recent posts...

Monday, October 15, 2007

ராமன் லக்ஷ்மணனைக் கொன்றானா?

ராமன் மானிடன்.
அவன் தம்பி லக்ஷ்மணனும் மானிடன்.

மானிடராய் பிறந்தவர்கள் மானிடனாய் வாழ்ந்து மானிடனாய் மாண்டும் போகவேண்டுமல்லவா?

ராமாயணத்தில் ராமன் இறப்பதையும் சொல்லியிருக்கிறார்களாமே?

லஷ்மணனை ராமனே கொல்வதாகவும் கதை அமைகிறதாமே?

மெய்யாலுமா?

தெரிஞ்சவங்க சொல்லுங்க/எழுதுங்க/லிங்க் கொடுங்க.

நன்றி!!!

அடுத்த பதிவு: என்னை மூன்று பேர் ரௌண்டு கட்டி அடிச்ச கதை! ;)

18 comments:

கோவி.கண்ணன் said...

//"ராமன் லக்ஷ்மணனைக் கொன்றானா?"//

இது என்ன புது கதை ?

ஏற்கனவே பலராமன் கதைகள் சிரிக்குது, தீபாவளி நேரத்தில் இராவணனை கொளுத்துவதாக கதை, நீங்கள் இராமனையே...
:))

SurveySan said...

கோவி,

மேட்டர் இருக்குங்க. பாருங்க, விடை வரும்.
நம்ம ஆத்தீக நண்பர்கள் யாராவது விஷயத்தோட வருவாங்க பாருங்க.

எனக்கு ஃபுல் டீட்டெயில்ஸ் தெரியல. ஆனா, இந்தா மாதிரி தான் இராமாயணம் முடியுமாம்.

SurveySan said...

அனானி ஐயா, நான் யாரையும் கிண்டல் பண்ணப் போடலய்யா.

சந்தேகம் கேட்டேன். பதில் வரும் பாருங்க.

இறக்குவானை நிர்ஷன் said...

அப்படியும் நடந்ததா? நான் அறிந்தவரையில் இல்லன்னு நினைக்கிறேன்.யாராவது உண்ம சொன்னா நல்லா இருக்கும்.

ரவி said...

ஆஹா சனியன் சடைபோட ஆரம்பிச்சிருச்சே

இனிமே பூ வைக்காம பொட்டு வைக்காம போவாதே...

SurveySan said...

செ.ரவி,

என் ஆன்மீகத் தேடலில் எழுந்த ஞாயமான கேள்வி இது.

சனியன், ஜடை அது இதுன்னு, இத பாலிடிக்ஸ் செய்ய வேணாம் ;)

ரவி said...

தேடுங்க, தேடுங்க, தேடிக்கிட்டேயிருங்க...

SurveySan said...

தேடறேன் தேடறேன்.

தேடினதுல, ஒரு சூப்பர் லிங்க் கெடச்சுது.
ராம் லக்ஷ்மணனின் வம்சா வெளி பத்தியெல்லாம் இருக்கு.

இப்போ லிங்க் போட்டா, திசை திரும்பிடும். லெட் அஸ் வெயிட்:)

அருண்மொழி said...
This comment has been removed by a blog administrator.
SurveySan said...

அருண்மொழி பெயரில் வந்த பின்னூட்டம், புலிக்குட்டி, சீ, எலிக்குட்டி சோதனையில் தோல்வியுற்றதால் நீக்கப்பட்டது.

அது தவிர, வில்லங்கமான கேள்வி கேக்கறீங்க.

பதிவுல இருக்கர கேள்விய மட்டும் பாப்போம் ;)

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

இலக்குவன் கொல்வதாக செய்தி இல்லை.ஒட்டக் கூத்தர் எழுதியதாக உத்தரகாண்டம் ஒன்று உள்ளது.கம்பகாவியம் யுத்தகாண்டத்துடன் முடிகிறது.இராமன் அரசு செய்கிறான் என்பதோடும்,இராம காதையை சொல்பவர்கள்,கேட்பவர்கள் அனைவரும் நமனையும் வெல்லும் நற்கதி அடைவார்கள் என்பதோடு முடிகிறது.
பின்னர் நடைபெறும் செயல்கள் உத்தர காண்டத்தில் விரிகின்றன.சீதை காட்டுக்கு அனுப்பப்படுவது(இராமனால்),வஷிச்டர் கோபித்து சீதைக்கு துணையாக தன் மனைவியுடன் காட்டுக்கு செல்வது,லவ,குசர்கள் பிறப்பு,லவ குசர்களுக்கு ராமகாதையை வஷிச்டர் சொல்லிக் கொடுப்பது,அவர்கள் அதை அயோத்திலேயே சென்று அங்காங்கு மக்களுக்குச் சொல்வது,இலக்குவனும் இராமனை நிந்திப்பது,இருவரும் பிரிவது,இராமன் தன்னிரக்கத்தால் சரயு நதியில் மூழ்கி மாள்வது....எனச் செல்கிறது.
ஆனால் இக்கதையாக்கம் ஒட்டக் கூத்தரின் இயலாமையையும்,கருத்து வெற்றிடத்தையுமே வெளிப்படுத்துவதாக இலக்கிய ஆர்வலர்கள் கூறுவார்கள்.
கம்பன் ஏன் இராமகாதையை பாடுபொருளாக எடுத்துக் கொண்டான்,ஏன் 6 காண்டங்களுடன்(யுத்தகாண்டம் ஈராக) நிறுத்திக் கொண்டான்,இராம காதையின் அரங்கேற்றம் ஆகியவை தனிப் பதிவு போடும் அளவுக்கு நீண்ட மற்றும் சுவையான செய்திகள்....
ஆக இலக்குவன் இராமனைக் கொல்லவில்லை என்பதுதான் செய்தி,இலக்குவன் நிந்தனையால் நொந்த இராமன்,தன் முடிவைத் தானே தேடிக் கொள்கிறான்..

SurveySan said...

அறிவன்,

லக்ஷ்மணனை ராமன் கொன்றான் என்றல்லவா காதில் விழுந்தது.

ராமன், துயருற்று மாண்டான் என்பது புதுசா இருக்கே.

வால்மீகி ஒண்ணும் சொல்லலியா இதப் பத்தி. ?

SurveySan said...

some interesting note on 'agni pariksha' from Wiki.

----- -------
After Rama slays Ravana and wins the war, Sita wants to come before him in the state which over a year's imprisonment had reduced her to, Rama arranges for Sita to be bathed and given beautiful garments before they are re-united. But even as Sita comes before him in great excitement and happiness, Rama does not look at her, staring fixedly at the ground. He tells her that he had fought the war only to avenge the dishonour that Ravana had inflicted on Rama, and now Sita was free to go where she pleased. At this sudden turn of events, all the vanaras, rakshasas, Sugriva, Hanuman and Lakshmana are deeply shocked.[15]

A devastated Sita, shaking with grief and humiliation, begs Lakshmana to build her a pyre upon which she could end her life, as she could not live without Rama. At this point, Lakshmana is angered at Rama for the first time in his life, but following Rama's nod, he builds a pyre for Sita. At the great shock and sorrow of the watchers, Sita walks into the flames. But to their greater shock and wonder, she is completely unharmed. Instead, she glows radiantly from the centre of the pyre. Immediately Rama runs to Sita and embraces her. He had never doubted her purity for a second, but, as he explains to a dazzled Sita, the people of the world would not have accepted or honoured her as a queen or a woman if she had not passed this Agni pariksha before the eyes of millions, where Agni would destroy the impure and sinful, but not touch the pure and innocent.[16]
----- ------

Anonymous said...

in Uttara kandam,i think Rama orders lakshmana's death for defying his orders.

I think at the end of ramayana, agastiyar or vashishtar(dont recall), wants to tell Rama the truth about his identity.That is avatar of Vishnu who has come to end Ravana.Now, that purpose is finished and time for Rama and lakshmana to go back.Agasthiyar gets a vow from King Rama that he'll tell this truth but when he is doing it, no one else is supposed to enter the room so that the secret is not revealed.
Rama orders lakshmana to maintain guard on that room where is going to talk with agasthiyar/vashishtar.
Rama says it is a kings order that if anyone steps into the room at that time, he'll be punished with death etc.But at this time, when this conversation is happening,another rishi(durvasar?) will make an appearance and tell Lakshmana that he wnats to see Rama immediately!lakshmana will request him politely to wait but that rishi will threaten to curse rama if he is disrespected like this and made to wait!
so, lakshmana will be forced to interupt the conversation of rama with agasthiyar!
since, he cannot be an exception to King order that anyone who enters the room will have to die, Rama will tearfully order for death of Lakshmana and lakshmana will accept it because otherwise, rama's word will go false.

After the truth is revealed, there is no more purpose in sustaining the avataram and hence Rama and some of the people is Ayodhya will drown themselves in River Sarayu.

SurveySan said...

anony, very interesting.

do you know if this is part of Valmiki's or is this add-on story?

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

சர்வேசன்,அக்னி பரீட்சையில் நீங்கள் சொல்லும் செய்தி,கம்பனில் யுத்தகாண்டத்தில்லேயே இருக்கிறது.
இராவணன் மாண்ட பின் சீதை இராமனைப் பார்க்க வரும் போது இராமன் அவளை நிந்திக்க,அவள் தீப் பாய விரும்பி,இளையனை அக்னி மூட்டச் சொல்கிறாள்;இளையன் அக்னி வளர்க்க,சீதை தீப்பாய,அக்னிதேவன் சீதையின் கற்பின் வெம்மையினால் துயருற்று,சீதையை வெளிக் கொணர்ந்து,தன்னை(அக்னி) சீதையின் கற்பாம் வெம்மையிலிருந்து காக்குமாறு வேண்ட,கூட தயரதன் போன்றோரும்(ஆம்,தயரதன் வானுலகிலிருந்து வந்து சீதையை ஏற்று ஆட்சி புரிய வேண்டுகிறான் !) இராமன் சீதையை ஏற்று அயோத்தி திரும்ப ஆயத்தம் செய்கிறான்.இந்தக் கட்டத்தில்தான் கம்பன் சீதைக்கு 'கற்பின் கனலி'-கற்பெனும் கனலால் அக்னியையே சுட்டவள்-எனும் அடைமொழி கொடுக்கிறான்.
நான் ஏற்கனவே சொன்ன சரயூவில் மூழ்கி மாள்வது-உத்தர காண்டத்தில் பல ஆண்டுகளுக்குப் பின்,இராம குமாரர்கள் லவ-குசர்கள் பிறந்த பின் நிகழ்வது..
வால்மீகத்தில் இந்த நிகழ்வுகள் இருக்கின்றனவா எனத் தெரியவில்லை..

SurveySan said...

Arivan,

Thanks for the detailed explanation.

Anonymous said...

福~
「朵
語‧,最一件事,就。好,你西.......................................................................................................................................................................................................................................................................................................