'நச்'னு ஒரு கதை போட்டியில், மிக ஆர்வமுடன், பல பதிவர்கள் பங்கு பெற்றுள்ளார்கள்.
'நச்' 'நச்'னு ஏகப்பட்ட கதைகள் வந்தவண்ணம் உள்ளன.
இதுவரை 49 பதிவர்கள் களத்தில் உள்ளனர்.
4 பதிவர்கள் மட்டும், இன்னும் கதையை அனுப்பவில்லை.
பதிவர்களில் சிலர், ஒன்றுக்கு மேற்பட்ட கதையை எழுதி திக்கு முக்காட வைத்துள்ளனர்.
அவர்களின், கற்பனா வளம் இன்னும் தீர்ந்ததாய் தெரியவில்லை. நச் நச் நச் என்று நாளொரு திருப்பமாக, புதுப் புது கதைகள் வந்து கொண்டே இருக்கின்றன. கலக்கல்ஸ்!
("எங்கய்யா வேல செய்யறீங்க நீங்கெல்லாம்? உங்களுக்கு சம்பளம் கொடுக்கர புண்ணியவான் யாரு? உங்க கூட குடும்பம் நடத்தர பொருமைசாலி யாரு? உங்களுக்கு சமச்சு கொட்டிக்கிட்டு லூஸ்ல விடர ரூம்-மேட்ஸ் யாரு?"ன்னு யாராவது கேட்டு, உங்க முயற்சிய திசை திருப்ப பாப்பாங்க. அவங்களையெல்லாம் துச்சமா மதிச்சு, நீங்க கதைகள தொடர்ந்து அவுத்து வுடுங்க :) ஹி ஹி ஹி. Seriously, உங்க ஆர்வமும் திறமையும் வியப்பைத் தருது. உங்களின் ஆதரவுக்கும், இந்த ஆட்டையை மிக சுவாரஸ்யமாக மாற்றிய 'நச் நச்'சர்களுக்கும் நன்றீஸ் பல!)
போட்டிக்கான கதைகள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி டிசம்பர் 23 2007 11:59 PM PST.
ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளை எழுதிய கதாசிரியர்கள், தங்களின் நச்களில் எந்த 'நச்'சை ஆட்டையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்ல மறவாதீர்கள்.
போட்டிக்கான 'நச்'சை சொல்ல வேண்டிய கடைசி தேதியும் டிசம்பர் 23.
இதுவரை பெயர் கொடுக்காதவர்களும், புதிய கதையோட பெயர் கொடுக்கலாம்.
இதுவரை போட்டியில் உள்ள நண்பர்களின் கதைகளைப் படிக்க, இங்கே செல்லவும்.
திருத்தங்கள், புதிய கதைகள், எல்லாத்தையும் அங்க பின்னூட்டிச் சொல்லுங்க. நன்றி!
பரிசுப் பணம்: $25 வெற்றி பெரும் 'நச்'கதாசிரியருக்கும்; $75 உதவும் கரங்களுக்கும்;
நீங்கள் நல்ல விமர்சகரா? அப்படீன்னா, தயவு செய்து, இங்கே சென்று, ஆட்டையில் உள்ள கதைகளைப் படித்து 'நச்'னு ஒரு விமர்சனம் எழுதுங்களேன்?
உங்க பதிவுலயே, விமர்சனம் போடலாம். கட்டம் கட்டி, சும்மா 'நச்'னு விமர்சனம் எழுதுங்க.
வாங்க, எல்லாருமா சேந்து, 'நச்'னு 2007ஐ முடிப்போம்!
நன்றி!
பி.கு: ஒரு நிமிஷம் மக்கள்ஸ், இதோ இந்த பதிவை படிக்காம போகாதீங்க. படிச்சுட்டு பின்னூட்டம் போடாம போகவே போகாதீங்க. நன்றி!
மீண்டும் நன்றி!