recent posts...

Sunday, May 19, 2013

Point Returnல் ஒரு நாள்

GoodNewsIndia.comன், DV ஶ்ரீதரன், துவங்கிய முயற்சி PointReturn. மதுராந்தகத்திலிருந்து பத்து கிலோமீட்டரில், 17 ஏக்கர்,  நிலப்பரப்பை,  பசுமைப் படுத்தும் முயற்சி இது.
எதுவும் விளையாமல் வீணாய் விடப்பட்ட வரண்ட நிலத்தில், மரங்களும்,  செடிகளும், கொடிகளும் வளர்த்து, நீர்வளத்தையும் உருவாக்கி, ஒரு self-sustainable environmentஐ உருவாக்கும் ஆராய்ச்சி. 

இவரின் இந்த முயற்சியில், மேலும் சில தன்னார்வலர்கள் சேர்ந்து தங்களது உழைப்பைச் செலுத்தி வருகிறார்கள்.
இதில் முக்கியமானவர்களைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.

பல வருடங்களாய் GoodNewsIndia.com வாசித்ததில், DV ஶ்ரீதரன் இந்த இடம் வாங்கியதிலிருந்து, வேலி கட்டியது, குளம் வெட்டியது, தண்ணீருக்காக காற்றாலை அமைத்தது, தங்குவதர்க்காக குடிசை அமைத்தது, பயோ டீசலுக்காக பூங்கை நட்டது, 'நவீன' டாய்லெட் கட்டியது,  சாலைக்காக நிலம் வாங்கியது, கற்பகம், ஶ்ரீராம், சித்தார்த்தின் வரவு, அவர்கள் கட்டிய சின்ன குடிசை, வளர்க்கும் பூனை, நாய், நெல் அருவடை, பூசனி வளர்த்தது, என அனைத்து விஷயங்களும் அவ்வப்போது படித்து தெரிந்து கொண்டு வந்துள்ளேன்.

ஒவ்வொரு விடுமுறையின் போதும், PointReturnஐ சென்று நேரில் பார்க்கவேண்டும் என்று தோன்றும். ஆனால், அதற்கு நேரம் அமையாமல் இருந்து வந்தது. சென்ற வாரத்தில்தான் நேரம் கிட்டியது. 

அடிக்கும் சுளீர் வெயிலில், நகர சுகத்தை புறம் தள்ளி, இயற்கைக்கு தங்களால் ஆனதைச் செய்யும், இந்த தன்னார்வலர்களை எண்ணி வியப்பு தான் வருகிறது. நினைத்தால், சில பல லட்சங்கள் சுலபமாய் மாத சம்பளமும், சுகபோக வாழ்க்கையும் நகரத்தில் கிட்டும் இவர்களுக்கு. படித்த படிப்பு அப்படி. அதை புறம்தள்ளி, இந்த பொட்டல் வெளியில், குடிசை அமைத்து, விவசாயிகளாய் மாறியதை எண்ணி பெரும் வியப்பு வருகிறது.
அவர்களைப் பொறுத்தவரை, இதை ஒரு service என்றெல்லாம் எண்ணாமல், தங்களுக்கு பிடித்த வாழ்க்கைமுறையை பிடித்தபடி சிம்ப்பிளாய் வாழ்கிறோம், அதைத் தவிர இதில் பெரிதாய் ஒன்றுமில்லை என்கிறார்கள்.

வாழ்க்கைக்கு எது தேவை, எது தேவை இல்லை, எது சந்தோஷம், எது மன நிறைவு,  எது ஆசை, எது பேராசை, என்றெல்லாம் தெளிவாய் புரியாமல், எதையோ தேடி வரும்  நமக்கு, இவர்களின், மன ஓட்டமும் வாழ்க்கையின் அணுகுமுறையும் புரியாத புதிர்தான்.

நம் சுகபோகங்களை கெட்டியாய் பிடித்துக் கொண்டாலும், நம்மால் இயன்ற சின்ன சின்ன விஷயங்களை, சுயநலம் இல்லாமல் செய்தல் நலம் பயக்கும்.

நீர் தட்டுப்பாடு, மின்சாரம் தட்டுப்பாடு, என பல தட்டுப்பாடுகள் நிலவும் ஊரில், இயற்கை வளத்தை சீரழிக்காமல் காப்பதே ஒரு பெரிய சேவைதான்.
உங்கள் தெருக்களில், மரங்களை அழிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். மரம் இல்லாத தெருக்களில் மரங்கள் வையுங்கள்.
உணவு, நீர், வீணடிக்காதீர்கள்.

மரம், செடி, கொடிகள் மெத்தப் பிடித்தவர்கள் சிலர் கூட்டாய் சேர்ந்து, சில பல ஏக்கர்களை வாங்கி, பசுமைப் படுத்தும் முயற்சியில் ஈடுபடுங்கள்.

PointReturnலிருந்து சில பல படங்கள், உங்கள் பார்வைக்கு.


பொட்டல் காட்டில், பசுமை தெரியத் துவங்கியுள்ளது.


இல்லம்.

அப்பு.


வெயில், அதீத வெயில்

விருந்தினர் விடுதி

சோலார் தகடு


மதிய உணவு (அரிசி, காய்கறிகள் அங்கேயே விளைந்தது)காற்றாலை, நீர் இரைக்க. ஆரோவில் தயாரிப்பு.

கற்பகம், ஶ்ரீராம்

குடிலின் மேற்புரம்

இன்றைய மகசூல்.

 நண்பர் ஓசை செல்லா, இதே மாதிரி ஒரு முயற்சியை வரகம்பாடியில் செய்து வருகிறார்.

பல கோடி பேர், நில வளத்தையும் நீர் வளத்தையும் சீரழித்தாலும், சில ஆயிரம் பேர் இந்த மாதிரி பசுமை முயற்சிகள் செய்து, பேலன்ஸை காக்கிறார்கள்.
இவர்களைப் போன்றோரின் முயற்சி வாழ்க வளர்க. இவர்களைப் பார்த்து, மற்றவர்களுக்கும் தத்துனூண்டாவது, ஆர்வம் பீரிடட்டும். :)

DV ஶ்ரீதரன் ஒரு கட்டுரையில், தான் கடந்து செல்லும் பாதையில் ஒரு மரத்தை பார்த்தால், ஒரு சில நொடிகள் நின்று அதன் இருப்பை உள்வாங்கி, அதன் பிரமாண்டத்தை ரசித்துவிட்டுத்தான் நகர்வேன் என்று சொன்னது என் உள்மனதில் பதிந்து விட்டது. அதனால் தானோ என்னவோ, எனக்கும் மரங்களின் மேல் ஒரு 'இது' வந்து விட்டது.

எங்கள் தெருவில் வைத்த ஒரு 'Copper Pod''ன் படம் இங்கே. மரம் நடுங்கள். அருமையான அனுபவம் அது. உங்களுக்குப் பின்னும், உங்களின் இருப்பை நிலை நிறுத்தும், பலப் பல வருடங்களுக்கு.நன்றீஸ்.7 comments:

வடுவூர் குமார் said...

இதே மாதிரியான முயற்சி சுங்குவார் சத்திரத்தில் செய்துகொண்டிருக்கோம்.படங்கள் தனி மெயிலில் அனுப்பியுள்ளேன்.

SurveySan said...

தகவலுக்கு நன்றி.

'சுங்குவார் சத்திரத்தில்' ஓர் நாள், விரைவில் :)

ராமலக்ஷ்மி said...

ஆச்சரியப்படுத்துகிறார்கள். மீண்டும் நேரில் சென்று, படங்களுடன் பகிர்ந்து கொண்டிருப்பதற்கு நன்றி.

SurveySan said...

What is PointReturn?

Oviya's Dad said...

Thanks for sharing the good news..

Just a small info. The last photo is of the tree called "Copper Pod" (Not may flower).
http://en.wikipedia.org/wiki/Peltophorum_pterocarpum

SurveySan said...

thanks oviya's dad. fixed it.

Ganapathy Subramaniam said...

Great report! I had visited pR much earlier when there was just the shed. Its such a great initiative. So nice to see its resilient residents! pR always amazes!