Wednesday, November 02, 2011

மிலே சுர் - என் இயக்கத்தில் உருவான கதை

வளந்து பெரியவனானதும் உனக்கு இன்னாவா ஆகணும்னு, பள்ளிக் கல்லூரிக் காலங்களில் கேட்கும்போது, 'ஙே'ன்னு முழிக்கத்தான் தெரியும். எதிர்காலத்தை பற்றிய பெரிய தீர்க தரிசனமோ, திட்டமிடலோ சுத்தமா இருந்ததில்லை எனக்கு, இன்று வரை.
ஆத்துத் தண்ணீல அடிச்சுக்கிட்டு போற காஞ்ச மட்டை கணக்கா, வாழ்க்கை ஓடுது.

என்னதான் நல்ல வேலை, கிம்பளம் இல்லா நல்ல சம்பளம்னு திருப்திகரமா வாழ்க்கை ஓடினாலும், ஒரு ஓரத்தில் லேசா ஒரு அசரீரீ சௌண்டு விட்டுக்கிட்டே இருக்கும். "இன்னாடா வேலை இது? நீ புடுங்க்கர ஆணி உன்னை விட நேக்கா புடுங்க ஆயிரம் பய இருக்கான். நீ என்னாத்த சாதிக்கப் போர புச்சா?"ன்னு.

ஆசை ஒண்ணும் பெருசா இருந்ததில்லை இதுவரைக்கும். ஒரே ஒரு சபலம், பாப்புலர் (நல்ல விதத்தில்) ஆகணுங்கரது.
ஆணி பிடுங்கவதைத் தவிர வேற எந்த  வேலையும் செய்யத் தெரியாது.
மத்த விஷயங்களில் எல்லாம் கால் வேக்காடு. ஃபோட்டோகிராஃப்பி,  பதிவு எழுதுவது, கிட்டார் மீட்டுதல் என எல்லாத்துலையும் கால் வச்சாலும் எதுவும் ஒழுங்கா வரலை.

ஒரு நாள், "என்னதான் சாதிக்கப் போறோம் வாழ்க்கைல'ன்னு ரொம்பவே டீப்பா திங்க் பண்ணிக்கிட்டு இருந்தப்போ, இங்கே அருகாமையில் உள்ள ஒரு கல்லூரியில், ஒரு வகுப்பு நடக்கப் போவது தெரிய வந்தது. "what were you born to do?". இது தான் தலைப்பு. வெறும் $50 தான் ஃபீஸு.
எவ்ளவோ பண்ணிட்டோம், இதையும் போய் பாத்துட்டு வரலாமேன்னு, சுபயோக சுபதினத்தில் அந்த வகுப்புக்குப் போனேன்.

போனா, என்னைய மாதிரியே இன்னும் இருபது பேர் அங்க வந்திருந்தாங்க. எனக்கு இந்த வகுப்பில் பெரிய நம்பிக்கை இருக்கவில்லை. $50க்கு வேற என்னா எதிர்பாக்கரது?

வந்திருந்த எல்லாரும் நல்ல வேலையில் பெரிய பதவியில் இருக்கரவங்க. எல்லாருக்கும் காமனான விஷயம், நல்ல வேலையில் இருக்கோம், ஆனா, மனசுக்கு முழுத் திருப்தி இருக்கரமாதிரி தெரியலையேங்கரதுதான்.

ரொம்ப நீட்டி முழக்காம விஷயத்துக்கு வரேன்.

எல்லார் கிட்டையும் கொஞ்ச நேரம் பேசிட்டு ஆசிரியர் என்ன சொன்னாருன்னா, நம்ம எல்லாருமே இந்த பூமியில் வந்திருக்கரது, ஏதோ ஒரு முக்கிய வேலையை செய்யரதுக்குத்தான். அந்த வேலையை செய்யாம வேற என்ன செஞ்சாலும், முழுத் திருப்தி வராது.

கொஞ்சம் கவனம் செலுத்தி, நமக்கான வேலை எதுன்னு கண்டுக்கிட்டு அதை செஞ்சா, முழுச் சந்தோஷம் மட்டும் கிட்டாமல், மகத்தான் வெற்றியும் சுலபமாய் கிட்டும்னு சொன்னாரு.  ஞாயமாத்தான் பட்டுது.

அப்பரம் கொஞ்ச நேரம் முப்பது நாப்பது கேள்விகளுக்கு ப்தில் எல்லாம் எழுதிட்டு, எல்லார் கிட்டையும் பேசிட்டு, ஆளாளுக்கு அவங்க அவங்களுக்கு 'விதிக்கப்ப்பட்ட' வேலை எதுன்னு ஆராஞ்சு சொன்னாரு.

ஒருத்தரை நாவல் எழுதச் சொன்னாரு, இன்னொருத்தர்ரை டீச்சர் ஆகச் சொன்னாரு, இன்னொருத்தரை உணவகம் ஆரம்பிக்கச் சொன்னாரு, இன்னொருத்தர்ரை இப்ப செய்யர வேலையே கண்டின்யூ பண்ணுங்கன்னு சொன்னாரு.

வகுப்பு முடிஞ்சு வெளீல வரும்போது, எல்லாரும், திருப்தி கரமாவே இருந்தாங்க. பெரிய ராணுவ ரகசியம் இல்லை, எல்லார்கிட்டையும், அவங்க இப்ப செய்யர வேலையைத் தவிர, மத்த என்னென்ன வேலை செய்யும்போது அவர்களின் திருப்தியும் சந்தோஷமும் கிடைக்குதுன்னு பாத்துட்டு, கூட்டிக் கழிச்சு இவரு, 'this is what you were born to do'ன்னு அடிச்சு சொல்லிட்டாரு.

எல்லாருக்கும் சொன்னது சரி, எனக்கு என்னா சொன்னாருன்னுதான கேக்கறீங்க? சொல்றேன்.

ஆணி புடுங்கரதில் பெரிய நாட்டமில்லைன்னு சொல்லிட்டேன்.
வேற என்ன புடிக்குதுன்னாரு.
படம் புடிக்கரதெல்லாம் புடிக்கும்னேன்.
வேற என்ன புடிக்குதுன்னாரு. எதைப் பண்ணா, ஒரு 'பெருமிதம்' உள்ளுக்குள்ள வருதுன்னாரு. டீப்பா கண்ணை மூடிக்கிட்டு திங்க் பண்ணிச் சொல்லுன்னாரு.
ரொம்ப ஆர அமர யோசிசசா, சமீப காலத்தில்,  'பெட்டிஷன் பெரியநாயகி' கணக்கா, நம்மால முடிஞ்ச 'லஞ்ச லாவண்யக்' கேடுகளை நம்மால் முடிந்த அளவில் எதிர்த்து நின்று "ஏன்"னு கேள்வி கேட்டு, அதற்காக நாயாய் அலைந்து திரிந்து சின்ன சின்ன வெற்றிகள் கிடைப்பது, ரொம்பவே பிடித்திருந்ததுன்னு சொன்னேன்.

ரொம்பவே பிரகாசமாயிட்டாரு அவரு. there you go. நீ உன்னோட புகைப்படம் புடிக்கர ஆர்வத்தையும், சமூக முன்னேற்றத்துக்கான உழைப்பயும் இணைத்து ஏதாவது செய்யணும். You should become a documentary film makerனு அடிச்சு வுட்டாரு.

பத்த வச்சுட்டியே பரட்டைன்னு, உள்ளூர தோன்றினாலும், எனக்கும் அப்படி ஒரு வேலை செஞ்சா திருப்திகரமாவே இருக்கும் தோணிச்சு. ஆனா, அதெல்லாம் ப்ராக்டிக்கலாம் வேலைக்கு ஆகுமான்னு,  யோசிச்சு அப்படியே ஆறப் போட்டுட்டேன்.

DSLR இருக்கு, எதையாவது க்ளிக்கி, Gimpப்ல் தூக்கிப் போட்டா அதுவே படத்தை தேத்திக் கொடுத்துடுது. டாக்குமெண்ட்டரி எல்லாம் எடுப்பதை பத்தி ஐடியாவே இல்லை. அது அவ்ளோ சுலபமான்னு தெரியாம, ஒரு சில வாரங்களில் routine வேலைகளில் மூழகி, 'what was I born to do''வை சுத்தமா மறந்துட்டேன். ரெண்டு மூணு வருஷத்துக்கு அப்பாலிக்கா, ஒரு சுபயோக சுபதினத்தில்,  ஆணிகள் இல்லாத அந்த நன்னாளில், எங்க அலுவலகத்தின் சகபாடிகளுக்கு ஒரு மடல் அனுப்பினேன். (கிட்டத்தட்ட ஒரு  ரெண்டாயிரம், மூணாயிரம் பேராவது இருப்பாங்க).

"guys, lets make a lip-sync video song of the Mile Sur Mera Tumhara""ன்னு.

மிலே சுர் மேரா துமாரா, தூர்தர்ஷனில் போட்டு போட்டு நம் மண்டியில் ஏற்றிய பாடல். தேச ஒருமைப் பாட்டுக்கு, இதை விட சிறந்த பாட்டு இவ்ளோ சிம்பிளான வடிவில் இன்று வரை வந்ததில்லை.
இந்தப் பாடலை எடுப்பதால், 'கொம்பேனி ஒருமைப்பாட்டுக்கும்' நல்லது, நமக்கும் தொழில் கத்துக்கிட்ட மாதிரி இருக்கும்னு ஐடியா பண்ணி இந்த மடல்.

மடல் அனுப்பும்போது பெரிய எதிர்பார்ப்பு இல்லை. எந்தப் பயலும் பதில் அனுப்ப மாட்டான்னு நெனச்சேன். ஆனா, அடுத்த ஐந்து நிமிடத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மடல்கள் வந்து குவிந்தன. 'yes, great idea. lets do it'', அது இதுன்னு எல்லாரும் ஜோதியில் ஐக்கியமாக ரெடியா இருந்தாங்க.

சிலர், நான் காமிரா வேலைய பாத்துக்கறேன், நான் எடிட்டிங்க் பாத்துக்கறேன், அது இதுன்னு ஆர்வமா களம் இறங்கிட்டாங்க. இன்னும் சிலர், "என்ன வேலை இருந்தாலும் சொல்லு, நான் ஹெல்ப் பண்றேன்'னு கோதால குதிச்சுட்டாங்க.

அன்னைக்கு முழுசா, கொஞ்சம் திகிலாவே இருந்துச்சு. இந்த மாதிரி விஷயம் நமக்கு துளி கூட தெரியாதே, பயலுவ நாம ஏதோ பெரிய தில்லாலங்கடின்னு நெனச்சுட்டாங்களோன்னு பயம்.  புலிவாலை புடிச்ச கதை மாதிரி.

ஆனா, 'பிறந்ததே இதுக்குத்தான்'னு தெரிஞ்சப்ப்பரம், ஏன் காலை பின்வைக்கணும்? எவ்வளவோ பண்ணிட்டோம், இதை பண்ணிட மாட்டோமான்னு, "great! lets do it. i will initiate next steps"னு தெகிரியமா அடிச்சு விட்டு, திட்டமிடலைத் தொடங்கினேன்.

கிட்டத்தட்ட 300 பேர் , california, bangalore,beijing என எங்கள் அலுவலகத்தின் எல்ல்லா கிளைகளிலும், நடிகர்கள்/டெக்னீஷியன்களை ஒருஙகிணைத்து வேலையை முடுக்கி விட்டேன்.

-தொடரும் (ரொம்பவே இழுத்துட்டேனோ?)  :)

வீடியோ பாக்காதவங்க, பாத்து, நேர்மையான கருத்ஸை யூ-ட்யூபில் பதியுங்கள். உங்கள் நண்பர்களுக்கு வீடியோ லிங்கை அனுப்பி வைக்கும்படியும் கேட்டுக்கறேன். யாராவது, வீடியோவுக்கு விமர்சனம் எழுதினாலும் மெத்த மகிழ்ச்சி உண்டாகும் எமக்கு :)
நன்றீஸ். please spread the word.

http://www.youtube.com/watch?v=_cRtySd65u8




47 comments:

Vijayashankar said...

Well done.

I have had some friends work there like Murty Peddinti... Heard its a nice co.

ILA (a) இளா said...

சீக்கிரம் முடிங்க. பொசுக்குன்னு நிறுத்திட்டீங்க.. ஆவலாக அடுத்த பாகம் எதிர்நோக்கி

SurveySan said...

thanks Vijayashankar.

it is indeed a great co. :)

SurveySan said...

ILA,

ஒரே பதிவுல எழுதத்தான் நெனச்சேன். பில்ட்-அப் ரொம்ப இழுத்துடுச்சு. :)

வவ்வால் said...

சர்வே,

அடக்கொடுமையே,
அந்தப்பாட்ட அப்போலாம் தேசிய ஒருமைப்பாடுனு சொல்லிப்போடுவான், பாலமுரளி, சித்ரா, ஊர்மிலா தாகுர், ஆஷாபோன்ஸ்லே /லதா? ,எல்லாம் வந்ததும் அதான் சூப்பர்னு நினைச்சுட்டீரா, கண்ராவி காண்செப்ட், கொஞ்சம் கூட சென்ஸ் இல்லாம ஒரிசா, கேரளா, தமிழ்நாடுனு எல்லாம் பாடினா போதுமா, (ஒரு ஸ்டெப் போடுவாங்க குனிஞ்சு குனிஞ்சு அதுல செம காமெடி)அத பார்த்து தான் தமிழ் செம்மொழி பாட்ட அடிச்சாங்க அதை மட்டும் எல்லாம் திட்டி தீர்த்தாங்களே ஏன்?

இதுல வேற உங்களுக்கு சஸ்பெண்டு :-))

புதுசா எதாவது பண்னினா என்ன குறைன்சா போயிடும்,

எதாவது நாய் மூச்சா போரது, இல்லைனா, மழைக்கு வீடு இல்லாம தார்பாய்ல, சினிமா பேனர் அடில ஒதுங்கிரதுனு படம் எடுப்பா(எல்லாம் அதானே பண்றாங்க)

"what were you born to do?". இது தான் தலைப்பு. = நான் நினைப்பதை பேசுவது!

SurveySan said...

வவ்வால், உம்மை நாடு கடத்தணும்னு நெனைக்கறேன். :)

மிலே சுர் தந்த, 'நாம் இந்தியர்' உணர்வை, வேற எந்த பாட்டும் இன்று வரை தந்ததில்லை.

வெறும் சினிமாக்காரன் மட்டுமில்லாம, சாமான்யனுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, அருமையா மொத்த இந்தியாவின் நிறத்தையும் கலாச்சாரத்தையும், அஞ்சு நிமிஷத்தில், அழகா காட்டிய பாட்டு அது.

இது முன்னோட்டம். அடுத்த வெளியீடு, மழையில் சினிமா போஸ்டர் அடியில் படுக்கரவங்க, பஸ்ஸ்டாண்டுல தூங்கரவங்கன்னு திங்க் பண்ணனும். :)

கதை இருக்கா?

pudugaithendral said...

ம்ம்ம் நல்லா இருக்கு. தொடருங்க. அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்

தருமி said...

நன்றி அய்யா ...

shortfilmindia.com said...

super.. enga udanz tvla potturuvom..:)

சத்யராஜ்குமார் said...

அருமையான படமாக்கம்.

வெண்பூ said...

சர்வேசன், Excellentனு சொல்லலாம், ஆனா அதுகூட ஒரு அண்டர்ஸ்டேட்மெண்ட்டாத்தான் இருக்கும். Hats off..

வவ்வால் said...

சர்வே,

//வவ்வால், உம்மை நாடு கடத்தணும்னு நெனைக்கறேன். :)//

நாடு கடந்துப்போனா தான் இந்தியன்னு நினைப்பே வரும்!(இம்மிக்கிரேஷன்ல ஆர் யு பிரம் இன்டியானு கேட்பான்ல அதான்)

//மிலே சுர் தந்த, 'நாம் இந்தியர்' உணர்வை, வேற எந்த பாட்டும் இன்று வரை தந்ததில்லை.//

ஓ நீங்கள்ளாம் காலைல தமிழும் சாயந்திரம் "ஏக் காவ் மே ஏக் கிச்சான்" படிச்ச பார்டிங்களா? :-))

எனக்கு இன்னிக்கு வரைக்கும் மிலே சுர் னா (என் உச்சி மண்டைல சுர்ருனுங்குது) என்னானே தெரியாது... நீங்களாவது சொல்லிதாங்கோ! அப்பாலிக்கா ஹிந்திய உணர்வு தருதானு பார்ப்போம்!

//வெறும் சினிமாக்காரன் மட்டுமில்லாம, சாமான்யனுக்கும் முக்கியத்துவம் கொடுத்து,//

அதாவது அதுல காட்டின சாமன்யன் பேருலாம் கேட்டா சொல்விங்க? அப்படித்தானே? அதுல வந்த சினிமாக்காரங்க பேர தவிர்த்து ஒருத்த பேர சொல்லுங்க,அப்புறமா சாமனியனுக்கு கொடுத்த முக்கியத்துவம் பத்தி பேசலாம்!

☀நான் ஆதவன்☀ said...

சல்யூட் வாத்தியாரே :)

கவிதா | Kavitha said...

Good work ! :) Excellent ! :)

புதுகை.அப்துல்லா said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்களுக்கு பின்னூட்டம் போடுறேன். பின்னூட்டம் போடுறேன்னு சொல்றதைவிட போட வச்சுட்டீங்க என்பதே சரி.

hats off.

Thamira said...

’நாம் இந்தியர்’ என்ற கான்செப்டில் கொஞ்சூண்டு கருத்துவேறுபாடு இருந்தாலும் இதுபோன்ற பாடல்களும், லதா மங்கேஷ்கர்களும் எனக்கு ரொம்பவே பிடிக்கும். அதுவும் இந்தப் பாடல் கொஞ்சம் ஸ்பெஷல்தான்.

அதற்கு செலிபிரட்டிகளைப் பொருத்திப் பார்த்தது ஒருவகையான ரசனை எனில் வெளியுலகம் அறியா முகங்களை நீங்கள் பொருத்திப் பார்த்திருக்கிறீர்கள். அந்த வகையில் அதை விடவும் ஒரு படி மேலேயே இந்தப் படத்தை ரசிக்கமுடிகிறது.

படத்துக்குப் பின்னாலிருக்கும் ஒருங்கமைப்புப் பணி உண்மையில் பிரம்மாண்டம். அட்டகாசம். அப்படியே அடுத்த வேலைகளையும் துவங்கலாம். டிஸ்டிங்ஷனில் பாஸாகிவிட்டீர்கள். வாழ்த்துகள்.

கொஞ்சூண்டு அமெச்சூர்த்தனம் தெரிவதை வேண்டுமானால், ஏதாவது குறை சொல்லியே ஆகவேண்டும் என்று நினைத்தால் சொல்லலாம்.

.:dYNo:. said...

நேத்துதாங்க மூசிக் விடியோ பார்த்தேன். ரொம்ப நல்ல எடிட்டிங், சினிமாட்டோக்ராஃபி & மேக்கிங்! நல்லா பண்ணி இருக்கீங்க! இன்னும் நிறைய செய்ய வாழ்த்துகள்!!

தருமி said...

.

பரிசல்காரன் said...

Wow!

சல்யூட் சர்வேசன்!!

SurveySan said...

@புதுகைத் தென்றல் நன்றி :)

SurveySan said...

@தருமி thanks for inquiring about the making;)

SurveySan said...

@shortfilmindia.com danksu. pls do :)

SurveySan said...

@சத்யராஜ்குமார் மிக்க நன்றி .

SurveySan said...

@வெண்பூ thanks for the appreciation :)

SurveySan said...

@வவ்வால்

//அதாவது அதுல காட்டின சாமன்யன் பேருலாம் கேட்டா சொல்விங்க? அப்படித்தானே? ///

hm. i am the escape. பெயர் சொல்லத் தெரியலன்னா தான் அவன் சாமான்யன். :)

SurveySan said...

@☀நான் ஆதவன்☀ daanks saare :)

SurveySan said...

@கவிதா | Kavitha நன்றீஸ் ;)

SurveySan said...

@புதுகை.அப்துல்லா


//பின்னூட்டம் போடுறேன்னு சொல்றதைவிட போட வச்சுட்டீங்க என்பதே சரி///

danksu. :)
அப்போ இவ்ளோ நாள் குப்பை கொட்டினது சரியில்லைங்கறீங்க. hmm :}

SurveySan said...

@ஆதிமூலகிருஷ்ணன்

thank you sir.

////கொஞ்சூண்டு அமெச்சூர்த்தனம் தெரிவதை வேண்டுமானால், ஏதாவது குறை சொல்லியே ஆகவேண்டும்///

:) இப்படி வெளிப்படையான கருத்ஸ் தான் பின்னாளில் நிஜமாய் உதவும்.
i too feel, there are lots of scope for improvement. :)

SurveySan said...

@.:dYNo:. நன்றி நன்றி நன்றி :)

SurveySan said...

@தருமி

// . //

is that the enthiran 'dot' ? :)

SurveySan said...

@பரிசல்காரன் thank you thank you :)

SurveySan said...

இப்பத்தான், உங்கள் அனைவரின் கருத்தை படிச்சப்பறம் தான் , மிலே சூர் எடுத்ததன் பலன் கிடச்ச மாதிரி இருக்கு. peers அங்கீகாரத்தின் சுகமே தனிதான் ;)

Thanks a ton! :)

தருமி said...

உங்கள் முகவரி மூன்று என்னிடமிருந்தது. 3 மயில்கள் அனுப்பினேன். குமரனின் குத்து வேல் பட்டு திரும்பி விட்டன!

ஒரு ஐயப்பாடு கேட்க அந்த முயற்சி.

தருமி said...

அந்த dot போட்டது ஒரு testக்கு!

SurveySan said...

@தருமி surveysan2005 at yahoo dot com.

Santhosh said...

நல்ல இருக்கு சர்வேஸ்.. கம்பெனி எல்லாம் சொல்லிட்டிங்க பேரையும் சொல்லிடுங்க :))..

SurveySan said...

@சந்தோஷ் = Santhosh looks like you didnt read the title :)

ராமலக்ஷ்மி said...

அடுத்த பாகம் எப்போ?

SurveySan said...

@ராமலக்ஷ்மி hopefully by monday :)

SurveySan said...

a new post on mile sur shooting days here: http://surveysan.blogspot.com/2011/11/blog-post_23.html

Senthilmohan said...

அருமையா எடுத்திருக்கீங்க. சூப்பர் கான்செப்ட். Congrats for this n wishes for the nexts.

// ஆதிமூலகிருஷ்ணன் said அதற்கு செலிபிரட்டிகளைப் பொருத்திப் பார்த்தது ஒருவகையான ரசனை எனில் வெளியுலகம் அறியா முகங்களை நீங்கள் பொருத்திப் பார்த்திருக்கிறீர்கள். அந்த வகையில் அதை விடவும் ஒரு படி மேலேயே இந்தப் படத்தை ரசிக்கமுடிகிறது.//

++1

காஞ்சி முரளி said...

நான் வழிப்போக்கன்...!
வழிப்போக்கனின் வந்தனம்...!

நல்லா பண்ணியிருக்கீங்க....!

வளர்க...!

வாழ்த்துக்கள்...!

umakanth tamizhkumaran said...

excellent.SURVEY SAN.i could not express my words for u.hats off. pl continue ur work
have a nice day
from
umakanthan
umachandrakanth@gmail.com

Satish said...

Excellent job., emotional song., melted., thanks.,

Unknown said...

Excellent Job !
Kudos to you !!!

சீ.கோபிநாத் said...

wow... very good... keep it up...