recent posts...

Saturday, April 14, 2007

சர்வஜித்தா?

...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சர்வஜித்னா என்னாங்க அர்த்தம்? எங்க பாத்தாலும் சர்வஜித்து வாழ்த்துக்கள்னு போட்டிருக்கு.
நான் கூட இது ஏதோ சர்வேக்கள் பல போட வேண்டிய வருஷமோன்னு நெனச்சு ஒரு நிமிஷம் திகிலாயிட்டேன். (சரி சரி அடங்கறேன்).

வெவரம் தெரிஞ்சவங்க சொல்லுங்க.:)

...

VSKன் பத்திரமாய் போய்வா என் கண்ணே படிச்சிருப்பீங்க.
12 வயது Anusha Vasudeva சொன்னதைப் போல்
...
"நாம் எவ்வளவு நல்லவர் என்பது முக்கியம் இல்லை;
எவ்வளவு நல்லது செய்தோமென்பதே"
--அனுஷா வாஸுதேவா"
...


நண்பர்களே, 12 வயது குழந்தைக்கு இருக்கும் பக்குவம் கூட இல்லாம, நாமெல்லாம் அலட்டுவது மனவேதனை தருகிறது.

இந்த ஆண்டிலிருந்தாவது, பக்குவமாய், பாசமாய், அமைதியாய், மற்றவருக்கு உதவும் வாழ்க்கையை வாழ முயற்ச்சிக்க அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். நானும் முயல்கிறேன்.


இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! இ.த.பு.வா!

...

இப்பதான் தமிழ்மண நிர்வாகிகளின் பொலம்பல்ஸ் பாத்தேன். கும்மி அடிப்பவர்களின் மத்தியில் தமிழ்மணம் மாட்டிக்கிட்டு படர கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்ல.
ஆனா, தமிழ்மணம் ஒரு technical aggregator. அவங்க அந்த வேலையை மட்டும் செஞ்சுட்டு, தன்னை பத்தி எவன் என்ன சொல்றான்னெல்லாம் கவல படாம இருக்கணும்.
இன்னிக்கு சில நூறு பதிவுகள் இருக்கும்போது, ஒவ்வொன்னா போய் பாத்து, "ஏய் நீ ஒழுங்கா எழுது", "நீ அப்படி எழுது/எழுதாத"ன்னு சொல்லலாம்.
நாளைக்கு சில ஆயிரம் பதிவுகள் வரும்போது, இதெல்லாம் சாத்தியம் அல்ல.
You should start to add 'automation' to block 'bad blogs'.
Google செய்யும் 'flagging' போல் ஏதாவது செய்ய யோசிக்க வேண்டும்.

அந்த automation செய்யப்படும் வரை, உங்கள் 'terms of use' மீறுபவர்களை, silentஆ aggregation செய்யப்படுவதிலிருந்து தூக்கிடலாம். No explanations needed.

...

இ.த.பு.வா! நல்லா இருங்க!

14 comments:

VSK said...

கலங்கி விட்டேன் சர்வேசன்!

பதிவிற்கு நன்றி.

நாமெல்லாம் மாறுவது எக்காலம்?
கலங்கி விட்டேன்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//12 வயது குழந்தைக்கு இருக்கும் பக்குவம் கூட இல்லாம, நாமெல்லாம் அலட்டுவது மனவேதனை தருகிறது//

குழந்தைக் குணமே குணம்!
குழந்தையாய் மாறி விடுன்னு இதைத் தான் சொல்றாங்க போல!

குழந்தை சொன்னதைச் செய்ய நானும் முயல்கிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நான் கூட இது ஏதோ சர்வேக்கள் பல போட வேண்டிய வருஷமோன்னு//

அச்சச்சோ....
நல்லா பாருங்க சர்வேசன்.
அது "சர்வே"ஜித் இல்லை; "சர்வ"ஜித்! :-))

சர்வஜித் = அனைத்திலும் வெற்றி!
தன்னை வென்றான் தரணியை வென்றான் என்பதால் தன்னை வெல்வது சர்வஜித்.

உமையவள் சிவனாரை மணக்கும் முன், சிவனாரின் கோலம், வயது, செல்வம் எல்லாம் காட்டிப், பல பேர் அவளைத் தடுத்தார்கள்.

ஆனால் அந்த எண்ணங்களை எல்லாம் வென்று, அவள் "உலகன்னை" ஆனதால் சர்வஜித் என்பது குறிப்பு!

SurveySan said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் VSK.

//நாமெல்லாம் மாறுவது எக்காலம்?
கலங்கி விட்டேன் //

மாற முயற்ச்சிக்கவாவது செய்யலாம்.
மற்றவரின் கஷ்டங்களைப் பார்க்கும்போது, இறைவன் என்னையெல்லாம் எவ்வளவு சுகவாசியாக வைத்திருக்கிறான் என்பது புரிகிறது (அங்கனமே தொடர இறைவன் அருளட்டும்).
நம்மால் இயன்றதைச் செய்து ஒருவர் வாழ்விலேனும் ஒளிபெறச் செய்ய வேண்டும்.

SurveySan said...

krs,

//அச்சச்சோ....
நல்லா பாருங்க சர்வேசன்.
அது "சர்வே"ஜித் இல்லை; "சர்வ"ஜித்! :-))
//

:) சும்மா லுலுவாயி.

//சர்வஜித் = அனைத்திலும் வெற்றி!
தன்னை வென்றான் தரணியை வென்றான் என்பதால் தன்னை வெல்வது சர்வஜித்.
//

ரொம்ப அழகான கருத்து. இந்த ஆண்டாவது, 'என்னை' வெல்ல பார்க்கிறேன்.

கானா பிரபா said...

//சர்வஜித்னா என்னாங்க அர்த்தம்? எங்க பாத்தாலும் சர்வஜித்து வாழ்த்துக்கள்னு போட்டிருக்கு.//

சர்வேசா, அனுபவிக்கணும் ஆராயக்கூடாது ;-)

Anonymous said...

thank you.

may god bless the child.

Anonymous said...

Exactly,

If Tamilmanam thinks its a breach of contract. They can remove the blogger with out giving explanation.

The long explantion they are giving is in itself inviting uncomfortable questions. Like the ones rised by nesakumar.

Thanks for the thoughtfulness that you have showed.

வெற்றி said...

க.க,
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Anonymous said...

இந்த விஷயத்தில் தமிழ்மணம் பதிவர்களின் ஐபிக்களை தீவிரவாதிகளுக்குக் கொடுத்திருக்கும் என்று சிலர் சொல்லிவருகிறார்கள்.

இதற்கு வாய்ப்பு இருக்கின்றதா என்று தெரியாததால் தமிழ்மணத்தின் சட்டதிட்டங்களைச் சென்று பார்த்தேன். பின்வருமாறு இருக்கின்றது.

Each time a visitor comes to thamizmanam.com site, we collect the visitor's domain name/IP Address, referral data and browser/platform type. thamizmanam.com also counts, tracks, and aggregates the visitor's activity into our analysis of general traffic flow. thamizmanam.com aggregates this information to determine trends, preferences, reading patterns, and demographics of the user community in general. Occasionally we may provide this aggregate data to the sponsors and business partners. Specific information such as name, IP address, email address, or other contact information will *never be shared with anyone* unless ordered by a court of law.

தடிமனாக்கப்பட்ட வாக்கியம் கவலை தருகின்றது.

தமிழ்மணத்தின் சட்டதிட்டங்களைப் படித்துவிட்டுத்தான் எல்லா பதிவர்களும் தங்களுடைய பதிவை அதில் இணைக்கிறார்கள் என்று சொல்ல முடியாது.

தமிழ்மணத்திற்கு பதிபவர்களுடைய, பின்னூட்டமிடுபவர்களுடைய தகவல்களை தங்களுக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு வழங்க இந்தச் சட்டம் வழிவகுக்கின்றது.

தமிழ்மணத்தின் கருவிப்பட்டையை தங்களுடைய பதிவுகளில் வைத்திருக்கும் பதிவர்களும், அப்பதிவுகளில் பின்னூட்டமிடுபவர்களும் அவர்களுடைய சொந்தத் தகவல்கள் பத்திரமாக இருக்கும் என்று நம்பமுடியாது.

ஆனால், தமிழ்மணம் தன்னுடைய சட்டங்களை வெளியிட்டிருப்பதன் மூலம் இந்த விஷயத்தில் பாதுகாப்பாகவே இருக்கிறது.

தமிழ்மணம் அவர்களுக்குத் தேவையானவர்களிடம் தகவல்கள் தரும் வாய்ப்பிருக்கும்போது, மற்றவர்கள் - அது அரசாங்கமாகவே இருந்தாலும் சட்டத்தின் மூலமாய் மட்டுமே தமிழ்மணத்திடமிருந்து இந்தத் தகவல்களைப் பெறமுடியும். அதாவது தமிழ்மணத்தை சட்டரீதியாக மட்டுமே பதிவர்கள் அணுக முடியும். இங்கனம் சட்டரீதியாக தமிழ்மணத்தை அணுக பதிவர்கள் பலருக்கு பணபலமோ, நேரமோ இல்லை. அங்கனம் சட்டரீதியாக அணுகினாலும் பதிவர்கள் வெற்றிபெறும் வாய்ப்பு மிக மிகக் குறைவு.

தமிழ்மணம் தன்னுடைய சேவையை பல்வேறு சட்டவல்லுனர்களின் ஆலோசனைகளின் பின்னரே ஆரம்பித்துள்ளது. ஆனால், எந்தப் பதிவரும் சட்டபூர்வமான ஆலோசனைகளுக்குப் பின்னரே தமிழ்மணத்தில் இணைகிறார் என்று சொல்லமுடியாது.

மேலும் தமிழ்மணம் என்பது ஒரு அமைப்பு. அதனுடைய அதிகாரபூர்வ பதிவுகளின் போக்கு தமிழ்மணத்திற்கு இருக்கும் மிகப்பெரிய அரசியல் பின்புலத்தையும், பலமுள்ளவர்களின் ஆதரவையும் காட்டுகின்றது. தனிமனிதர்களாகிய பதிவர்களால் அதை எதிர்க்கமுடியாது.

இங்கனம் எதிர்ப்பவர்களைப் பற்றிய தகவல்களை வேறு யாரேனும் நபர்கள் பயன்படுத்தி பதிவர்களை கீழ்மைப்படுத்தவோ மிரட்டவோ முடியும். பதிவர்களுடைய அலுவலகங்களுக்கு அவர்கள் பதிவதுபற்றிய புகார்கள் செல்லுவது அதிகமாகியுள்ளதும் இங்கு நோக்கவேண்டியது.

பெண் பதிவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். ஆபாச மின்னஞ்சல்களும், தொலைபேசிகளும் வருகின்றன. இந்தத் தகவல்களைத் தரக்கூடிய பலம் தமிழ்மணத்திற்கு இருக்கின்றது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், யாராலும் தமிழ்மணம்தான் செய்தது என்று நிறுவமுடியாது. அரசாங்கத்தாலும்கூட அது முடியாது.

இவற்றின்மூலம் தமிழ்மணம் கடவுள் நிலையை எட்டியுள்ளது. அதனால் நன்மை மட்டுமே விளையும் என்று அதில் இணைந்துள்ள பதிவர்கள் நம்பித்தானாகவேண்டும். பதிவர்களுக்கு தீமை ஏற்படுமாயின் புயல், வெள்ளம், சுனாமி போல கடவுளின் கோபம் என்று நினைத்து ஏற்பட்ட காவுகளை புதைத்துக்கொள்ளவேண்டியதுதான்.

தமிழ்மணம் தன்னுடைய திரட்டியிலிருந்து ஒரு பதிவரை விலக்குமாயின் விலக்கியதற்கான காரணங்களை அவருக்கு தெளிவான ஆதாரங்களோடு அளிப்பதில்லை என்பதும் தெரியவருகின்றது.

தமிழ்மணத்தின் தயவிலேயே பதிவர்கள் பிழைப்பும் பாதுகாப்பும் இருக்கின்றது. இதே காலகட்டத்தில் தமிழ்மணத்தில் இணையாத பதிவர்களுக்கு நிம்மதி இருக்கின்றது.

அவர்களுக்கு ஆபாச மெயில்கள் அதிகம் வருவதில்லை, மிரட்டல் தொலைபேசிகள் வருவதில்லை.

அவர்களுடைய பதிவுகளுக்கும் பின்னூட்டமிடுபவர்களும் எண்ணிக்கையில் அதிகமாய் இருக்கிறார்கள். அவர்களும் பாதுகாப்பாய் இருக்கிறார்கள்.

தன்னுடைய காப்பாளர்களுக்கு தமிழ்மணம் கட்டுப்பட்டுள்ளது என்று அதன் சட்டம் சொல்லுகின்றது. ஆனால், காப்பாளர்கள் அல்லாத பதிவர்கள் பயனாளிகள்மட்டும்தானா? மற்ற பதிவர்களால் அல்லவா தமிழ்மணம் வாழ்கின்றது? என்பதுபோன்ற கேள்விகளை பதிவர்கள் கேட்க ஆரம்பித்துள்ளார்கள்.

இந்தச் சூழ்நிலையில் தமிழ்மணம் உண்மையிலேயே இதுபோன்ற தகவல்களைத் தவறான நபர்களுக்குத் தராவிட்டாலும் பதிவர்களால் அதை நம்புவது கடினமாகத்தான் இருக்கும். பலமுள்ளவர்களை யாரும் எப்போதும் நம்புவதில்லை.

SurveySan said...

கானா பிரபா, அனானி, oru vasagan, வெற்றி,

வருகைக்கு நன்றி :)
உங்களுக்கும், இ.பு.வா!

anonymous,
//Occasionally we may provide this aggregate data to the sponsors and business partners//

nothing wrong in this. they have to do this to convince their sponsors. giving aggregate data is ok.

பதிவர்களின் IP அல்லக்கைகளுக்கு கொடுப்பது தவறுதான். அதை தமிழ்மணம் செய்யாது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
ஆனால், ஒருவரின் IP கண்டுபிடிப்பது ஒன்றும் ஜாலவித்தை அல்ல. மற்றவர்களுக்கு பின்னூட்டம் இடச்சென்றால், நம் IP பல இடங்களில் அகப்படத்தான் செய்யும்.

தமிழ்மணம் இலவச சேவை என்பதை மறக்கக் கூடாது.
அவர்கள் சட்டதிட்டங்கள் பிடிக்காதவர்கள், அவர்களிடம் இணையாமல் இருந்துவிட்டுப் போகலாம்.
யாரும் யாரைப்பற்றியும் தரக்குறைவாக பேசுவது நாகரீகச் செயலல்ல.

அசிங்க ஈமெயில், பதிவுகள் தவிர்க்க பெரிய வழிகள் இல்லை. குப்பைய பெருக்கி தூரப் போடற மாதிரி தூக்கி போட்டுட்டு உங்க வேலைய பாருங்க. உலகத்துல sadists 0.5% இருக்காங்களாம். அவங்களுக்கு பயந்து வாழ்ந்தா, வாழ்நாள்தான் வீண். :)

அனுஷா வாஸுதேவா சொன்னத பாருங்க. அதப் பாத்தும் திருந்தலன்னா, ரொம்ப ரொம்ப கஷ்டம் :)

சில உதவாக்கரைகளைப் பாக்கும்போது 'Waste of human space'னு தோணும். அந்த கேட்டகரீல சேரும் தகுதி வராம எல்லாரும் பாத்துக்கங்க :)

அபீட்டு :)

Anonymous said...

நாளைக்கு சில ஆயிரம் பதிவுகள் வரும்போது, இதெல்லாம் சாத்தியம் அல்ல.
You should start to add 'automation' to block 'bad blogs'.
Google செய்யும் 'flagging' போல் ஏதாவது செய்ய யோசிக்க வேண்டும்.

அந்த automation செய்யப்படும் வரை, உங்கள் 'terms of use' மீறுபவர்களை, silentஆ aggregation செய்யப்படுவதிலிருந்து தூக்கிடலாம். No explanations needed.Right Said SS...

SenthaZal Ravi

ஜடாயு said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

// ஆனா, தமிழ்மணம் ஒரு technical aggregator. அவங்க அந்த வேலையை மட்டும் செஞ்சுட்டு, தன்னை பத்தி எவன் என்ன சொல்றான்னெல்லாம் கவல படாம இருக்கணும். //

உண்மை, உண்மை. ஆனால் த.ம கவலைப் படுகிறது, கலங்குகிறது, புலம்புகிறது, மிரட்டுகிறது, கெடு வைக்கிறது..

// அந்த automation செய்யப்படும் வரை, உங்கள் 'terms of use' மீறுபவர்களை, silentஆ aggregation செய்யப்படுவதிலிருந்து தூக்கிடலாம். No explanations needed. //

இந்த terms of use யாவை?

// thamizmanam.com reserves the right to set out its own norms for acceptance including, but not limited to, nature of content, language and frequency of posting. A blog accepted for listing at the submission may be delisted anytime later based on such norms. In this regard, thamizmanam.com’s decison is final.//

சட்டரீதியான வார்த்தைகளாகப் போடப்பட்ட இவற்றை லிடரலாக செயல்படுத்துவது தான் இப்படி கெடு விதிப்பது, சொல்லாமல் நீக்குவது போன்ற சமாசாராங்கள் எல்லாம்.

நேசகுமார் கருத்தளவில் சில கடும் விமரிசனங்களை வைத்துள்ளார். ஆனால் அவரது மொழியும், நடையும் என்றும் தனிமனித தாக்குதலில் இறங்கவோ, அசிங்கம்/ஆபாசம் பக்கம் சென்றதோ கிடையாது.

விமர்சிக்கிறார் என்பதற்காக ஒருவரை நீக்குகிறோம் என்று சொல்லிவிட்டு, பின்னால் சொன்ன செயல்களை *மட்டுமே* பெருமளவில் செய்துவரும் ஆட்களுக்கு ஊக்கம் அளிக்கும் ஒரு வலைத்திரட்டியாக த.ம. இருக்க விரும்புகிறது.. ம்?

அச்சு அசல்..அப்படியே திராவிட, கழக அரசியல்!

SurveySan said...

ஜடாயு,

well, த.ம இலவச சேவை வழங்கறாங்க. யார வெச்சுக்கலாம், யார வெச்சுக்கக்கூடாது என்பதெல்லாம் அவங்க இஷ்டம்.
இஷ்டமில்லாதவர்கள் இருக்கணும்னு அவங்க கட்டாயப் படுத்தல.

மனிதர்கள் தான் அதை நிர்வகிக்கறாங்க. நிர்வாகிப்பவர்களின் சார்பு நிலை துளியேனும், தளத்திலும் காணப்படும். இது தவிர்க்க முடியாது.

இப்ப, சன் டி.வி, ஜெயா டி.வி, காசு கொடுத்து வாங்கிப் பாக்கறோம். அவர்கள் செய்யும் அரசியல் 'திணிப்பு' சில சமயம் எரிச்சல் தரும்.
அந்த நேரத்துல சேனல் மாத்தி, பிடிச்சத பாக்கற மாதிரி, த.ம ஏதாவது திணிக்குதுன்னு நெனச்சீங்கன்னா, இங்கயும் அப்படியே பழகிக்கணும்.

:)