மோசார்ட் என்ற இசை மேதையின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு அமைத்த படம் அமாடியஸ். (Amadeus).
சீரியஸா இல்லாம,, கொஞ்சம் காமெடியாக செல்லும் திரைக்கதை.
எட்டு வயதிலேயே, தன் இசைத் திறமையால், பலரை வியப்பில் ஆற்றியவர் மொசார்ட். இள வயதிலேயே அவருக்குக் கிட்டிய புகழைக் கண்டு பொறாமையில் செலியேரி (Selieri) என்ற இன்னொரு அரசவை இசை மேதை, மொசார்ட்டை எப்படிக் கொல்ல முயன்றார் என்பதைப் போன்ற கதைக் கரு.
அரசவையில் தனக்கு இருந்த புகழ், மொசார்ட்டின் வருகைக்கு பிறகு குறைந்ததை தாங்க முடியாமல் இருக்கிறார் செலியேரி.
மொசார்ட்டின் ஏழ்மையை அறிந்த செலியேரி, மாறு வேடத்தில் சென்று, மொசார்ட்டிடம் ஒரு பெரிய இசைக் கோர்வையை எழுதித் தரச் சொல்லி பணம் தருகிறார்.
தினசரி இரவு வந்து, சீக்கிரம் முடித்துத் தருமாறு நெருக்கடி தருகிறார். நெருக்கடி அதிகமாகி, மொசார்ட் உடல்நலம் குன்றி, கடைசியில் இறந்தும் போகிறார்.
படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி இது. உடல்நலம் குன்றிய மொசார்ட், ஒரு தருணத்தில், செலியேரிதான் வில்லன் என்பது புரியாமல், செலியேரியிடம், தான் எழுதி முடிக்க வேண்டிய இசைக் கோர்வையை, எழுதித் தருமாறு சொல்கிறார்.
மொசார்ட், சொல்லச் சொல்ல, செலியேரி அதை புரிந்து கொள்ள முடியாமல் திணறுவதும், புரிந்ததும், மொசார்ட்டின் திறமையை உள்வாங்கி பொறாமைப் படுவதும், பின்னணியில் மொசார்ட் சொல்லும் இசை வாசிக்கப்படுவதும், இந்தக் காட்சியை எங்கேயோ இட்டுச் சொல்லும் (Selieri played by Murray Abraham, won the Oscar for Best Actor). எட்டு ஆஸ்கார் விருதை வாங்கிய Amadeus, பார்த்தே ஆக வேண்டிய படம், இசைப் பிரியர்கள் அனைவரும்.
Salutes, to the Maestro and the film maker.
பி.கு: நம்ம ஊரு ராசாவும், கமலும் விரும்பிப் பலமுறை பார்த்த படம் அமாடியஸ், என்பது கொசுறுச் செய்தி.
2 comments:
சர்வே,
படம் "ரொம்ப" நல்லப்படமா இருக்கும் போல! ஆங்கிலத்தில் பார்த்தால் நமக்குலாம் புரியாது தமிழில் டப்பானால் முயற்சிக்கலாம்.
//பி.கு: நம்ம ஊரு ராசாவும், கமலும் விரும்பிப் பலமுறை பார்த்த படம் அமாடியஸ், என்பது கொசுறுச் செய்தி.//
அப்போ தானே தமிழில் படம் எடுக்க முடியும் :-))
படம் பார்க்கவில்லை நண்பரே ! இணையத்தில் கிடைத்தால் டவுன்லோட் செய்து பார்க்க வேண்டும் ! நன்றி !
Post a Comment