recent posts...

Thursday, February 12, 2009

Action படங்கள்

ஆக்ஷன் படங்கள் வேணும்னு பிட்'டின் ஃபெப்ரவரி மாத போட்டி அறிவிப்பு சொல்லுது.

(படங்களை க்ளிக்கினால் பெத்தையாய் பார்க்கலாம்)

நான் எடுத்ததில் பிடித்த சிலதை கீழே கொடுத்துள்ளேன். பாத்துட்டு கருத்ஸ் சொல்லுங்க.
1) கேரளா சென்ற போது அங்கு ஒரு 'தீ மிதி' திருவிழாவில், புல் உடை அணிந்தவர் ஓடி ஆடி தொம்சம் செய்த போது, அவருடன் ஆக்ஷன் புரிந்தவர்கள் கீழே.


2) சமீபத்தில் Berkeleyல் கண்டு ரசித்த குதிரைப் பந்தயத்தின் கடைசி நொடிகள்


3) இது சென்னையின் தாஜ் ஃபிஷர்மென் கோவ்'ல், ஒரு 'சிற்பி' நெருப்பில் கண்ணாடியை உருக்கி குட்டி பொம்மை செய்யும்போது எடுத்த படம். குட்டி பொம்மைக்கு, ஆயிரத்துக்கு கிட்டே விலையை சொன்னது, கொஞ்சம் ஓவர் ஆக்ஷன்.


கொசுறு:
அதே தாஜ் ஃபிஷர்மென் கோவ்'ல் கரகாட்டமும், அதைக் கண்டு அங்கு வந்திருந்த வெளிநாட்டவர் காட்டிய ஓவர் ஆக்ஷன், ரொம்ப ஓவர். வெளிநாட்டவரின் ஓவர் ஆக்ஷனுக்கு ஈடு செய்ய, நம்மவர்கள் சிலர் மேடை ஏறியதும் ரொம்ப ஓவர் ;)


ஹாப்பி வெள்ளி!

பி.கு: Valentines dayக்கு தடிமாடுகள் தேவையா? தெரிவிக்கவும்! :)

5 comments:

ராமலக்ஷ்மி said...

எல்லாப் படமும் அருமை. படம் ரெண்டும் மூன்றும் தலைப்புக்கு ரொம்பப் பொருத்தம்.

ராமலக்ஷ்மி said...

தீமிதி திருவிழாவில் இந்தப் புல் உடை புதிய விஷயமாக இருக்கிறது. ஹிஹி..நேரில் நிறைய விழா பார்த்திருக்கிறேன் என நினைத்துக் கொள்ள வேண்டாம். எல்லாத் தீமிதியும் நம்ம தமிழ் படங்களில் பார்த்ததுதான்:)!

Truth said...

கேரளா தீமிதி இப்படித் தான் இருக்குமோ? நான் தமிழ் நாட்டுல நிறைய பாத்திருக்கேன். புல் புதுசு தான் எனக்கும்.

இரண்டாவது படும் நல்லாயிருக்கு.

நானானி said...

தீ மிதித் திருவிழா...பூக்குழி அல்லது பூ மிதித் திருவிழாவாக முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலில் நடக்கும், பார்த்ததில்லை..ஆசைதான், ஆனால் இரவில்தான் நடக்குமென்பதால் இயலவில்லை. தசாவதாரம் படத்தில் கமல் உடம்மெல்லாம் குத்தி கயறு கட்டி அந்தரத்தில் தொங்கியபடி வருவாரே அதுபோல் க்ரேன் லாரியில் நிஜமாகவே குத்தி தொங்கியபடி வேண்டுதல் நிறைவேற்ற வருவார்கள். அப்போதெல்லாம் கையில் காமரா இல்லை. பார்த்து சிலிர்த்ததுதான்.

எனக்கு கண்ணாடி சிற்பம் செயல் விளக்கம் தான் பிடித்தது. நானும் சமீபத்தில் நேரில் பார்த்து ஒரு பிள்ளையார் செய்து வாங்கிக்கொண்டேன்.

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்