recent posts...

Tuesday, February 17, 2009

பாலாவுக்கு ஒரு வேண்டுகோள்

பாலா சார்,

நான் கடவுள்னு ஒரு படத்தை மூணு வருஷம் மெனக்கெட்டு எடுத்து கொடுத்திருக்கீங்க.
படத்தின் இரண்டாம் பாகத்தில், குறிப்பா, கடைசி பதினைந்து நிமிடங்களில் இருந்த தவறான கட்டிங்கினால், ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் தொடர்பில்லாமல், முதல் இரண்டு மணி நேரம் கிட்டிய ப்ரமிப்பை சில நொடிகளில் புஸ்ஸென்று தொலைக்க நேரிட்டது.

லாட்டரி சீட்டை தினத்தந்தியில் பரிசு விழுந்ததா என்று சரிபார்க்கும்போது, பத்து டிஜிட்டில், முதல் ஒம்போது சரியாக இருந்து, கடைசி எண்ணைத் தவறவிட்டால், ஒரு வெறுமை ஏற்படுமே அப்படியாகப் போச்சுது எனக்கு.

(பிரியாணி உவமை ஏற்கனவே என் திரைப்பார்வையில் சொல்லியாச்சு)

இவ்ளோ நடந்தும், ஒண்ணுமே நடக்காத மாதிரி, எம்மில் அநேகம் பேர், உங்கள் படைப்பை தலையில் தூக்கி வைத்து ஆடியதை பார்த்திருப்பீர்கள்.

தமிழ் திரையுலகில், வலது கையில் விரல் விட்டு எண்ணக் கூடிய நல்ல இயக்குனர்களில் ஒருவர் நீங்கள். நீங்கள் இப்படி சருக்கியதை ஒப்புக்கொள்ள முடியாமல், சரக்கு நல்லாத்தான் இருக்குன்னு சாதிச்சவங்க அவங்கல்லாம்.

உங்கள் அடுத்தடுத்த படைப்புகளில், விட்டதைப் பிடித்து, பிதாமகன் போல் மேலெழுவீர்கள் என்பதில் கண்டிப்பாய் ஐயமில்லை.

அதுக்கு முன்னாடி ஒரே ஒரு வேண்டுகோள்.

சென்ஸாருக்கு முன்னாடி முதல் பிரதியைப் பார்த்துத்தான், ராஜா உட்பட, பலபேரும் புளகாங்கிதம் அடைஞ்சு, அது இதுன்னு ஏகப்பட்ட பில்ட்-அப் கொடுத்தாங்க படத்துக்கு.
நானும் அதை நம்பரேன்.
சென்ஸாரின் கத்தி, தத்தக்கா பித்தக்கான்னு வெட்டியதால்தான், கடைசி 15 நிமிடங்கள் பிசுபிசுத்துப் போச்சுன்னு தோணுது.

அப்படியாகின், தயவு செய்து, இந்தப் படத்தின் டிவிடி இறக்கும்போது, theatrical versionம், டைரக்டரின் un-cut versionம் வெளிக்கொணருமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ராஜாவும், மற்றவர்களும் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று கூறி, வாய்ப்பளித்த அனைவருக்கும், நன்றி கூறி விடைபெறுகிறேன்.

நன்றி.
-சர்வேசன்.

21 comments:

SurveySan said...

"ஐயிரண்டு திங்களாய் அடங்கி நின்றதூமைதான் கையிரண்டு காலிரண்டு காதிரண்டு மானதே"

-ருத்ரன்

"பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய உடம்பு எனும் பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்"

-ராஜா

"ஐயிரண்டு மணிகள் வெட்டியாய் தட்டியே
கொட்டி விட்ட மொக்கைக்கு
பின்னூட்டத் தயக்கமா?
மொக்கை பதிவுலகச் சாபமா?"

-சர்வேசன்

"நீங்களும் ஏதாச்சும் எழுதி விடுங்க"

கானா பிரபா said...

காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா

உலகே மாயம் வாழ்வே மாயம்

எல்லாம் நான் கடவுள் பார்த்ததால் வந்த வினை தல ;)

SurveySan said...

கானா,

'நல்ல' படம் பார்த்தால் கிட்டிய ஞானமா

அல்லது

நான் அடைந்த பேரானந்தம்தான் உங்களுக்கும் கிட்டியதா?

தெளிவாயிடலாம்னு ;)

SurveySan said...

மீண்டும் ஒரு முறை.

"ஐயிரண்டு மணிகள் வெட்டியாய் தட்டியே
கொட்டி விட்ட மொக்கைக்கு
பின்னூட்டத் தயக்கமா?
மொக்கை பதிவுலகச் சாபமா?"

-சர்வேசன்

Anonymous said...

//மீண்டும் ஒரு முறை.

"ஐயிரண்டு மணிகள் வெட்டியாய் தட்டியே
கொட்டி விட்ட மொக்கைக்கு
பின்னூட்டத் தயக்கமா?
மொக்கை பதிவுலகச் சாபமா?"

-சர்வேசன்//

ஹிஹிஹி!!!
:))

கிஷோர் said...

//
"ஐயிரண்டு மணிகள் வெட்டியாய் தட்டியே
கொட்டி விட்ட மொக்கைக்கு
பின்னூட்டத் தயக்கமா?
மொக்கை பதிவுலகச் சாபமா?"//

உங்களை ரீடரில் பதிவு செய்து தவறாமல் படிக்கிறேன்.

ஆனால் இது வரை ஒருமுறை கூட பின்னூட்டம் இட்டதில்லை. மன்னிக்கவும் :)

உங்கள் பதிவு அட்டகாசமாக உள்ளது.

SurveySan said...

MathuKrishna, Danks!

Kishore, Dhanyanaanen! :)

☀நான் ஆதவன்☀ said...

வந்திட்டோம்... பின்னூட்டம் போட்டுட்டோம் தலைவரே...

கண்டிப்பா uncut version டிவிடியா வரும்னு நம்பலாம்.

நந்து f/o நிலா said...
This comment has been removed by the author.
நந்து f/o நிலா said...

சர்வேசன் படத்தை இரண்டாவதுதடவை பாருங்க.எனக்கும் முதல் தடவை பார்க்கும்போது ஓவர் எதிர்பார்த்ததாலும் அடுத்தது என்னவென்ற ஆவலிலும் படம் சொதப்பிட்ட ஃபீலிங் வந்த மாதிரித்தான் இருந்தது.

முதலில் உறுத்தலா நினைத்த எதுவுமே இரண்டாம் தடவை பார்க்கும் போது பெருசா தெரியல.

நிஜமாலுமே இன்னொருதடவை பாக்கனும் போல இருக்கு

Unknown said...

படம் எனக்கும் பிடிக்கவில்லை... ஆனா கடைசிகாட்சி, கடைசி காட்சின்னு ஏன்யா புலம்புறீர். கடைசி காட்சி ஒரு சின்ன ப்ளாஷ் பேக்.

ஆர்யாவிற்கு தலையில் ரத்தம் ஒழுக அவர் தலகீழாய் இருப்பதில் ஒரு சின்ன ப்ளாஷ் பேக் துவங்கி சண்டை முடிந்தவுடன் ப்ளாஷ் பேக் முடிவுறுகிறது. இது பல படங்களில் (ஆங்கிலம்) கையாண்டதுதான் ஆனாலும், பார்வையாளனின் tempo ஏற்றுவதற்கு பயன்படும் ஒரு உத்தி. வழக்கம் போல மடதமிழர்களுக்கு (உம்மையும் சேர்த்து) புரியவில்லை! அதற்கு பாலாவை குறை சொல்லாதீர்கள். படத்தில் குறை சொல்ல எத்தனையோ இருக்க திரும்பவும் கடைசிகாட்சின்னு தொடங்கிடாதீயும்!

SurveySan said...

//வழக்கம் போல மடதமிழர்களுக்கு (உம்மையும் சேர்த்து) புரியவில்லை!//

:)))
flashback matter ellaam purinjudhayyaa.
pooja eppadi oru edathilerundhu innoruduthukku ponaangannu oru korvai venumla?

CVR said...

//ஐயிரண்டு மணிகள் வெட்டியாய் தட்டியே//
நீங்க ஏன் வெட்டியா தட்டினீங்க???
நீங்க சர்வேசனா தட்டியிருக்கனும்....

SurveySan said...

CVR,

////ஐயிரண்டு மணிகள் வெட்டியாய் தட்டியே//
நீங்க ஏன் வெட்டியா தட்டினீங்க???
நீங்க சர்வேசனா தட்டியிருக்கனும்....//

;) ellaam surveysaney!

na.ka paakkaliyaa?

உண்மைத்தமிழன் said...

வழிமொழிகிறேன் சர்வேஸன் ஸார்..

இது மாதிரியான விஷயங்களை இதுவரையில் ஹாலிவுட் திரைப்படங்கள்தான் செய்திருக்கின்றன. பாலா இதனையும் முதன்முதலில் செய்து புண்ணியத்தைத் தேடிக் கொள்ளட்டும்.. என்ன சொல்றீங்க..?

உண்மைத்தமிழன் said...

//"ஐயிரண்டு மணிகள் வெட்டியாய் தட்டியே கொட்டி விட்ட மொக்கைக்கு,
பின்னூட்டத் தயக்கமா? மொக்கை பதிவுலகச் சாபமா?"
-சர்வேசன்//

சர்வேசனாரே..

உமக்கேன் பி்ன்னூட்ட தேடுதல்.. தானாகவே வருகிறதே..

ஏன்யா எங்க பொழைப்பில் மண்ணை போடுறீர்..?

SurveySan said...

உண்மைத் தமிழன்,

///வழிமொழிகிறேன் சர்வேஸன் ஸார்..

இது மாதிரியான விஷயங்களை இதுவரையில் ஹாலிவுட் திரைப்படங்கள்தான் செய்திருக்கின்றன. பாலா இதனையும் முதன்முதலில் செய்து புண்ணியத்தைத் தேடிக் கொள்ளட்டும்.. என்ன சொல்றீங்க..?////

வழிமொழிஞ்சதுக்கு நன்னி!
எல்லாரும் என்ன பின்னி எடுக்கும்போது, ஆதரவு கரம் நீட்டர அனைவருக்கும் நன்னி ;)

டைரக்டர் கட் வேர தமிழ் படத்துல பாத்ததுல. பாலா பண்ணினா, பலரும் அதைத் தொடருவாங்கங்கரதுல சந்தேகமில்லை.

SurveySan said...

உண்மைத் தமிழன்,

//உமக்கேன் பி்ன்னூட்ட தேடுதல்.. தானாகவே வருகிறதே..

ஏன்யா எங்க பொழைப்பில் மண்ணை போடுறீர்..?///


:) நீங்க வேர. நான் இந்த மாதிரி கவுஜ எல்லாம் எழுதீனாதான், மதிச்சு கொஞ்சம் பேராவது ஏதாச்சும் சொல்லிட்டுப் போறாங்க. இல்லன்னா, ஈ தான் ;)

Sowmya said...
This comment has been removed by the author.
SurveySan said...

sowmya, thanks for the comments :)

Raman Kutty said...

please have a look at this too..

http://www.narsim.in/2009/02/blog-post_13.html

especially the below comment by "paithiyakkaaran"

//
நர்சிம்,

நீங்கள் எழுதிய பதிவுகளிலேயே இதுதான் சிறந்தது என்று அடித்து சொல்லலாம் :)

'நான் கடவுள்' படத்தினுள் இன்னொரு படம் நுணுக்கமாக இருக்கிறது. அதன் நுனியை அழகாக தொட்டிருக்கிறீர்கள்.

படம் முழுக்கவே எதிர்மறைகளால் ஆனவைதான். உதாரணமாக, ருத்ரன் - தாண்டவன்; (இரண்டையும் சேர்த்தால் 'ருத்ர தாண்டவம்!' இரண்டு பெயர்களுமே சிவனை குறிப்பவைதாம்!!!)

'நானே கடவுள்' என்னும் அகோரி - 'கடவுள்தான் நம்மை காப்பாத்தணும்' என கடவுளை வெளியில் தேடும் பிச்சைக்காரர்கள்;

குடும்ப நலனுக்காக மகனை காசியில் விட்ட அப்பா - மகனின் சுயம்புவுக்காக அவனை மறக்கும் அம்மா;

இப்படி பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

வீட்டுக்கு அழைக்கும் அம்மா, 'உன்னை 10 மாதம் சுமந்தேன்' என்பார். சுமந்தது என்னையல்ல... 'தூமையை' என்பான் ருத்ரன். 'தூமை' என்பது மாதவிலக்கை குறிக்கும் சொல். அம்மா நடப்பாள். பின்னணியில் சூரியன் ப்ரகாசிப்பான். வீட்டுக்கு வந்தால் தங்கை, சடங்காகி இருப்பாள். அதாவது 'முதல் தூமை!'...

அதேபோல், முக்கியமான இடங்களில், ருத்ரனை முதலில் காமிரா பதிவு செய்யாது. அக்கம்பக்கம் (ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்) இருப்பவர்களின் ரியாக்ஷனை காண்பித்த பிறகே ருத்ரன் பதிவாவான். (ரயில், காவல்நிலையம், நீதிமன்றம்...). இதன் வழியே அந்தந்த இடங்களில் ருத்ரனை உலகம் என்னவாக பார்க்கிறது என்பது உணர்த்தப்படும்.

ஆனால், காசியில் ருத்ரன் அறிமுகமாகும் (சிவ ஓம்... பாடல்) இடத்தில் மட்டுமே காமிரா நேரடியாக ருத்ரனை முதலில் பதிவு செய்யும். அதாவது இங்கு மட்டும்தான் ருத்ரன், ருத்ரனாக மட்டுமே இருக்கிறான். அவனை வேறு கோணத்திலோ, பார்வையிலோ யாரும் அவனை பார்க்கவில்லை. அவனை அவனாகவே ஏற்கிறார்கள். அதனால்தான் இறுதியில் அவன் காசிக்கே சென்றுவிடுகிறான்...

படத்தில் நிறைய பேன் ஷாட்கள் உண்டு. ஒவ்வொன்றுமே பேன் ஷாட்கள் என்றால் எப்படி இருக்க வேண்டும் என உணர்த்துபவை. உதாரணமாக, பிச்சைக்காரர்கள் உணவை உட்கொள்ளும் பேன் ஷாட். ஒவ்வொருவருவரும் ஒவ்வொருவிதமாக உண்பார்கள். இந்த ஷாட்டின் இறுதியில், முருகன்(தாண்டவனின் படைத்தளபதி) இருவருக்கு உணவை ஊட்டிக் கொண்டிருப்பான்...

மொத்தத்தில் ஒவ்வொரு ப்ரேமிலும் ஒரு அர்த்தம், குறியீடு இருக்கிறது. எந்த காமிரா கோணமும் காரணமில்லாமல் வைக்கப்படவில்லை.

சாரி நர்சிம். பின்னூட்டம் நீண்டுவிட்டது.

உண்மையில், இதுவரை பதிவில் வந்த 'நான் கடவுள்' விமர்சனத்திலேயே, உங்கள் விமர்சனம்தான் பெஸ்ட்.

ஹாட்ஸ் ஆஃப் நர்சிம்.

உங்கள் விமர்சனத்துக்கு நான் தலைவணங்குகிறேன்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

February 13, 2009 3:22 PM
பைத்தியக்காரன் said...
முந்தைய பின்னூட்டத்தில் விடுபட்டவை -

அம்சவல்லி (பூஜா) படம் முழுக்க பழைய பாடல்களாக பாடுவாள். எல்லாமே அந்தந்த திரைப்படங்களில் சோகத்தை குறிக்கவும், ஆதரவற்ற நிலையை குறிக்கவுமாக அமைந்த பாடல்கள். ('சொந்தமில்லை பந்தமில்லை....', 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே...'...) அவளுக்கு நல்ல குரல்வளம் என அனைத்து பாத்திரங்களும் மெய்மறந்து சொல்வார்கள்.

இறுதியில் அவளுக்கு 'வரம்' அளிக்கும் ருத்ரன், அவளது குரல்வளையைத்தான் அறுப்பான்...

நான் அதிர்ந்து தூக்கமிழந்த முரண் இது... அதனால்தான் பர்ப்பஸாக, பழைய சோகப் பாடல்களை அதிகமாக பாலா பயன்படுத்தியிருப்பார்...

அதுவும் 'இந்த மருதமலைக்கு நீங்க வந்துப் பாருங்க...' பாடல் ஒலிக்கும்போது வரும் காட்சி இருக்கிறதே... சாட்டையடி.

ருத்ரன் தலைகீழாக நின்றபடிதான் படத்தில் அறிமுகமாவான். இதுவும் முக்கியமான குறியீடு. சராசரி மனிதர்களிடமிருந்து இவன் தலைகீழாக வேறுபட்டவன் என்பதை உணர்த்தும் சிம்பாலிக்...

இதுவரை 3 முறைகள் இந்தப் படத்தை பார்த்துவிட்டேன். உங்கள் பதிவு இன்றே 4ம் முறை போகும்படி தூண்டுகிறது...

February 13, 2009 3:58 PM//