recent posts...

Tuesday, October 09, 2007

SECRET BALLOT, எலிபத்தாயம் & my favourite MOVIE moments

திரைப்படம் பார்ப்பதுதான் என் முக்கிய பொழுது போக்கு அம்சம்.
அதுவும், நல்ல திரைப்படம் என்றால் பல முறை அந்த படத்தை சலிக்காமல் பார்ப்பேன்.

Saving Private Ryan எந்த சேனல்ல எப்ப வந்தாலும் ஒக்காந்து பாப்பேன். வீட்ல டி.வி.டியும் இருக்கு. தரமான அக்மார்க் படம் என்றால், என்னைப் பொறுத்தவரை SPR தான். அதில் வரும் Tom Hanks போன்ற ஆட்கள், நிஜ வாழ்க்கையில் இருந்து, நமக்கு பரிச்சியமானவர்களாக இருந்தால் நல்லா இருக்குமேன்னு அதப் பாக்கும்போதெல்லாம் தோணும்.
Tom Hanks இறக்கும் கணங்களும், அதைத் தொடர்ந்த 10 நிமிடங்களும், சிம்ப்ளி சூப்பர்ப்!

படத்தில் உள்ள சின்ன சின்ன விஷயத்தை ரசிப்பதும் உண்டு, அதை நினைத்து நினைத்து பின்நாட்களில் புளகாங்கிதம் அடைவதும் உண்டு.
தளபதியில், சின்னத் தாய் பாட்டில் வரும் அந்த க்ளோஸ்-அப் மல்லியும், இரயில் போகும்போது, ரஜினியும் ஸ்ரீவித்யாவும் சேர்ந்து திரும்பிப் பார்க்கும் காட்சிகளும் மனதில் பதிந்தவை.

மூன்றாம் பிறையில், உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே என்ற வரிகளுக்கு கமலின் முகபாவம், அடேங்கப்பா.

Ransom படம் பாத்தீங்களா? Mel Gibson தன் மகன் இறந்து விட்டான் என்று நினைத்து, பால்கனியில் அமர்ந்து அழும் காட்சி. சுச்சுச்சுச். சூப்பர்.

தேவர் மகன் சிவாஜி கமல் சம்பாஷனைகள். சிவாஜி என்ன கம்பீரமா இருந்தாரு அந்த படத்துல இல்ல? வீரபாண்டிய கட்ட பொம்மனை விட எனக்குப் பிடிச்சவர் தேவர் தான். அந்த மிடுக்கு அந்த பார்வை. சிவாஜியைத் தவிர வேற யார் பண்ணிருந்தாலும், எடுபட்டிருக்காது.

சின்ன வயசுல பாத்த ,'ராஜா சின்ன ராஜா பூந்தளிரே இன்ப கனியே'ன்ற பாட்டு. (பூந்தளிர் படம்னு நெனைக்கறேன்). சுஜாதா ஆவியா வெள்ளைப் பொடவைல மெதந்து வருவாங்க, குட்டிப் பயல அழுது கிட்டே தெருத் தெருவா அலைவான். எவ்வளவோ வருஷத்துக்கப்பரமும் நினைவில் அப்படியே மங்கலா இருக்கு அந்த காட்சிகள்.

பெருமழைக்காலம் என்ற மலையாளப் படம். கணவனின் உயிர் காக்கவேண்டி மீரா ஜாஸ்மின், காவ்யா மாதவனின் காலைத் தொடும்போது பெய்யும் மழையும், மற்ற காட்சிகளில் வரும் backwatersன் அழகும், ப்ரமாண்டம். வெரி வெரி டச்சிங்.

அழகியில் வரும் உன் குத்தமா என்ற ராஜ வரிகளும் மனதை என்னென்னமோ செய்தது.

பழைய படங்கள் எதுவும் நினைவில் பெரிதாக பதியவில்லை. யோசித்துப் பார்க்கும்போது சட்டுனு வருவது, நம்ம என்.டி.ஆர் காருவின் கண்ணனும், எஸ்.வி.ரங்காராவின் மாயா பஜார் 'கல்யாண சமயல் சாதமும்' தான். காய்கறிகளெல்லாம் தானா போய் நறுக்கிக்குமே, கலக்கல்.

அடுக்கிக்கிட்டே போலாம் போலருக்கே. சரி, இனி தலைப்புக்கு வரேன்.

Children of Heaven என்ற இரானியப் படம் பாத்ததுக்கப்பரம், எங்க இரானியப் படம் பாத்தாலும், எடுத்துட்டு வந்து பார்த்துவிடுவது பழக்கமாயிடுச்சு.
இங்க இருக்கும் லைப்ரரில, நல்ல படங்களா தேர்ந்தெடுத்து வச்சிருக்கான்.
Baran, Laila, White Balloon, Colors of Paradise எல்லாம் வரிசையா பாத்தாச்சு. எல்லாம் பார்கப் படவேண்டியவை.

சமீபத்தில் பார்த்தது SECRET BALLOT என்ற இரானியப் படம்.
இரானின் முதல் தேர்தலை நடத்த ரொம்ப சிரமப்பட்டு வேலைகள் எல்லாம் செய்வாங்க.
தேர்தல் பூத் எல்லாம் வச்சா, ஓட்டு போட மாட்டாங்கன்னு, ஒவ்வொருத்தர் வீட்டுக்கே நேரா போய் வாக்கு சேகரிக்க முடிவு செய்வாங்க.

ஏதோ ஒரு மூலையில் கடற்கரை ஓரத்தில் இருக்கும் ஊருக்கு, ஒரு பெண்ணை 'பூத்' ஏஜண்டா அனுப்புவாங்க. அங்கு இருக்கும் ஒரு இராணுவ வீரனை, ஏஜண்டுக்கு பாடிகாடா கூட இருந்து உதவும் வேலை.
ஒரு பெண் ஏஜண்டாக வந்ததை முழுவதும் ஏற்க முடியாத மனநிலையில் இருக்கும் அந்த இராணுவ ஆளுக்கும் இந்தப் பெண்ணுக்கும் இடையில் நடக்கும் விவாதங்கள் சிரிப்பை வரவழைக்கும்.

தேர்தல் அமைப்பில் நம்பிக்கை இல்லாமல் இவனும், சட்ட திட்டங்களின் தேவையைப் பற்றி விலாவரிக்கும் ஏஜண்ட்டும் நல்ல காம்பினேஷன்.

சட்ட திட்டங்கள் எல்லாம் ரொம்ப அவசியம் என்று படம் முழுக்க லெக்சர் அடிக்கும் அந்த பெண் ஏஜெண்ட்.
வந்த வேலை முடிந்ததும், ஐந்து மணிக்குள் திரும்ப வேண்டிய அவசரம்.
இராணுவ வீரன், ஜீப் ஓட்டும்போது, நடுக்காட்டில் யாரும் வராத சாலையில் சிக்னலில் 'ரெட் லைட்' விழும். பச்சைக்காக வெயிட் பண்ணுவான்.
அவசரத்தில் இருக்கும் ஏஜண்ட் "அதான் யாரும் வரலியே, வண்டிய எடேன்" என்பாள். தனக்கு தேவை என்பதும், சட்டமாவது திட்டமாவது என்று காட்டும் யதார்த்தம் அருமை.

படம் கொஞ்சம் இழுவை ரகம் தான். மெதுவா, கவித்துவமா நகர்ந்தது.

ஜீப் ஸ்டார்ட் பண்ணி மூணு நிமிஷம் ஓட்டி தெருக்கோடிக்கு போற வரைக்கும் காமிச்சு பொறுமைய சோதிச்சாங்க சில நேரங்களில்.

நம்ம ஊர் தூர்தர்ஷனில், மதியானம் 1:30 மணிக்கு அவார்ட் படமா போட்டு தாக்குவாங்க ஒரு காலத்துல.

உங்களுக்கு நினைவிருக்கான்னு தெரியல, மலையாளப் படம் ஒண்ணு 'எலிபத்தாயம்'(??)னு பேரு. ஒரு நாயரு வீட்டுக்குள்ள போய், ஒரு எலிப்பொறிய எடுப்பாரு. உள்ள ஒரு எலி மாட்டிக்கிட்டிரூக்கும். அது இவர பாக்க இவரு அத பாப்பாரு. பொடி நடையா நடந்து வீட்டுக்கு பக்கத்துல இருக்கர கொளத்துக்கு போவாரு. அவரு நடந்து கொளத்துக்குப் போக ஒரு அஞ்சு நிமிஷம் ஆகும். அஞ்சு நிமிஷம் நாமளும் கேமரா பின்னாலயே அவரு கூட போகணும்.
கொளத்துல போய் எலிப்பொறிய தண்ணீல முக்கி எலிய கொல்லுவாரு.

இந்த மாதிரி ஒரு அஞ்சு நாள் நடக்கும், கடைசில அவரும் கொளத்துல செத்து போயிடுவாரு.
அவரு எலியப் பாக்கரதும், எலி அவரப் பாக்கரதும் இன்னும் மனசுல இருக்கு.

அந்த படத்துல ஃபோட்டோகிராபி நல்லா இருந்த மாதிரி, இப்ப நெனச்சா தோணுது. திரும்ப ஒரு தரம் பாக்கணும். ஏதாவது விஷயம் இல்லாம அவார்டு கொடுத்திருக்க மாட்டாங்கன்னு தோணுது. நீங்க பாத்திருக்கீங்களா?

பி.கு1: என்ன அழவச்ச படம் பாருங்க

பி.கு2: I like movies, so add to the list.

நன்றி!

6 comments:

SurveySan said...

start, camera, action.

Anonymous said...

Colors of Paradise is a good one too.

SurveySan said...

I have seen C-o-P. Excellent movie.

thanks for pointing it out.

Anonymous said...

Secret Ballot drove me nuts. Still
I sat through the entire movie.
I think this is some kind of sickness! This is not any different from Malayalam art movies!

SurveySan said...

Anony, nowadays I enjoy even TR's new movies.

secret ballot was OK - it was slow, but the interactions between the 2 characters were interesting.

i liked the 'signal' scene totally ;)

SurveySan said...

சும்மா...