recent posts...

Sunday, April 29, 2007

குட்டி வாண்டுகளுக்கான போட்டி

அடுத்ததா ஒரு புகைப்படப் போட்டி வெக்கரதுக்கு முன்னாடி, அனைவரின் வீட்டிலிருக்கும் குட்டீஸ்க்கு ஒரு போட்டி வச்சா என்னான்னு தோணிச்சு.

( புகைப்படப் போட்டிக்கு, போன முறை த.வெ.உ'வ ரூல்ல கொண்டு வந்த மாதிரி, இந்த முறை என்ன கொண்டுவரலாம்னும் ஐடியாஸ் வரவேற்க்கப்படுகின்றன. எல்லோருக்கும் சுலபமாக கிடைக்கக் கூடிய பொருளா இருக்கணும். நெட்ல சுட்டு குடுக்க முடியாத அளவுக்கு ஒரு ட்ரிக்கி படமா எடுக்கவும் சொல்லணும் :) ).

சரி, அத அப்பறம் பாக்கலாம். அதுக்கு முன்னாடி, அனைவரின் வீட்டில் இருக்கும் குட்டீஸ்களுக்கு ஒரு போட்டி வெக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.

10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான போட்டியா இது இருக்கும்.

ஏதாவது ஓரு தமிழ் சினிமா பாட்ட பாடச் சொல்லி, அத ரெக்கார்ட் பண்ணி அனுப்பணும்.

கலந்து கொள்ள விரும்பும் வாண்டுகளின் பெயர்களை பின்னூட்டுங்கள். அவர்கள் வயதையும் குறிப்பிடுங்கள். எந்த ஊருன்னும் சொல்லுங்க.

அதே மாதிரி, மற்ற வாசகர்கள், வாண்டுகள் என்ன பாட்டு பாடினா நல்லா இருக்கும்னு டிப்ஸும் கொடுங்க.

மே 15 வரை பெயர் பதிவுகள் ஏற்றுக் கொள்ளப்படும்.
மே 31 வரை பாடல்களை பதிந்து அனுப்ப நேரம் கொடுக்கப்படும்.

ஜூன்ல சர்வே போட்டு. "இணைய வாண்டு '07" தேர்ந்தெடுத்து மகுடம் சூட்டி பரிசு கொடுத்திடலாம்.

முதல் பரிசு $25. இரண்டாம் பரிசு $15. மூன்றாம் பரிசு. $10.

(ஸ்பான்ஸர்ஸ் கெடச்சா, பரிசுத் தொகை கூட்டப்படும். இந்த சந்தர்பத்தில், ஒரு தொகையை, உதவும் கரங்கள் போன்ற தொண்டு நிறுவனத்துக்கும் கொடுக்க ஏற்பாடு செய்யலாம். அதற்க்கு ஸ்பான்ஸர் செய்ய விரும்புவர்களும் பின்னூட்டுங்கள் ).

தங்கமணீஸ், ரங்கமணீஸ், மாமாஸ், சித்தப்பாஸ், பெரியப்பாஸ், அத்தைஸ், சித்தீஸ், கஸின்ஸ், ப்ரதர்ஸ், ஸிஸ்டர்ஸ், .... உங்கள் வாண்டுகளை தயார் படுத்துங்கள்! ஜமாயுங்கள்!

Questions?


பாடத் தயாராயிருக்கும் குட்டி வாண்டுகள்

1) அபி பாப்பா ( வயது ? )
2) மாதினி (வயது 9)
3) அமுதசுரபி (வயது 8)
4) சர்வோதயான் (வயது ?)
5) விதுலா கார்த்திகேயன் (வயது ?)
6) My Friends' Sister (வயது 3)
7)
8)
9)
10)
..
...
------ -------- -------- --------- --------

போட்டிக்கு வெளம்பரம் தர, இந்த code copy/paste செய்து உபயோகிக்கலாம்:



:)

பி.கு: தங்கமணியோ ரங்கமணியோ, குழந்தை வாய்ஸ்ல, ஜானகி மாதிரி, பாடி அனுப்பக் கூடாது. அப்படியெல்லாம் தில்லு முல்லு பண்ணா தக்க தண்டனை வழங்கப் படும்.

பி.கு2: ரெக்கார்ட் பண்ண இலவசமா கிடைக்கும் mymp3 recorder உபயோகிக்கலாம்.

33 comments:

SurveySan said...

வெளம்பரம் கொடுக்க முடிஞ்சவங்க குடுங்கோ.
மேலே உள்ள ஐக்கான யூஸ் பண்ணிக் கொடுங்கோ (ஐக்கான் சுட்டது :) )

SurveySan said...

இணையத்தின் செல்லப் பாப்பாவான, அபி பாப்பாவின் பாடல் கண்டிப்பாக அரங்கேற ஏற்பாடு செய்யப்படும்.

அபி அப்பாவை தெரிந்தவர்கள் ப்ரஷர் போடவும் :)

Shakthi said...

நல்ல ஐடியா..குட்டீஸ் ரெடியா?அம்மாக்கள் கொஞ்சம் சிரமப்படனும்..வீட்ல தமிழ் பேசாத குழந்தைகளும் try பண்ணலாமே..

நாமக்கல் சிபி said...

நல்ல தரமான பாடல்களா இருக்கணும்.

தயிர்சாதம், வடுமாங்கா போன்ற பாடல்களைப் பெற்றோர்கள் தயவுசெய்து தவிர்க்கலாம்!

பெரியவங்கதான் சின்னவங்களுக்கு வழிகாட்டணும் இல்லையா!

சர்வேசா, நம்மளால ஸ்பான்ஸர்லாம் குடுக்க முடியாது. ஐடியாதான் குடுக்க முடியும்.

:))

நாமக்கல் சிபி said...

//அபி அப்பாவை தெரிந்தவர்கள் ப்ரஷர் போடவும் //

வழிமொழிகிறேன்!

கடோத்கஜன் said...

குட்டிப் பசங்களுக்கு வைக்கிற போட்டிப் பணம், குட்டீஸிக்கே போகட்டுமே சர்வேசா. பெரிசுங்களுக்கு உண்டானத, சாரிடி-க்கு குடுங்கோளேன்!

அபி அப்பா said...

கண்டிப்பா அபிபாப்பா பாட்டு உண்டு!! குடும்பமே கெளம்பிடோம்ல பரிசு வாங்கி குவிக்க:-)))

அபி அப்பா said...

//தயிர்சாதம், வடுமாங்கா போன்ற பாடல்களைப் பெற்றோர்கள் தயவுசெய்து தவிர்க்கலாம்!//

சிபி! நானும் பாப்பாகிட்ட "குறையொன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா"பாட சொன்னேன். அதுக்கு பாப்பா"அப்பா வர வர ரொம்ப வயசாயிடுச்சுப்பா உங்களுக்கு....தம்பி பொறந்தான்னா உங்கள டேரக்டா தாத்தான்னு கூப்பிட போறான்"ன்னு கிண்டல் பண்றா:-))

Sowmya said...

Haha...intersting post. :). unga comments paarthu innum sirippu thaanga mudiala.

" Thangamniyo, rangamaniyo, janaki maathiri kuzhathi kural la paadina thakka thandanai kidaikum"

- HA..Ha...thandanai enna nu sollave illayee..

//தயிர்சாதம், வடுமாங்கா போன்ற பாடல்களைப் பெற்றோர்கள் தயவுசெய்து தவிர்க்கலாம்!//

- Petrorgal sollya kuzhanthainga paatu choose panna poranga pattai ? :)

SurveySan said...

ஷக்தி, தமிழ் தெரிஞ்சவங்க தெரியாதவங்க எல்லாரும் பாடலாம்.
:)

SurveySan said...

நாமக்கல் சிபி,

//சர்வேசா, நம்மளால ஸ்பான்ஸர்லாம் குடுக்க முடியாது. ஐடியாதான் குடுக்க முடியும்.//

no problem. ஐடியாஸ்தான் முக்கியம் :)

SurveySan said...

கடோத்ஜகன்,

//குட்டிப் பசங்களுக்கு வைக்கிற போட்டிப் பணம், குட்டீஸிக்கே போகட்டுமே சர்வேசா. பெரிசுங்களுக்கு உண்டானத, சாரிடி-க்கு குடுங்கோளேன்! //

பரிசுப்பணம் குட்டீஸ்க்குதாங்க. சாரிடிக்கு, சைட்ல தனியா அனுப்பலாம்னு முயற்ச்சி :)

SurveySan said...

அபி அப்பா,

நீங்க தான் பர்ஸ்டு பேர் கொடுத்திருக்கீங்க. ஜமாய்ங்க!

//சிபி! நானும் பாப்பாகிட்ட "குறையொன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா"பாட சொன்னேன். அதுக்கு பாப்பா"அப்பா வர வர ரொம்ப வயசாயிடுச்சுப்பா உங்களுக்கு....//

:))))
கல்யாணம் தான் கட்டிக்கினு ஓடிப்போலாமான்னு, என் ப்ரெண்டு குட்டீஸ் எல்லாம் டக்கரா பாடராங்க.

SurveySan said...

sowmya,

//Haha...intersting post. :). unga comments paarthu innum sirippu thaanga mudiala.//

சிரிங்க சிரிங்க, நல்லா சிரிங்க :)
அப்படியே, குட்டீஸ் ரெண்டு பேர் தேடிப்பிடிச்சு பேர் குடுங்க :)

SurveySan said...

ரஜினி பத்தி கிசு கிசு பதிவெல்லாம் போட்டும், யாரும் பேர் கொடுக்க காணும்.
குட்டீஸ் பாப்புலேஷன் கம்மியோ, பதிவர் வட்டத்துல?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மாதினி .. வயது ஜுன் வந்தா 9 .

SurveySan said...

முத்துலெட்சுமி,

மாதனிக்கு அட்மிஷன் கொடுத்தாச்சு :)

Anonymous said...

12 okvaa?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மகளோட பேர் தப்பா தட்டச்சி இருக்கீங்க மாத்திருங்க ப்ளீஸ்.

SurveySan said...

முத்துலெட்சுமி,

சாரி.
மாத்தியாச்சு.

Anonymous said...

emandi, namma magavukku 2 vayasee aayindhi. paravaaledhaa?

SurveySan said...

Kayams!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வெறும் சினிமா பாட்டு மட்டும் தானா..இல்லாட்டி எதுவேணாலும் பாடலாமா?

SurveySan said...

சினிமா பாட்டா இருந்த கேட்சியா இருக்கும். கேட்சியா வேற பாடினாலும் ஓ.கே தானா? ஆளுங்க சேரட்டும் சேர்ந்து முடிவெடுப்போம்.

அரவிந்தன் said...

என் மகள் எழுதி பாடிய பாடலை அனுப்ப விரும்புகிறேன்..

பெயர்
அமுதசுரபி
எட்டு வயது...


அன்புடன்
அரவிந்தன்

SurveySan said...

அரவிந்தன்,


பாடலை பாடிப் பதிந்து அனுப்புங்க ப்ளீஸ்.

நன்றீஸ்.

Anonymous said...

Hello Surveysan

குழந்தை மாதிரி நானே குரல் மாத்தி பாடலாமா :-)

தங்களுக்கு என்னுடைய forum il விளம்பரம் கொடுத்துள்ளேன்.

http://hikanyakumari.com/forum/index.php?topic=35.0

SurveySan said...

Appavi,

thanks so much. :)

அரவிந்தன் said...

சர்வேசன்...

பாடலை மின்னஞ்ஞல் மூலம் அனுப்பியுள்ளேன்...

அரவிந்தன்

இரா.கோகிலவாணி கார்த்திகேயன் said...

என் பொண்ணை பாட வைக்கலாமுன்னு நினைக்கிறேன். ஆனா என் மேடம் Yes சொல்லணுமே!
பெயர் - விதுலா கார்த்திகேயன்
வயது - 5 வருடம்.
என்ன பாடல் என்று மேடம் கிட்ட தான் கேட்கணும்.

அபி அப்பா said...

சர்வேசன்! நான் நேற்று முதுலெஷ்மியின் உதவியோடு சர்வோதயன் பாட்டு பதிவுசெய்தாகிவிட்டது.ஆனால் அது அப்லோட் செய்வதில் மிகுந்தசிரமம்கொடுப்பததால் சென்ஷியினுதவியோடு சீக்கிரமனுப்ப ஏற்பாடுசெய்கிறேன். போட்டி முடிந்தாலும் சரி நானனுப்பிவைக்கிறேன்.சிரமத்துக்கு வருந்துகிறேன். அபிபோட்டியில்கலந்துக்கவில்லை ஏனனில் குரல் ஒத்துழைக்கவில்லை.ஆனாலும் அவளின் நெருங்கிய சினேகிதி மாதினி கலந்து கொள்வதே அவளுக்கு மிக்கமகிழ்வு என்று சொல்லசொன்னாள்!

SurveySan said...

My Friend,

nanri!

Anonymous said...

yow.. pasanga pattukku sariyana link kudungaiyaa