recent posts...

Friday, October 05, 2007

24 MP3 க்கு சுளையாய் 1 கோடி ரூபாய்!!!

மகா ஜனங்களே,

இதனால் அறிவிக்கப்படுவது என்னவென்றால்,

USA மினஸோட்டாவைச் சேர்ந்த ஜேமி தாமஸ் என்ற முப்பது வயதுப் பெண்,

24 MP3 பாடல்களை ஓசியில் download செய்ய வழங்கியதால்,

ஒரு பாடலுக்கு $9950 என்ற வீதத்தில், 24 பாடலுக்கு $220,000 fine கட்டச் சொல்லி உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

காப்பிரைட், இந்த ரைட், அந்த ரைட் என்று பல ரைட்டுகளை மீறியதால், அவரை லெஃப்ட் ரைட் என்று அங்கலாய்த்து, ஒரு பெரிய ஃபைனும் போட்டுள்ளனர்.

இதிலென்ன தப்புன்னு ரொம்ப அலட்டலா, இந்த MP3 களவாணித்தனம் பண்ற பலருக்கு இது உள்ளூர ஒரு திகில ஏற்படுத்தவே இப்படி திடீர் நடவடிக்கையாம்.

இன்னும் 26,000 பேர வரிசையா விசாரிச்சு, எல்லாருக்கும் ஃபைனுடன் கூடிய ஜெயில் தண்டனை கொடுக்கப் போறாங்களாம்.

மக்கா, உஷாரா இருங்க. downloadக்கு கொடுத்தாலும், download செய்தாலும், குற்றம் குற்றமே.

பல நாள் திருடன் ஒரு நாள் அம்புட்டுக்குவான்னு நாம இணையத்துல பல வாட்டி பாத்திருக்கோம்.

உஷாரா இருந்துக்கோங்க, இருந்துக்கறேன். அம்புடுதேன்

;)


மேல் விவரங்கள் இங்கே

btw, அருமையான பாடல்கள் நமக்கெல்லாம் தந்த MSVக்கு ஒரு பெரிய அங்கீகாரம் தரக்கோரி போடப் பட்டுள்ள ஆன்லைன் பெட்டிஷனின் கையொப்பம் இடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
உங்களுக்கு பிடிச்ச MSV பாட்ட பின்னூட்டுங்க. கானா பிரபா கிட்ட நேயர் விருப்பமா கேட்டு போடச் சொல்றேன் ;)

(தமிழ்மணத்துல பெட்டிஷன அறிவிப்பா போட என்னா பண்ணனும்? உங்க பதிவுலயும் வெளம்பரம் கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்).

300 கையொப்பங்கள் கிட்ட வந்திருக்கு. 1000ம் ஆக்குவோம்!

நன்றி!!!!


:)