recent posts...

Sunday, March 11, 2007

சினிமா பாடல்கள் பாட part-time பாடகர்கள் தேவை

 
பாட்டுக்கு பாட்டு சங்கிலிப் பதிவு ஆரம்பிச்சு சூடா போயிக்கிட்டிருக்கு.

19 பாட்டு இதுவரைக்கும் தொடர்ல இருக்கு.

பல பேர் கலந்துக்க வெட்க்கப்பட்டு இன்னும் ஒதுங்கியே இருக்கீங்க.

பாடரது ஒரு ஜாலியான விஷயம். படிக்கர காலத்துல அதுக்கெல்லாம் வாய்ப்பிருந்தும் ஸ்டேஜ் பயத்தால ஒதுங்கியே இருந்திருப்போம். இங்கதான் ஸ்டேஜ் இல்லியே, வந்து அடிச்சு ஆடுங்க லேடீஸ் & ஜென்டில்மென்.

கடைசியா, 'வ'கரத்தில், வனிதாமணி வனமோகினி பாட்ட நான் பாடி (hee hee hee), இப்போ, டு அல்லது உ வரிசைல பாட அனாமிகா கிட்ட மைக் கொடுத்தாச்சு.

அனாமிகாவ தொடர்ந்து, ஷைலஜா, ஷக்தி, SriShiv, செந்தழல் ரவி, சர்வேசன் பாட ரெடியா இருக்கோம்.

பெயர் கொடுக்காதவங்க பெயர் கொடுங்கள்.

தொட‌ர் வேக‌மா வ‌ள‌ர‌, பின்னூட்ட‌ம் மாட‌ரேஷ‌ன் தூக்கியாச்சு. வ‌ரிசைல‌ அடுத்த பாட்ட பாடப் ‌போற‌வ‌ங்க‌, என்ன‌ பாட்டு பாட‌றீங்க‌, எதுல‌ முடிப்பீங்க‌ன்னு சொல்லிட்டா அடுத்த‌ ஆள் ரெடியாயிட‌லாம். அதே போல், பாடி முடித்த‌தும் MP3 file esnips மாதிரி த‌ள‌த்தில் நீங்க‌ளே அப்லோட் செய்து, உர‌ல் பின்னூட்டிடுங்க‌. நான் நேர‌ம் கிடைக்கும்போது, பாட்டுக்கு பாட்டு வ‌ரிசைப் பெட்டியில் சேர்த்துவிடுவேன்.

ந‌ன்றீஸ். ஜ‌மாய்ங்க‌!

பி.கு: நேயர் விருப்ப‌த்தையும் கொஞ்ச‌ம் க‌வ‌னிங்க‌.

அரட்டை அரங்கத்தையும் கவனிங்க‌

-சர்வேசன்

12 comments:

SurveySan said...

பாட்டுக்கு பாட்டு லோகோ + லிங்க் உங்க பதிவுல போட்டு விளம்பரம் கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்.
(பின்னூட்ட லிமிட்னால இனி தமிழ்மணத்தில் வராது, இப்படி ஏதாவது பண்ணா கண்ணுல படும்)

Anonymous said...

இந்த விளையாட்டிற்கே நான் வரவில்லை.நான் எல்லாம் bathroom இல் பாடவே qualified இல்லை.

Anonymous said...

Hi Survezzzz,

My humble suggestion is: அடுத்து பாட வேண்டியவர் 24 மணி நேரத்தில் பாடாத பட்சத்தில், அந்த எழுத்தில் யார் முதலில் பாடி அனுப்புகிறார்களோ அவர்களுடைய பாடலை வரிசையில் கொண்டுவரலாமே!!

Appaavi said...

//Blogger account test appaavi comment //

Hi Survezzzz,

My humble suggestion is: அடுத்து பாட வேண்டியவர் 24 மணி நேரத்தில் பாடாத பட்சத்தில், அந்த எழுத்தில் யார் முதலில் பாடி அனுப்புகிறார்களோ அவர்களுடைய பாடலை வரிசையில் கொண்டுவரலாமே!!

பொன்ஸ்~~Poorna said...

part-time பாடகராக நான் ரெடி.. எத்தனை சம்பளம்?

(compensation, fringe benefits நல்லா இருந்தா full time உக்குக் கூட யோசிக்கலாம்.. ;) )

k said...

surveysan i am extremely sorry..i am afraid i wont be able to send the song now..some important work..its inevitable..shylaja u plz continue..i'll join paatuku paatu soon.. sorry guys:(

ஷைலஜா said...

சரி அனாமிகா வேற யாரும் பாட்லேன்னா நான் பாட்றேன் சீக்கிரமா நீங்க வாங்க...
ஷைலஜா

SurveySan said...

துர்கா, சும்மா ட்ரை பண்ணுங்க. நாங்க மட்டும் என்ன SPB யா என்ன? யாரும் அடிக்க மாட்டாங்கன்ற தைரியம்தான் :)

அப்பாவி, குட் சஜெஷன், அப்படியே பண்ணிடுவோம். 24 மணி நேரம் டைம் லிமிட்.

பொன்ஸ், சம்பளம் - பாட்டு நல்லா இல்லன்னாலும் சூப்பர், ஆஹா, ஓஹோன்னு பின்னூட்டம் கிட்டும் :)

அனாமிகா, நோ ப்ராப்ளம்.

ஷைலஜா, அடுத்தது பாடிடறீங்களா?

SurveySan said...

ஷைலஜா பாடலியா?

Anonymous said...

Nagurra maadhiri theriyaliye?

Anonymous said...

english songs ok?

சிறில் அலெக்ஸ் said...

சர்வேசன்..

இதப் பாருங்க உங்களுக்கு அழைப்பு இருக்குது

http://theyn.blogspot.com/2007/03/weird.html