recent posts...

Tuesday, May 12, 2009

விக்கியில் ஒரு கூத்தாடி

சான்ஃப்ரான்ஸிஸ்கோ வாசிகள் அடிக்கடி போய் வரும் இடம் இரண்டு.
ஒண்ணு, கோல்டன் கேட் என்னும் தொங்கு பாலம், இன்னொண்ணு அதுக்கு பக்கத்துல்ல இருக்கர fishermans warf என்ற குட்டி மார்க்கெட்.

கோல்டன் கேட் பரவால்ல, ரொம்ப ரம்யமான விஷயம் வேடிக்கை பாக்கவும், அதுக்கு மேல நடக்கவும். இந்த ஃபிஷ்ஷர்மேன் வார்ஃபில் அப்படி என்னதான் சங்கதி இருக்கோ தெரியல்ல, எப்பப் பாத்தாலும் கூட்டம் இருக்கும்.
இத்தனைக்கும் அங்க இருக்கரது வெறும் உணவகங்களும், குட்டிக் குட்டி கடைகளும் மட்டுமே.
தெருவில் பிழைப்பை நடத்தி வரும் கூத்தாடிகள் கொஞ்சமாய் சுவாரஸ்யம் கூட்டுவார்கள்.
குறிப்பா, ஸ்ப்ரே பெயிண்ட் வச்சுக்கிட்டு ஒருத்தர் செம சூப்பரா படம் வரைவாரு, அமக்களமா இருக்கும் வேடிக்கை பாக்க.

நான் முதல் முதலில் சில பல வருஷங்களுக்கு முன்னாடி ஃபிஷ்ஷர்மேன் வார்ஃபுக்கு போகும்போது எம்மை வித்யாசமாய் கவர்ந்தவர், "Bushman" என்ற நவீன கூத்தாடி.

தெருவோரத்தில் ஒக்காந்துக்கிட்டு, சில மரக்கிளையை முன்னால் பிடிச்சுக்கிட்டு, ஒளிஞ்சுப்பாரு.
எதிர்ல வர அப்ராணி கூட்டத்தை, திடீர்னு, 'ஹோ'ன்னு கத்தி பயப்படுத்துவாரு.

டங்குவாரு கிழிஞ்சு போன டூரிஸ்ட் வாசிகள், பயத்தில் அலறி, பின் இவரைப் பார்த்து நமுட்டு சிரிப்பு சிரிச்சுட்டு, சில டாலர்களை போட்டு விட்டு போவார்கள்.

இவரு பக்கத்துல நின்னுக்கிட்டு வருவோர் போவோர் இவர் செய்யும் லூட்டியால் பயத்தில் அலறுவது, பாக்கரது ரொம்பவே சுவாரஸ்யமான விஷயம். ( நமக்கு அடுத்தவன் கஷ்டப் படரத பாத்தா அல்வா சாப்பிடர மாதிரியாச்சே :) )

சென்ற வாரம் அதே இடத்துக்கு, எமது குடும்ப நண்பர் ஒருத்தரை கூட்டிக்கிட்டுப் போகும்போது, புஷ்மேனைப் பார்த்தேன். பல வருஷமா ஒரே தொழிலை, ஸ்மூத்தா செஞ்சுக்கிட்டு இருக்காரேன்னு ரொம்ப ஆச்சரியப்பட்டுட்டேன்.
வீட்டுக்கு வந்து அவரப் பத்தி எவனாவது ப்ளாகியிருக்கானான்னு தேடினா, அவரைப் பத்தி விக்கியிலேயே 'world famous busman'ன்னு எழுதி வச்சிருக்காங்க.

ஆச்சரியம்தன், உலகிலேயே, விக்கியில் ஒரு பக்கம் கிடைக்கப்பெற்ற ஒரே கூத்தாடி இவராகத் தான் இருக்கும்.

இவரு, இந்தத் 'தொழிலை' 1980ல் தொடங்கினாராம்;
பலரும் பல 'public nuisance' புகார்களை கொடுத்தும், ஒண்ணியும் பண்ண முடியலையாம் இவரை;
ஒரு வருஷத்துக்கு 60,000 டாலர்கள் வரை சம்பாதிப்பாராம்;
சொந்த செலவில் ஒரு பாடிகார்ட் வைத்திருக்கிறாராம் - மற்ற லொள்ளுபாண்டிகளிடமிருந்து தன்னை காக்கவாம்;
ஹ்ம். கலக்கறாரு மனுஷன்.

30 வருஷமா, 'ஹோ ஹோ'ன்னு தினசரி கத்திக்கிட்டு பொழைப்ப ஓட்டிக்கிட்டு இருக்காரு.
amazing.

60,000 டாலர் ஒருவருஷத்துக்கு;
வருமான வரியெல்லாம் இருக்காது;
அடிச்சு புடிச்சு செலவு செஞ்சா கூட, 40,000 கையில நிக்கும்;
முப்பது வருஷத்துக்கு, 1,200,000
மனுஷன் மில்லினியருடோய். அடுத்த முறை பாக்கும்போது சலாம் போடணும் :)

சென்ற வாரம் க்ளிக்கிய சில படங்கள் (ஃபோட்டோவில் பயந்து நடுங்கும் ஆத்தாக்கள் மன்னிப்பார்களாக)





யூ.ட்யூபில் புஷ்மேன்.

என்சாய்!

16 comments:

ஆ! இதழ்கள் said...

விளையாட்டு மனுஷனா இருக்காரு.

எலேக்‌ஷன் முடிந்தவுடன் தொடர்ந்து பார்க்க நல்ல காமெடி லின்க்.

:))

ராமலக்ஷ்மி said...

”நந்தவனத்திலோர் ஆண்டி...”
பாடல் கேட்டிருக்கிறீர்கள்தானே? இந்த ஆண்டி கூத்தாடி கூத்தாடியே கோடிஸ்வரனாயிருக்கிறார்:)! சுவாரஸ்யம்தான்.

எல்லாம் சரி. வயதான யாருக்காவது பயத்தில ஹார்ட் அட்டாக் வந்தா என்னாவது?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) சுவாரசியமான விசயம் தான்.. (நமக்கு நடக்காதவரை )

Suresh said...

வித்தியாசமான ஆளை பதிவில் சொன்னத்ற்க்கு ரொம்ப நன்றி

நல்லா இருந்து அதிலும் வீக்கி மேட்டரும், அவரும் பெரிய பணக்காரர் பாடி காட் ;0 எல்லாம் சூப்பர்

கோபிநாத் said...

\\முத்துலெட்சுமி/muthuletchumi said...
:) சுவாரசியமான விசயம் தான்.. (நமக்கு நடக்காதவரை )
\\

ரீப்பிட்டே ;)

கலையரசன் said...

உண்மைதானே! அளக்களையே!!
அன்படியே நம் கட பக்கம் வர்ரது..
www.kalakalkalai.blogspot.com

SurveySan said...

AAh,

////எலேக்‌ஷன் முடிந்தவுடன் தொடர்ந்து பார்க்க நல்ல காமெடி லின்க்.
//

agree. election is more comical than bushman ;)

SurveySan said...

ramalakshmi,

//எல்லாம் சரி. வயதான யாருக்காவது பயத்தில ஹார்ட் அட்டாக் வந்தா என்னாவது?//

wiki says, his bodygaurd does the job of cautioning bushman when old people are in the group :)

SurveySan said...

muthuletchumi,
///(நமக்கு நடக்காதவரை )//

repeatuuuu :)
naan samathaa andha pakka roadla vandhu ivaru pinnaadi ninnuduven ;)

SurveySan said...

Suresh,

//நல்லா இருந்து அதிலும் வீக்கி மேட்டரும், அவரும் பெரிய பணக்காரர் பாடி காட் ;0 எல்லாம் சூப்பர்///

danks! :)

உண்மைத்தமிழன் said...

இதைத்தான் இங்கேயிருக்குற அல்லா சேனல்காரனுகளும் காப்பியடிக்குறாங்களா..?

அல்லா.. அல்லா.. அல்லா..

Prabhu said...

( நமக்கு அடுத்தவன் கஷ்டப் படரத பாத்தா அல்வா சாப்பிடர மாதிரியாச்சே :) )
/////

ஹி...ஹி...

பாவக்காய் said...

Hello Surveysan,
we can try meeting for bloggers get together in bay area.
Thanks,
Senthil

SurveySan said...

u.tha,

yes sir. very true. idhu mattumillai, innum niraya program ippadithaan.

SurveySan said...

பாவக்காய்,


///Hello Surveysan,
we can try meeting for bloggers get together in bay area.
Thanks,
Senthil
////

hee hee... and blow away my nice anonymity? :)

interesting thought though. we can work on it.
i am going out on a trip. lets plan for something in june or july.

SurveySan said...

pappu,

///ஹி...ஹி...///

same pinch? :)