'நச்'©னு ஒரு கதை'ப் போட்டியின் இறுதிக்கட்ட வாக்கெடுப்பில் 8 கதைகள் இடம்பெறுகின்றன.
முதற்கட்ட வாக்கெடுப்பில் முன்னணியில் வந்த டாப்-7 கதைகள் பாத்திருப்பீங்க.
இறுதிக் கட்ட போட்டியில், மக்கள் வாக்கெடுப்பை மட்டும் கணக்கில் வைக்காமல், ஒரு "ஐவர் குழு"வின் மதிப்பீடுகளையும் சேர்த்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐவர் குழுவில் யார் யார் இருக்கிறார்கள் என்பது, முடிவுகள் அறிவிக்கும்பொழுது தெரிவிக்கப்படும். அதுவரை, சஸ்பென்ஸ் :)
மக்கள் வாக்கெடுப்பும், ஐந்து நடுவர்களின் மதிப்பெண்களும் 50:50 விகிதாசாரத்தில் கலந்து போட்டியில் வெற்றி பெற்றவர் யாரென்று அறிவிக்கப்படுவார்.
57 கதைகளில், டாப்-7ல் வராமல் இருந்த கதையை நடுவர் குழுவிடம் படிக்கச் சொல்லி, அதில் எந்த ஒரு கதை "அடடா, இந்த கதை நல்ல நச் கதையாச்சே, இறுதிக் கட்டத்துக்கு போகாம போயிடுச்சே"ன்னு தோண வைக்குதோ, அதை அவர்களின் wild-card செலக்ஷனா அனுப்பச் சொன்னேன்.
அப்படி வரும் கதைகளில், ஒரே கதையை ஒன்றுக்கு மேலான நடுவர்கள் சொல்லியிருந்தா, அந்தக் கதையையும் இறுதிக் கட்ட வாக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளும் எண்ணம் இருந்தது.
ஐவர் குழுவிடமிருந்து, ஒன்றுக்கு மேற்பட்ட சிபாரிசு பெற்ற ஒரே கதை
மோகன்தாஸின் - "கடவுள் என்னிடம் கரைச்சல் செய்த பொழுதில்" என்ற நச் கதை.
ஆகையால், இந்தக் கதையும், இறுதிக் கட்ட வாக்கெடுப்புக்கு சேர்க்கப்பட்டுள்ளது.
wild-card சிபாரிசுகள் பெற்ற மற்ற கதைகள் இ.கா.வள்ளியின் "யாரோ அவள் என்னவள்?" மற்றும் பெனாத்தல் சுரேஷின் "கடன் அட்டை". ஒரு நடுவர் மட்டுமே இதனை சிபாரிசு செய்ததால், இதனை இறுதிக் கட்ட வாக்கெடுப்பில் சேர்க்க முடியவில்லை.
ஸோ, இறுதிக் கட்ட வாக்கெடுப்பில் கீழுள்ள டாப்-8 கதைகள் உள்ளன.
1) கடவுள் என்னிடம் கரைச்சல் செய்த பொழுதொன்றில் (மோகன்தாஸ்)
2. அரசியல்வாதி (வீ.எம்)
3. தப்பா நினைக்க மாட்டயே? (ஜெகதீசன்)
4. ஜன்னல் வெச்ச ஜாக்கெட்காரி (அரை பிளேடு)
5. சங்கு சுட்டாலும் வெண்மை தரும்!! (நாடோடி இலக்கியன்)
6. என்னால் அவள் இரண்டு மாதம் (குசும்பன்)
7. சென்னைக் காதலும், திருச்சிக் காதலும் (அருட்பெருங்கோ)
8. எதுனா வேல இருந்தா குடு சார் (நந்து f/o நிலா)
அடுத்தது என்ன? வாக்கெடுப்புதேன்!
தயவு கூர்ந்து, மேலே உள்ள கதைகளில், உங்களை மிகவும் கவர்ந்த 'நச்' கதைக்கு, உங்கள் வாக்கை அளியுங்கள்.
நல்ல 'நச்' கதை வெல்லட்டும்.
வாக்குப் பெட்டியில், ஈ.மெயில் முகவரியை தரவேண்டும்.
வாக்களித்ததும், உங்கள் ஈ.மெயில் முகவரிக்கு வரும் மடலை வாசித்து, உங்கள் வாக்கை approve செய்ய வேண்டும். தவறாமல் Junk/Spam folderகளை செக் செய்யவும். Approve செய்யும் வரை உங்கள் வாக்கு செல்லாது.
உங்களின் சில நிமிடங்களை ஒதுக்கி, வாக்கெடுப்பில் பங்கு பெற்று, நம் 'நச்' கதாசிரியர்களை ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பங்கு பெற்ற அனைவருக்கும், வாக்களித்தும், பின்னூட்டியும் ஊக்குவித்த அனைவருக்கும், இதுவரை வெற்றி பெற்ற டாப்-8 நச்-ஆசிரியர்களுக்கும், விமர்சனம் எழுதிய பாஸ்டன்.பாலா, Srikanth மற்றும் நடுவர்களுக்கும் நன்றிகள் பல.
Happy Voting & Happy New Year to you all!
வாங்க, சேந்து கலக்குவோம். ;)
fyi, கள்ள ஓட்டு வீட்டுக்கும், நாட்டுக்கும், ஜனநாயகத்துக்கும், 'நச்'சுக்கும் கேடு! :)
****வாக்கெடுப்பு முடிவடைந்தது. ****
ஜனவரி 7 2008 அன்று முடிவுகள் அறிவிக்கப்படும்!
இந்த பக்கத்திர்க்கு விளம்பரம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
உங்களுக்குப் பிடித்த 'நச்' கதைக்கும் விளம்பரம் தரலாம்.
டாப்-8 கதாசிரியர்களும், தங்கள் கதைக்கு, விருப்பப்பட்டால் போஸ்டர் அடித்து விளம்பரம் கொடுக்கலாம்.
உங்கள் கதை ஏன் வெற்றி பெற தகுதிவாய்ந்தது என்று ஒரு 'அலசல்' பதிவையும் போட்டால் சுவாரஸ்யம் கூடும்.
வெற்றி பெறும் கதைக்கு பரிசு: $25
அதைத் தவிர, $75 உதவும் கரங்களுக்கு கதாசிரியரின் பெயரில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தாண்டு வாழ்த்துக்கள், அனைவருக்கும்!
ஸ்டார்ட் த மீஜிக்!
பி.கு: புத்தாண்டு ரெஸல்யூஷன் -- நச் கதை முடிந்த பிறகு, எழுதப் போகும் புதிய பதிவுகளில், தங்கிலீஷ் இல்லாமல் எழுத முயற்சி செய்வது - "டார்கெட் 100% தமிழ்!" என்ற தாரக மந்திரத்தை முன்னிறுத்தி பதிவுகள் இட முயற்சித்தல் ;)
பி.கு: இந்த codeஐ உங்கள் பக்கங்களில் போட்டும் வாக்கெடுப்புக்கு விளம்பரம் தரலாம்:
பி.கு: 57 கதாசிரியர்களும் தவறாது வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் ;)