recent posts...

Thursday, November 15, 2007

முதல் 'இரவுப் படங்கள்'!

கேமராக்காக செலவழிக்கர பணம் ரொம்பவே ஜாஸ்தி. பத்து வருஷத்துக்கு முன்னாடி வாங்கின Yashica, அப்பாலிக்கா வாங்கின Nikon SLR, அதுக்கப்பாலிக்கா ஒரு Canon Point & Shooter, இப்போ சமீபத்தில் வாங்கின Canon Rebel XTI எல்லாமே கைவைசம் அப்படியே இருக்கு.

ஒவ்வொரு தடவையும் புது கேமரா வாங்கும்போது, முதல் மாசம், கண்ணுல படர பூவெல்லாம் கேமராக்குள்ள விழும். ஈரமா ஒரு எலையோ, ரோடோ பாத்துட்டா அதுவும் உள்ள விழும். அப்பரம், புழு பூச்சின்னு மேக்ரோ படங்களும் விழும்.

இரவுப் படங்கள் மிகக் குறைவாதான் எடுக்கும் வாய்ப்பு கிடைக்குது.
புதிய Canonல் சமீபத்தில் எடுத்த இரவுப் படங்கள் சில.

நிறை குறையை அள்ளி வீசுங்க!

ஹாங், சொல்ல மறந்துட்டேனே, ஹி ஹி ஹி! எதுக்கா? தலைப்புக்குத்தான் :)
உங்க முதல் 'இரவுப் படங்களை'யும் அரங்கேத்துக்குங்களேன். பாப்பம் :)



1. விறகு அடுப்பு


2. விளக்குக் கடை


3. விளக்கு


;)

8 comments:

Anonymous said...

முதல் ரெண்டும் நல்லா இருக்கு.

மூன்றாவது ஃபோகஸ் சரியில்லை.

இம்சை said...

ஆசையை நிறைவேத்தியாச்சி...

ரசிகன் said...
This comment has been removed by the author.
ரசிகன் said...

பளபளக்கும் தங்கவிளக்கைவிட..
தகதக்கும் தழலின் படம் ஏனோ என்னிய கவர்கின்றது..

Ungalranga said...

third photo is just shining...
சும்மா டாலடிக்குது....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

முதல் முதல்ல(94 ல்) வாங்கின கோனிகா 1000 ரூபா கேமிரால யே இருட்டுல புகைப்படம் எடுக்க நினைச்சு.. மெழுகுவத்தியோட தம்பியை ஒக்காரவச்சு எடுத்தேன்.. கடைசியில் அதுல ப்ளாஷ் ன்னு ஒன்னு இருக்கே மறந்து போச்சு.. அது அடிச்சு ஒரு வித்தியாசமும் இல்ல பகல் போல வந்தது.. :)

ரசிகன் said...

கண்ணப்பறிக்குதே..கலரு..
யோவ்,இன்னா? நக்கலா?..
இப்பிடி பேஜார் புடிச்ச தலைப்பெல்லாம் வைச்சி என்னிய மாதிரி வயசுப்பசங்கள
ஏமாத்தரத ஒரு தொழிலாவே.. மாத்திப்புட்டியா?..ஹிஹி...

தருமி said...

Yo Yo-வை ரொம்ப கேட்டதாகச் சொல்லவும்.