recent posts...

Monday, December 03, 2007

'நச்சுனு ஒரு கதை' - போட்டியும், இதுவரை ஆட்டையில் உள்ள 14 பதிவர்களும்

மொதல்ல இத படிச்சுட்டு வாங்க.

மேலே உள்ள பதிவில் சொன்ன மாதிரி, 'நச்சுனு ஒரு கதை'ப் போட்டி ஒன்றை நடத்த சர்வே கமிட்டியில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

விதிமுறைகள் பெருசா ஒண்ணும் இல்ல, ஆனா கொஞ்சம் கொஞ்சம் இருக்கு:
1) கதை, எதைப் பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். 'சிறு'கதையா இருக்கணும். முக்கியமா, கதை முடிகையில் ஒரு 'நச்' திடீர் திருப்பம் இருக்கணும். (O-Henry turn என்ற திடீர்-திருப்பம் கதையில் முக்கியம். O-Henry turn பற்றிய விளக்கம் இந்த பதிவில்)

2) கதை, இதற்கு முன் எந்த ப்ளாகிலும், பத்திரிகையிலும், சினிமாவிலும், சீரியலிலும்,..., வந்திருக்கக் கூடாது.

3) கதையை உங்கள் ப்ளாகில் எழுதி இங்கே பின்னூட்டணும்.

4) அனுப்ப வேண்டிய கடைசி தேதி டிசம்பர் 23 2007 11:59 pm.

5) ஜனவரி 1 2008 அன்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

6) நடுவர்கள்: வாசகர்கள் அனைவரும். மக்கள் வாக்கின் அடிப்படையில் சிறந்த கதை தேர்ந்தெடுக்கப்படும்.

7) பரிசு: வெற்றி பெறும் கதைக்கு $1 to $25, based on number of participants. If 10 participants, winner will get $10, upto a max of $25 (vow! what a concept :) ). அதைத் தவிர, வெற்றியாளர் பெயரில் $75 (or whatever remains out of $100) "உதவும் கரங்களுக்கு" நன்கொடை வழங்கப்படும்.

7 1/2) ஒருவர் ஒரு கதையை மட்டுமே அனுப்பலாம். நிறைய கற்பனா வளம் உள்ளவர்கள் ரெண்டு மூணு கதைய உங்க பதிவுல எழுதி, எது நல்ல பின்னூட்டங்களை பெறுதோ, அதை இங்கே அனுப்பலாம். :)

** புது வருட தொடக்கத்தில் ஏதாவது ஒரு தொண்டு நிறுவனத்துக்கு, உங்களால் இயன்ற டொனேஷனை அனுப்ப மறவாதீர். வாழ்க வளமுடன்! **

(இதற்கு முந்தைய போட்டியில், பரிசுப் பணத்தை வெற்றியாளர்களுக்கு, பட்டுவாடா செய்த, உள்ளூர் நண்பருக்கு நன்றி. :) ).

போட்டியில் கலந்து கொள்வேன் என்று இதுவரை 14 பேர் சொல்லியிருக்காங்க. சிங்கங்களா, மறக்காம வந்து பேர் சொல்லுங்க. மத்தவங்களும் வாங்க. ஜமாய்ச்சுடலாம். நல்ல கதைகள் படிச்சு, ரொம்ப நாளான மாதிரி இருக்கு.

ஆட்டையில் தெகிரியமாக களம் இறங்கி உள்ளவர்கள், இதுவரை:
1) வினையூக்கி - கதை இங்கே
2) இராம்/Raam - கதை இங்கே
3) 'சிங்கம்' முரளி கண்ணன் - கதை எங்கே??????????
4) TBCD - கதை இங்கே
5) நிலா ரசிகன் - கதை இங்கே
6) மோகந்தாஸ் - கதை இங்கே
7) கார்த்திக் பிரபு - கதை இங்கே
8) கோவி கண்ணன் - கதை இங்கே
9) வீ.எம் - கதை இங்கே
10) பாசமலர் - கதை இங்கே
11) செல்வன் - கதை இங்கே
12) ஜெகதீசன் - கதை இங்கே
13) ramachandranusha(உஷா) - கதை இங்கே
14) இ.கா.வள்ளி - கதை இங்கே
15) கிருஷ்ணா - கதை இங்கே
16) பிரதாப் குமார் சி - கதை இங்கே
17) பெனாத்தல் சுரேஷ் - கதை இங்கே
18) நக்கீரன் - கதை இங்கே
19) ஹரன்பிரசன்னா - கதை இங்கே
20) VSK - கதை இங்கே
21) Rathnesh - கதை இங்கே
22) குட்டீஸ் கார்னர் - கதை இங்கே
23) நாடோடி இலக்கியன் - கதை இங்கே
24) Rama - கதை இங்கே
25) மங்களூர் சிவா - கதை இங்கே
26) கிருத்திகா - கதை இங்கே
27) இலவசக்கொத்தனார் - கதை இங்கே
28) குசும்பன் - கதை இங்கே
29) அரை பிளேடு - கதை இங்கே
30) Divya - கதை இங்கே
31) gils - கதை இங்கே
32) Srikanth - கதை இங்கே
33) சிறில் அலெக்ஸ் - கதை இங்கே
34) வெட்டிப்பயல் - கதை இங்கே
35) Vicky - கதை இங்கே
36) இம்சை அரசி - கதை இங்கே
37) ப்ரசன்னா (குறைகுடம்) - கதை இங்கே
38) கண்மணி - கதை இங்கே
39) வேதா - கதை இங்கே
40) சென்ஷி - கதை இங்கே
41) விட்டுது சிகப்பு - கதை இங்கே
42) ஓகை - கதை இங்கே
43) சதங்கா (Sathanga) - கதை இங்கே
44) செல்வம் - கதை இங்கே
45) அருட்பெருங்கோ - கதை இங்கே
46) drtv - கதை இங்கே
47) Sathiya - கதை இங்கே
48) நந்து f/o நிலா - கதை இங்கே
49) சிந்தாநதி - கதை இங்கே
50) .:: மை ஃபிரண்ட் ::. - கதை இங்கே
51) சரவணா - கதை இங்கே
52) indirasenthilraj - கதை இங்கே
53) தம்பி - கதை இங்கே
54) வவ்வால் - கதை இங்கே
55) சுரேகா - கதை இங்கே
56) My days(Gops) - கதை இங்கே
57) ambi - கதை இங்கே
58) வாக்காளன் - கதை இங்கே
59) Radha Sriram - கதை இங்கே
..
..
?) ???

கதை எழுத Inspirationக்கு செல்வனின், கதை படியுங்க. செல்வன், நீங்களும் ஆட்டையில் குதிக்க வேண்டும், with one more story with a twist :)
G.Ragavanன் கதை இங்கே (போட்டிக்கல்ல ஒரு inspirationக்காக :) )

உங்க கலைக் கண்ணைத் திறங்க. கற்பனா குதிரைய தட்டி விடுங்க. திடீர்-திருப்பத்தோட சும்மா 'நச்சுனு ஒரு கதை' எழுதி பதிவிடுங்க.

கலக்குவோம்!


பி.கு: தலைப்பில் 'நச்சுனு ஒரு கதை -' சேர்க்குமாறு சொல்லியிருந்தேன். அதை தவிர்த்தல் நலம். தலைப்பு இப்படி இருந்தா, ஏதோ ஒரு ட்விஸ்ட் இருக்குன்னு மக்கள்ஸுக்கு தெரிஞ்சு, சுவாரஸ்யம் குறையும் வாய்ப்பு இருக்கு.

137 comments:

SurveySan said...
This comment has been removed by the author.
இராம்/Raam said...

ஏற்கெனவே எழுதுனத கொடுக்கலாமா? போன வாரம தான் கதை ஒன்னு இதேமாதிரி எழுதினேன்.... :)

தலைப்பு:- காமக் கடும்புனல்

SurveySan said...

Raam,

//2) கதை, இதற்கு முன் எந்த ப்ளாகிலும், பத்திரிகையிலும், சினிமாவிலும், சீரியலிலும்,..., வந்திருக்கக் கூடாது.//

Unfortunately, this is listed as a rule . so, please please Pen another one with the same 'twist' effect. Your story was good :)

TBCD said...

அடடே...இன்னைக்குத் தான்..நாமும் அந்த ஏரியாவை விட்டு வச்சிட்டோமேயின்னு கதை ஆரம்பிச்சேன்..பார்த்தா..உங்க பதிவு..சூடா ஒரு கு.கதை எழுதி ஆட்டையிலே கலந்துக்கிட்டாச்சு...

நச்சுனு ஒரு கதை - பழக்க வழக்கம் !

நிலாரசிகன் said...

//2) கதை, இதற்கு முன் எந்த ப்ளாகிலும், பத்திரிகையிலும், சினிமாவிலும், சீரியலிலும்,..., வந்திருக்கக் கூடாது.//

என்னுடைய வலைப்பூவில் வெளியிடலாமா?

கதையை தங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்ப வேண்டுமா என்பதை தெரிவித்தால் நன்று.

Mohandoss said...

http://imohandoss.blogspot.com/2007/12/blog-post.html

நானும் இருக்கேன் ஆட்டையில்

கார்த்திக் பிரபு said...

naamum varane thalivaa

கார்த்திக் பிரபு said...

my story link http://bharathi-kannamma.blogspot.com/2007/12/blog-post.html

கோவி.கண்ணன் said...

என்னுடைய கதையையும் சேர்த்துக் கொள்ளுங்கள் !
http://govikannan.blogspot.com/2007/12/blog-post_6055.html

வீ. எம் said...

என் கதையையும் போட்டி முடிவு தேதிக்குள் சேர்த்துவிடுகிறேன்...

வீ எம் (முன்னாள் வலைப்பதிவர்) :) :)

SurveySan said...

பங்கேற்கும் அனைவருக்கும் நன்றி கலந்த வந்தனங்கள்!

நிலா ரசிகரே, கதையை உங்கள் பதிவில் பதிந்துவீட்டு, உரலை இங்கு தெரிவிக்கவும்.

பழைய கதை கொடுக்கப்ப்டாது, இன்றிலிருந்து போட்டி முடியும் 25ஆம் தேதிவரையில் வந்த பதிவாக இருக்கோணும் ;)

Anonymous said...

BLOG ILLADHAVANGA ENNA PANRADHU EMAIL ANUPPALAMA?

பாச மலர் / Paasa Malar said...

இப்போதுதான் சிறுகதை முயற்சி தொடங்கினேன்..என்ராலும் களத்தில் குதிக்க ஆர்வம் உள்ளது..நானும் கலந்து கொள்கிறேன்..

Unknown said...

சர்வேசன்

சிலநாட்களாக பதிவுலகபக்கம் வரவில்லை.வேலை அதிகமானதால் சில வாரங்களாக எழுதமுடியவில்லை.நேரம் கிடைத்தால் கண்டிப்பாக போட்டிக்கு கதை எழுதுகிறேன்.உங்கள் அழைப்புக்கும் அன்புக்கும் மிக்க நன்றி

பாச மலர் / Paasa Malar said...
This comment has been removed by the author.
பாச மலர் / Paasa Malar said...

என்னுடைய சிறுகதை....
'http://pettagam.blogspot.com/2007/12/blog-post.html'

பாச மலர் / Paasa Malar said...

என்னுடைய சிறுகதை....

http://pettagam.blogspot.com/2007/12/blog-post.html

Unknown said...

எனது சிறுகதை இதோ

http://holyox.blogspot.com/2007/12/354.html

ஜெகதீசன் said...

நானும் வந்துட்டேன்!!!
என் சிறுகதை:
நச்சுனு ஒரு கதை - தப்பா நினைக்க மாட்டயே?

துளசி கோபால் said...

இந்தப் பதிவை 'தேசி பண்டிட்'லே லிங்க் செஞ்சிருக்கேன்.

http://www.desipundit.com/category/tamil/

ஜெகதீசன் said...

ஒரு ஆளுக்கு ஒரு கதை தான் அல்லவுடா?

SurveySan said...

பங்கேற்கும் அனைவருக்கும் மீண்டும் ஒரு நன்னி!

துளசி கோபால், ஸ்பெஷல் தேங்க்ஸ் :) நீங்க கதை எழுதலியா?

ஜெகதீசன், பல கதை உங்க பதிவுல எழுதி, மக்கள பின்னூட்டத்துல எது நல்லதுன்னு கேட்டுட்டு, பெஸ்ட் கதைய எனக்கு அனுப்புங்க ;)

ஒரு கதைதான் இங்க allowed :)

ஜெகதீசன் said...

//
SurveySan said...

பங்கேற்கும் அனைவருக்கும் மீண்டும் ஒரு நன்னி!

துளசி கோபால், ஸ்பெஷல் தேங்க்ஸ் :) நீங்க கதை எழுதலியா?

ஜெகதீசன், பல கதை உங்க பதிவுல எழுதி, மக்கள பின்னூட்டத்துல எது நல்லதுன்னு கேட்டுட்டு, பெஸ்ட் கதைய எனக்கு அனுப்புங்க ;)

ஒரு கதைதான் இங்க allowed :)

//
ஹிஹிஹி..... இதுக்கு மேலயெல்லாம் என்னால கதை எழுத முடியாது... சும்மா ஒரு டவுட்டு கேட்டு வைப்பமேன்னு கேட்டேன்
:))

SurveySan said...

///பதிவின் தலைப்பை
நச்சுனு ஒரு கதை -
அல்லது
நஒக -
என்று தொடங்கவும் :)////

actually, தலைப்பில் "நச்சுனு ஒரு கதை' சேர்க்க வேண்டாம். ஏன்னா, அத படிச்ச ஒடன, கதைல ஏதோ ஒரு ட்விஸ்ட் வரப்போகுதுன்னு தெரிஞ்சுடுது. ஸ்வாரஸ்யமும் குறையுது.
பதிவின் முடிவில் போட்டி விஷயத்தைச் சொல்லவும்.

வாக்காளன் said...

ஒருவர் ஒரு கதை மட்டும் தான் எழுத வேண்டுமா??

நிலாரசிகன் said...

என் சிறுகதை இங்கே

http://nilaraseegansirukathaigal.blogspot.com/2007/12/blog-post.html

நிலாரசிகன் said...

//ஒரு கதைதான் இங்க allowed :)//

:((

SurveySan said...

வாக்காளரே, ஒருவருக்கு ஒரு கதை தான். ;)

TBCD said...

சர்வேசா....இன்று ஒரு கதை எழுதியிருக்கேன்...விதிமுறைகளிலே கதைகளின் எண்ணிக்கையயை குறிப்பிடவில்லை...
(நஒக) : மனைவிக்கிட்டே சொல்லலாமா...?

ramachandranusha(உஷா) said...

அண்ணாச்சி, இதோ போட்டாச்சு.

http://nunippul.blogspot.com/2007/12/blog-post.html

//actually,தலைப்பில் "நச்சுனு ஒரு கதை' சேர்க்க வேண்டாம். ஏன்னா, அத படிச்ச ஒடன, கதைல ஏதோ ஒரு ட்விஸ்ட் வரப்போகுதுன்னு தெரிஞ்சுடுது. ஸ்வாரஸ்யமும் குறையுது.
பதிவின் முடிவில் போட்டி விஷயத்தைச் சொல்லவும்.//
ஆமாம், இல்லாட்டி சுவாரசியம் போய்விடும். மொதல்ல தலைப்புல நச் இருக்கணுன்னு சொன்ன நெனப்பு. ஆனா சுவாரசியம் போய்விடும்னு கடைசியாய் பி.குவாய் போட்டுவிட்டேன்.

Anonymous said...

இதோ, என் கதையையும் சேர்த்துக்கொள்ளுங்கள்..

http://malargall.blogspot.com/2007/12/blog-post.html

அன்புடன்,
இ.கா.வள்ளி.

TBCD said...

இது கல்லாட்டை...ஒத்துக்க முடியாது....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

//*SurveySan said...


ஒரு கதைதான் இங்க allowed :)*//

கிருத்திகா ஸ்ரீதர் said...

ஆட்டைக்கு நானும் உண்டுங்க.. ஆனால் மாத ஆரம்பம் வேலை அதிகம் இருக்கும்.. ஒரு 4 அல்லது 5 நாள் கழித்து எழுத(????) ஆரம்பிக்கலாம் இல்லயா... சமயம் இருக்கு தானே???

வினையூக்கி said...

சார்,
இதோ நம்ம கதை
ஜெனியும் நானும் லேப்டாப்பில் பார்த்த பேய்ப்படம்

நாஞ்சில் பிரதாப் said...

என்னையும் சேர்த்துக்கோங்கண்ணே...
கதை ரெடி

SurveySan said...

Kadhai anuppum anbu ullangalukku nanni! :)

innum ellaathayum padikkala. padichuttu solren.

anuppaadhavanga anuppunga.

TBCD, only one story per blogger :) let me know which one you want to keep for the contest ;)

பினாத்தல் சுரேஷ் said...

எனக்கும் ஒரு துண்டு போட்டு சீட் ரிஸர்வ் பண்ணிருங்க சர்வேசன்..

இன்னும் ஓரிரு தினங்களில் வருகிறேன்.

நக்கீரன் said...

இப்படிஒரு போட்டிவைப்பீங்கனு தெரியாமப் போச்சு.தெரிஞ்சிருந்தா
இதை போன வாரம் பப்ளிஸ் பண்ணியிருக்க மாட்டேன்.
புதுசா முயற்சி பண்றேன். போட்டியில என்னையும் சேத்துக்கங்க.

ஹரன்பிரசன்னா said...

My Input:

http://nizhalkal.blogspot.com/2007/12/blog-post_06.html

Thanks, Haranprasanna

நக்கீரன் said...

சுட்டி தவறாகிவிட்டது. இதை பாருங்கள்.

SurveySan said...

நன்றி, இதுவரை கதை அனுப்பிய அனைத்து கதாசரியர்களுக்கும் ;)

அனுப்பாதவங்க அனுப்புங்க :)

Anonymous said...

very interesting topic and great stories

கோவி.கண்ணன் said...
This comment has been removed by the author.
கோவி.கண்ணன் said...

கோவி.கண்ணன் said...
அடுத்த கதையும் தயார்.

நண்பனி தங்கை...

SurveySan said...

கோவி கண்ணன்,

போட்டிக்கு ஒரு கதை தான் அலவுட். எந்த கதைய சேத்துக்கலாம்னு போட்டி கடைசி தேதிக்குள்ள சொல்லிடுங்க :)

இன்னும் கதைகள் வருமா?

TBCD said...

இன்னோரு கதை..

யார் அவள்...?

எந்த கதை என்பதை கடைசி தேதிக்கு முன் சொல்லிவிடுகிறேன்.. :)))

முடிஞ்சா இன்னும் ஒரிரு கதை எழுதுகிறேன்..

யாராவது இதையனைத்தும் மின்னுலாகத் தொகுக்கலாம்...

VSK said...

என்னுடைய கதை இதோ, சர்வேசன்!

http://aaththigam.blogspot.com/2007/12/blog-post.html

நன்றி.

SurveySan said...

நன்றி VSK! :)

TBCD said...

இன்னோரு கதை..

தனியே தன்னந்தனியே...நடப்பது..


எந்த கதை என்பதை கடைசி தேதிக்கு முன் சொல்லிவிடுகிறேன்.. :)))

குட்டீஸ் கார்னர் said...

குட்டீஸ்'ன் நஒக (உண்மை கதை)

http://kuttiescorner.blogspot.com/2007/12/blog-post_6947.html

ஸ்ரீ said...
This comment has been removed by the author.
நாடோடி இலக்கியன் said...

இதோ போட்டிக்கான எனது சிறுகதை இங்கே..
சங்கு சுட்டாலும் வெண்மை தரும்!!!

வினையூக்கி said...

சர்வேசன் சார்,
மேலும் ஒரு கதை "பேய் வீடு" இங்கே

போட்டி முடிவு நாளன்று ஹிட்ஸை வைத்து எதைத் தாங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லுகிறேன்.

அன்புடன்
"வினையூக்கி" செல்வா
www.vinaiooki.com

கிருத்திகா ஸ்ரீதர் said...

என் கதை..(நான் எழுதிய கதை) இங்கே...
http://authoor.blogspot.com/2007/12/blog-post.html

இலவசக்கொத்தனார் said...

ஐயா,

வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு கதை எழுதி இருக்கேன். (லீவ் லெட்டர் எழுதினது எல்லாம் கதையில் சேர்த்தி இல்லைதானே!)

இதையும் கொஞ்சம் போட்டியில் எடுத்துக்குங்கய்யா.

SurveySan said...

இதுவரை அனுப்பிய எல்லார் கதையும் சேத்தாச்சு.


நன்னி! கலக்கிபுட்டீங்க!

குசும்பன் said...

ஹி ஹி பெரிய திருப்பம் கதையில் இருக்கு

கதை தலைப்பு: என்னால் அவள் இரண்டு மாதம்
http://kusumbuonly.blogspot.com/2007/12/blog-post_11.html

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Rama said...

இரண்டு முடிவுகளுடன் நான் எழுதிய கதை....

ஹ்ட்ட்ப்://மஹெஷன்.ப்லொக்ச்பொட்.cஒம்/2007/12/ப்லொக்-பொச்ட்_12.ஹ்ட்ம்ல்

அல்லது

http://maheshan.blogspot.com/2007/12/blog-post_12.html

SurveySan said...

Thanks Rama!

VSK said...

சர்வேசன்,
இன்னொரு கதை எழுதியிருக்கேன்!
படிச்சுட்டு எது நல்லா இருக்குன்னு நினைக்கறீங்களோ, அதை போட்டிக்கு எடுத்துக்கங்களேன்!
:))

http://aaththigam.blogspot.com/2007/12/blog-post_11.html

VSK said...

சொல்ல மறந்திட்டேன்!

நன்றி!
:))

அரை பிளேடு said...

"நச்சு" பிடிச்ச கதையொன்னு ரெடி. :))

மே ஐ கம் இன் ?

http://araiblade.blogspot.com/2007/12/blog-post_12.html

SurveySan said...

divya, உங்க கதைய சேத்தாச்சு.

VSK, உங்க ரெண்டாவது கதைக்கு நன்னி! போட்டிக்கான கதைய தேர்ந்தெடுக்கும் வேலைய, உங்க ரசிகர் படை கிட்ட வுட்டுடுங்க ;) டிசம்பர் 23க்குள்ள சொன்னா போதும் :)

அரை பிளேடு, ப்ளீஸ் கம்-இன் :)

gils said...

engleesla ezhuthiruntha okva? ila tamizhla thaan type pananuma

gils said...

en panguku..oru mokkai :D

http://supershanki.blogspot.com/2007/12/paarvai-onray-pothumay.html

Anonymous said...

Survey-sun sir,
I too want to participate. I am writing my story currently. Kindly include my name.

BTW, how to vote the best stories?

SurveySan said...

gils, try to post in 'tamil' :)

srikanth, உங்க பேரும் சேத்தாச்சு சார். நல்ல கதையோட வாங்க.

Anonymous said...

Here is the story.

Thanks for giving this opportunity :)

வெட்டிப்பயல் said...

ஏனுங்க, அந்த 71/2 ரூல்சை கொஞ்சம் மாத்திக்க கூடாதா?

நிறைய கதை கிடைக்குமில்லை...

SurveySan said...

Srikanth, Thanks for signing up.

வெட்டி, 7 1/2, நீங்க கேக்கரத குடுக்குதே :)
எல்லா கதையும் எடுத்து போட்டி வச்சா, சர்வே-பொட்டி தாங்காது ;)
(கோவி, கதை மட்டுமே தனியா ஒரு சர்வே பொட்டில போடவேண்டியதாயிடும். மனுஷன், எழுதித்தள்ளறாரு ;)

//7 1/2) ஒருவர் ஒரு கதையை மட்டுமே அனுப்பலாம். நிறைய கற்பனா வளம் உள்ளவர்கள் ரெண்டு மூணு கதைய உங்க பதிவுல எழுதி, எது நல்ல பின்னூட்டங்களை பெறுதோ, அதை இங்கே அனுப்பலாம். :)//

சிறில் அலெக்ஸ் said...

ஏதோ என்னால முடிஞ்சது

http://cyrilalex.com/?p=362

சிறில் அலெக்ஸ் said...

ஏதோ என்னால முடிஞ்சது

http://cyrilalex.com/?p=362

Anonymous said...

நம்ம பங்குக்கு :)

http://vicky.in/dhandora/?p=435

RATHNESH said...

என்னுடைய இந்தக் கதையைப் போட்டியில் இணைத்துக் கொள்ள வேண்டுகிறேன்.
http://rathnesh.blogspot.com/2007/12/blog-post_1619.html
நன்றி.

RATHNESH

ப்ரசன்னா (குறைகுடம்) said...

என்னையும் சேத்துக்கங்க. கதை எப்படின்னும் சொல்லுங்க. இது என்னோட முதல் சிறுகதை முயற்சி.

http://kuraikudam.blogspot.com/2007/12/blog-post.html

ப்ரசன்னா (குறைகுடம்) said...
This comment has been removed by the author.
கண்மணி/kanmani said...

கதை தலைப்பு:என்றான்...என்றாள்...இனி இப்படி...இதுயெப்படி

link:

http://kouthami.blogspot.com/2007/12/blog-post_14.html

SurveySan said...

prasanna, kanmani,

nanri!

வேதா said...

நான் எழுதிய கதை இங்கே (நான் தமிழ்மணத்தில் இந்த வலைப்பக்கத்தை இணைக்கவில்லை. அது விதிமுறையில் இருக்கிறதா? நீங்க சொன்னவுடன என் வலைப்பக்கத்தில் அறிவிக்கிறேன்)

சென்ஷி said...

நானும் இருக்கேன்...

தலைப்பு - என்ன சொல்ல போகிறாய்!?

http://senshe-kathalan.blogspot.com/2007/12/blog-post_16.html

சென்ஷி

விட்டுது சிகப்பு said...

சர்வேசன் அண்ணா,
நம்ம நச்சையும் ஆட்டைலே சேத்துக்கோங்கண்ணா.

http://vittudhusigappu.blogspot.com/2007/12/blog-post.html

SurveySan said...

வேதா, சென்ஷி, வி.சிகப்பு,

நன்றீஸ்.

வேதா, உங்க கதையை தமிழ்மணத்தில் இன்ணைக்கலாம்.

SurveySan said...

எல்லாரையும் சேத்தாச்சு.

யாரையாவது, விட்டு போயிருந்தா சொல்லவும்.

நன்றி!

ஓகை said...
This comment has been removed by the author.
ஓகை said...

என் கதையையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

போடி வெளியே...

சிறில் அலெக்ஸ் said...

உங்க நச்சு தாங்க முடியாம :)
இன்னொரு நச் கதை..

http://cyrilalex.com/?p=364

சிறில் அலெக்ஸ் said...

என்னோட இரண்டாம் நச்சோட சுட்டி

வேதா said...

தமிழ்மணத்தில் கண்டிப்பா இணைந்தால் தான் போட்டிக்கு எடுத்துப்பீங்களான்னு கேட்டேன் நீங்க அதுக்குள்ள என் கதைய போட்டிக்கு சேர்த்துக்கிட்டீங்க :)

SurveySan said...

சிறில், நன்றி. இன்னொரு வாரம் இருக்கு. இன்னொண்ணு கூட எழுதலாம். 2nd படிச்சுட்டு தேவையானு சொல்றேன் ;) போட்டிக்கு எந்த கதைன்னு யோசிச்சு, 23க்குள்ள சொல்லிடுங்க. ஒரே ஒரு கதை தான், final surveyல் சேர்க்கப் படும் ;)

ஓகை சார், நன்றி!

சதங்கா (Sathanga) said...

'நச்' இருக்கனும்னு நீங்க சொன்னதுனால, அது மாதிரி தலைப்பும் வச்சி ஒரு கதை எழுதியிருக்கேன். நச்சுனு படிச்சி நீங்க தான் சொல்லனும் எப்படி இருக்குனு.


http://vazhakkampol.blogspot.com/2007/12/blog-post_16.html

செல்வம் said...

சர்வேசன் இது என்னுடைய போட்டிக்கான கதை. என்னையும் ஆட்டையில் சேர்த்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்...ஜீட்டீஸ்

http://kadalaiyur.blogspot.com/2007/12/blog-post_16.html

SurveySan said...

செல்வம், நன்றி. சேத்தாச்சு.

நந்து f/o நிலா said...

எதுனா வேல குடு சார்

இந்த கதையையும் ஆட்டையில் சேர்த்து எதுனா பரிசு குடுங்க

வினையூக்கி said...

சர்வேசன் சார்,
வழக்கமா என் கதைகளுக்கு ஹிட்ஸ் 50 யைத் தாண்டாது ஆனால் இப்போ கதைக்கு உங்க பேரை நச்சுன்னு போட்டா சும்மா ஹிட்டர் ஹீட்டரு கணக்கா சூடு பறக்குது.
இது எனது மூன்றாவது போட்டிக்கான கதை. 23க்குள் எதை எடுக்கனும்னு சொல்றேன்...
மூன்றே காட்சிகளில் ஒரு காதல் கதை

G.Ragavan said...

சர்வேசரே... இதோ ஒரு கதை. http://gragavan.blogspot.com/2007/12/blog-post_17.html

இத போட்டீல சேத்துக்க வேண்டாம். எல்லாருக்கும் ஒரு தூண்டுதலாத்தான் எழுதுனேன். நல்லாருந்துச்சுன்னா இன்ஸ்பிரேஷனுக்குச் சேத்துக்கோங்க. ஆனா போட்டிக்கல்ல. :)

Unknown said...

/'சிறு'கதையா இருக்கணும். /

எவ்வளவு சிறுசா இருக்கனும்னு கட்டுப்பாடு இருக்கா? :-)

நான் எழுதின இந்தக் கதை நீங்க சொல்ற ‘சிறு’கதை கேட்டகிரியில வருதான்னு கொஞ்சம் சொல்லுங்களேன்!!!

SurveySan said...

ஜி.ரா, 'நட்புக்காக' ஒரு கதை எழுதினதுக்கு நன்றி ;)

அருட்பெருங்கோ, சூப்பர் கதை!

:)

திவாண்ணா said...

http://kathaikathaiyaam.blogspot.com/

இதையும் "ஆட்டைல" சேத்துகிடுங்க
பரிச என்ன பண்ணறதுன்னு ஒரே குழப்பம்!

திவா

Sathiya said...

என் கதையையும் ஆட்டையிலே சேர்த்துக்குவீங்களா? இது வரை கதை எல்லாம் எழுதினது கிடையாது. இது முதல் முயற்சி!
http://vadakkupatturamasamy.blogspot.com/2007/12/blog-post_18.html

SurveySan said...

Sathiya, உங்க கதையும் சேத்தாச்சு.

:)

✪சிந்தாநதி said...

❒ நச்'a'ன்று ஒரு கதை

Subramanian Ramachandran said...

tanglish la kathai ezhuthina othupeengala na?

நந்து f/o நிலா said...

சர்வேசன் சார், என் கதையை சேர்க்கவில்லையே? ஏன் சொற்குற்றமா? பொருட்குற்றமா? சொன்னால் சரி செய்வேன் :(

SurveySan said...

Nandhu, sorry about that. added it now.

Sindhanadhi, Thank you :)

rsubras, thanglish OK :)

Unknown said...

http://holyox.blogspot.com/2007/12/357.html

போட்டிக்கு 'பூனைக்கு மணி கட்டியவள்' எனும் இந்த கதையை சேர்க்குமாறு கேட்டுகொள்கிறேன். பழைய கதையை விலக்கி விடுங்கள்.

வினையூக்கி said...

சர்வேசன் சார்,
இந்தாங்க இன்னொரு கதை,
ஃபாதர் என் குழந்தை பிரெஞ்சு பேசுறாள்

MyFriend said...

நச்சுன்னு இல்லைன்னாலும் ச்-ன்னாவது இருக்கும்ன்னு நினைக்கிறேன். :-)

http://engineer2207.blogspot.com/2007/12/blog-post_20.html

SurveySan said...

My Friend,

நீங்கதான் 50 :)

வினையூக்கி, உங்க புது கதைக்கு நன்னி! போட்டிக்கு எது வச்சுக்கலாம்னு சொல்லிடுங்க ;)

நந்து f/o நிலா said...

சர்வேசன் கதை முடிவில் சிறு மாற்றம் செய்திருக்கிறேன். முடிவு தேதிக்குள் இப்படி செய்யலாம் தானே?

விஜயன் said...

நானும் ஆட்டைல ஓரு கதைய போட்டு இருக்கேன்.கொஞ்சம் மரியாதை குறைவா இருந்தா மன்னியுங்கள் :-)
சரவணவிசயன்

இராம்/Raam said...

சர்வேசன்

போட்டிக்கான கதை செப்புத் தாழ்ப்பாள்

தேறுமான்னு பாத்து சொல்லுங்க....

indirasenthilraj said...

என்னுடய கதையையும் போட்டியில்
சேர்த்துக் கொள்ளவும்.
'தங்க'மணி....?

indirasenthilraj said...

என்னுடைய சிறுகதை....
http://kolangall.blogspot.com

வவ்வால் said...

சர்வே,
தூக்கம் வரலைனு ஒரு கதைய எழுதிட்டேன் ,, உங்க நச்சு கதைப்போட்டில இதையும் போட்டுக்கோங்க!

தலைப்பு: வீணாவின் ஜாக்கெட்!

http://vovalpaarvai.blogspot.com/2007/12/blog-post_23.html

பினாத்தல் சுரேஷ் said...

பொதுமக்களின் பேராதரவைப் பெற்று வாக்குக்களை அள்ளிக்குவித்த கடன் அட்டை கதையையே போட்டிக்காக அனுப்புகிறேன். மீண்டும் ஒருமுறை கதையெழுத வைத்ததற்கு நன்றி.

கதிர் said...

தலைவா!
ரகசிய தடங்களில் படிந்திருக்கும் மவுனம்னு ஒரு கதை நானும் எழுதிருக்கேன். என்னையும் ஆட்டைல சேத்துக்கோங்க சர்வேசர்.

indirasenthilraj said...

சர்வேசன்,
என் பெயர் இந்திராசெந்தில்ராஜ் பட்டியலில் செல்வராஜ் என்று தவறாக உள்ளது.

இலவசக்கொத்தனார் said...

சர்வேசரே, என்னுள் தூங்கிக்கிட்டு கிடந்த மிருகத்தைத் தட்டி எழுப்பிட்டீரே. இதோ இன்னும் ஒரு கதை - வீணாவின் ஜாக்கெட்.

ஆனா நான் முதலில் தந்த கதைதான் போட்டிக்கு. இது புது கதைக்கு ஒரு விளம்பரம். அம்புட்டுதான். :))

சுரேகா.. said...

இதோ என் கதை


http://surekaa.blogspot.com/2007/12/blog-post_18.html

நல்லா இருந்தா ஆட்டைல சேத்துக்குங்க..!

My days(Gops) said...

http://pakkatamilan.blogspot.com/2007/12/blog-post.html

நம்ம கதை இது தான்... படிச்சி பார்த்துட்டு உங்களுக்கு ஓகே'னா போட்டி'ல சேர்த்துக்கோங்க... இல்லாடியும் நோ பிராப்ளம்..

gops.

TBCD said...

இது தான் என் போட்டிக்கான கதை...!!

//*TBCD said...

இன்னோரு கதை..

தனியே தன்னந்தனியே...நடப்பது..
http://tbcd-tbcd.blogspot.com/2007/12/blog-post_10.html


எந்த கதை என்பதை கடைசி தேதிக்கு முன் சொல்லிவிடுகிறேன்.. :)))*//

ambi said...

அண்ணே! அடிச்சு பிடிச்சு இன்னிக்கு தான் கதை எழுதி இருக்கேன், என்னையும் ஆட்டத்துக்கு சேர்த்துக்கோங்க எஜமான்!
Story Link:
http://ammanchi.blogspot.com/2007/12/blog-post_23.html

வாக்காளன் said...

சர்வேசன் சார்.. இதோ என் கதை... ஆட்டத்துல சேர்த்துக்கோங்க..

http://votu-podu.blogspot.com/2007/12/blog-post.html

கிருஷ்ணா said...

சர்வேசன் சார் . .

என்னுடைய படைப்பை உங்கள் போட்டியில் சேர்த்துக் கொள்ளுங்கள் சார்

பயணிகள் கவனிக்க . . .

நன்றி

வாக்காளன் said...

சர்வேசன் சார்.. இதோ என் கதை... ஆட்டத்துல சேர்த்துக்கோங்க..

(திருமணமாம் திருமணம்)

http://votu-podu.blogspot.com/2007/12/blog-post.html

கிருஷ்ணா said...

சர்வேசன் சார் . .

என்னுடைய படைப்பை உங்கள் போட்டியில் சேர்த்துக் கொள்ளுங்கள் சார்

பயணிகள் கவனிக்க . . .

நன்றி

வாக்காளன் said...

என்னங்க..
ஒருத்தர் ஒரு கதைனு சொன்னீங்க்.. ஆனா பல பேரு ஒரு கதைய எழுதி உங்க போட்டில இனைச்சுட்டு , மறுபடியும் மறுபடியும் எழுதறாங்க..

விதிப்படி, முதல் கதைய தானேஙக.. போட்டிக்கு எடுத்துக்கனும்?

வினையூக்கி said...

போட்டிக்கான கதையாக "பேய் வீடு" கதையை மட்டும் எடுத்துக் கொள்ளவும் சார்.

வீ. எம் said...

சர்வேசன் சார்... இதோ என் கதை..
ஆட்டத்துல சேர்த்துடுங்க....

நன்றி

வீ எம்

கதை பெயர் : அரசியல்வாதி

http://arataiarangam.blogspot.com/2007/12/blog-post.html

கிருஷ்ணா said...

என் சிறுகதை இங்கே

http://courtallakuravanji.blogspot.com/2007_12_01_archive.html

கிருஷ்ணா said...

என் சிறுகதை இங்கே

http://courtallakuravanji.blogspot.com/2007_12_01_archive.html

SurveySan said...

Thanks everyone.

i will update the page later today, with your 'final' story :)

booth closes at 11.59 PM PST, sunday 23rd december :)

IF people are writing multiple stories and havent told their final story, I will pick the latest story from their page or the 1st one they already submitted here ;)

Radha Sriram said...

என் கதை இங்கே

http://radhasriram.blogspot.com/2007/12/blog-post.html

SurveySan said...

Radha Sriram,

சேத்தாச்சு :)

Anonymous said...

豆豆聊天室 aio交友愛情館 2008真情寫真 2009真情寫真 aa片免費看 捷克論壇 微風論壇 大眾論壇 plus論壇 080視訊聊天室 情色視訊交友90739 美女交友-成人聊天室 色情小說 做愛成人圖片區 豆豆色情聊天室 080豆豆聊天室 小辣妹影音交友網 台中情人聊天室 桃園星願聊天室 高雄網友聊天室 新中台灣聊天室 中部網友聊天室 嘉義之光聊天室 基隆海岸聊天室 中壢網友聊天室 南台灣聊天室 南部聊坊聊天室 台南不夜城聊天室 南部網友聊天室 屏東網友聊天室 台南網友聊天室 屏東聊坊聊天室 雲林網友聊天室 大學生BBS聊天室 網路學院聊天室 屏東夜語聊天室 孤男寡女聊天室 一網情深聊天室 心靈饗宴聊天室 流星花園聊天室 食色男女色情聊天室 真愛宣言交友聊天室 情人皇朝聊天室 上班族成人聊天室 上班族f1影音視訊聊天室 哈雷視訊聊天室 080影音視訊聊天室 38不夜城聊天室 援交聊天室080 080哈啦聊天室 台北已婚聊天室 已婚廣場聊天室 夢幻家族聊天室 摸摸扣扣同學會聊天室 520情色聊天室 QQ成人交友聊天室 免費視訊網愛聊天室 愛情公寓免費聊天室 拉子性愛聊天室 柔情網友聊天室 哈啦影音交友網 哈啦影音視訊聊天室 櫻井莉亞三點全露寫真集 123上班族聊天室 尋夢園上班族聊天室 成人聊天室上班族 080上班族聊天室 6k聊天室 粉紅豆豆聊天室 080豆豆聊天網 新豆豆聊天室 080聊天室 免費音樂試聽 流行音樂試聽 免費aa片試看A片 免費a長片線上看 色情貼影片 免費a長片 本土成人貼圖站 大台灣情色網 台灣男人幫論壇 A圖網 嘟嘟成人電影網 火辣春夢貼圖網 情色貼圖俱樂部 台灣成人電影 絲襪美腿樂園 18美女貼圖區 柔情聊天網 707網愛聊天室聯盟 台北69色情貼圖區 38女孩情色網 台灣映像館 波波成人情色網站 美女成人貼圖區 無碼貼圖力量 色妹妹性愛貼圖區 日本女優貼圖網 日本美少女貼圖區 亞洲風暴情色貼圖網 哈啦聊天室 美少女自拍貼圖 辣妹成人情色網 台北女孩情色網 辣手貼圖情色網 AV無碼女優影片 男女情色寫真貼圖 a片天使俱樂部 萍水相逢遊戲區 平水相逢遊戲區 免費視訊交友90739 免費視訊聊天 辣妹視訊 - 影音聊天網 080視訊聊天室 日本美女肛交 美女工廠貼圖區 百分百貼圖區 亞洲成人電影情色網 台灣本土自拍貼圖網 麻辣貼圖情色網 好色客成人圖片貼圖區 711成人AV貼圖區 台灣美女貼圖區 筱萱成人論壇 咪咪情色貼圖區 momokoko同學會視訊 kk272視訊 情色文學小站 成人情色貼圖區 嘟嘟成人網 嘟嘟情人色網 - 貼圖區 免費色情a片下載 台灣情色論壇 成人影片分享 免費視訊聊天區 微風 成人 論壇 kiss文學區 taiwankiss文學區

Truck Bazi said...

Truckbazi is a unique platform and one of its kind in India which makes buying, selling and renting of the Used Commercial Vehicles, Construction Equipment, Trucks, Bus, Dumper, Tipper, Second Hand Trucks in India, much easier by providing you the customers/sellers within a few seconds.
Do you want to Sell Rent & buy used commercial vehicles or/and used construction equipment?
Come join us and meet with the real customers
Download the app now: http://tiny.cc/glzhuz
For any queries, reach us at 9975941114
You can also WhatsApp us at 7559291280
Email us: info@truckbazi.com
For further details, log on to https://truckbazi.com/