recent posts...

Monday, January 24, 2011

நல்ல ஆ படங்கள் சில...

2010 தமிழ் திரைப்படத்துக்கு நல்ல வருடம். அருமையான பல படங்கள் காணக் கிட்டியது. அவங்க லாபம் சம்பாதிச்சாங்களா என்ற கணக்கெல்லாம் நமக்கு வேணாம். நமக்கு பொழுது போச்சா? அதான் முக்கியம்.
சென்ற வருடப் படங்களில் நல்லாவே பொழுது போச்சு.

அருமையான தமிழ் படங்களைத் தொடர்ந்து சில பல ஆங்கிலப் பழைய புதிய படங்களையும் கண்டு மகிழ்ந்தேன். அதில் சிலதின் பெயரை உங்களுக்குச் சொல்லி, யாம் பெற்ற இன்பம் பெறுக நீங்களும் என்ற கோட்பாட்டின் படி இயங்க இந்தப் பதிவு.

Kill Bill2 தான் Quinton Tarantino என்ற இயக்குனரின் பெயரை எனக்கு அறிமுகப் படுத்தியது. கட்டாயம் பாருங்க. அப்படியே முதல் பாகமும்.
அப்படியே பின்னோக்கி நகர்ந்தா, பலராலும் போற்றிப் புகழப்படும் Pulp Fictionம் இந்தாளு எடுத்த படம்தான். இப்படியெல்லாம் கூட ஒரு படத்தை எடுக்க முடியுமான்னு கேட்க வைக்கும் க்ளாசிக் காட்சிகள். முக்கியமா படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில், சேமுவேல் ஜாக்ஸனும், ட்ரவால்ட்டோவாவும், இன்னும் இரு ஜேப்டி திருடர்களும், ஆளுக்கொரு துப்பாக்கிய வச்சுக்கிட்டு பேசர ராவடி, அற்புதம்.

இதே ஆளுது, Reservoir Dogsச்னு ஒரு படம். இதுவும் அமக்களம். "If you shoot me in your dreams, you better wake up and apologize"னு டாராண்ட்டினோவின் முத்திரை பதித்த வசனங்கள்.

இதே ஆளுது, Jackie Brownன்னு இன்னொரு படம். இதிலும் சேமுவேல் ஜாக்ஸன் கலக்கல் நடிப்பு. அலட்டாமல் நடித்த ராபர்ட் டினிரோவும் உண்டு.

Graduateனு ஒரு படம். Dustin Hoffman சின்ன வயதில் நடித்து 1970களில் வெளிவந்த படம். அந்த காலத்துக்கு, இது ரொம்பவே முற்போக்கு எண்ணங்கள் நிறைந்த படம். குடும்ப நண்பரின் மனைவியை காதலிக்கும் பயலான டஸ்ட்டின். பள்ளிக் காலங்களில் ரொம்வே பிடித்த "God Bless you please Mrs.Robinson" , Sound of Silence போன்ற பிரபலப் பாடல்கள் இந்த படத்தில் அருமையாய காட்டியிருக்காங்க.

Inception பத்தி ஏற்கனவே அளந்தாச்சு.

Papillon. இது, இந்த ஊரு எம்.ஜி.ஆரு, Steve McQueen ஹீரோவாக நடித்த படம். சின்ன தப்பு செஞ்சவர ஒரு தீவில் இருக்கும் ஜெயிலில போட்டுருவாங்க. அங்க இருந்து தப்பிக்க பல விஷயங்கள் செய்வாரு. ஒவ்வொரு தடவையும் திரும்ப புடிச்சு உள்ள போட்ருவாங்க. வயசாகி கிழம் தட்டரவரைக்கும் இப்படியே செய்வாரு. Never Give Upனு அடிச்சு சொல்லும் படம். அந்த காலத்துல என்னமா படமாக்கியிருக்காங்க. பிரமிப்பு.

Temple Grandin. இது சென்ற வருடம் வந்தது. autismம் என்ற நோயால் பாதிக்கப்பட்ட பெண்மணி பற்றிய உண்மைக் கதை. அவங்க குறையை எப்படி நிறையா மாத்தி, வாழ்க்கையில் ஜெயிச்சுக் காட்டினாங்க என்பதை, ரொம்ப ரொம்ப சுவாரஸ்யமா படம் பிடிச்சுக் காட்டியிருக்காங்க. குறிப்பா, ஹீரோயினா நடிச்ச பெண்மணி அபாரம். Golden Globesம் அந்த பெண்மணிக்குக் கிட்டியதாய் நினைவு.

IP Manன்னு ஒரு சீன மொழிப்படம். இதுவும் உண்மைக் கதையாம். விறு விறு விறுன்னு நகரும் காட்சி அமைப்பு. குங்ஃக்ப்பூ, பாசம், தேசம்,நட்பு, வெறுப்பு, அது இதுன்னு நல்ல கலவை.

Babel, இந்த ஊரு சூர்யா, Brad Pitt நடிச்ச படம். தொடர்பில்லா பல காட்சிகள், கடைசியில் எப்படி தொடர்புடையதா ஆகுதுன்னு, அழகா ஓடும் படம். போரடிக்காம ரெண்டு மணி நேரம் நகர கியாரண்ட்டி.

..இன்னும் வரலாம்..

7 comments:

SurveySan said...

btw, hollywoodbala என்ன ஆனாரு?

SurveySan said...

பார்த்தே தீர வேண்டிய ஏனைய படங்கள் இருந்தா தெரிவிக்கவும். நன்றீஸ். NetFlixல் பார்க்க அவா.

pudugaithendral said...

imagine that nalla iruku

ஆர்வா said...

Temple Grandin. பார்க்கணுன்னு நினைச்சேன்.. இன்னும் பார்க்கலை.. பார்த்திட வேண்டியதுதான்.. ஹி..ஹி.. ஒரு முக்கியமான படத்தைப்பத்தி சொல்லவே இல்லையே


முத்தங்களுக்கு மட்டுமே அனுமதி

SurveySan said...

@புதுகைத் தென்றல் பாத்துட்டேன்னு நெனைக்கறேன். குட்டீஸ் படம் இல்ல அது?

SurveySan said...

@கவிதை காதலன் எந்த முக்கியமான படம் பத்தி சொல்றீங்க கவிதை காதலரே?

Philosophy Prabhakaran said...

அந்த ஊரு சூர்யா, அந்த ஊரு எம்.ஜி.ஆருன்னு நல்லா கம்பேர் பண்ணி எழுதியிருக்கீங்க... சூப்பர்...