recent posts...

Wednesday, June 13, 2007

சிவாஜி - புறக்கணிப்பு

எங்கு பார்த்தாலும் சிவாஜிமயம்.
ட்ரெயிலர் பார்த்தவரை படம் கண்டிப்பா தேறிடும்னே தோணுது.
குறிப்பா, ஷங்கர் பாணியில் ஒரு நல்ல மெஸேஜ் சொல்லும் படமா இருக்கும்னு தெரியுது (Rich get richer , poor get poorer, blah blah ..... ).

நான் தீவிர ரஜினி ரசிகன் இல்லன்னாலும், ரஜினி படம் புடிக்கும். குறிப்பா, பாட்சா போன்ற படங்கள்.
ரஜினி, என் கூட நடிச்ச சக நடிகர் என்ற ரீதியிலும், சிறு வயதிலிருந்தே ஒரு ஈர்ப்பு இருக்கு அவர் கிட்ட :).

சிவாஜி, பாட்சா அளவுக்கு டக்கரா இருக்குமான்னு தெரியல. ஆனா, பாட்சாவை விட quality கண்டிப்பா இருக்கும். பாட்சால சண்டைக் காட்ச்சியில் பொம்மை துப்பாக்கின்னு நல்லாவே தெரியும். ஒட்டு தாடி, இப்ப விழலாமா, அப்பறம் விழலாமான்னு காத்துக்கிட்டு இருக்கும்.

ஆனாலும், 'எனக்கு இன்னோரு பேரும் இருக்கு'னு ரஜினி சொல்ற காட்சியில்,
பாஷா பாஷா, டான் டட்டட்ட டான்னு ஒரு பேக்ரவுண்ட் சவுண்டோட வர சீனுக்கு நிகர்,
தமிழ் படங்கள்ள கிடையவே கிடையாது!! சும்மா, ஒரு நிமிஷம் ப்ரமை பிடிச்ச மாதிரி இருந்தது அந்த சீன் முதல் முறை பார்த்த போது. (வேற சீன் இருக்குன்றீங்களா? எந்த சீன்? எந்த படம்? யாரு சொல்றது?)

சிவாஜி படத்துக்கு விமர்சனம் எழுதரவங்க, பாட்சாவோட compare பண்ணி, படம் எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க.

என் விமர்சனம் வர லேட்டாகும். ஏன்னா நான் சிவாஜி படத்தை முதல் வாரங்களில் புறக்கணிக்கப் போகிறேன்.

டிக்கெட் வாங்கலாம்னு தேடினா, $16 னு போட்டிருக்காங்க.

ஒரு வாரம் கழிச்சு, $8 கொடுத்து பாத்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

($50 கொடுத்து, SPB, Yesudoss, Chitra நிகழ்ச்சி பாக்கப் போறேனாக்கும். ஒரு வாரம் பட்டினி கெடந்து செலவ பேலன்ஸ் பண்ணனும் :) ).

நீங்க எப்படி? முதல் நாள் பாக்கலன்னா தலை வெடிச்சுடுமாமே சிலருக்கு. அந்த கேஸா?

60 கோடி ரூபா செலவு பண்ணி எடுத்த படத்துக்கு வரிவிலக்கு கொடுத்திருக்காங்க. ஹ்ம், என்னத்த சொல்றது. நான் சர்வே போட்டு, மடல் அனுப்பியும் ஒண்ணும் நடக்கல :)

சரி நீங்க என்ன பண்ணப் போறீங்கன்னு சொல்லுங்க:


பி.கு: குட்டீஸ் போட்டியில் கலந்து கொண்டவர்கள் பாடல்களை அனுப்பவும். கலந்து கொள்ளாதவர்கள், பெயர் பதிந்து, பாடல்களை அனுப்பவு. விவரங்கள்ஸ் இங்கே. பரிசுகள் உண்டு.

பி.கு: யாரு யார வச்சுருக்கா?

பி.கு: Brahminical - Final Take

:)

11 comments:

Anonymous said...

you too ?

Boston Bala said...

டிவிடி வரைக்கும் வெயிட்டீஸ்... என்னை மாதிரி தீவிர ரசிகர்கள் முன்பதியாவிட்டாலும் ஜெர்சி, பாஸ்டன் பக்கம் டிக்கட் லேது!

சதுர் said...

ரஜினி பிள்ளையாண்டானின் சிவாஜி படம் விமர்சனம் எழுதிருக்கேன். வந்து பாருங்கோ.

SurveySan said...

Bala, பாஸ்டன்ல, டிக்கெட் எம்புட்டு?

டபுள் வெலையா?

SurveySan said...

சதுர்,
அருமை! Insider information?
கலக்குங்க!

நாமக்கல் சிபி said...

//நீங்க எப்படி? முதல் நாள் பாக்கலன்னா தலை வெடிச்சுடுமாமே சிலருக்கு. அந்த கேஸா?//

ஹிஹி!

நாமக்கல் சிபி said...

//சிவாஜி - புறக்கணிப்பு" //

நல்ல பரபரப்பான தலைப்புதான்!

SurveySan said...

சிபி, இந்த மாதிரி 'நச்சுன்னு' தலைப்பு வெக்கலன்னா, என் பதிவ யார் படிக்க வருவா? :)

SurveySan said...

50% or more will not be seeing it in the 1st week :)

Santhosh said...

சர்வேசன்,
நாளைக்கு போயிட்டு வந்து சொல்லுறேன் புறக்கணிப்பதா வேண்டாமா என்று :). இங்க முதல் நாள் 25$ அடுத்த நாள் முதல் 16$ உங்க ஊருல எம்முட்டு டிக்கெட்?

SurveySan said...

16$ தான் இங்கயும்.

$8க்கு வர வரைக்கும் மீ வெயிட்டிங்!