Sunday, November 21, 2010

பிழை திருத்தம் - Boy scouts சகாக்கள் மன்னிக்க

பத்திரிகைகளில் பிரசுமாகும் செய்திகளில் ஏதாவது பிழை இருந்தால், அடுத்த எடிஷனில், அதை குட்டி டப்பாவில் தெரிவித்து மன்னிப்பு கேப்பாங்களே, அப்படிப்பட்ட பிழை திருத்தல் பதிவு இது.

போன மாசம், சில பள்ளி மாணவர்கள் Boys Scouts பெயரைச் சொல்லி என்னிடம் ஏதோ வசூலுக்கு, பிஸ்கோத்து வாங்கிக்கன்னு சொல்லி $20 ஆட்டையப் போட்டு, பிஸ்கோத்து குடுக்காம தலைமறைவாகிட்டாங்கன்னு ஒரு பதிவைப் போட்டு புலம்பியிருந்தது நினைவில் இருக்கலாம்.

இந்தப் பதிவால், உங்களுக்குத் தெரிவிக்க விரும்பவதென்னவென்றால், அந்த பிஸ்கோத்து பாக்கிட்டு, நேற்று மதியம், அதே வாண்டுகளால், என் வீட்டின் கதவைத் தட்டி டெலிவரி செய்யப்பட்டது.
"யோவ், எம்புட்டு தடவ வந்து கதவ தட்ரது? வூட்ல இருக்கரதே இல்லியா நீ? பிஸாத்து $20க்காக நாங்க மாங்கு மாங்குன்னு ஸ்கூல் விட்டதும், நாலஞ்சு தபா வந்து போயிட்டோம். புடி, நீயும் உன் பிஸ்கோத்தும். இனி எவனாவது வசூலுக்கு வந்தா, ஒழுங்கு மரியாதையா ஒண்ணும் இல்லன்னு சொல்லிட்டு அனுப்பிடு. இவரு $20 குடுப்பாராம், நாங்க இவரு வாங்கன பிஸ்கோத்தை இவரு கிட்ட கொடுக்க, $50 டாலர் செலவு பண்ணி வண்டிக்கு செலவு பண்ணி அலையோ அலைன்னு அலைவோமாம். வந்துட்டானுங்க சாவுகிராக்கிங்க.." இப்படி வெளிப்படையா சொல்லலன்னாலும், அந்த குட்டிப் பய, கண்ணாலேயே அதை சொல்லிக் காட்டிட்டான். அவ்வ்வ்வ்வ்!

உலகமெங்கும் இருக்கும் Boys Scouts மக்கள் அனைவரும் எம்மை மன்னிக்க. அவசரப்பட்டு புகார் பதிவு எழுதிட்டேன்.

டெலிவரி செய்யப்பட்ட பிஸ்கோத்து (சாக்லேட்டு பாப்கார்ன்) ரொம்பவே அருமை.


இந்த சிச்சுவேஷனுக்கு எந்த திருக்குறள் பொருந்தும்?

19 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உங்க நேர்மையையும் அந்த பசங்க நேர்மையையும் பாராட்டறேன்..:)

SurveySan said...

முத்துலெட்சுமி, நான் செஞ்சது கயமை :)

அது சரி, திருக்குறளை சாய்ஸ்ல விட்டுட்டீங்களே?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பிஸ்கட் கிடைச்சதும் வாங்கி பையில் போட்டுட்டு சும்மா இருக்காம.பதிவு போட்டு எங்களுக்குசொன்ன நேர்மையை ச் சொல்றேன்..:)

சாய்ஸ்ல விட்டுட்டேன் திருக்குறள்

ராமலக்ஷ்மி said...

பொடிப்பயலுவ பத்தி உங்கூர் பழமொழியெல்லாம் சொல்லிப் போட்ட பதிவை இப்பதான் பார்க்கிறேன்.

இப்போ திருக்குறள் தேடுவதில் தவறு மன்னிக்கப்பட்டது:)!!!!

Thirumalai Kandasami said...

விடுங்க பாஸ்!!! பல்பு வாங்கறது எல்லாம் நமக்கு என்ன புதுசா.?
ஆனா,உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.

http://enathupayanangal.blogspot.com

Prathap Kumar S. said...

நீங்க இவ்ளோ நல்லவரா?:)

ஏன் இவ்ளோ லேட்டுன்னு கேக்கலையா....

SurveySan said...

Nanjil sir,

idhudhaan real reason:).

//யோவ், எம்புட்டு தடவ வந்து கதவ தட்ரது? வூட்ல இருக்கரதே இல்லியா நீ? பிஸாத்து $20க்காக நாங்க மாங்கு மாங்குன்னு ஸ்கூல் விட்டதும், நாலஞ்சு தபா வந்து போயிட்டோம். ///

:)

பாவக்காய் said...

தலை, விடுங்க ஏதோ அவசரப்பட்டு சொல்லியாச்சு !! நல்ல அனுபவமா எடுத்துக்குவோம் !!

பாவக்காய் said...

help, looking for DSLR , Budget $500-$800, for beginner, can you suggest a camera ?

ராமலக்ஷ்மி said...

@ சர்வேசன்,

//help, looking for DSLR , Budget $500-$800, for beginner, can you suggest a camera ?
//

சொல்லுங்க என் சாய்ஸை :)!

SurveySan said...

பாவக்காய், நான் canon வச்சிருந்தாலும், எனக்கு பிடிச்ச கேமரா Nikonதான். அதன் ஷட்டர் சத்தத்தின் இனிமையே இனிமை.

D5000 பத்தி நல்ல விஷயங்கள் சொல்றாங்க. 12mp. 720p video.

D3100ம் நல்ல கேமரா. 1080p video எடுக்கலாம். 14.2 mp.

ரெண்டுமே $600களில் விலை.

SurveySan said...

///D5000 பத்தி நல்ல விஷயங்கள் சொல்றாங்க. 12mp. 720p video.//

யாரு சொல்றாங்கன்னு உங்களுக்கே புரிஞ்சிருக்கும் :)

SurveySan said...

Flickrலும் ஒரு டாப்பிக் உருவாக்கியாச்சு.

http://www.flickr.com/groups/pit-group/discuss/72157625454225326/

பாவக்காய் said...

@SurveySan

நன்றி சர்வேசன்.... ஆமாம், ராம லக்ஷ்மி சொன்ன மாதிரி தெரியுது !!
Costco has decent deal for D5100, Let me see.... during TG hols.

பாவக்காய் said...

@SurveySan
is that Canon Rebel T1i ?

Floraipuyal said...

கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்.

SurveySan said...

FloraiPuyal, நல்ல குறள். கிட்டத்தட்ட மேட்ச்சாவுது.

இதன் விளக்கம் இங்கே:
http://kurals.com/wp/2010/05/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/

Anonymous said...

//"யோவ், எம்புட்டு தடவ வந்து கதவ தட்ரது? வூட்ல இருக்கரதே இல்லியா நீ? பிஸாத்து $20க்காக நாங்க மாங்கு மாங்குன்னு ஸ்கூல் விட்டதும், நாலஞ்சு தபா வந்து போயிட்டோம். புடி, நீயும் உன் பிஸ்கோத்தும். இனி எவனாவது வசூலுக்கு வந்தா, ஒழுங்கு மரியாதையா ஒண்ணும் இல்லன்னு சொல்லிட்டு அனுப்பிடு. இவரு $20 குடுப்பாராம், நாங்க இவரு வாங்கன பிஸ்கோத்தை இவரு கிட்ட கொடுக்க, $50 டாலர் செலவு பண்ணி வண்டிக்கு செலவு பண்ணி அலையோ அலைன்னு அலைவோமாம். வந்துட்டானுங்க சாவுகிராக்கிங்க.." இப்படி வெளிப்படையா சொல்லலன்னாலும், அந்த குட்டிப் பய, கண்ணாலேயே அதை சொல்லிக் காட்டிட்டான். அவ்வ்வ்வ்வ்!//
Class!

Anonymous said...

//விடுங்க பாஸ்!!! பல்பு வாங்கறது எல்லாம் நமக்கு என்ன புதுசா.?
ஆனா,உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு//

=))

உங்க இரண்டு பேர் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு