recent posts...

Tuesday, November 23, 2010

நீதிமன்றத்தில் நான், மீண்டும்

இந்த ஊர் நீதிமன்றங்கள் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே என் புதிய வழக்கு விசித்திரமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன்தான்.

தங்கியிருந்த அப்பார்ட்மெண்ட்டை காலி செய்தபின், டெப்பாஸிட்டை திரும்பித்தராத மேனேஜ்மெண்ட்டை எதிர்த்து வாதாடியிருக்கிறேன். அதில் வெற்றியும் பெற்றிருந்திருக்கிறேன்.
ஆனால், சில மாதங்களுக்கு முன்னால், மீண்டும் ஒரு சட்டப் பிரச்சனை.

காரில் பக்கத்து சிட்டியில் உலாத்தும்போது, ஒரு ட்ராஃபிக் சிக்னலில் சிவப்பு எரிந்து கொண்டிருந்தது. எனக்கு, அந்த இடத்தில் வலது பக்கம் திரும்ப வேண்டும். சாதாரணமாக, சிவப்பு எரிந்தால், அக்கம் பக்கம் பாத்துட்டு யாரும் இல்லைன்னா, மெதுவா வலது போயிடலாம். நேராப் போகணும்னா, பச்சை வரும் வரை நிக்கணும்.
ஆனா, சட்டப்படி, இந்த வலப்பக்கம் திரும்பரதுக்கு முன்னாடி, மூணு விநாடி, முழுசா நின்னுட்டு , அப்பரமாத்தான் திரும்பணும். ஆனா, யாரும், அப்படிச் செய்வதில்லை.
இந்தப் பக்கத்து சிட்டிக்காரன், அந்த மூலையில் ஒரு கேமராவை வச்சிக்கிட்டு, மூணு செக்கண்ட் நிக்காம போரவங்களை, படம் புடிச்சு, வீட்டுக்கு ட்ராஃபிக் வயலேஷன் டிக்கெட் அனுப்பி வைக்கறான்.
அந்த சுபயோக சுபதினத்தில், அடியேன் திரும்பும்போது, டச்சாக் டச்சாக் டச்சாக்னு நாலா பக்கத்திலிருந்தும், என்னையும் என் காரையும் படம் புடிச்சு, வீட்டுக்கு, "ராசா $500 மொய்ப் பணம் கட்டு"ன்னு ஒரு கோர்ட் நோட்டீஸ் வந்துச்சு.

அதப் பாத்ததும் எனக்கு செம கடுப்பு. ரெட்லைட்டை கிராஸ் பண்றது தப்புதான். ஆனாலும், எல்லாரும் சகஜமா செய்யும் செயலுக்கு, இந்த மாதிரி கேமரா போட்டு பிடிச்சா, ஒரு $25 மொய் கேக்கலாம். இல்ல்ன்னா, முதல் தடவை வார்னிங்காவது கொடுத்து விடலாம். கலிஃபோர்னியா கல்லால துட்டு இல்லன்னா, இதை காரணமா வச்சு என் கிட்ட ஏன் இந்த பகல் கொள்ளை செய்யணும்னு ஒரே கடுப்பாயிடுச்சு. இதை இப்படியே விடக் கூடாதுன்னு முடிவு பண்ணி, என்ன பண்ணலாம்னு அலச ஆரம்பிச்சேன்.

உனக்கேன் இவ்வளவு ப்ரச்சனை, உலகத்தில் யாருக்கும் இல்லாத ப்ரச்சனை, என்று கேட்பீர்கள். இம்முறை நானே 'தவறு' செய்தேன். அதிலிருந்து மீண்டும் வந்தேன். அதை சொல்லவே இப்பதிவு. சுயதம்பட்டம் என்பீர்கள். என் சுயதம்பட்டத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது. இதைப் பாத்து, ரெட் லைட் வயலேட்டும் சக கண்மணிகள் சுதாரித்துக் கொள்ளலாம்ல.

அங்க இங்க தேடி, ஒரு வழி கண்டு பிடிச்சேன். இந்த மாதிரி டிக்கெட் கையாள மூணு வழி இருக்கு,
1) கேட்ட மொய் பணத்தை கொடுத்து, அடுத்த வேலையை பாக்கலாம் (முக்கால் வாசி பேரு இதைத் தான் செய்யறாங்க)
2) கோர்ட்டுக்கு போயி, ஜட்ஜ் கிட்ட, 'கனம் கோர்ட்டார் அவர்களே, எனக்கு அந்த நேரத்துல அவசர வேலை இருந்திச்சு, அதான் நிக்காம திரும்பிட்டேன். மன்னிச்சுடுங்க'ன்னு கேக்கலாம். ஆனா, இது மிக்காறும், நீங்க குற்றவாளின்னுதான் முடியும்.
3) வீட்ல இருந்தபடியே, ஒரு ஃபார்ம் ('written declaration') பூர்த்தி பண்ணி, சில பல ஞாயமான காரணங்களை சொல்லி, 'என்ன வுட்டுடுங்க சாமி'ன்னு எழுதிப் போடலாம்.

என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நிடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில், படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. தென்றலைத் தீண்டியதில்லை நான். ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன். கேளுங்கள் என் கதையை! நீதிபதி அவர்களே! தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.

இப்படி யோசிச்சு, நான் தேர்ந்தெடுத்த ஸ்டெப்பு மூணாவது - written declaration.

இதில் நம்மள ஏன் மன்னிச்சு விடணும்னு நம்ம பக்க ஞாயத்தை எடுத்துச் சொல்லணும்.
நான் இணையத்தில் ஆராய்ந்த போது கிட்டிய சில 'உத்திகளை' கையாண்டு, கீழ் உள்ள மேட்டர்களை கலந்து ஃபார்ம் பூர்த்தி செய்து அனுப்பினேன்.
1) இந்த மாதிரி கேமரா இருக்கும் சிக்னல்களில் 'photo enforced' என்று கீழே போட்டிருக்க வேண்டும், சட்டப்படி. அது அந்த மூலையில் இல்லைன்னு ஒரு வரி எழுதினேன். (அதற்கான ஃபோட்டோ சாட்சி, அவனுங்க அனுப்புன ஃபோட்டைவையே திருப்பி அனுப்பினேன்)
2) கணம் கோர்ட்டார் அவர்களே, நான் நிக்கலாம்னு நெனச்சேன், நான் மெதுவாக்கி நிக்கரதுக்குள்ள, பளிச் பளிச்னு ஏதோ வெளிச்சம் அடிச்சது (கேமரா ஃபிளாஷ்), நான் பயந்து, ஏதோ ஏம்புலன்ஸ்தான் என் பின்னால வருதோன்னு நெனச்சு, அதுக்கு வழிவிட வலது பக்கமா நிக்காம திரும்பிட்டேன். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
3) தமிழ்நாட்டிலே இத்திருவிடத்திலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு. தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? கலிஃபோர்னியா! அது உயிரை வளர்த்தது. என்னை உயர்ந்தவன் ஆக்கியது. ஆனால், இதுவரை எந்த தவறும் செய்யாத ஒரு நல்ல ட்ரைவரை, நீதிமன்றம் ஏன் இப்படி $500 ஃபைனெல்லாம் போட்டு டார்ச்சர் செய்கிறது? என்ன கொடுமை ஜட்ஜ் சார் இது? ப்ளீஸ் ஏன்ஸர் மை ப்ரேயர்! Refund my $500 (எங்கூரா இருந்தா, $5 டாலர் மாமாக்கு குடுத்திருந்தா, இவ்ளோ இழுத்தடிச்சிருக்கவே வேண்டியதில்லை).

இப்படி எழுதி முடிச்சு, ஃபார்முடன், $500 செக்கும் அனுப்பினேன்.
சில நாட்களில், செக் வங்கிக் கணக்கிலிருந்து உருவப்பட்டது.

'அச்சச்சோ கோவிந்தாவா'ன்னு நெனச்சிருந்தேன்.

ஆனா, முந்தாநேத்து, ஒரு கோர்ட் ஆர்டர் வந்திருந்தது, 'உங்க கடுதாசி ஜட்ஜ் பரீசிலித்தத்தில், நீங்கள் நிரபராதி என்று இந்த கோர்ட் தீர்ப்பளிக்கிறது. உங்க $500 சீக்கிரம் ரீஃபண்ட் செய்யபடும்'னு. ;)))

உபரி செய்திகள்:
$500ல் , கிட்டத்தட்ட $300 டாலர்கள் அந்த கேமரா வைத்து இயக்கும் தனியாருக்கு கமிஷனாம்;
சிக்னலில் நிற்காமல் வலதில் திரும்புவதற்கும், சின்ன ஃபைன் தான் இருந்ததாம், ஆனா, அதை சட்டமாக்க அடித்த படிவத்தில், தப்பாக தட்டச்சி, $50 என்பது $500 ஆயிடுச்சாம். கவர்மெண்ட்டும், வர துட்டை வேணாம்னு சொல்லாம, இப்படியே ஆட்டையப் போட்டுக்கிட்டிருக்காம்;
இந்த தனியார் கேமரா காண்ட்ராக்ட்டிலெல்லாம், எக்கச்சக்க ஊழல்/கமிஷன் இருக்காம்.
மேல் விவரங்களுக்கு இங்கே பார்க்கலாம்.

கொசுறு செய்தி: GoodNewsIndia.com/PointReturn.Org volunteersஐ நாம் interview எடுத்தது, ஆங்கிலத்தில் இங்கே வலையேற்றப் பட்டிருக்கிறது.



நன்றி: மு.க for the பராசக்தி டயலாக்ஸ் ;)

8 comments:

SurveySan said...

பரப்பவும். பலருக்கும் உதவலாம் ;)

சென்ற நீதிமன்ற எப்பிஸோடை படித்து இன்னொரு பதிவர் பயன் பெற்றிருக்கிறார் என்பதை சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன் ;)

பாவக்காய் said...

தலை, வழக்கம்போல் கலக்கல் !!. கண்டிப்பா நிறைய பேருக்கு உதவும்.

ராமலக்ஷ்மி said...

//நீங்கள் நிரபராதி என்று இந்த கோர்ட் தீர்ப்பளிக்கிறது.//

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்:)!

பராசக்தி வசனங்கள் அட்டகாசம்!!

Thirumalai Kandasami said...

பாஸ்,,, வரலாறு(பழைய கேசு ) எல்லாம் இன்னிக்கு தான் படிச்சேன்..
சூப்பர்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எப்படில்லாமோ யோசிக்கிறீங்க..

பாராட்டுக்கள்.:)

SurveySan said...

பாவக்காய், ராமலக்ஷ்மி, திருமலை கந்தசாமி, முதுலெட்சுமி,

டாங்க் யூ! :)

Nat Sriram said...

தல..இப்போ தான் கால்கரில ஒரு லைட்ட யெல்லோல கிராஸ் பண்ணேன்..இங்க இருக்கிற snow / traffic கண்டிஷனுக்கு முன்னாடி போறவன் திடீர்னு ஸ்டாப் பண்ணி, லைட்ட கடக்கரதுக்குள்ள ரெட் வந்து கேமரா பளிச் பளிச்ன்னு போட்டு தாக்கிடுச்சு..
நான் US லைசன்ஸ்ல கனடால அதுவும் ரெண்டல் கார்ல ஒட்டுரதுனால நம்மள கண்டுபிடிக்க முடியாம டீல்ல விட்டுடுவாங்களான்னு ஒரு நப்பாசை..:)) ஆனா இவனுங்க எம்டனுங்க..டிக்கட் வந்தோன்ன அந்த exact declaration text க்கு உங்கள அனுகறேன்..:)

இது மாதிரி இன்னொரு நார பொழப்பு இருக்கு..DC , Virginia ஏரியால அபார்ட்மென்ட் பார்க்கிங் ரொம்ப கிராக்கி..விசிட்டர் பார்க்கிங்ல ரெசிடென்ட் இல்ல vice versa பார்க் பண்ணா தீந்தோம். அது என்னான்னா போர்டு வெச்சுருக்க மாட்டான். மங்களா லைட் ப்ளுல கோடு போட்டுருப்பான். நைட்டு தெரியவே தெரியாது. தப்பா போட்டோம்..கழுகு மாதிரி வந்து tow பண்ணி 150 டாலர் குடு, 200 டாலர் குடும்பாங்க..

பை தி வே, பராசக்தி டைப் நர்ரேஷனை ரொம்பவே ரசித்தேன்..

SurveySan said...

Nataraj,

Calgary டிக்கெட் வராமல் இருக்க எல்லாம் வல்லவர்கள் அருள் புரியட்டும். ஆனா, வந்துடும். எனக்கு டொராண்ட்டோவிலிருந்து ஸ்பீட் டிக்கெட் கரெக்ட்டா தேடிப்பிடிச்சு வந்திருக்கு ;)

டிக்கெட் வந்தா, அந்த ஊர் சட்ட ஓட்டைகள் என்னான்னு விசாரிச்சு அனுப்பலாம். வந்தா சொல்லுங்க ;)