recent posts...

Thursday, May 28, 2009

படங்கள் வரும் முன்னே...லண்டன்

ஒரு வழியாக ஐரோப்பா பயணம் இனிதே முடிந்தது. அருமையான பத்து நாட்கள்.
பலப் பல அனுபவங்கள்,
பலப் பல செலவுகள்,
பலப் பல நிகழ்வுகள்,

முக்கியமா,
பலப் பல க்ளிக்குகள்.

லண்டன், பாரிஸ், ரோம், வென்னிஸ் இந்த பயணத்தில் கண்டு களித்த நகரங்கள்.
கதையெல்லாம் சொல்றதுக்கு முன்னால, சில படங்கள் மட்டும் இப்போதைக்கு.

லண்டனில் க்ளிக்கியவை.
Tower Bridge. ரொம்ப நாளா இதுதான் லண்டன் ப்ரிட்ஜுன்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன். இல்லியாம். இதுக்கு பக்கத்துல, மொக்கையா இருக்குது லண்டன் ப்ரிட்ஜு.

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கோஷ்டி தொல்ல தாங்க முடியல்ல. please donate for building a temple. நான் சாரி, நோன்னு சொன்னேன். அதுக்கு, Wont you spare 1 pound for building a temple?ன்னான். நான் அதுக்கும், 'நோ'ன்னு சொன்னேன். ஆனா, ஜாலியா இருக்காங்க இவனுவ. குடுமியும், ஆட்டமும், பாட்டமும். ஹ்ம்!

பூச்சியத் தின்னும் பிட்சர் செடி.

லண்டன் ஐ. ரங்க ராட்டணம்.


Westminster Abbey, பல பெரிய தொரைகளையெல்லாம்இங்க மந்தரம் சொல்லித்தான் அடக்கம் பண்ணாங்களாம்.


லண்டன் டாக்ஸி டாக்ஸி.

எலிசபெத் ராணி வூடு. தொப்பித் தலையனுங்க, இங்கையும் அங்கையும் லெஃப்ட் ரைட்டு போரத பாக்க பெரிய கூட்டம் நிக்குது. செம போர்!

தேம்ஸ் நதி.


Lastly, லண்டன் பார்லிமெண்ட் முன், ஈழத் தமிழர்களின் போராட்டம் சென்ற வாரத்தில் நடந்தது. பிரபாகரன் மறைந்து விட்டார் என்ற செய்தி/வதந்தி கசியும் முன்னே எடுத்த படம். சில விஷமிகள், அங்க இருக்கர ட்ராஃபிக் லைட் கம்பத்தில் ஏறி புலிக் கொடி கட்டியபோதே, ஏதோ விபரீதம் இருக்கும்னு நெனச்சேன். "நமக்கேன் வம்பு. விடு ஜூட்டு" என்ற உன்னத தமிழக கொள்கை ரத்தத்தில் ஊறி உள்ளதால், அசம்பாவதிங்களுக்கு முன் எஸ்கேப்பிட்டேன். அடுத்த நாள் செய்தியில், சில கைகலப்பு சம்பவங்களும், கைதுகளும் நிகழ்ந்ததாக கேள்விப்பட்டேன். பாரிஸிலும், சில ஈழத் தமிழர்களின் பரிச்சயம் கிட்டியது. அது அடுத்த போஸ்ட்டில். ரொம்பக் கொடுமைங்க அவங்க நெலமை! ஹ்ம்!

9 comments:

SurveySan said...

interesting read sent by ganaprabha http://tinypaste.com/91e5b

SurveySan said...

கடைசி படத்தில், மேகம் வெட்டி ஒட்டியது.

பிற்சேர்க்கை திலகம், அண்ணன் An& தந்த ஊக்கத்தினால், வெற்றிடத்தில் மேகம் உருவாக்கப்பட்டது :)

Truth said...

//ரொம்ப நாளா இதுதான் லண்டன் ப்ரிட்ஜுன்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன். இல்லியாம். இதுக்கு பக்கத்துல, மொக்கையா இருக்குது லண்டன் ப்ரிட்ஜு.

same blood :P
Where is St Paul's Cathedral? :-)

கோபிநாத் said...

இப்போதைக்கு புகைப்படங்கள் மட்டும் தானா!! வழக்கம் போல எல்லாமே சூப்பரு ;)

SurveySan said...

Thanks Gopinath.

Truth, St.pauls will come soon. i am waiting to add a background sky to it :)

ராமலக்ஷ்மி said...

கலக்கலான நடையுடன் அசத்தலான படங்களுடன் ட்ரெய்லரே இந்தப் போடு போடுகிறதே. ஆவலுடன் காத்திருக்கிறோம் மெயின் பிக்சருக்கு:)!

SurveySan said...

Danks! :)

Nagarajkumar Narayanan said...

Dear Surveysan,

Hare krsna gostinnu solreenga illa avanga spiritual and material service evlavu panraangannu ungalukku therinthurukka vaippu illai.

for spiritual queries
www.harekrsna.in

To know about their service

http://www.fflvrindavan.org/index.php?S=1&Folder=14

http://www.fflvrindavan.org/index.php?S=1&Folder=25


http://www.delhimdm.com/History.html

http://www.delhimdm.com

http://www.middaymeal.com/

http://www.middaymeal.com/stakeholder.htm

Some may behave in a strange manner but their principles are really great.

neenga yaar, kadavul yaar, ivanga bandham ennannu innikku theliva ivangakitta than purinchikka mudiyum.

For eg: pirappal saathiyaa gunathaal saathiyaa nnu ivanga thaan puriya vaipaanga


Nagaraj (nagabi2003@gmail.com)

SurveySan said...

nagu, thanks for the info. and sorry about my 'vularal'. :)