recent posts...

Thursday, April 02, 2009

TWITTERனா இன்னா? அதை ஏன் Google வாங்கப் போகுதாம்?

TWITTER ஒரு புரியாத புதிர் எனக்கு.
எனக்கு ஒரு அக்கவுண்ட் இருக்கு, அதை சரிவர உபயோகிக்கத் தெரியல்ல எனக்கு.

எனக்கு புரிஞ்ச வரை, டிவிட்டரில் நீங்கள் இணையணும். இணைஞ்சதும், உங்கள் நண்பர்கள்/தெரிஞ்சவர்கள்/நல்லவர்கள்/வல்லவர்களைத் தேடிப் பிடிச்சு, அவங்களை follow பண்ணறேன்னு உங்க கணக்குல சேத்துக்கணும்.
நீங்க நல்லவர்/வல்லவர்/தெரிஞ்சவர்/நண்பர்னு மத்தவங்க யாராவது நெனச்சா உங்களை அவங்க follow பண்ண ஆரம்பிப்பாங்க.

இப்படி ஒரு வளையம் உருவாகும்.

அப்பாலிக்கா, ட்விட்டரில் போய், அந்த நேரத்துக்கு என்ன தோணுதோ, குறுஞ்செய்தி அனுப்பலாம், உங்களை ஃபாலோ பண்றவங்க அனைவருக்கும், உடனே அது போய் சேறும்.
டிவிட்டரில் தங்கள் செல் பேசியை இணைத்தவர்களுக்கு, அது, உடனே தெரியும், மத்தவங்க, டிவிட்டர் பக்கத்துக்கு வரும்போது தெரிஞ்சுப்பாங்க.

இன்னாடா, இவ்ளோ மொக்கையான மேட்டரா இருக்கே, இதை ஏன் கூகிள் வாங்கப்போறான்னு யோசிச்சேன்.

நான் ட்விட்டரை உபயோகிப்பது, வெறும் வெளம்பரத்துக்கு மட்டுமே. ஏதாவது புதிய பதிவெழுதும்போது, ஒரு உள்ளேன் ஐயா சொல்லிடுவேன் ட்விட்டரில்.

ட்விட்டரிலேயே அலுவலக நேரத்தில் பாதியை கழிக்கும், கானா பிரபா, பா.பாலா, கொத்ஸ் வகையராக்களை நம் பதிவுகளுக்கு ஈர்க்க, இந்த வழி உதவுகிறது.

ஆனால், ட்விட்டரை, செம்மையாய் உபயோகிப்பவர்கள், ஒரு நாளைக்கு எப்படியும் பத்திலிருந்து, நூறு குறுஞ்செய்தியை பரப்புகிறார்கள்.

சரி, இந்த குறுஞ்செய்திகளால், ட்விட்டருக்கு என்ன லாபம்? அதை வாங்கப் போகும் கூகுளுக்கு என்ன லாபம்?

யோசிச்சு பாத்தா நெறைய இருக்கு.

குறுஞ்செய்திகள், சுடச் சுட வருபவை. பல கோடி மக்கள், உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளும் விஷயங்களில், சுவாரஸ்யமான content இருக்கும். இதை அறுவடை செய்வதன் மூலம், சில்லரை பார்க்கப் பார்க்கிறார்கள்.

யோசிச்சுப் பாருங்க. குப்புசாமியும், மாடசாமியும் ட்விட்டர் கணக்கு வச்சிருக்காங்க.

குப்புசாமி செங்கல்பட்டு வாசி;
மாடசாமி பெங்களூரு வாசி;

குப்புசாமி வில்லு படம் பாக்கப் போறாரு;
மாடசாமியும் வில்லு பாக்கப் போறாரு;

குப்புசாமிக்கும், மாடசாமிக்கும் உலகில் பல மூலையிலும் ட்விட்டர் ஃபாலோயர்ஸ் இருக்காங்க.

செங்கல்பட்டில் வில்லு படம் பார்த்து நொந்து போய் வெளியில் வந்த குப்புசாமி, உடனே தன் செல்பேசியை எடுத்து குறுஞ்செய்தி தட்டறாரு, "மாடசாமி, பெரிய தப்பு பண்ணிட்டேண்டா. வில்லுக்கு குருவியே தேவலாம்"

மாடசாமி, டிவிட்டரின் மூலம், தன் செல்பேசிக்கு வரும் குறுஞ்செய்தி பார்த்ததும், "டேய், ஆமாண்டா குப்பு. வில்லு செம டேமேஜ் டா" என்று மறு புலம்பலால் புலம்புகிறார்.

இந்த இருவரின் குறுஞ்செய்தியை ட்விட்டர் வழி பெற்ற மற்ற ஃபாலோயர்கள் அனைவரும், "குப்பு & மாடு, நாங்களும் வில்லு பாத்தோம், உங்க சோகத்தில் நாங்களும் கலந்துக்கறோம்"னு அனுப்பறாங்க.

இதுல இருந்து என்ன தெரியுது? படம் ரிலீஸான பத்து நிமிஷத்துக்குப்பரம், ட்விட்டரில் "வில்லு" தேடினால், உலக மக்கள் அனைவராலும் எப்படி வரவேற்கப்பட்டது என்பதை துரிதமாய் தெரிந்து கொள்ளலாம்.

ஸோ, வில்லு படம் பாக்கலாமா வேணாமான்னு நெனைக்கறவங்க, ரெண்டு நாள் வெயிட் பண்ணி, இணையத்தில் என்னை மாதிரி ஆளுங்க எழுதும் வெமர்சனம் படிச்சுட்டு படம் பாக்கப் போலாம். ஆனா, சுடச் சுட அந்த நிமிஷம் ட்விட்டரில் அலலபாயர குறுஞ்செய்திகளை search.twitter.comல் தேடினால், கொடுமையிலிருந்து துரிதமாய் தப்பிக்கலாம்.

பெரிய பெரிய நிறுவனங்கள், டிவிட்டர் புலம்பல்கள் மூலம், தங்கள் நிறுவனத்தின் மீது மக்களுக்கு இருக்கும் விருப்பு வெறுப்புகளை உடன்க்குடன் தெரிந்து கொண்டு, திருத்திக் கொள்ள பெரிய வாய்ப்பு உள்ளது. டிவிட்டருக்கு வருங்காலத்தில் இது துட்டு தேத்த பெரிய வழி.
உதாரண ட்விட்டுகள்:
"மச்சி, american airlines செம தண்டம். எப்பவும் லேட்டு. ஏர்ஹோஸ்டஸும் சரியில்லை"
"ங்ணா, வில்லு பாத்தீங்களாண்ணா, சூப்பர் படங்கணா"
"Live.com செம ஸ்லோடா, இவ்ளோ வருஷம் என்னதான் குப்ப கொட்றாங்களோ?"
"ஃப்ரீயா iphone கொடுக்கர கட்சிக்குதான் மச்சி என் வோட்டு"

Bloggerஐ துவங்கி, கூகுளுக்கு வித்து டப்பு பார்த்த, அதே கும்பல்தான், இப்ப ட்விட்டரை ஆரம்பிச்சு, அதையும் வித்து டப்பு தேத்தறாங்க.
எப்படிதான் யோசிக்கறாங்களோ, இப்படி வித விதமா? அதெல்லாம் தானா வரதுல்ல?

Twitterஐ பற்றி தெரியாதென்ற பரிசலாரும்;
வில்லை பதம் பார்த்த வெட்டியாரும் இந்தப் பதிவின் கான்செப்ட்டுக்கு அவர்களை அறியாமல் வித்திட்டவர்கள் ;)

ட்விட்டரை பற்றி வேறு விஷயங்கள் அறிந்தவர்கள், சொல்லிட்டுப் போங்க.

ஹாப்பி வெள்ளி!

பி.கு1: வில்லு, கண்டிப்பா குருவியை விட சிறந்த படம். பாட்டெல்லாம் அருமையா வந்திருக்கு. டாக்டர் படத்துக்கு, மொக்கையைத் தவிர வேறு எதையோ எதிர்பார்த்துச் செல்லும் உங்களின் மீதுதான் தவறுள்ளது என்பதை தெரிவித்துக் கொல்கிறேன் ;)

பி.கு2: disclaimer: Google buying twitter is just a rumour at this point.

20 comments:

SurveySan said...

இப்ப சேத்தது. நீங்களும் சேருங்க.

உதாரண ட்விட்டுகள்:

"மச்சி, american airlines செம தண்டம். எப்பவும் லேட்டு. ஏர்ஹோஸ்டஸும் சரியில்லை"
"ங்ணா, வில்லு பாத்தீங்களாண்ணா, சூப்பர் படங்கணா"
"Live.com செம ஸ்லோடா, இவ்ளோ வருஷம் என்னதான் குப்ப கொட்றாங்களோ?"
"ஃப்ரீயா iphone கொடுக்கர கட்சிக்குதான் மச்சி என் வோட்டு"

ராமலக்ஷ்மி said...

நானும் பல பேரின் ப்ளாக்ல சமீப காலமா டிவிட்டரைப் பார்க்கிறேன். [குறிப்பா கவர்ந்தது ’சிறுமுயற்சி’ முத்துலெட்சுமி கயல்விழியுடையது.]

அது என்னான்னு பார்த்து வைக்கணும் என நினைத்துக் கொண்டிருந்த போது சரியான சமயத்தில் விலாவாரியா விளக்கியிருக்கீங்க:), நன்றி.

நட்புடன் ஜமால் said...

இம்பூட்டுக்கீதா!

நமக்கு ஒரு அக்கவுண்ட்டு கீது

பார்ப்போம் ...

Tech Shankar said...

சுஜாதா ஸ்டைல் உங்களுக்கு அருமையா ஒர்க்கவுட் ஆகுது.

இந்த மாதிரி கதை சொல்லிப் புரிய வைக்கும் டெக்னாலஜி உங்களுக்கு சூப்பரா வருதுங்கண்ணே.

நல்லா கீது.

//குப்புசாமி செங்கல்பட்டு வாசி;
மாடசாமி பெங்களூரு வாசி;

குப்புசாமி வில்லு படம் பாக்கப் போறாரு;
மாடசாமியும் வில்லு பாக்கப் போறாரு;

குப்புசாமிக்கும், மாடசாமிக்கும் உலகில் பல மூலையிலும் ட்விட்டர் ஃபாலோயர்ஸ் இருக்காங்க.

ராமலக்ஷ்மி said...

சிறுமுயற்சி வலைப்பூ முகப்பில் நான் ரசித்த முத்துலெட்சுமியின் டிவிட்டர்ஸ்:

*அதிகம்பேர் நடக்காத மலைப்பாதையில் கால்வலிக்க ஏறி அங்கிருந்து கீழே பார்த்தால் எவரெஸ்ட் கர்வம் முளைக்கிறது -

* இரண்டு வேலை இருந்தால் அதை செய்வதும் , பத்து வேலை இருந்தால் , அதையெல்லாம் செய்யாம, பதினொன்னாவது வெட்டி வேலையை செய்வேன் -

கானா பிரபா said...

எகொசா

எங்கள் அலுவலகத்தில் மின்னஞ்சலே தடை பாஸ், எல்லம் வீட்டில் இருந்து தான் :)

கிரி said...

புரிஞ்சா மாதிரி இருக்கு....!

CVR said...

நான் இது வரை ட்விட்டரில் விழவில்லை!!
அறிமுகப்படுத்திய அனைவரிடமும்,இது பதிலா கி டாக்குல ஸ்டேட்டஸ் மெஸேஜ் போட்டுக்கறேன்!!
இதுக்குன்னு இன்னொரு ரெஜிஸ்ட்ரேஷன் பண்ணனுமான்னு சொல்லி விட்டுடுவேன்!!
இப்பவும் கூட சேரனும்னு தோணல!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆகா ராமலக்ஷ்மி நன்றி நன்றி..

ஆனா நானும் தொடர்ந்து அங்க எழுதறதில்ல.. சோம்பேறித்தனம் தான் அந்த கணக்கில் நுழைஞ்சு வந்துன்னு.. ஆனா என்னதான் அதுன்னு தெரிய சேர்ந்தேன்..பரிசல் சொன்னாப்ப்ல நானும் எழுதாத நேரத்துல தினம் ஒரு ஆளு ஃபாலோவரா சேர்ராங்க டிவிட்டரில்.. :))
பிளிம்பின்னு கூட ஒன்னு வந்திருக்கே அதுலயும் சேர்ந்து வச்சிருக்கேன்.. அதுல ஒரு கேள்வி கேப்பாங்க அதுக்கு பதில் சொல்லனும்.. யாராச்சும் சேந்திருக்கீங்களா??? :))

இதுவும் வெட்டிவேலை தான் ஹிஹி

பினாத்தல் சுரேஷ் said...

நான் அயன் விமர்சனம் ட்விட்டர்லேதான் போட்டிருக்கேன் :-)

http://twitter.com/penathal

ஒரு வெளம்பரந்தேன்!

Anonymous said...

very very good. funny. i thought why should i write a blog when people like you write so knowledgebly. surprised to see such an indepth article in a blog which is not technology-centric. i voted for it in tamilmanam.

கோபிநாத் said...

ம்ம்ம்..இதுக்கும் ஆர்குட் மாதிரி தான் போல..;)

SurveySan said...

Danks everyone! :)

SurveySan said...

saidasan, special danks!

pullarikka vachutteenga. avvvv :)

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

எனக்கு அக்கவுண்ட இதுவரைக்கும் இல்ல. கூகிள் வாங்கிடுத்துன்னா வெலை மிச்சம். தானா வந்துட்டுப்போகுது. அதுவரைக்கும்.. ஆர்குட்லயே மாவாட்டுவோம்

//ஏர்ஹோஸ்டஸும் சரியில்லை"//
lol:-)

SurveySan said...

மீண்டும் நன்றீஸ்.


என்னை ட்விட்டரில் ஃபாலோ செய்யும் புதிய அன்பர்களுக்கு, இந்த பதிவு காணிக்கையாக்குகிறேன் ;)

SurveySan said...

பிரபா,

///எங்கள் அலுவலகத்தில் மின்னஞ்சலே தடை பாஸ், எல்லம் வீட்டில் இருந்து தான் :)////

நம்பிட்டேன் ;)

SurveySan said...

twitter success stories

http://www.businessweek.com/magazine/content/09_64/s0904046702617.htm?chan=rss_topEmailedStories_ssi_5

Subash said...

Google என்ன செய்யப்போகிறார்களென தெரியாது. ஆனா நாம் Twitter மூலம் நன்றாக சம்பாதிக்கலாம். அதைப்பற்றி விளக்கமாக ஒரு பதிவிடுகிறேன்.

உங்கள் அனைத்து பதிவுகளும் சுவாரசியமானவை

சீமான்கனி said...

வணக்கம் அண்ணே....நானும் த்விட்டேர் கு புதுசு உங்க தகவல் எல்லாம் அருமை...(வந்துடண்ட ஐஸ் வைக்க...)
'நல்ல பதிவு', 'சூப்பர்','தூள்','அருமை','அடேங்கப்பா','ஆகாககாகா, யோசிக்க வச்சுட்டீங்க','ஆஹா! என்னா சிந்தனை. பிறந்த பயனை அடைந்தேன்!',(முடியலபா...)...
வாழ்த்துக்கள் .....