உலகமே, பெரும் பின்னடைவில் இருக்கும்போது, இதுநாள் வரை கட்டிக்காத்த சில பல டாலர்களை விட்டெறிந்து, பவுண்டிலும், யூரோவிலும் செலவு செய்தல், உலகத்தை முன்னேற்ற என்னாலான சிறு தொண்டு :)
அது என்னமோ தெரீல, என்ன மாயமோ புரீல, கடைக்கு போய் வெங்காயம் வாங்கணும்னா, இந்தக் கடைல ஒரு பவுண்டுக்கு $0.19, பக்கத்து கடைல வெறும் $0.17 தான்னு கணக்கு பாத்து வாங்கரவங்க, செலவு சில ஆயிரங்களைத் தொடும்போது, எல்லாத்தையும் லூஸ்ல விட்டுடறோம்.
பங்குச் சந்தை, கட்டவிழ்ந்த பலூன் போல் சர்ர்ர்ர்ர்ர்னு சுருங்கிய போது, சில பல லட்சங்களும் ஆயிரங்களும் ஓவர்நைட்டில் காணாமல் போனது வலிக்கவில்லை.
ஆனா, $8 டாலர் கொடுத்து வாங்கர டி.ஷர்ட், அடுத்த வாரம் அதே கடைல, $4 டாலருக்கு போட்டிருந்தா, 'அடடா', $4 போயிடுச்சேன்னு அங்கலாய்க்கிறோம்.
இது ஏன்னு புரீல.
பத்துகள் செலவு செய்யும்போது, சில்லரைகளுக்கு பேரம்;
நூறுகள் செலவு செய்யும்போது, பத்துகளுக்கு பேரம்;
ஆயிரம் செலவு செய்யும்போது, நூறுக்கு பேரம்;
லட்சங்கள் செலவு செய்யும்போது, ஆயிரங்களுக்கு பேரம்;
ஆயிரங்கள் செலவு செய்யும்போது, சில்லரைகளைப் பத்தி கவலைப் படரது இல்ல. அப்ப, வாழ்க்கை முழுதும், சில்லரைகளைப் பத்தி கவலைப் படாமயே இருந்திடலாம்ல. ஏன், அப்பப்ப மட்டும் நொந்து நூலாகணும்? எவ்வளவோ நேர விரையத்தையும் மன உளைச்சலையும் குறைக்கலாம். முயற்சி செய்யணும்.
இங்க வெள்ளக்காரப் பயலுவ சில பேர் பாத்திருக்கேன். எலெக்ட்ரானிக்ஸ் கடைக்கு வருவாங்க, ஒரு கூடைய எடுப்பாங்க,அவங்க வாங்க வேண்டியதெல்லாம், டக்கு டக்குனு எடுத்துக்கிட்டு கூடைல போட்டு பில்லை போட்டு வாங்கிட்டு போயிக்கிட்டே இருப்பாங்க. வெலையக் கூடப் பாக்க மாட்டாங்க.
ஆனா, நான் ஒரு பொருள வாங்கணும்னா, ஐந்தாண்டு திட்டம் போட்டு, எந்தக் கடைல எப்ப கம்மியாக் கிடைக்குதுன்னு, என் முழு நேரத்தையும் அற்பணம் பண்ணித்தான் வாங்கறேன்.
வாழ்க்கைல பாதி நேரம் டாலர் சேமிக்க செலவாகுது. ஆனா, இப்படி சிறுகச் சிறுகச் சேமித்த டாலரு, ஸ்டாக் மார்க்கெட்டில் வழிச்சுக்கினு போயிடும்போது, பெருசா வலியும் வரது இல்லை.
என்ன மாயமோ என்ன ஜாலமோ?
இதே ரேஞ்சுல போயிக்கிட்டு இருந்தா, 'எதைக் கொண்டு வந்தோம்? உடன் கொண்டு செல்ல?"ன்னு கீதாச்சார மகுடி வாசிக்க ஆரம்பிச்சாலும் ஆச்சரியப்பட ஒண்ணுமில்லை ;)
Sorry, I digress.
ஐரோப்பா பயணம் சொன்னேன்ல.
லண்டன், பாரிஸ், ரோம் பாக்கலாம்னு ஆசை.
இந்த மூன்று நகரங்களில், "கண்டிப்பா பாக்கணும்"னு என்னென்ன இருக்குன்னு, வெவரம் தெரிஞ்சவங்க, சொல்லிட்டுப் போங்க.
நன்னி!
கீழே படங்கள் நானெடுத்ததல்ல. ஆனா, இப்படியெல்லாம் கூடிய விரைவில் எடுக்க ஆசை! ;)
28 comments:
ensoi maadi :)
Cool, ensoi. Europe is definetly a nice place to see. But it all depends on what type of person you are. What would you like to see and how long would you like to spend in each city and what is your budget (in local currency). I can tell about London and Paris. I've never been to Rome.
1st commentor, why deleted? :)
nathas, danks. என்சாய் கூட சேத்து தலைவலியும் இருக்கும் :)
Truth, thanks.
//what type of person you are///
:) i am a very சாதா பர்சன் ;)
////What would you like to see///
I love everything. beautiful landscape, buildings, architecture, paintings, theater shows, etc.. etc..
////how long would you like to spend in each city ////
2 days in each city.
/////what is your budget ///
ஹீ ஹீ. நெம்ப கம்மி ;) தேவையான அளவுக்கு மட்டும். ஒரு நாளைக்கு ஹோட்டல் செலவும் 100 யூரோ கிட்ட வருது. முழி பிதுங்குது.
//i can tell about london and paris//
தெரிஞ்சதெல்லாம் சொல்லுங்க.
லண்டன் போகணும்னு தேடும்போதுதான், உங்க படம், st pauls cathedral ஞாபகம் வந்துது. :)
I have been to malaga for an international developer conference and via paris... its a nice place enjoy ;)
Especially architecture and wine are famous enjoy panunga
Suresh, thanks.
architecture - yes
wine - no
:)
கோட்டை விட்ட பெரிய மீன்களை விட நழுவ விட்ட சின்ன மீன்களைப் பற்றிய கவலைதான் பெரிதாக இருக்கிறது என்பதைப் பற்றியதான அலசல் யதார்த்தமாக இருக்கிறது. அருமை.
//இப்படியெல்லாம் கூடிய விரைவில் எடுக்க ஆசை! ;)//
வாழ்த்துக்கள். உங்கள் கேமிரா பார்வையில் அவற்றைப் பார்க்க எங்களுக்கும் ஆசை:)!
முதல்ல நான் பாரிஸ் சொல்லிடறேன். லண்டன் அப்றொம் கூட சொல்லலாம். பாரிஸ் போயி ஒரு வருஷம் ஆகுது.
நான் சொல்றதெல்லாம் என்னோட ப்ளான் தான். நான் நாலு நாள் சுத்தினேன் பாரிஸ்
day1 - Versailles Garden + Versailles Palace(in Day) + Paris By night in cruise (Night)
day2 - Walt Disney Studio(in Day) + Eiffel Tower(in Night)
day3 - Disney Land(Day) + Night-la chumma ooru suthing for night photography
day4 - Louvre Muesum + Statue of Liberty + Opera + LaDefence(Modern Paris) + return
You must see either Walt Diney Studios or Diney Land. I would prefer Walt Disney Studios because Disney Land is yet another theme park with rides. Walt Disney Studios is techie. But if you have seen this in US, then ignore both
இந்த மேப் ஒரு முறை பாத்துக்கோங்க. இதுல இருக்கிற விஷயங்கள கூகிள் பண்ணி உங்களுக்கு பிடிச்சதுக்குப் போங்க. இந்த மேப் நான் பாரிஸ் போறதுக்கு முன்னடி நான் போட்டது.
ராமலக்ஷ்மி,
///சின்ன மீன்களைப் பற்றிய கவலைதான் //
எனக்கு மட்டும்தான் இப்படியா, இல்ல பலருக்கும் இப்படிதானான்னு தெரிஞ்சுக்க போட்டேன். ஆனா, யாரும் இதுவரை same blood, சொல்லல. :)
Truth, ரொம்ப ரொம்ப நன்னி.
Versailles என்னா மேட்டரு, என் லிஸ்டில் இன்னும் வரலை.
Champs-Elysées அமக்களமா இருக்கும்னு நண்பன் சொன்னான். அதை "shaazaleez" nu sollanumaam. :)
he also mentioned French people wont respond if we dont start the conversation in French - is that true?
truth, how come notre dame is missing in your list?
Opera - must see?
Hi Surveysan,
In London
1) Big Ben & parliament House
2) U can go for a cruise journey for all the bridges or if you like to walk u can start from Big Ben(Westminster bridge and end up in Tower Bridge(its the one in the picture))
3) London eye (close to Big Ben)
4) Greenwich.
5) Trafalgar square, Piccadilly circus and oxford circus (shopping area).
6) Buckingham palace
7) Madame tussad’s (wax museum)
8) British museum etc,
Hope this will help you.
Cheers,
mayavi, thanks!
windsor castle venaamaa?
madam tuessads - must see? i am keeping it in a low priority list.
I read about a 'Tate museum' - must see?
Italy nanbargal edhavadhu seidhi sollittup ponga.
I have Rome, Florence and Pisa in my itinerary.
Baker Street
Stone Henge
டைம் இருந்ததுன்னா
Lord's Stadium ,Oval, Wimbledon
ராதா, வாங்க வாங்க. long time no c?
stone hengeல நாலு கல்லு நட்டு வெச்சிருக்காங்க. அதை பாத்தே ஆகணுமா?
lords, wimbledon எல்லாம் எனக்கு பெரிய நாட்டமில்லை. என் நண்பன் ஒருவன், வெறும் கிரிக்கெட் மைதாங்கள் பாக்க மட்டுமே லண்டனுக்கு போய் வந்திருக்கான் ;)
I have been to London and Paris long time back almost 7 years, so forgot all the places we been... enjoy !!
//how come notre dame is missing in your list?
sorry missed it. naan fourth day ponen anga.
//Opera - must see?
naan velila irundu than pathen. i dono much about it.
//Versailles என்னா மேட்டரு, என் லிஸ்டில் இன்னும் வரலை.
it has a garden and a palace. garden free romba nalla irukkum. palace 10 euro, verum paintings, enakku ella room-um ore maadhiri thaan irundichu. palace la time waste pannidinaala i missed a lot in garden. But garden is worth watching. edho oru naal water fountain ellam irukumaam. sairya kandu pudichu ponga, its famous for that.
//he also mentioned French people wont respond if we dont start the conversation in French - is that true?
:-) we also dont respond if one talks in chinese. appadi thaan. they dont understand english properly. but they try to understand us and reply back. they are lovely ppl. kavalai-ye illaama poitu vaanga :-)
I can give few things about Paris (பாரீ for locals).
1. Versailles Palace is the last abode of the French Monarchy. It is a nice place. The Mysore palaces pales in comparison with Versailles. You would require a whole day for this place alone.
2. Champs-Elysées is the fashion district of Paris. All the world's leading fashion/luxury/premium brands would have their shops/boutiques there. And great restaurants, movie theaters etc. It is much grander version of Bangalore's MG Road nd Brigade Road. You can start on the east end and walk all the way to Arc De Triomphe.
3. Eiffel Tower, of course needs no introduction. If you go there in the day time, you can go up as well take a boat ride in the Séine river. Going in summer, occasional topless sunbaths on the shore is a bonus ;)
4. Louvre Museum. The famous paintings of Mona Lisa and Last Supper and statue of Venus De mello. The Egypt section is a not-to-miss one.
5. All tired and long for some Indian food and sweet Tamizh language? Head for La Chappelle area in the north east which has all the Srilankan/Bangladeshi/Pakistani stores and restaurants.
6. After food, needs to entertainment (of the adult kind)? Head towards Pigalle where everything is available. The famous Mouline Rouge is in one end of the boulevard.
7. La Defense. Head to the west to see the modern Paris. Do not miss the IMAX theatre, FNAC electronics store and Sephora perfume store.
8. A visit to Montmartre church in northern Paris gives a nice view of the city from atop its hill.
9. Notre Dame church. One of the oldest church of Paris.
10. Cité des Sciences et de l'Industrie. The largest science and technology museum in Europe.
11. Interested in Winery? Head to Reims, the capital of wine country located in north east of France. You can have wine tours and taste and buy wine and champagne.
12. Transport: You can buy a 3 or 5 day pass for few hundred Frans. Board any metro or bus with this ticket.
Hope this helps.
//he also mentioned French people wont respond if we dont start the conversation in French - is that true?
//
Knowing few words like always helps. Only the pronunciation is like speaking with few stones in your mouth. One tip: In French, except for vowels, all other consonants are silent at the end of the word (for eg, bonjour is பாஞ்ஷூ ; r is silent).
Hello - bonjour
Do you speak English? - Parlez-vous anglais?
I speak English - Je parle anglais
I don’t understand - Je ne comprends pas
yes - oui
no - non
sir/mister - monsieur
ma'am/madam/Mrs. - madame
miss - mademoiselle
man – homme
woman - femme
Please - s'il vous plait
Excuse me - pardon
Thank you - merci
Thank you very much - merci beaucoup
Goodbye - au revoir
Until tomorrow – à demain
Good morning – bon matin
Good afternoon - bon après-midi
Good evening - bonsoir
Good night - bonne nuit
In Fry's Electronics store , they use to sell a laminated A4 size card kind of book with essential vocabulary in languages like French, Spanish, Italian etc. It is very handy and useful.
Hi Surveysan,
Windsor castle is out of london ..meaning , u will lose one complete day for that. and also remember in london .. other than leicester sqyuare and oxford circus.. everyhting shutds down at 6pm.
Tate's musuem is also a good watch.. its on the riverside of thames. if u prefer to watch the bridges by walk u can get into the musuem.
abt windsor castle ... its one of the official resisdence of the queen. she lives in buckhingham palace and windsor palace in a year.. both are good to watch.
or if u want to see kohinoor diamond...u can go to tower castle close to tower bridge and u can visit tower bridge muesuem. please dont waste ur time in stoneage... its wste fo time and its not in london anyhow.
i just listed places whcih u could visit in 2 days... in london. if u spend 1 week.. i will give u more options... its all based on ur no. of stay, and please be ready to the cost of living... its very high here...even new york is cheap.
so plan accordingly ... and enjoy ur stay. when r u planning to travel??
truth,
////:-) we also dont respond if one talks in chinese. appadi thaan////
i dont agree :)
we are a different breed. we will make sure we find someone who understands chinese and help the traveler.
whereas french people gets offended if we assume they know english, i am told :)
indian,
thankssssssssssssssssssssss much. great nice list.
the indian-food details will be very helpful. i will make sure the dinner will be somewhere around that area ;)
btw, last supper is not in louvre. its in italy in a church wall.
//btw, last supper is not in louvre. its in italy in a church wall.//
you are right mate.
//they use to sell a laminated A4 size card kind of book with essential vocabulary in languages //
This is the one
Post a Comment