recent posts...

Monday, April 02, 2012

சாமான்யனும் மின்சார வாரியக் கம்மனாட்டிக்களும்

முன்குறிப்பு: 'கம்மனாட்டி'ன்னா என்னான்னு தெரியாது. ஆனா, ஸ்ட்ராங்கான திட்டு வார்த்தை என்ற என்ணத்தில் வைக்கப்பட்ட தலைப்பு.

வேலுச்சாமியை எனக்குப் பலப் பல வருஷமா தெரியும். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, அவரை எங்கள் தெருவில் உள்ள பல வீடுகளில், சின்ன சின்ன எலெக்ட்ரீஷியன் வேலை, தோட்ட வேலை, மற்ற பல எடுபடி வேலைகள் எல்லாம் செய்வதைப் பார்த்திருக்கிறேன்.

நிரந்தர வேலையில்லாமல், டே-டு-டே வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பார். சில பல வருடங்களுக்கு முன், திருமணமும் நடந்தேறி முடிந்து, இரு அழகிய குழந்தைகளும் உண்டு. தற்சமயம், +1ல்  ஒன்றும், எட்டாம் வகுப்பில் ஒன்றும்.

நானும் என் தெரு நண்பர்கள் கூட்டமும், அண்ணா அண்ணா என்று தான் கூப்பிடுவோம் அவரை. ரொம்பவே பாசமாய் இருப்பார்.

அண்ணி  எப்பொழுதும், கவலை தோய்ந்த முகத்துடனையே இருப்பார்.
"வாடகை குடுக்காததால வூட்டுக்காரன் திட்டறான். இந்த மனுஷன் காதுலையே போட்டுக்க மாட்றாரு. ஒரு நாள் பாத்தரத்தையெல்லாம் தூக்கி வெளீல போட்டா, புள்ளைங்களோட நடுத்தெருவுல தான் நிக்கணும்" என்பது போன்ற அங்கலாய்ப்புகள் அதிகமாய் கேட்கும்.

வேலுச்சாமி, நிரந்திரமில்லாத வேலையால், ஏழ்மை வாட்டி எடுத்திருக்க வேண்டும். ஆனால், என்றும் அதை வெளிக்காட்டியதில்லை. என் நினைவில் தெரியும் காட்சியிலெல்லாம், வேலுச்சாமி, ஏதாவது ஒரு வேலையை, விசில் அடித்துக் கொண்டே ஜாலியாய்த் செய்து கொண்டிருப்பார்.

ஆனால், ஒவ்வொரு வருட விடுமுறை விசிட்டிலும் நான் சென்னைக்கு வரும்போது, வேலுச்சாமிக்கு, ஐந்து வயது கூடிவிட்ட மாதிரி தெரியும்.
"பயலுவ ஓரளவுக்கு படிக்கறானுவ. பெரியவனுக்கும் வயரிங்க் சொல்லித் தரணும். காலேஜெல்லாம் படிக்க வேணாங்கறான்"னு சென்ற முறை சொன்னார். 
பணப் பற்றாக்குறையாலும், சென்னையின் விலைவாசி உயர்வும் ரொம்பவே வாட்டி எடுத்திருக்க வேண்டும் அவரின் குடும்பத்தை. எடுபிடி வேலைகள் எல்லாம் செய்து, கிட்டுவதை வைத்து  குடும்பத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

இம்முறை வேலுச்சாமியை பார்த்ததும் ரொம்பவே வேதனையாய்ப் போனது. துருபிடித்த சைக்கிள் ஒன்றில் போய்க் கொண்டிருந்தவரை நிறுத்தி, சௌக்கியம் விசாரித்தேன். "தென்னை மரத்துக்கு உறம் போடக் கூப்பிட்டாங்க பக்கத்து தெருவுல. அங்கதான் போறேன் தம்பி. நல்லாருக்கியா" என்று பேச ஆரம்பித்தார்.
அநேகமாய், வயது நாற்பதுகளின் கடைசியில் இருக்க வேண்டும். ஆனால், பார்த்தால், அறுபதை நெருங்கியது போல் தோற்றம்.
மேலும் பேசும்போது, விலை வாசி ஏற்றத்தால், அவரின் குடும்பம், மேலும் மேலும் நசுக்கப்படுவது புரிந்தது.

முக்கியமாய், வாடகை தாறுமாறாய் ஏறியிருக்கிறதாம். இனி தாக்குப் பிடிக்க முடியாது என்று, தாம்பரத்தை தாண்டிய, முடிச்சூரில், ரொம்ப தூரத்தில் தனக்கு இருந்த அரை க்ரவுண்டில், குட்டியாய் ஒரு ஓட்டு வீட்டைக் கட்ட எண்ணினாராம்.   வாடகை கட்டுவதில் இருந்து தப்பிக்க,  கையில் இருந்த நகை நட்டையெல்லாம் விற்றுக் கிடைத்த பணத்தில், சுவர் எழுப்ப ஆரம்பித்தாராம்.

இரண்டு ரூம் கட்ட அடித்தளம், சுவரும் எழுப்பியதில். ஆறடி சுவர் கட்டியதும், கையில் இருந்த பணம் தீர்ந்து போனதாம். சிமெண்ட்டும், செங்கல்லும், விற்கும் விலையில் தன்னால் முழு வீடு கட்ட முடியாது என்ற உண்மை புரிந்து, ஆறடி சுவருக்கு மேல், நாலு தூண்கள் மட்டும் இன்னும் சில அடிக்கு கட்டி, அதன் மேல் ஓடு வைத்து ஓரளவுக்கு கட்டி முடித்தாராம்.

சுற்றி வீடுகள் இல்லாததால், 'திறந்த வெளி' வீடு, இப்பொழுதைக்கு அசௌகர்யம் கொடுக்கவில்லையாம். மழை பெய்தால் மட்டும், பெரிய திண்டாட்டமாம்.
இதை விவரிக்கும்போதே,, மனதை பிசைந்து தொண்டை அடைத்தது எனக்கு. மனைவி, இரண்டு பிள்ளைகளுடன், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள இவ்வளவு திண்டாட்டமா என்று.
இவ்வளவு துன்பத்திலும், நேர்மையை உடலை வருத்தி வேலை செய்யும் வேலுச்சாமியை எண்ணிப் பெருமிதமாய் இருந்தது.

"இப்ப எல்லாம் ஓ.கே தானே"ன்னு நான், வழக்கமாய் கேட்டு வைப்பதை கேட்டு வைத்தேன்.
"இல்ல தம்பி, இன்னும் வீட்டுக்கு கரெண்ட்டு வரலை. அப்ளிகேஷன் எல்லாம் ஈ.பி காரன் கிட்ட கொடுத்துட்டேன். இழுத்தடிக்கறானுவ. கேட்டா,  வீட்டுக்கு கிட்ட கரெண்ட்டு போஸ்ட்டு இல்லியாம். ரெண்டு போஸ்ட்டு நட்டு கம்பி இழுத்து கொடுக்கணுமாம். மூணாயிரம் ரூவா கொடுங்கராங்க. நான் எங்கப் போவேன் மூணாயிரத்துக்கு?"ன்னு மட மட என்ன பேசினார். அவரின் கண்களைப் பார்க்கவே கஷ்டமாய் இருந்தது.
ஈ.பி. காரன் கேட்கும் லஞ்சப் பணம் மூணாயிரம் இவர் கட்டமுடியாதது , இவரின் தவறுபோல் எண்ணி வந்த பேச்சு. 

"அண்ணே, லஞ்சம் கேட்டா பக்கத்துல போலீஸ்ல க்ம்ளெயிண்ட் கொடுத்தா, அவங்க் நடவடிக்கை எடுத்து, உங்க வேலையை உடனே முடிச்சுக் கொடுப்பாங்களேன்னே" என்ற என் NRI புத்திக்கு எட்டிய அறிவுரையை சொன்னேன்.

"அடப் போங்க தம்பி. இவன் மூணாயிரம் கேக்கறானேன்னு, நம்ம லயன்ஸ் க்ளப்பு நாராயணன் கிட்ட சொல்லிட்டு இருந்தேன்.. அவரு, என்னப் போய் எலெக்ட்ரிசிட்டி போர்ட்டு AE கிட்ட நேர்ல போயி பேசுங்க, சீக்கிரம் பண்ணிக் கொடுப்பாருன்னாரு. நானும், ரெண்டு மணி நேரம் லைன்ல நின்னு AE யப் பாத்து வெவரத்த சொன்னா, அவரு ஏழாயிரம் கொடுங்க அடுத்த வாரமே முடிச்சிடலாம்னு குண்டை தூக்கிப் போட்டுட்டாரு. அவரு எங்க தெருவுக்கு இது வரைக்கு பதினைஞ்சாயிரம் செலவு பண்ணிட்டாராம். என் கிட்ட வெறும் ஏழாயிரம் தான் கேக்கறாராம்" என்று வேலுச்சாமி சொல்லிக் கொண்டே போனார்.

அவரை இடை மறித்து, "பதினஞ்சாயிரம் AE சொந்தப் பணத்தையா போட்டாருன்னு கேக்க வேண்டியதுதானேண்ணே" என்று மீண்டும் NRI அட்வைஸு கொடுத்தேன்..

"அடப் போங்க தம்பி, அதெல்லாம் நடக்கர காரியமா. இவங்க கேட்டத கொடுக்காம நான் எத்தயாவது எக்கு தப்பா பேசிட்டா, அப்பரம், சாகர வரைக்கும், உபத்ரவம் பண்ணுவானுங்க தம்பி. லைன்மேன் கேட்ட மூவாயிரத்த ஏற்பாடு பண்ணி, வேலைய முடிச்சுக்கணும். தட்டு முட்டு சாமனயெல்லாம் கொண்டு போயி போட்டுட்டேன். இப்ப குடித்தனம் அங்கதான் நடக்குது. நான் வரேன் தம்பி" என்று சொல்லியவாறு  சைக்கிளில் ஏறிச் சென்று விட்டார் வேலுச்சாமி.

லஞ்சம், புற்று நோய் மாதிரி விரிந்து பரவிக் கிடக்கிறது நம் சமூகத்தில் என்பது அனைவருக்கு தெரிந்த விஷயமே. ஆனால், அதை களைந்தெடுக்க முழு மூச்சில் எந்த அரசாங்கமும் ஈடு படுவதாய் இல்லை. சாமான்யனுக்கு, 'லஞ்சம் கொடுப்பதைத் தவிர வேறு வழியே இல்லை, என்பது போல், இந்த வழக்கம், பின்னிப் பிணைந்து உள்ளது, அரசாங்க அலுவல்களில்.

நெனச்சுப் பாருங்க, ஒரு சாதாரண மனிதர் வேலுச்சாமி. உழைத்து மட்டுமே வாழ்ந்து வருகிறாரு. சூது வாது தெரியாத குடும்பம். மனைவி, பள்ளிக்குச் செல்லும் இரு பிள்ளைகள்.
இந்த 21ஆம் நூற்றாண்டில், முழுதாய் கூட சுவர் எழுப்பப்படாத ஓட்டு வீட்டில், மின்சாரக் கனெக்‌ஷன் கூட இல்லாமல், வருங்காலம் இன்னும் என்னென்ன சுமைகளையெல்லாம் தன் தலையின் மேல் ஏற்றப் போகிறதோ என்ற பயத்தில் வாழும் வேலுச்சாமிகளுக்கு, என்றுதான் விடியும்?

அடிப்படைத் தேவைகளை வழங்கும், அரசு எந்திரமாவது, சாமான்யனை வாட்டாமல், நேர்மையாய் இயங்க வேண்டாமா?
வெளிநாடுகளில் இருக்கும் சுலப வாழ்க்கை, நம் மக்களுக்கு என்றுதான் வாய்க்குமோ?

ச! கம்மனாட்டிக்கள்!

11 comments:

Anonymous said...

கம்மனாட்டி'ன்னா widow or widower

Anonymous said...

I served as a government servant for 35 years and just retired.my elder brother was also a government servant.when i entered
into service in 1977 he advised me:
dont get bribe from the public.suppose you receive it,you will use for your family for food,clothes,shelters etc.will, your children's blood,wife's saree etc from others sweat,allow you to pet ur child and spare the bed with ur wife on others money. will u not feel guilty? these kammanaaties dont have conscious.

தமிழினியன் said...

//'கம்மனாட்டி'ன்னா என்னான்னு தெரியாது.// கைம்மனையாட்டி என்ற வார்த்தையின் திரிபே கம்மனாட்டி. மனைவியை இழந்தவர் என்பது பொருள்

வவ்வால் said...

சர்வே,

//"அண்ணே, லஞ்சம் கேட்டா பக்கத்துல போலீஸ்ல க்ம்ளெயிண்ட் கொடுத்தா, அவங்க் நடவடிக்கை எடுத்து, உங்க வேலையை உடனே முடிச்சுக் கொடுப்பாங்களேன்னே" என்ற என் NRI புத்திக்கு எட்டிய அறிவுரையை சொன்னேன்.//

நீங்க மட்டும் இல்லை படித்த மக்கள் எல்லாம் அப்படித்தான் சொல்லுறாங்க, ஆனால் இந்த புகார் எல்லாம் இ.பி,வருவாய் துறை மேட்டர்ல வேலைக்கு ஆகாது என்பதே உண்மை.

ஒருத்தரை நாம மாட்டிவிட்டோம்னா அந்த துறையில் இருக்க மத்தவங்களுக்கு எல்லாம் நாம எதிரியாகிடுவோம், அவங்க சகாவுக்காக நம்மை பழி வாங்க ஆரம்பிச்சுடுவாங்க.

வேலுச்சாமியும் அதை உணர்ந்து தான் அப்படி சொல்லி இருக்கிறார். சாமான்யனுக்கு தொடர்ந்து போராட தெம்பில்லையே.

வயலுக்கு பம்செட்டுக்கு இலவச மின்சாரம்னு தான் பேரு அந்த இணைப்பு வாங்க 10000 ரூக்கு குறையாம லஞ்சம் கொடுக்கணும், அதுவும் மின்கம்பம் நம்ம வயலுக்கு பக்கத்தில் இருக்கணும் :-))

தூரமாக இருந்தால் கொடுக்க மாட்டாங்க, கொடுக்க வைக்க ஒரு கம்பத்துக்கு ஒரு ரேட் :-))

இப்போ தானே புயல் அடிச்சப்போ கூட கடமை தவறாமல் காசு வாங்கிக்கிட்டு தான் மீண்டும் இணைப்பு கொடுத்தாங்கன்னா பார்த்துக்கோங்க :-))

வடுவூர் குமார் said...

சர்வேசன்
நாம் வழி தவறி வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது.:-)
வவ்வால் சொன்னதை பாருங்க..

SurveySan said...

suji, thanks for the meaning and thanks for staying honest.

i wish more govt. servants turn out to be like you.

SurveySan said...

வவ்வால், ரொம்ப கஷ்டம்தான். பணம் இருக்கரவன், பிச்சை போடர மாதிரி கொடுத்துட்டுப் போயிடலாம்.
அன்றாட உணவுக்கே திண்டாடறவங்க,, இவங்க கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கர்ரதுதான் ரொம்பவே பாவமா இருக்கு.
என்னதான் வழி?

SurveySan said...

வடுவூர், நெசம்தான்.

என் கையாலாகாத்தனத்தை நினைத்து, சோறு எறங்கவே இல்லை அன்னைக்கு.
என்ன செஞ்சா விடிவு கிடைக்கும்னு தெரியலை.

அன்னா ஹசாரேக்களும், உதயகுமாரர்களும் கூட 'ஜோக்கர்ஸ்' மாதிரி காட்சிப்படுத்தப்படுகிறார்கள். யாரை நம்பரதுன்னே தெரியாத அளவுக்கு ஊறிக் கிடக்கு.

இந்த பெருச்சாளிக் கூட்டத்தை ஒழிக்க, இன்னும் பலப் பல வருஷம் ஆகும் போலருக்கு. :(

SurveySan said...

என் மண்டையில் உதிக்கும் சில யோசனைகள், இந்த மாதிரி பெருச்சாளித்தனத்தை குறைக்க.

நாளிதழ்களும், தொலைக்காட்சி செய்திகளும், தசாவதாரத்தில் வரும் மணல் கொள்ளையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதுபோல், investigative journalism ஏதாவது அதிரடியா செய்யணும். லக்கிலுக்குகளும், அதிஷாக்களும் கவனிக்க. :)

fifthpillar மாதிரி இயக்கங்கள் இன்னும் தீவிரமா செயல்படணும். ரொம்பவே அப்பட்டமா தினசரி லஞ்ச லாவண்யம் நடக்கும் இடங்களான, மின்சார வாரியம், registrar அலுவலஅம், RTO அலுவலங்களிலெல்லாம் அதிரடியா மறைந்து நின்னு இயங்கணும். ஒரு பயம் உருவாக்கணும், பெருச்சாளீஸுக்கு.

வவ்வால் said...

//investigative journalism ஏதாவது அதிரடியா செய்யணும். லக்கிலுக்குகளும், அதிஷாக்களும் கவனிக்க. :)//

சர்வே,

இன்னுமா இவங்கள எல்லாம் நம்புறிங்க :-))

இன்றைய சூழலில் பத்திரிக்கைகள் /ஊடகங்கள் எல்லாமே வியாபாரம் தான் ஒரு ரூ செலவு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதே கணக்கு.பத்திரிக்கை/ஊடக முதலாளிகள் பெரும்பாலோரே ஊழல் பெருச்சாளிகள் தான் , எங்கே எஸ்.ஆர்.எம் நிகர்நிலையில் ஒரு சீட்டுக்கு எவ்வளவு பணம் என்ன நடக்குதுனு எழுத சொல்லுங்க பார்ப்போம்.

மாநிலம் தோறும் புரோக்கர் வச்சு ஆள்ப்பிடித்து சேர்த்து வருமானம் ஈட்டும் நபர் நடத்தும் ஊடகம் மட்டும் நியாத்துக்காக குரல் கொடுக்குமா என்ன?

நாம ஒரு பத்தடி ஆக்ரமிச்சா வருவாய் துறை நோட்டிஸ் விட்டு இடிக்க வரும்,ஆனால் பல ஏக்கர் ஆக்ரமிச்சா சட்ட சபைல சட்ட திருத்தம் போட்டு மலிவு விலையில் கொடுக்கிறாங்க(அதுக்கு ஏற்ப கட்டிங்க் கிடைக்கும்). இதெல்லாம் அந்த ஊடகத்தில வருமா? :-))

கல்வி கொள்ளையடிச்ச பணத்துல ஊடகம் நடத்துறவங்க எப்படி இன்னொரு கொள்ளைய தட்டிக்கேட்பாங்க.

இந்தியன் பட வசனம் தான் "வெளிநாட்டில கடமைய மீறத்தான் லஞ்சம், இங்கே கடமைய செய்வே லஞ்சம். லஞ்சம் வாங்கி வாங்கி வாங்குறது தப்புனே மறந்து போன அரசு எந்திரம்.

போராட பின் புலமோ, வசதியோ இல்லாத பொது ஜனம் , சகிப்பு தன்மையை வளர்த்துக்கிட்டு வாழ பழகிடுச்சு.

சின்ன உதாரணம் சொல்கிறேன் , செல் போன் காணாமல் போனால் இன்சுரன்ஸ்னு யுனிவர்சல் மொபைலில் சொன்னாங்கனு வாங்கும் போது கூடுதா 180 ரூ கட்டி வச்சேன். போன் காணாமல் போச்சு ,இன்சுரன்ஸ் மூலம் திரும்ப வாங்க காவல் துறையில் புகார் கொடுத்து கேஸ் நம்பர் வாங்கிவர சொன்னாங்க, போனால் 2000 ரூ போனுக்கு உனக்கு கம்பளையிண்ட் எழுதி நம்பர் கொடுக்குனுமா என்னையே திருப்பிக்கேட்கிறாங்க.(ரொம்ப நக்கலா கேட்டாங்க) சரி ஒழியுதுனு போனை பிளாக் செய்ய வைத்துவிட்டு, புதுசா வாங்கிட்டேன். இப்பவும் இன்சுரன்ஸ் போட்டுக்கோங்கனு சொன்னான் எதுக்கு உங்களுக்கு வருமானம் வர இது திட்டமானு கேட்டுட்டு வந்தாச்சு.வழக்கமாகவே விலை அதிகமான போன் வாங்குவதில்லை 3000 குள்ள எல்லா வசதியும் இருக்கானு கேட்பேன் ,கடைக்காரன் சைனா மொபைல் இருக்கு சொல்வான் :-)) இதான் வழக்கமா நடக்குற வியாபார சம்பாஷணை :-))

யாராவது மொபைல் இன்சுரன்ஸ் மூலம் திரும்ப வாங்கி இருக்காங்களானு சொல்லுங்க.

வவ்வால் said...

//investigative journalism ஏதாவது அதிரடியா செய்யணும். லக்கிலுக்குகளும், அதிஷாக்களும் கவனிக்க. :)//

சர்வே,

இன்னுமா இவங்கள எல்லாம் நம்புறிங்க :-))

இன்றைய சூழலில் பத்திரிக்கைகள் /ஊடகங்கள் எல்லாமே வியாபாரம் தான் ஒரு ரூ செலவு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதே கணக்கு.பத்திரிக்கை/ஊடக முதலாளிகள் பெரும்பாலோரே ஊழல் பெருச்சாளிகள் தான் , எங்கே எஸ்.ஆர்.எம் நிகர்நிலையில் ஒரு சீட்டுக்கு எவ்வளவு பணம் என்ன நடக்குதுனு எழுத சொல்லுங்க பார்ப்போம்.

மாநிலம் தோறும் புரோக்கர் வச்சு ஆள்ப்பிடித்து சேர்த்து வருமானம் ஈட்டும் நபர் நடத்தும் ஊடகம் மட்டும் நியாத்துக்காக குரல் கொடுக்குமா என்ன?

நாம ஒரு பத்தடி ஆக்ரமிச்சா வருவாய் துறை நோட்டிஸ் விட்டு இடிக்க வரும்,ஆனால் பல ஏக்கர் ஆக்ரமிச்சா சட்ட சபைல சட்ட திருத்தம் போட்டு மலிவு விலையில் கொடுக்கிறாங்க(அதுக்கு ஏற்ப கட்டிங்க் கிடைக்கும்). இதெல்லாம் அந்த ஊடகத்தில வருமா? :-))

கல்வி கொள்ளையடிச்ச பணத்துல ஊடகம் நடத்துறவங்க எப்படி இன்னொரு கொள்ளைய தட்டிக்கேட்பாங்க.

இந்தியன் பட வசனம் தான் "வெளிநாட்டில கடமைய மீறத்தான் லஞ்சம், இங்கே கடமைய செய்வே லஞ்சம். லஞ்சம் வாங்கி வாங்கி வாங்குறது தப்புனே மறந்து போன அரசு எந்திரம்.

போராட பின் புலமோ, வசதியோ இல்லாத பொது ஜனம் , சகிப்பு தன்மையை வளர்த்துக்கிட்டு வாழ பழகிடுச்சு.

சின்ன உதாரணம் சொல்கிறேன் , செல் போன் காணாமல் போனால் இன்சுரன்ஸ்னு யுனிவர்சல் மொபைலில் சொன்னாங்கனு வாங்கும் போது கூடுதா 180 ரூ கட்டி வச்சேன். போன் காணாமல் போச்சு ,இன்சுரன்ஸ் மூலம் திரும்ப வாங்க காவல் துறையில் புகார் கொடுத்து கேஸ் நம்பர் வாங்கிவர சொன்னாங்க, போனால் 2000 ரூ போனுக்கு உனக்கு கம்பளையிண்ட் எழுதி நம்பர் கொடுக்குனுமா என்னையே திருப்பிக்கேட்கிறாங்க.(ரொம்ப நக்கலா கேட்டாங்க) சரி ஒழியுதுனு போனை பிளாக் செய்ய வைத்துவிட்டு, புதுசா வாங்கிட்டேன். இப்பவும் இன்சுரன்ஸ் போட்டுக்கோங்கனு சொன்னான் எதுக்கு உங்களுக்கு வருமானம் வர இது திட்டமானு கேட்டுட்டு வந்தாச்சு.வழக்கமாகவே விலை அதிகமான போன் வாங்குவதில்லை 3000 குள்ள எல்லா வசதியும் இருக்கானு கேட்பேன் ,கடைக்காரன் சைனா மொபைல் இருக்கு சொல்வான் :-)) இதான் வழக்கமா நடக்குற வியாபார சம்பாஷணை :-))

யாராவது மொபைல் இன்சுரன்ஸ் மூலம் திரும்ப வாங்கி இருக்காங்களானு சொல்லுங்க.