recent posts...

Friday, February 06, 2009

Valentines Day - முதலியிடமிருந்து காதலர்கள் தப்பிக்க வழி!

எங்கேருந்துதான் திடீர்னு இது வந்ததோ?
ஸ்ரீ ராம் சேனாவாம்.

கொரங்கு சேனா'ன்னு வச்சிருக்கலாம் பேரை.

கபோதிங்க, மங்களூர் pubல், பெண்களை அடித்து தங்கள் வீரத்தை காண்பித்தார்கள்.

இப்போது, கலாச்சார காவலர்களின் அடுத்த திருப்பணி ஃபெப்ரவரி 14ஆம் தேதி நடக்குமாம்.
அதாவது, காதலர் தினத்தன்று, ஜோடியாய் திரியும் காதலர்களை கபால்னு பிடிச்சு, ஸ்பாட்லேயே ஐயர் வச்சு, திருமணம் செஞ்சு வெச்சுடுவாங்களாம்.
திருமணம் வேணாம்னு ஜகா வாங்கும் ஜோடிக்கு, ராக்கி கொடுக்கப்பட்டு, பெண்ணை கட்டாய ராக்கி கட்ட வெப்பாங்களாம்.

அட கெரகம் புடிச்சவங்களா? சின்னன்சிருசுக, காதலர் தினம்னு, பைக்லயும், பீச்லயும் சுத்திட்டுப் போனா, உங்களுக்கு எங்கடா எரீது?

கர்நாடகா போலீஸ் கமிஷனர்கிட்ட, இன்னாய்யா, ஸ்ரீ ராம் சேனா தலை முதலி இப்படி சொல்லிக்கினு திரியராரே, அவர பிடிச்சு உள்ள போடுங்கன்னு கேட்டா, முதலியின் ஆட்கள் முதலில் அவர்கள் சொல்வதை செய்யட்டும், அப்பரம் சட்டம் தன் வேலையை செய்யும்னு சொல்றாராம்.

அட கெரகம் பிடிச்சவங்களே. அப்பாவி ஜோடிகளை, பப்ளிக்கா வச்சு டார்சர் எல்லாம் பண்ணப்பரம் உங்க சட்டம் வேலையை செஞ்சா என்னா செய்யலாட்டா என்னா?

இந்த சேனா, ஊர்ல அம்புட்டு ப்ரச்சனையை விட்டுட்டு, இந்த அல்ப விஷயங்களை ஆராஞ்சுக்கினு இருக்கே, இத கேக்க ஆளில்லயா? அந்த சேனாவிலும் நிறைய சேறுதே, அது எப்படி?

நாட்டை முன்னாடி கூட்டிக்கினு போங்கடான்னா, இப்படி பின்னாடி பின்னாடி போயி கூரிய விரைவில், கற்காலம் எப்படி இருந்ததுன்னு காட்டிடுவானுவ கெரகம் பிடிச்சவனுவ.

என்னக் கேட்டீங்கன்னா, ஜோடிகள், வழக்கம் போல் ஜாலியா காதலர் தினத்தை கொண்டாடுங்க. உங்க நட்பு வட்டத்தில் எப்படியும் ஜோடி சேராம சில தடிமாடுகள் இருக்குமே, அத்தனையையும், அன்னிக்கு உங்க செலவுல, உங்க கூட பீச்சுக்கோ, சினிமாக்கோ, பார்க்குக்கோ கூட்டிக்கினு போங்க. ஒரு பத்தடி தள்ளி வரச் சொல்லுங்கோ, உங்க ப்ரைவஸி முக்கியமில்லியா?
ஏதாவது, சேனா குரங்கு வந்து அத்து மீறினா, பிகிலடிச்சு, தடிமாடுகளை வரச் சொல்லுங்கோ, யார் கலாச்சாரத்தை யார் காப்பாத்தறான்னு தூர நின்னு ஹாயா வேடிக்கை பாருங்கோ!

கெரகம் பிடிச்சவனுங்க!

ஹாப்பி வேலன்டைன்ஸ் டே! ஹே ராம்!

february 13ஆம் தேதி மீள் பதிவு செய்யப்படும் ;)

பி.கு: தொடர்புடைய செய்தி

8 comments:

SurveySan said...

சன்னிவேலில், தடிமாடாக கூட வர நான் தயார்.

மற்ற ஏரியாக்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

'தடிமாடுகள்' சேவா தேவையென்றால், ஜோடிகள் விண்ணப்பங்களை இங்கே தெரியப் படுத்தலாம் ;)

ராஜ நடராஜன் said...

தடிமாடு ஐடியா நல்லாயிருக்குதே:)

Unknown said...

//ஸ்ரீ ராம் சேனாவாம்//

அட முட்டாளுகளா, ராமபிரானே லவ் பண்ணிதானேடா கல்யாணம் பண்ணிகிட்டாரு???

எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி
கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலைபெது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்.


(கம்பர்)

ஹேப்பி வால்டைன்ஸ்!

Truth said...

:-)
இவங்க எல்லாம் இப்படிப்பட்ட விஷயங்கள்ல மட்டும் தான் தலைய காட்டுவாங்க. பெரிய பெரிய கலவரத்துல எல்லாம் சாத்திக்கிட்டு வீட்லியே இருப்பாங்க :-) மும்பைல அராஜகம் பண்ணின 'x-சேனா'க்கள் மும்பை வெடிகுண்டு நடந்தப்போ இருக்கிற இடம் தெரியாம பம்பிக்கிட்டுத் தானே இருந்தாங்க :-)

SurveySan said...

:)

கோவி.கண்ணன் said...

//கெரகம் பிடிச்சவனுங்க!//

:)

இப்படி ஒரு அமைப்பு இருப்பதே அவர்களின் அதிரடி அறிவி(ரி)ப்புக்கு பிறகு தானே பலருக்கும் தெரிந்தது.

இதெல்லாம் ஒரு வெளம்பரம்தான்.

'அண்ணலும் நோக்கினால்...அவளும் நோக்கினால்' பக்கத்தில் இராம சேனா அமைப்பினர் இருந்தால் உடனே கல்யாணம் பண்ணி வச்சிருப்பாங்க.

யாரை......சூர்பனகையை இராமனுக்கு !
:)

SurveySan said...

//இப்படி ஒரு அமைப்பு இருப்பதே அவர்களின் அதிரடி அறிவி(ரி)ப்புக்கு பிறகு தானே பலருக்கும் தெரிந்தது.//

vaasthavam. villangamaana idea dhaan popular aavaradhukku :)

கோவி.கண்ணன் said...

//Valentines Day - முதலியிடமிருந்து காதலர்கள் தப்பிக்க வழி! //

முதலியா ?

சாதிக்கலவரத்தை உண்டு பண்ணாதிங்க.

முதலைன்னு போடுங்க !
:)