recent posts...

Showing posts with label corruption. Show all posts
Showing posts with label corruption. Show all posts

Tuesday, November 20, 2007

லஞ்சப் பெருச்சாளிகள் - ஆலோசனைகள்?

sub-Registrar officeல ஒரு சின்ன மேட்டர் முடிக்கணும்.

சாதாரணமா, இன்னிக்குக் கொடுத்தா, நாளைக்குக் கிடைக்கக் கூடிய விஷயம் அது.

Computerisation செஞ்சப்பரம், இதே விஷயம் 15 நிமிஷத்துல முடியும்னு தம்பட்டம் அடிச்சாங்க.

ஆனா, இப்ப கொடுத்து நாலு நாள் ஆகுது.
> Computer வேலை செய்யல சார்
> Printer வேலை செய்யல சார்
> நாளைக்குப் பண்ணிடலாம் வந்துடுங்க

இப்படீ, அப்படீன்னு இழுத்துக்கிட்டே இருக்காங்க.

காரணம்? ரூ.120 fees மட்டும் தான் கொடுத்தேன். Receipt Bookக்கு அடீல, மத்தவங்க 'default'ஆ வைக்கர மாதிரி மொய்ப்பணம் வெக்கல.

இதனால இருக்குமோ? வேணும்னே பண்றாங்களோ?

எல்லாரும் சொன்னாங்க, ஒரு 300 ரூ. சேத்து வைங்கன்னு. நான் தான் பிடிவாதமா, என்னதான் ஆவுதுன்னு பாக்கலாமேன்னு கொடுக்காம விட்டுட்டேன்.

இன்னும் எவ்ளோ நாள் இழுத்தடிப்பாங்க இப்படி?

SubRegistrar office பத்தி கம்ப்ளெயிண்ட் பண்ணனும்னா எங்க போவணும்?

பேசாம, எல்லார மாதிரியும், ஒழிஞ்சது சனின்னு, 300 மொய்ப் பணம் கொடுத்திடவா? அத நெனச்சாலே ஜிவ்வ்வ்வ்வ்னு ஏறுதே பி.பி :)

என்னாலயும் ரொம்ப நாள் காக்க முடியாது, மேட்டர் அர்ஜெண்ட்டு.

என்ன பண்ணலாம்?