்ஸ் கூட இப்படித்தான் இருப்பாராம். வருங்காலத்தின் சர்வேகேட்ஸ் :)).. அப்புறம் தலை இங்க இங்க நீங்க சொன்னதை செஞ்சாச்சி.

SurveySan said...

பில்கேட்ஸ் எங்க, நான் எங்க :)

அவரு உண்மையாவே அறிவுபூர்வமா ஏதாவது 'திங்க்' பண்ணியிருப்பாரு.
என் பொழுதெல்லாம் 'வெட்டியா' போனதுதான் மிச்சம்.

aparnaa said...

aha..
seekiram post podaren with my wired stuff..
unngalooda wired stuff was very interesting!!

SurveySan said...

//seekiram post podaren with my weird stuff..
unngalooda wired stuff was very interesting!!
//

போடுங்க போடுங்க! :)

ramachandranusha(உஷா) said...

சர்வேசா, யார் சிறந்த வியர்ட்ன்னு ஒரு கருத்துகணிப்பு போடுபா, அதிலாவது எனக்கு பரிசு கிடைக்குதான்னு பார்க்கோணும் :-)

SurveySan said...

உஷா, அருமையான ஐடியா.
அமுல்படுத்தடலாம்.