பாஷை புரியலன்னாலும், ராகம் தெரியலன்னாலும், சில பாடகர்களும் பாடல்களும் இப்படி இழுக்க வைக்குதே. எம்மாம் பெரிய பலமில்லை அது?
நம்ம SPB ஜானகியெல்லாம் பாடினதை வெளி நாட்டவர் கேட்டாலும் இப்பேர்பட்ட ஒரு எழுச்சி அவங்களுக்குள்ள வரும்னே தோணுது. யூ.ட்யூப்ல, மேயும்போது, ஒரு ஸ்வீடிஷ் பெண்மணி நம்ம உஷா உதூப்பின் மலையாளப் பாடலை பாடியது கண்ணில் பட்டது.
சென்ற வாரம் ஒரு get togetherல் நண்பர் ஒருவர் ஏதோ ஒரு ஹிந்திப் பாட்டை பாடினார். முதல் முறையாக அப்பத்தான் கேக்கறேன் அதை. அப்படியே மனசுல தங்கிடுச்சு. அப்பரம் தேடிப் பாத்தா, நம்ம கிஷோர் அண்ணாத்தை பாடின பாட்டு அது. இப்பெல்லாம், அடிக்கடி முணு முணுக்கும் பாடல் அது.
இசையின் இந்தப் பவரை அறுவடை செய்ய வேண்டும் என்று என்னில் எழுந்த பெரிய எழுச்சியை சேனலைஸ் செய்து, Nesson Dormaவை பாடலாம்னு கத்திப் பாத்தேன்.
என் கொரல என்னாலேயே சகிச்சுக்க முடியலை.
சரி, நமக்கு ஒத்துவராது, நாம நம்ம லெவலுக்கு, SPB பாட்டை மட்டும் கொதறி கொஸ்து போடுவோம்னு, SPB பாடல்களை மனதில் அசை போட்டேன்.
சிப்பிக்குள் முத்து படத்தில் வரும், துள்ளி துள்ளி பாட்டு கேட்டிருப்பீங்க.
அந்தப் படத்தில், பாடல்களை விட பிரமாதம், SPB கமலுக்கு குரல் கொடுத்திருக்கும் சுகம் தான். என்னமா பேசியிருப்பாரு.
துள்ளி துள்ளி பாட்டு, ஸ்கூல் படிக்கும்போது கேட்டு கேட்டு மனப்பாடம் ஆன பாட்டு. ஆனா, சின்ன புள்ளத்தனமா நெறைய தடவ துள்ளி துள்ளின்னு வந்துக்கிட்டே இருக்கும்.
ஆனா, பாடலின் பல்லவி 'கட்டிய தாலி உண்மை என்று நீ அன்று ராமனை நம்பி வந்தாய்'.. னு ஆரம்பிக்கும். அந்த தாளமும், SPB யின் லயமும், கூடவே பாடும் ஜானகியின் குரலும், சுண்டி இழுக்கும்.
எல்லாத்துக்கும் சிகரம் வச்சது போல், கமலின் அற்புத நடிப்பும் நடனமும்.
ஆஃபீஸை விட்டு வீட்டுக்கு வரும்போது, காரில், மெய் மறந்து பாடும் பாடல்களில், அநேகம் தடவை இடம் பெறும் பாடல்களில் இதுவும் ஒண்ணு.
காருக்குள்ளையும், பாத்ரூமுக்குளையும், கிட்டும் எக்கோவில், கழுதை பாடினாலும், தனக்கு தன் குரல் பிரமாதமா இருக்கும். நம்ம கதை கேக்கணுமா.
எனக்கென்னமோ, நான், SPBயை விட குரல் வளம் அதிகமா வச்சிருக்கர மாதிரி ஒரு பீலிங் வரும், காருக்குள்ள பாடிக்கிட்டே ஓட்டும்போது. அடச்சீ, தப்பான வேலை செஞ்சுக்கிட்டு இருக்கோமே, SPBக்கு போட்டியா எறங்கிடலாம்னெல்லாம் கூட தோணும். (ஹிஹி).
நேத்து எழுந்த எழுச்சியை அடக்க, இத்தைப் பாடி அரங்கேற்றி, உங்களை மகிழ்ச்சி கடலில் மூழ்க வைத்தால்தான் என் தாகம் தணியும் என்ற நிலை வந்ததால்,
ஐ ஆம் த சிங்கிங்
யூ ஆர் த எஞ்சாய்!
ஹாப்பி ஃப்ரைடே!
பாடலின் அற்புத வரிகளும், SPB சுமாரா பாடியதும், நான் பாடிய பாடலுக்கு கிழே :)
|
இந்த பாட்டு ஸ்டார்ட்டிங்ல, ஜானகி, நிசநிசநிச ன்னு ஏதோ பாடறாங்களே, எப்படிங்க அதெல்லாம் முடியுது? சான்ஸே இல்லை ஜானகி அம்மா! கலக்கிட்டீங்க!
வரிகள் இங்கே இருக்கு.
பி.கு1: VSK, சின்னக் கண்ணன் அழைக்கிறான் பாடினப்போ, நேசல் வாய்ஸுன்னீங்க. இப்ப உன்னிப்பா கவனிச்சா, இதுவும் அப்படித்தான் வருது. அதெல்லாம் அதுவா வரதுதான் போலருக்கு. சரி பண்ணனும்னா சாதகம் பண்ணணுமாமே?
பி.கு2: சென்ற அரங்கேற்றத்தின் போதெல்லாம் த.மணி, சங்கதிகளை ஓரளவுக்கு கவனித்து திருத்த உதவுவாங்கோ, இப்ப கரெக்ஷன் ஆஃபீஸர் அருகில் இல்லாததால், 'ரா'வா வந்திருக்கு ஒலிப்பதிவு. என்சாய் மாடி :)
பி.கு3: 25 கதைகள் இதுவரை நச் போட்டியில் களமிறங்கியுள்ளன. அனுப்பாதவங்க அனுப்புங்க. அனுப்பினவங்க சரிபாருங்க. அனுப்புனவங்களும் அனுப்பாதவங்களும் அனுப்பப்போறவங்களும் அனுப்பப் போகாதவங்களும் இங்க போய் கதைகளைப் படியுங்க.