சைட் நோட்: இந்த "ஜ" எழுதும் போதெல்லாம் பள்ளிக்கூட நினைப்பு வந்துடும். தமிழ் வகுப்பில், தமிழ் வாத்தியார், நண்பனை 'பாரத சமுதாயம் வாழ்கவே' பாடலை புத்தகத்தை பார்த்து வாசிக்கச் சொன்னார்.
அவனும், எழுத்துக் கூட்டி, முக்கி மொனகி, 'பாரத சமுதாயம் வாழ்கவே' என்று அடுத்த வரிக்கு பயணமானான்.
"ஐய ஐய ஐய" என்று அடுத்த வரியை ஆரம்பித்தான், எல்லாரும் அவனை திரும்பிப் பார்த்து கொல்லென சிரிக்க.
வாத்தி அவனை அழைத்து, முதுகில் போட்டு, ஜய ஜய ஜய வ , ஐய ஐய ஐயன்னா படிக்கர, எரும , பண்ணி, நாயே, பேயே என்று சாத்தினார்கள்.
பாவம், பயல், கொஞ்ச நேரமாச்சு அவனுக்கு, அவனோட தப்பு புரிஞ்சுக்க.
சரி, இனி தீர்ப்புக்கு வருவோம்.
1) சேரனின் மாயக்கண்ணாடி - இதிலும் சாதீயமா ( 146 votes )
2) சற்றுமுன் - ஒரு தீவிர அலசல் ( 29 votes )
3) 2040ல திமுக தலைவரு யாரு - நேயர் விருப்ப சர்வே ( 77 votes )
4) SUN TV & DMK - யாருக்கு யாரால் லாபம்? ( 162 votes )

இதுவரை எடுத்துள்ள சர்வேசனின் தொகுப்பையும் பார்க்கவும்:

பின்னூட்டு மறவாதீர். அடுத்த சர்வேக்கு ஒரு ஐடியா சொல்லிட்டுப் போங்க.
:)
4 comments:
next survye - will Dayanidhi join ADMK ?
வீட்டில் உங்களுக்கு டென்ஷன் ஏற்படுத்துவது யார்?
1. வீட்டில் யாருமில்லை
2. மகன்
3. வாழ்க்கைத் துணை
4. மகள்
5. உடன்பிறப்பு
6. பெற்றோர்
(மத்திய அமைச்சர்களில் சிறப்பாக செயல்படுபவர் குறித்த தினகரனின் கருத்துக் கணிப்பு வெளியான அன்று கேட்கப்பட்ட இன்னொரு கேள்வி ;)
சர்வேசனின் சர்வே முடிவுகள்
1. முன்பே சர்வேசனால் தீர்மாணிக்கப்பட்டவை
2. பதிவர்களால் தீர்மாணிக்கபடுபவை
3. ஆட்டோக்களால் தீர்மாணிக்கப்படுபவை
4. தெரியாது
boston bala,
good suggestion. will do it next :)
anony,
nekkulu ?
Post a Comment