recent posts...

Wednesday, May 06, 2009

அல்பைகள் ஆயிரம்

படித்த காலத்தில் பணப் புழக்கம் கையில் அவ்வளவாக இல்லாததால், பணத்தின் அருமை அளவுக்கு அதிகமா தெரியுது.

ஒவ்வொரு பைசா செலவு செய்யும் போதும், இது கண்டிப்பா தேவையா, இதை விட குறைந்த செலவில் இதைச் செய்யமுடியுமான்னு பல தடவை திங்க் பண்ணி திங்க் பண்ணிதான் எல்லாத்தையும் வாங்குவேன்.

சமீபத்தில் அந்த பணப் பற்று கொறஞ்சுக்கிட்டே வருது. ஏற்கனவே சொன்ன மாதிரி, பங்குச் சந்தை குறைவதும், அதனுள் இருக்கும் நம் சேமிப்புகள் கரைவதும் வாடிக்கையாய் நடப்பதால், "பணம் என்னடா பணம் பணம்"னு டி.எம்.எஸ் கணக்கா மனசாட்சி பாடிக்கிட்டே இருக்கு.

இந்த பக்குவ உன்னத நிலையை அடைய, ஆர்ட்-ஆஃப்-லிவ்விங்கோ, சுவிசேஷ கூட்டங்களுக்கோ போக வேண்டியதில்லை.
ஒரு பத்தாயிரத்தை எடுத்து, ஒரு வங்கியின் ஸ்டாக் வாங்கிப் போட்டு, தினசரி அதன் விலையை பாத்தாலே போதும். நீங்களும், ஜோதியில் ஐக்கியமாயிடலாம். :)

எல்லாம் அவன் செயல்.

துட்டு சம்பாதிச்சு செலவு செய்யும் மனிதர்களை மூணா பிரிக்கலாம்.
அ) கண்ண மூடிக்கிட்டு செலவு பண்றவங்க (spendthrift)
ஆ) கொஞ்சம் யோசிச்சு செலவு பண்றவங்க (frugal)
இ) கஞ்சப் பசங்க (miser)

இதுல நீங்க எந்த வகைன்னு நீங்களே முடிவு பண்ணிக்கங்க.

எனக்குத் தெரிஞ்சு, "ஆ"வா இருக்கரதுதான், சாலச் சிறந்தது. நான், ஆ!

ஆனா, இந்த மூணிலும் சேராம ஒரு வகை இருக்கு. அந்த வகையா இருக்கரவங்க, யாரா இருந்தாலும், உடனே உங்கள மாத்திக்கங்க.

அது,
ஈ) அல்பப் பசங்க (stingy bloody miser)

என் நண்பனுக்கு நடந்த விஷயம் இது, சில வருஷத்துக்கு முன்னாடி.
டாலர் தேடி வரும், பலரும் செய்வதைப் போலவே, இவனும், வேறு சிலருடன் ஒரு அப்பார்ட்மெண்ட்டில் கூட்டுக் குடித்தனும் இருந்திருக்கிறான். நாலு பேர் இருப்பாங்களாம்.

அதில் ஒருத்தன் ஈ வகையாம்.
ஒவ்வொரு நயா பைசாவுக்கும் கணக்குப் பார்க்கும் டைப்பாம்.

அதிலென்ன தப்பு?

இல்லதான்.

ஒரு அழகிய ஞாயிற்றுக் கிழமை, சோத்த தட்டுல போட்டுக்கிட்டு சாப்பிட ஆரம்பிச்சாங்களாம்.

அருகில் இருந்த ஊர்காய் பாட்டிலில் இருந்து, ஒரு ஸ்பூன் ஊறுகாயை நண்பன் எடுத்துப் போட்டுக் கொண்டானாம்.
அதைப் பார்த்த ஈ, "டேய், என்னோடதுடா அது, ஏண்டா எடுக்கர? உனக்கு வேணும்னா, ஒரு பாட்டில் வாங்கி வச்சுக்கோ"ன்னானாம், பயங்கர டென்ஷனா :)

இப்படியெல்லாம் கூட மனிதர்கள் உண்மையாவே இருப்பாங்களான்னு எனக்கு பல முறை பல விஷயங்கள் பார்க்கும்போதும் கேட்கும்போதும் தோணும்.

பங்குச் சந்தை பார்த்துப் பார்த்து பணம் மேல் பிடிப்பு போன மாதிரி, பதிவுச் சந்தை பாத்து பாத்து எல்லா விதமாவும் மனுஷங்க இருப்பாங்கன்னு தெளிவு வந்தாச்சு ;)

எல்லாம் அவன் செயல்!

பி.கு: கஞ்சப்பய ஜோக்கு ஒண்ணு, மடலில் வந்தது:
ஒரு கஞ்சப் பய சாகரதுக்கு முன்னாடி, தன் மனைவியிடம், "அடியே நான் செத்தா என் எல்லாப் பணத்தையும் என்னோட சேத்து பொதச்சுடணும். நான் சொர்கத்துல அத யூஸ் பண்ணிக்குவேன்"னு சொல்லி மனைவியிடம் சத்தியம் செஞ்சு வாங்கிக்கிட்டானாம்.
ஒரு நாள் மண்டையும் போட்டுட்டானம்.
அவனின் சவப் பெட்டியை மூடுவதர்க்கு முன், மனைவி, ஒரு பையை அதுனுள் வைத்து விட்டு வந்தாளாம்.
மனைவியின் ஃப்ரெண்டு "நெஜமாவே பணத்தையெல்லாம் சவப் பெட்டியில் புருஷன் கூடவே போட்டு பொதைக்கறியா"ன்னு கேட்டாளாம்.
அதுக்கு மனைவி நமுட்டு சிரிப்புடன், "ஆமா, சொத்தின் மொத்த மதிப்புக்கும், புருஷன் பேரில் ஒரு செக் எழுதி அதை பெட்டியில் போட்டுட்டேன். அவரு சொர்கத்துக்கு போய் அந்த செக்கை காசாக்கிக்கட்டும்"னு சொன்னாளாம்.

13 comments:

ஆ! இதழ்கள் said...

இந்த பக்குவ உன்னத நிலையை அடைய, ஆர்ட்-ஆஃப்-லிவ்விங்கோ, சுவிசேஷ கூட்டங்களுக்கோ போக வேண்டியதில்லை.
ஒரு பத்தாயிரத்தை எடுத்து, ஒரு வங்கியின் ஸ்டாக் வாங்கிப் போட்டு, தினசரி அதன் விலையை பாத்தாலே போதும். நீங்களும், ஜோதியில் ஐக்கியமாயிடலாம். :)//

வர வர ஸ்டாக்ஸ் பொலம்பல் ஜாஸ்தியாகீது. என்ன சேதி? வரும் வரும் வரும்..

Truth said...

he he he... idu pola orutham ella idathulayum irupaan :-)

கார்த்திகைப் பாண்டியன் said...

கடைசி சோக்கு.. நச்..:-)

SurveySan said...

ஆ!
///வர வர ஸ்டாக்ஸ் பொலம்பல் ஜாஸ்தியாகீது. என்ன சேதி? வரும் வரும் வரும்..//

:) பொலம்பல் இல்லீங்க அது. பொலம்பர ஸ்டேஜெல்லம் எப்பாவோ தாண்டியாச்சு.

SurveySan said...

Truth, :) கண்டிப்பா, அவங்க இருந்தாதான் நமக்கு சுவாரஸ்யம் ;)

SurveySan said...

கார்த்திகைப் பாண்டியன், நன்னி.

Bleachingpowder said...

//அருகில் இருந்த ஊர்காய் பாட்டிலில் இருந்து, ஒரு ஸ்பூன் ஊறுகாயை நண்பன் எடுத்துப் போட்டுக் கொண்டானாம்.
அதைப் பார்த்த ஈ, "டேய், என்னோடதுடா அது, ஏண்டா எடுக்கர? உனக்கு வேணும்னா, ஒரு பாட்டில் வாங்கி வச்சுக்கோ"ன்னானாம், பயங்கர டென்ஷனா :) //

கட்டடத்தில் கூலி வேலை செய்பவர்கள் கூட, உணவருந்தும் போது பகிர்ந்து தான் உண்ணுவார்கள். இவர்களிடம் இருக்கும் பெருந்தன்மை கூட டாலரில் சம்பாதிப்பவர்களிடம் எதிர்பார்க்க முடியாதா???

பழைய அலுவலகத்தில் ஒரு நாள் டீ குடிக்க வெளியே சென்ற போது, பக்கத்து டீம் பையனும் வந்தான். நான் எல்லாருக்கும் சேர்த்து காச கொடுத்துட்டு வெளியே வந்தா அவர் என்னோட பாக்கட்டுல நாலு ருபாய போட்டு அசிங்கபடுத்திட்டான். என்னடா இப்படி பன்றான்னு நண்பர்களிடம் கேட்டதுக்கு, அவன் பில்லை கொடுத்தா உங்கிட்ட இருந்து அந்த நாலு ருபாயை வாங்காம போக மாட்டான்னு சொன்னான்!! இவனுகளையெல்லாம் எப்படி சமாளிக்கறதுன்னே தெரியல

mayavi said...

u say .. abt pickle.. there was a roommate of mine... who will not pay for vegetables.. because he will only use the liquid part in sambar....and once we all had egg without knowing that he does not eat non veg that day... he cooked egg for him alone next saying.. we had egg yesterday ..so to equalise he will ahve today...

SurveySan said...

bleaching, //இவனுகளையெல்லாம் எப்படி சமாளிக்கறதுன்னே தெரியல//

pallak kadichchukkittudhaan ;)

SurveySan said...

mayavi,

/////had egg yesterday ..so to equalise he will ahve today...//////

adengappaaaa. manidhargal palavidhamnu theriyaamayaa sollirukkaanga. ;)

pappu said...

அண்ணே, அப்போ நீயே ஒரு ஆர்ட் ஆஃப் லிவிங் க்ளாஸ் எடுத்தா என்ன?

SurveySan said...

Pappu, கூடிய விரைவில் அறிவிப்பு விட்டுட வேண்டியதுதான்.

எல்லாரையும் ஜோதியில் ஐக்கியமாக்கிடறேன். :)

பட்டாம்பூச்சி said...

Nalla message solli irukkeenga.
Nandri.