1) வணக்கம்! முன்னமே சொன்னதுதான், நல்ல விஷயம் என்று பட்டதால், மறுக்கா சொல்றேன் (ரிப்பீட்டறேன்).
அதாகப்பட்டது, உயர்ந்து கொண்டே இருக்கும் சென்னனயைப் பற்றி ஆதங்கப்பட்டு எழுதிய பதிவு, அதைத் தொடர்ந்து அனுப்பிய பெட்டிஷன், அதுக்கப்பரம் உங்களுக்கு விடுத்த வேண்டுகோள் எல்லாத்துக்கும் பதில் கிடைத்துள்ளது . முழு விவரத்தையும் படிக்காதவர்கள் படித்துத் தெரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கரேன். படிப்பதோடு மட்டுமல்லாமல் சென்னையில் உங்கள் இருப்பிடத்தைச் சுற்றி புதுச் சாலை போடும்போது, இந்த சுரண்டலை கடைபிடிக்காவிட்டால், இந்தப் பதிவில் உள்ள Superintending Engineerன் முகவரிக்கு உடனே தெரியப் படுத்த வேண்டியது உங்கள் கடமையும், என் வேண்டுகோளும்! நன்னி!
2) பதிவுகள் எழுதறோம் சரி. அந்தப் பதிவை படிச்சு பின்னூட்டம் இடுபவர்களைப் பலர் கண்டுக்கரதில்லை. பின்னூட்டங்களைக் கவனிக்கணும். ப்ளாகுகளின் பெரிய சக்தியே அதுதானே? அடுத்தவரின் கருத்தை அறிதலும், அவர்களோடு கருத்து மோதல்களில் ஈடுபடவும் ப்ளாகரின் அழகான வசதியை சில பேர் நல்லாவே பயன்படுத்தராங்க. ஆனா, எல்லாரும் அப்படிச் செய்வதில்லை.
ரூம் போட்டு யோசிச்சு, இதுக்கு ஒரு தீர்வு காண என்னா பண்ணனும்னு ஆஃபீஸ் நேரத்துல யோசிச்சேன்.
என்ன பண்ணலாம்னா, ஒரு பதிவு எழுதி அடுத்த பதிவு எழுதப் போகும் முன், முந்தைய பதிவில் உள்ள 'சிறந்த பின்னூட்டத்தை' மக்களுக்கு தெரியப்படுத்தி உங்கள் முந்தைய பதிவை நிறைவு செய்யவேண்டும்.
படிக்கரவங்களுக்கும் யோசிச்சு பின்னூட்டம் போட இது ஒரு முன்னோடியா இருக்கும்.
தொடர்ந்து சிறந்த பின்னூட்டக்காரரா வரும் அன்பருக்கு, வருஷக் கடைசியில் பரிசு தருவதெல்லாம் உங்க விருப்பம். மட்டமான பின்னூட்டத்தை எடுத்துச் சொல்றதும் உங்க விருப்பம் ;)
2அ) என் IPKF, LTTE பதிவில், சுந்தரவடிவேல் சிறந்த பின்னூட்டக்காரராகிறார்.
2ஆ) புதிய சூப்பர் ஸ்டார் பதிவில், அதிஷா சிறந்த பின்னூட்டக்காரராகிறார்.
3) Michael Phelps, Biejingல் பட்டையைக் கிளப்புவது உங்களனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனா, அவரு வரிசையா தங்கம் வாங்குவதர்க்கு முக்கிய காரணம், அவர் அணிந்திருக்கும் NASAவின் Speedo உடை என்று சில தரப்பு கலவரப்படுகிறது.
உடை கண்டிப்பா வேகமாக நீந்த உதவும் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஆனால், அவர் தங்கப் பதக்கம் வாங்குவதற்கு அது உதவுகிறது என்று சொல்லமுடியாது.
ஏன்னா, எல்லாரும்தான் அதே ட்ரெஸ் போட்டிருக்கானுவ.
இவரு, வரிசையா world record ஒவ்வொரு போட்டியிலும் உடைப்பதற்கு உடை காரணமாயிருக்கலாம்.
எது எப்படியிருந்தாலும், he has an amazing talent!
Morgan Freeman குரலில் VISAவின் Phelps விளம்பரம் அருமை.
4) ஆயிரமிருந்தாலும், படம் ஊத்திக்கிச்சுன்னு தெரிஞ்சதும், பத்து கோடிய திருப்பிக் குடுத்தாராமே, விநியோகஸ்தர்களுக்கு? ரஜினி வாழ்க! ;)
5) அடுத்த பதிவர் போட்டி? ஒரு ஜூப்பர் ஐடியா இருக்கு. PiT போட்டி, சிறில் போட்டி, ஒலிம்பிக் போட்டி எல்லாம் முடியட்டும், அப்பாலிக்கா சொல்றேன். அடிச்சு ஆடுவோம்! வெறும் படம், பாட்டு, கதைன்னெல்லாம் இல்லாம, இம்முறை ஒரு படையலே வைக்க போட்டி நடத்தலாம் என்று ஐடியா! எல்லாம் அவன் செயல்!
ஹாப்பி சுதந்திரதின வாழ்த்துக்கள்!
சுதந்திரத்தின் அருமை சுதந்திரம் இல்லாதவர்களுக்குத் தான் தெரியும்! ஸோ, அனுபவிங்க!
லாலுவின் இந்தக் காமெடியை ரசித்துவிட்டு சுதந்திரதினத்தைக் கொண்டாடுங்கள்! :)
இதயும் பாருங்க, கீதா சாம்பசிவத்தின் எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்.