recent posts...

Sunday, May 31, 2009

படங்கள் வரும் முன்னே - பாரிஸ்

இதற்கு முந்தைய பதிவில் லண்டன் பயணத்தின்போது எடுத்த படங்களைப் பார்க்காதவர்கள், இங்கே அமுக்கி பாக்கலாம்.
லண்டன்லேருந்து பாரிஸ்க்கு, யூரோ-ஸ்டார் ரயிலில், (500 கி.மீட்டர் தூரம்), 2 1/4 மணி நேரத்தில் கொண்டு போய் விட்டுடறாங்க. இதில் 50 கி.மீட்டர் தூரம், கடலுக்கடியில் இருக்கிறது. மண்ணுக்கடியில் குடைந்து ரயில் விடரதுலையும், மலையக் குடையரதுலையும், கடலுக்குள் குடைந்து ரயில் பாதை அமைப்பதிலும், செம தில்லாலங்கடியா இருக்கானுவ தொரைங்க.
என்னமா கொடஞ்சு வச்சிருக்காங்க?

லண்டனைப் போலவே, பாரிஸிலும் பலப் பல க்ளிக்குகள்.
ஆனா, பாரிஸில் ரயில் நிலையம் விட்டு வெளியே வந்ததும், பாரிஸ் பற்றிய பிம்பம் தகிடு பொடியானது. பளபளப்பு இல்லாதா, 'சாதா' நகரமாய் தெரிந்தது.
குறிப்பா, தெருமுழுக்க கிறுக்கி வச்சிருக்கானுங்க. தெருவோரத்தில் நிற்கும், 'அல்ஜீரியா' நண்பர்கள், திகிலை ஊட்டினார்கள்.

la chapelle என்ற இடத்தில் இரண்டு மூன்று தெருக்களில், பல ஈழத் தமிழர்களின் கடைகள். தெருமுழுக்க, தமிழில் பெயர் பலகைகளுடன் பலப் பல உணவகங்களும், மற்ற கடைகளும்.
அங்கே சந்தித்த ஈழத் தமிழர் ஒருவர், கன்னா பின்னான்னு உதவி பண்ணுனாரு. கூடவே நடந்து வந்து, பாஷை தெரியாத ஊரில், அடுத்த நாளுக்கு தேவையான ரயில் டிக்கெட்டெல்லாம் வாங்கிக் கொடுத்து, இதப் பாருங்க, அங்கப் போங்கன்னு எக்கச்சக்கமா அட்வைஸ் பண்ணி அனுப்பி வச்சாரு.
ரெஸ்டாரண்டிலும், அன்னிக்கு ராத்திரி இட்டாலிக்கு கெளம்பறேன்னதும், ராத்திரிக்கு ரயில் ப்ரயாணத்துக்கு தேவையான பிரியாணியை பொட்டலம் பண்ணிக் கொடுத்து விட்டாங்க.
நல்ல மனுஷங்க.

ஒரு நல்ல டிப்பும், கொடுத்தாரு. "பணமெல்லாம் பத்திரம். கள்வர்கள் பயம் அதிகம். ஜீன்ஸ் பொக்கெட்ல பத்திரப் படுத்திக்கோங்க பணம், பாஸ்போர்ட்டெல்லாம்"ன்னாரு.
அல்ஜீரியாவிலுருந்து வந்த கும்பலில் பலர் பிக்-பாக்கெட் அடிக்கும் ஜேப்டி திருடர்களாம்.
அடங்கொய்யால. இங்க வந்து, ஏதாவது காணாம போச்சுன்னா அதோகதிதான். அதனால, ரொம்பவே கவனமா இருந்தேன்.

அல்ஜீரியாவாசிகள், பாரிஸை நாசம் பண்ணி வச்சிருக்காங்க. அழகான ரயில்களை, கிறுக்கியும், சுறண்டியும், கண்றாவியா ஆக்கி வச்சிருக்கானுங்க.
குடிச்சுட்டு, ரயிலில் அவனுங்க பண்ற அட்டூழியம் தாங்க முடியல்ல. போலீஸ் சரியில்லையோ?

ப்ரவுஸிங் செண்டரில் இருக்கும்போது, ஒரு ச்ர்தார்ஜி அலரி அடிச்சுக்கிட்டு உள்ள வந்து, "how can i call police?"னு கேட்டாரு. அவரோட பர்ஸை அடிச்சுட்டானுங்களாம், கெரகம் புடிச்சவனுங்க. ஹ்ம்!

ச! வெறும் படம் மட்டும் போடலாம், கதையெல்லாம் தனியாச் சொல்லலாம்னு நெனச்சிருந்தேன். தட்ட ஆரம்பிச்சா, வார்த்தைகள் கொட்டரத நிறுத்த முடியல்ல ;)

படங்களைப் போடும் முன், ஒரு சேதி.
பாரிஸ் தெருமுனையில், ஒரு தமிழ் புத்தகக் கடையில், பதிவர் யெஸ்.பாலபாரதியின், அவன் - அது = அவள், விற்பனையில் இருந்ததைக் காண நேர்ந்தது.

சரி, இனி படங்கள் சில. (Click to view them big.)

Notre Dame Cathedral. 1160 ~ 1345ல் கட்டப்பட்டது. Napoleon போன்ற பேரரசர்களுக்கு பதிவியேற்பெல்லாம் இங்கதான் நடக்குமாம்.


Notre Dame


Louvre Museum ல், Napoleon Apartmentனு சில ரூமை காட்சிக்கு வச்சிருக்காங்க. அதிலிருக்கும் ஒரு நாற்காலி. இதுல மூணு பேரு ஒக்காந்து எப்படி பேசிப்பாங்கன்னு நெனச்சப்போ, சிரிப்புதான் வருது. என்னென்னமோ கட்டனுவங்களுக்கு ஒரு நாற்காலி சரியா பண்ணத் தெரியாமப் போச்சேய்யா :)


பெருசா ஒண்ணும் இருக்காதுன்னு நெனச்சேன். ஆனா, ஈஃபில் டவர் ஒரு ப்ரமிப்பு. அதுவும், ராத்திரி பாக்க ரொம்பவே அழகு.


Louvre museum போனதே, அங்கேயிருக்கும், மோனாலிஸாவை பாக்கணும்னுதான். ஆனா, அங்கயிருக்கர மத்த ஓவியங்களும், சிற்பங்களும், "அம்மாடியோவ்'னு அலர வைக்கும் தரத்தில் இருக்கு. லியானார்டோ டா வின்ஸி, மைக்கலாஞ்சலோ போன்ற மேதாவிகளின் பலப் பல படைப்புகள் பாதுகாத்து வச்சிருக்காங்க. ம்யூசியம் மட்டும் பாக்கவே அஞ்சு நாள் தேவைப்படும். அம்மாம் பெருசு. பார்த்த சிற்பங்களில் வெகுவாய் கவர்ந்தது இது. மெத்தையையும் தலையணையையும் எப்படி செதுக்கி வச்சிருக்காங்க பாருங்க. அமேசிங்!


ம்யுசியத்தில் பார்த்த ஓவியத்தில் பயங்கரமாய் கவர்ந்தது, ஒரு பெரிய படம். போரில் மறைந்த கணவனை மடியில் போட்டுக் கொண்டு அழும் மனனவி. கீழே ரெண்டு குட்டிப் பசங்களும் அழறாங்க. தத்ரூபமான ஓவியம். குழந்தையின் கண்ணில் கண்ணீர் துளி. அமேசிங்!


Louvre Museum


Sacre Ceur cathedral (அருமையான சர்ச். ஆனா, போர வழி முழுக்க படிக்கட்டுகளில், பீர் பாட்டில்களை ஒடச்சு வச்சிருக்காங்க. சில இடங்களில் 'கப்பும்' அடித்தது. கெரகம் புடிச்சவனுங்க)


Louvre


குட்டிக் கார்.

17 comments:

Indian said...

//பாரிஸ் தெருமுனையில், ஒரு தமிழ் புத்தகக் கடையில், பதிவர் யெஸ்.பாலபாரதியின், அவன் - அது = அவள், விற்பனையில் இருந்ததைக் காண நேர்ந்தது. //

If I remember correctly, it must be யாழ் புத்தகாலயம்.

Indian said...

Did you visit Champs-Élysées and Pigalle?

SurveySan said...

indian, must be if that is the one close to the 'raghuram' money exchange place.

champs-elysees - yes. but i didnt find anything attractive there. nadandhadhudhaan michcham :)

but in the end of the road, the arc de triomphe was really good.

pigalle - No. thaniyaa vandhaa poyirukkalaamo? :)

ஆ! இதழ்கள் said...

குழந்தையின் ஓவியத்தில் கை முப்பரிமாணத்தைப் போல் தெரிகிறது. தொழில்நுட்பம் இல்லாத காலத்திலும் பின்னியெடுத்திருக்கிறார்கள் முன்னோர்கள்.

SurveySan said...

ஆ!

ஆச்சரியம் என்னன்னா, இவ்ளோ வருஷமும் ஓவியம் ஒண்ணும் பெருசா டாமேஜ் ஆகாம இருக்கு்.

very impressive.

Anonymous said...

வாவ் பரிஸ் வந்தீங்களா!!! முன்னரே தெரிந்திருந்தால் சந்தித்து இருக்கலாம்..!
படங்கள் எல்லாம் நல்ல இருக்கு!
போலிஸ் சரியில்லை என்று சொல்ல முடியாது.. ஆனால் இது போண்றா(பர்ஸ்,செல்போன்) திருட்டுகள் அதிகம்.. இரயில் வாசலில் நின்றி பேசிட்டு இருக்கும் போது.. கதவு மூடும் சமயம் சுலபமாக பறித்து விடுவார்கள்.. நாங்க தான் கொஞ்சம் கவனமாக இருக்கனும்!

ராமலக்ஷ்மி said...

படங்களும் குறிப்புகளும் அருமை.

ஒருவரோடு ஒருவர் பேச விரும்பாமல், ஆனால் தேர்தலில் மட்டும் கூட்டணி வைத்துக் கொள்ள பெரிய கட்சித் தலை(மை)யைச் சந்திக்க வரும் சின்னத் கட்சித் தலை(மை)கள் காத்திருக்க அந்த நாற்காலியை இறக்குமதி செய்யலாம்:)!

rapp said...

பாரீசிலும் அனைத்து பெருநகரங்களையும் போல நார்த், சவுத் இன்ன பிற வகையறாக்கள் உண்டு. அதுக்கேத்தாப்ல இருக்கும்:):):)

SurveySan said...

Kavin,

//இரயில் வாசலில் நின்றி பேசிட்டு இருக்கும் போது.. கதவு மூடும் சமயம் சுலபமாக பறித்து விடுவார்கள்.//

hmm. enna kodumainga idhu? :)
luckily, no such incident happened to me.

SurveySan said...

Ramalakshmi,

super yosanai :)
rombave yosikkareenga . :)

SurveySan said...

rapp, yes.

but, inga (US) appadi appattamaana thiruttu gumbal pattap pagalla veliyila suththaradhu illai. :)

rapp said...

நீங்க நியூயார்க்கா?:):):)

அப்டின்னா, அங்கிருக்க மெட்ரோ (ரயில் நிலையம்) பத்தி மட்டும் எத்தனைப் பதிவுகள் போடலாம்:):):)

இராம்/Raam said...

ஈபிள் டவர் மண்டைய வெட்டிட்டிங்க போலே.... :))

படமெல்லாம் பட்டாசு.. :)

Indian said...

//இரயில் வாசலில் நின்றி பேசிட்டு இருக்கும் போது.. கதவு மூடும் சமயம் சுலபமாக பறித்து விடுவார்கள்.. //

I had that experience as well. :)

SurveySan said...

rapp,
me california :)

newyork metro konjam ubayogap paduthiyirukken. aana,andhalavukku mosamillai. bayamellaam erpaduthiyadhillai ;)

paris was bad.

SurveySan said...

thanks Raam.

yes. 5mm cut aayiduchu. :)

SurveySan said...

indian,

//I had that experience as well. ://

see, paris is really bad.

what are the odds, that it happened to a sardar who was in the browsing center with me, and it happened to you and it also happened to another friend of mine who visited paris last year.

paris is a unsafe city :)