recent posts...

Tuesday, December 18, 2007

நச்: விமர்சகர்கள் தேவை, உடனடியாக!

வணக்கம் நண்பர்களே!

'நச்'னு ஒரு கதை போட்டியில், மிக ஆர்வமுடன், பல பதிவர்கள் பங்கு பெற்றுள்ளார்கள்.
'நச்' 'நச்'னு ஏகப்பட்ட கதைகள் வந்தவண்ணம் உள்ளன.

இதுவரை 49 பதிவர்கள் களத்தில் உள்ளனர்.
4 பதிவர்கள் மட்டும், இன்னும் கதையை அனுப்பவில்லை.

பதிவர்களில் சிலர், ஒன்றுக்கு மேற்பட்ட கதையை எழுதி திக்கு முக்காட வைத்துள்ளனர்.
அவர்களின், கற்பனா வளம் இன்னும் தீர்ந்ததாய் தெரியவில்லை. நச் நச் நச் என்று நாளொரு திருப்பமாக, புதுப் புது கதைகள் வந்து கொண்டே இருக்கின்றன. கலக்கல்ஸ்!

("எங்கய்யா வேல செய்யறீங்க நீங்கெல்லாம்? உங்களுக்கு சம்பளம் கொடுக்கர புண்ணியவான் யாரு? உங்க கூட குடும்பம் நடத்தர பொருமைசாலி யாரு? உங்களுக்கு சமச்சு கொட்டிக்கிட்டு லூஸ்ல விடர ரூம்-மேட்ஸ் யாரு?"ன்னு யாராவது கேட்டு, உங்க முயற்சிய திசை திருப்ப பாப்பாங்க. அவங்களையெல்லாம் துச்சமா மதிச்சு, நீங்க கதைகள தொடர்ந்து அவுத்து வுடுங்க :) ஹி ஹி ஹி.
Seriously, உங்க ஆர்வமும் திறமையும் வியப்பைத் தருது. உங்களின் ஆதரவுக்கும், இந்த ஆட்டையை மிக சுவாரஸ்யமாக மாற்றிய 'நச் நச்'சர்களுக்கும் நன்றீஸ் பல!)

போட்டிக்கான கதைகள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி டிசம்பர் 23 2007 11:59 PM PST.

ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளை எழுதிய கதாசிரியர்கள், தங்களின் நச்களில் எந்த 'நச்'சை ஆட்டையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்ல மறவாதீர்கள்.
போட்டிக்கான 'நச்'சை சொல்ல வேண்டிய கடைசி தேதியும் டிசம்பர் 23.

இதுவரை பெயர் கொடுக்காதவர்களும், புதிய கதையோட பெயர் கொடுக்கலாம்.

இதுவரை போட்டியில் உள்ள நண்பர்களின் கதைகளைப் படிக்க, இங்கே செல்லவும்.
திருத்தங்கள், புதிய கதைகள், எல்லாத்தையும் அங்க பின்னூட்டிச் சொல்லுங்க. நன்றி!

பரிசுப் பணம்: $25 வெற்றி பெரும் 'நச்'கதாசிரியருக்கும்; $75 உதவும் கரங்களுக்கும்;

நீங்கள் நல்ல விமர்சகரா? அப்படீன்னா, தயவு செய்து, இங்கே சென்று, ஆட்டையில் உள்ள கதைகளைப் படித்து 'நச்'னு ஒரு விமர்சனம் எழுதுங்களேன்?
உங்க பதிவுலயே, விமர்சனம் போடலாம். கட்டம் கட்டி, சும்மா 'நச்'னு விமர்சனம் எழுதுங்க.

வாங்க, எல்லாருமா சேந்து, 'நச்'னு 2007ஐ முடிப்போம்!

நன்றி!

பி.கு: ஒரு நிமிஷம் மக்கள்ஸ், இதோ இந்த பதிவை படிக்காம போகாதீங்க. படிச்சுட்டு பின்னூட்டம் போடாம போகவே போகாதீங்க. நன்றி!

மீண்டும் நன்றி!

13 comments:

SurveySan said...

Sathiya, உங்க கதையும் சேத்தாச்சு.
47 உங்களது :)

SurveySan said...

விமர்சனம் எழுத யாரும் வரலியே?
நானே எழுத வேண்டியதுதானா? :)

Sathiya said...

மிக்க நன்றி! 47 கதைகளுக்கும் விமர்சனம் எழுதனுமா? பேசாம வோடிங் மாதிரி ஏதாச்சும் வச்சு அதுல டாப் பத்து கதைகளுக்கு மட்டும் விமர்சனம் எழுதுனா என்ன?

SurveySan said...

Sathiya, ellaa kadhaikkum vimarsanam irundhaa nallaa irukkum.

ரசிகன் said...

ஏனுங்க சர்வேஸன்.....
கதையை எழுதனா வெறும் போட்டியாளர்கள்,கதையே எழுதலேன்னாக்கா விமர்சனம் செய்யுற நடுவர்களா? என்னங்க இது நியாயம்?.ஹிஹி...

பேசாம கதைய அனுப்பனவிங்க கிட்டயே மத்தவிங்க கதைய விமர்சனம் செய்ய சொல்லலாமில்ல?..
(ஹிஹி.. இதுக்கு பேருதான் சிண்டு முடியருதுங்கரது..:))))

ஏற்கனவே கதை எழுதனவிங்க ,இன்னேரம் ஒரு கியுரியாசிட்டில மத்தவிங்க கதையெல்லாம் படிக்கியிருப்பாங்க..அதுல இருக்கிற தப்பெல்லாம் கண்டுபுடிச்சி,ஆஹா.. இத விட என்னோட கதையே நல்லாயிருக்குன்னு திருப்தி பட்டிருப்பாங்க.. இல்ல.. ஹிம்.. என்னோட கதைய விட இது நல்லாயிருக்கேன்னு கூட உண்மையா மனசில நினைச்சிருக்கலாமில்ல..?

பின்னூட்டத்துல யார் வேணா என்ன வேனா சொல்லலாம். ஆனா போட்டின்னுட்டு வரும்போது...

கதையே எழுதாதவிங்க, சொம்மா விமர்சனங்கர பேருல,கஷ்டப்பட்டு கதை எழுதனவிங்களை ,சிம்பிளா கொறை சொல்ல அனுமதிக்கறத விட,போட்டில இருக்கிறவிங்களே பெயரை வெளியிடாம,மற்ற போட்டியாளர்கள் கதைகளை விமர்சித்தா போட்டி மனப்பான்மையில உண்மையான நிறை குறைகள் நமக்கு தெரியுமில்ல?..

எல்லா போட்டியாளர்களும்.,மத்த போட்டியாளர்கள் கதை குறித்த நிறைகள் என்ன? குறைகள் என்னன்னு எழுதி அனுப்ப சொல்லிப்புட்டு ,பேர் வெளியிடாம அத ஒரு தொகுப்பு பதிவா வெளியிட்டா? போட்டியாளர்களுக்குள்ள அதிக பட்ச ஆதரவைப்பெற்ற கதைக்கு பரிசு குடுக்கலாமில்ல?..

மனசுல தோனறத சொல்லிப்புட்டேன்.. அதுக்காக யாரும் ஆட்டோலாம் அனுப்பிடாதிங்கப்பு...:

SurveySan said...

ரசிகன்,
நல்ல ஐடியாதான்.

யார் வேணும்னாலும், விமர்சனம் எழுதலாம்.

எல்லாரும், அனானிமஸா கூட, நிறை குறைகளை எழுதாலாம். அத இங்கயே பின்னூட்டமா எழுதலாம் ;)

SurveySan said...

ரசிகன்,
நல்ல ஐடியாதான்.

யார் வேணும்னாலும், விமர்சனம் எழுதலாம்.

எல்லாரும், அனானிமஸா கூட, நிறை குறைகளை எழுதாலாம். அத இங்கயே பின்னூட்டமா எழுதலாம் ;)

சிறில் அலெக்ஸ் said...

சர்வே..
இதோ நச் கவிதை போட்டி அறிவிச்சாச்சுல்ல.

இங்க போய் பாருங்க

✪சிந்தாநதி said...

இதையும் பட்டியல்ல சேர்த்துக்குங்க ;)

❒ நச்'a'ன்று ஒரு கதை

SurveySan said...

சிந்தாநதி, கதைக்கு நன்றி!

சேத்தாச்சு. :)

49 நீங்கதான்.

50 யாருன்னு பாப்போம் :)

Anonymous said...

சன் டீவியில் கால்மேல் கால் போட்டு படங்களை கண்ணாடி டம்ப்லருக்குள் கல் போட்டு குலுக்கின குரலில் விமர்சிக்கிறாரே அவரையே குருவாக நினைத்து வணங்கி விமர்சன வேலையை செய்கிறேன்...

வினையூக்கி: ஜெனியும் நானும் லேப்டாப்பில் பார்த்த பேய்ப்படம்
கதை ஒரு evil dead மாதிரி ஒரு கல்ட் கதை முயற்சித்து இருக்கிறார் என்று நினைக்கிறேன். கதை சுவாரசியமாக ஆரம்பித்து சட்டென்று முடிந்து விட்டது.... சுவாரஸ்யம் கெடாமல் இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம்... பரவாயில்லை... பேய்ப்படம் - பப்படம்.


TBCD: பழக்க வழக்கம் !
சிறுகதையில் ஒரு ஹைக்கூ போல :) நாலு வரி ஜோக்குக்கும் சிறுகதைக்கும் நடுவில் இருக்கிறது... நன்று.. பழக்க வழக்கம் - துணுக்கு தோரணம்.

நிலா ரசிகன் - ஒரு நடிகையின் கதை
கதை ஆர்வத்தை தூண்டி சப்பென்று முடிந்து விட்டது... நடிகையின் கதை என்றது கொஞ்சம் 'கவர்ச்சி' இருக்கும் என்று பார்த்தால் அவர் - இவர் என்று யாரோ பெரிசை சொல்வது போல் கதைஎங்கும் வருகிறது... பரவாயில்லை... - ஒரு நடிகையின் கதை - அடுத்த கதைக்கு விதை

மோகந்தாஸ் - கடவுள் என்னிடம் கரைச்சல் செய்த பொழுதொன்றில்
நிஜமாகவே நடந்தது போல் எழுதி இருக்கிறார். கதையின் முடிவும் யூகிக்க முடியாமல் நச் என்று இருந்தது. அருமை - க எ க செ பொ - ந பொ! (நல்ல பொழுதுபோக்கு)

கார்த்திக் பிரபு - அப்போ நீ தூங்கியிருப்ப !!!
கொஞ்சம் பெரிய கதை - இதை நச் சிறுகதை என்று சொல்லலாமா தெரியவில்லை... இருந்தாலும் பிரயாண அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் நன்றாக அனுபவித்து எழுதி இருக்கிறார்... பரவாயில்லை - அப்போ நீ தூங்கியிருப்ப - அசதி

கோவி கண்ணன் - நச்சின்னு ஒரு கதை - அப்பா(வி) !
நச் என்று கதை வேண்டும் என்று சொன்னதற்காக எழுதப்பட்ட parody கதை என்று நினைக்கிறேன். பரவாயில்லை - அப்பா(வி) - அப்பப்பா(வி) :)

பாசமலர் - ஆசைக்கு ஏது வெட்கம்?
வித்தியாசமான கதை - முன்பெல்லாம் ரேடியோவில் விவிதபாரதியில் நாடகம் கேட்போம் - பதினைந்து நிமிட நாடகம் - ஏனோ அதுதான் நினைவுக்கு வந்தது.. பரவாயில்லை - ஆசைக்கு எது வெட்கம் - யாருக்கும் வெட்கமில்லை

செல்வன் - பூனைக்கு மணி கட்டியவள்
புதிய சிந்தனை - ஓரின சேர்க்கையை வித்தியாசமான கோணத்தில் அணுகியிருக்கிறார் - கதை கொஞ்சம் யோசிக்க வைக்கிறது - அருமை - பூனைக்கு மணி கட்டியவள் - ஆராய்ச்சி மணி

ஜெகதீசன் - தப்பா நினைக்க மாட்டயே?
கதை வழக்கமான கதை - வழக்கமான பாணி - ஆனால் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. பரவாயில்லை - தப்பாக நினைக்க மாட்டாயே - தயக்கம்

ramachandranusha(உஷா) - நானே நானா?
பெரிதாக எதிர்பார்த்து கனவாக முடிந்தது கதை - ஆனாலும் நச் கொஞ்சம் குறைவு தான் சொல்லிய விதம் நன்றாக இருந்தது - பரவாயில்லை - நானே நானா - ஏனோ தானோ

முதல் பத்து கதை முடிந்தது... அவ்வளவுதான் தூக்கம் வருது... :O
அய்யா,அம்மா... விடியற்காலையில் வீட்டுக்கு ஆட்டோ அனுபபிடாதீங்கய்யா... சர்வேசன் துணை

நந்து f/o நிலா said...

சர்வேசன் ஒரூ சின்ன கருத்து. கதைகளுக்கான விமர்சனத்தை யாராவது ஒரு எழுத்தாளரிடம் விடலாமே?

நம்மில் பத்திரிக்கைகளில் எழுதிய அனுபவம் வாய்ந்த எழுத்தாளர் யாரும் இல்லை என எண்ணுகிறேன்.(அப்படி இருந்தால் மன்னிக்க)ஓரளவுக்காவது அனுபவம் வாய்ந்த ஒரு எழுத்தாளர் நம் கதைகளை விமர்சிக்கும் போது கதை எழுதியவர்களும் அப்டேட் ஆகமுடியும் இல்லையா?

அப்படி யாரை அணுகுவது என்று கேட்டுவிடாதீர்கள். நான் பெரிய ஆளுங்க பேரையெல்லாம் சொல்லிவிடுவேன். இதெல்லாம் போட்டி வைத்த உங்கள் பொறுப்புத்தான் :P

தெரிந்த எழுத்தாளர் யாரும் இல்லாமலா போய்விடுவார்கள்?

(நான் சொல்றது ஒன்னும் ஓவரா இல்லையே?)

SurveySan said...

நந்து, நல்ல ஐடியாதான்.

எழுத்தாளர்கள் யாரையாவது விமர்சிச்சா நல்லாதான் இருக்கும்.

எழுத்தாளர்கள் விமர்சனத்தை விட வாசகர்கள் விமர்சனம் இன்னும் முக்கியம். அதனால்தான் விமர்சனம் எழுதும் வேலையை பொதுவில் வைத்தேன்.

வாசகர்கள திருப்திப்படுத்தரதுதானே தலையாய பணி ;)

Srikanth விமர்சனங்கள் படிச்சீங்களா?