recent posts...

Sunday, May 23, 2010

வாத்து படங்கள் using Canon EF-S 55-250mm IS lense

நாதஸ்'ன் பறவைப் படங்கள் எல்லாம் பாத்து காதுல பொக வந்து ரொம்ப நாளாச்சு.
நான் என்னதான் எடுத்துப் பாத்தாலும், திருப்திகரமா ஒண்ணும் இதுவரை வந்ததில்லை.
சரி, காமெராதான் சரியில்லைன்னு, என்னை நானே சமபாதானப் படுத்திக்கிட்டு வாழ்க்கைச் சக்கரத்தில் சுழன்று கொண்டிருந்தேன்.

Alaskaவுக்கு போக திட்டம் தீட்டப்பட்டுவிட்டதாலும், அங்கே கழுகுகள் எல்லாம் நெறைய இருக்கும்னு கேள்விப்பட்டதாலும், திரும்ப, பறவைகளைப் படம் எடுக்க வேண்டும் என்ற அவா தொற்றிக் கொண்டது.
அலாஸ்காவுக்கு சில பல $களை வாரி எறைச்சாச்சு, பத்தோடு ஒண்ணு பதினொண்ணா, பெரிய ஜூம் லென்ஸ் ஒண்ணு வாங்கிடலாம்னு, அங்க இங்க தேடில், ஒரு EF-S 55-250mm lense வாங்கியாச்சு.

லென்ஸ் வாங்கியாச்சு, பறவைகளுக்கு எங்க போகரதுன்னு தேடினப்போ, இங்க எங்கூர்ல, Bay trailsனு ஒரு எடத்துல, தண்ணி சுத்தீகரிப்பு ஆலைக்கு பாக்கத்துல தேங்கி இருக்கர தண்ணிய சுத்தி பல பறவைகள் இருக்கும்னு சொன்னாங்க.
சரின்னு, ஞாயிறு அதிகாலை ஒம்போது மணிக்கெல்லாம் எழுந்து, கேமராவும் கையுமா அந்த எடத்துக்கு போனேன்.
எதிர்பாத்த அளவுக்கு பெருசா ஒண்ணும் பறவைகள் இல்லை. கொஞ்சம் வாத்து அங்க இங்க இருந்துச்சு.
கேமராவும், லென்ஸும், எதிர்பாத்த அளவுக்கு கை கொடுக்கலை.
படம் எல்லாம் எடுத்துட்டு வந்து பாத்தா, எதுவுமே திருப்திகரமா இல்லை.
கேமராமேன் சரியில்லையா, கேமரா/லென்ஸ் சரியில்லையான்னு, உளவியல் ரீதியா திங்க் பண்ணிக்கிட்டு இருக்கேன். ;)







இந்தப் படம் சரியா வராததில், ரொம்பவே சோகம் ஆயிட்டேன். சரியான நேரத்தில் க்ளிக்கியும் ஷேக் ஆகி சொதப்பிடுச்சு. ஹ்ம்! வாத்து, இங்ஹ மாதிரி வாய்ப்பை ஒரு தபா தான் தரும். இனி, அடுத்த வாரம் திரும்பிப் போய் பாக்கணும்.


எதுவுமே வரலன்னு நொந்து, வழக்கம் போல, வீட்டுக்கு வந்து எடுத்த படங்கள்.






மொத்தத்தில், an average lense - Canon EF-S 55-250mm IS. இமேஜ் ஸ்டெபிலைஸர் எல்லாம் இருந்தும், ஷேக் ஆகாம எடுக்கரது ப்ரம்மப் ப்ரயத்தனம். படங்களிலும், பளிச் கம்மி.
thoughts? same blood?

8 comments:

ராமலக்ஷ்மி said...

1,2,5,6 ரொம்ப நல்லா வந்திருக்கே. மற்றதும் அருமை.

முயற்சி உடையார்...:)!

ராமலக்ஷ்மி said...

6 இல்லே 7:)!

SurveySan said...

நன்றீஸ் ராமலக்ஷ்மி.

'அருமை'ன்னு சொல்ற அளவுக்கு வரலைன்னே தோணுது. இப்போதைக்கு லென்ஸ் மேல பாரத்தை போட்டு, எஸ்கேப்பிக்கறேன் :)

Anonymous said...

The second pic is too good. =))

Thekkikattan|தெகா said...

#1 & 2 superuu.... keep trying. what, going to Alaska - enjoy :)!

SurveySan said...

danks! :)

Vijay said...

வணக்கம். Canon 55-250mm IS லென்சு கொஞ்சம் சுமாரானதுதான். எனது சிறிய அனுபவத்தில் பூக்கள் போன்றவற்றை Low DOF இல் படமெடுக்க ஓரளவிற்கு நன்றாக வருகின்றது.
அதேநேரம் தொலைவில் உள்ள பறவைகளை Canon 55-250mm IS பயன்படுத்தி படம்பிடிக்கும்போது உங்களைப்போலவே எனக்கும் திருப்தி கிடைப்பதில்லை. ஓரளவு அருகில் சென்று எடுத்த சுமார் ரக படங்களை பின்வரும் சுட்டியில் பார்க்கலாம்.
http://clicking-moments.blogspot.com/2009/12/birding-at-royal-botanic-garden.html
Canon 450D + 55-250mm IS மற்றும் Sony H7 P&S camera மூலம் எடுத்தவை
http://picasaweb.google.com/pvijayalayan/Aves?feat=directlink

அன்புடன் நான் said...

மிக மிக மிக அழகுன்னு சொன்னா அந்த கடைசி பூ படம் தான்.

வாழ்த்துக்கள்.