recent posts...

Wednesday, May 25, 2011

ராமர் தொடாத தெனாவட்டு அணில்...

அமெரிக்க அணில்களுக்கு முதுகில் கோடில்லை, என்பதை கணம் கோர்ட்டார் அவர்களிடம் தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன் :)

சமீபத்திய ஊர்சுற்றலின் போது, கலிஃபோர்னியா கடற்கரையோரம் க்ளிக்கிய அணில்.


நம்ம ராமரு தொட்டிருந்தா கோடு வந்திருக்கும்ல? அது மட்டுமில்ல யுவர் ஹானர்.
இந்த ஊரு அணிலுங்க, மனுஷனப் பாத்தா பயப்படாம கிட்ட வந்து எழுந்து நின்னு, 'இன்னா?'ன்னு கேக்குது.
முதுகுல மூணு கோட்டப் போட்டு, கல்லு எடுக்க விட்டிருந்தா இந்த தெனாவட்டு இருந்திருக்குமா? நம்மள பாத்ததும் பயந்து ஓடியிருக்காது? ராமர், எங்கிருந்தாலும் வந்து அமெரிக்க அணிலை கவனிக்கவும்.


டாங்க்ஸு :)

8 comments:

Arun Nishore said...

Ramar THotta Anil inge...
http://www.flickr.com/photos/29566529@N05/5749561388/

Ur comments please :)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

ஹா ஹா..

உங்க கேஸ் எடுத்திருக்கோம்.. அதோட முன்னேற்றம் பற்றி உங்களுக்கு தெரிய படுத்துறோம்..! :)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

I have to appreciate the Anil though.. என்னமா போஸ் குடுக்குது? செம.. பிக்சர்..! :))

SurveySan said...

டாங்க்ஸு Arun, Ananthi :)

Anonymous said...

இதில் இருந்து என்ன தெரிகின்றது .. அமெரிக்காவை கண்டு பிடித்தது கொலம்பஸ் தான். இராமர் கண்டுபிடித்திருந்தால் கோடு போட்டிருப்பாரே .. ஹிஹி .. அமெரிக்க - கனடிய அணில்கள் ரொம்ப தெனவெட்டுப் பிடிச்சதுங்க. கொஞ்சம் கூட பயப்படவே பயப்படாது ....

ராமலக்ஷ்மி said...

நிற்கிற போஸு ஸூப்பரு:)!

SurveySan said...

Danksu! :)

Vijay said...

காலம் எல்லாம் மாறிப்போச்சு.... இப்போ இராமர் ஆளும் நாட்டிலுள்ள அணில்களுக்குக் கூட முதுகில் கோடில்லை... நான் சொல்வது ஒன்பதாவது இராமர் (King Rama IX) ஆளும் தாய்லாந்து நாட்டினைப்பற்றி...