recent posts...

Friday, April 20, 2007

கானா பிரபாவுக்கு - HATS OFF!!!

தமிழ்மணமே சாதிச் சண்டை, மதச் சண்டை, ஐ.பி தகராறு என்று அல்லோலப் பட்டுக் கொண்டிருக்கும்போது, தென்றலாய் வருடும், நல்ல பதிவுகள் தருவது ஒரு சிலரே.

ஊர்ல ஆயிரம் ப்ரச்சனை, அலுவலகத்தில் தலைவலி, வீட்லயும் ப்ரச்சனை, தொலைக்காட்சியில் 24 மணி நேரமும் குப்பைக் கூளம் என்று திரும்பிய பக்கமெல்லாம் எரிச்சலூட்டும் விஷயங்கள். :)

இது போதாதுன்னு தமிழ்மணம் படிக்க வந்தா, சமீக காலமா, இங்கயும் ஜனரஞ்சகமான நல்ல பதிவுகள் மிஸ்ஸிங்.
ஒண்ணு, சண்ட போடறாங்க, இல்லன்னா வெத்து வெட்டு பதிவுகள் எழுதறாங்க.

சுவாரஸ்யமே இல்லாம ஆயிரமாயிரம் பதிவுகள் வருது. (என் பதிவும் இதில் அடக்கம்).

அட என்னங்கய்யா பண்றீங்க என்று கலங்கும் போது, மேலே சொன்ன, தென்றலாய் வருடி நிம்மதி தரும் பதிவுகள் அப்பப்ப வந்து ஒரு நம்பிக்கையை தருது, மன சந்தோஷமும் தருது.

அந்த தென்றலாய் வருடும் பதிவர்களில், சமீபமாய் முதல் இடத்தில் இருப்பவர் நண்பர் கானா பிரபா.

கானா பிரபாவின், சமீபத்திய முயற்ச்சியான 'நீங்கள் கேட்டவை' சூப்பர்.
பதிவர்கள் கேட்க்கும் பாடல்களை தேடிப் பிடித்து தொகுத்து வழங்குகிறார்.

என் all-time favourite பாடல், SPB, Yesudos பாடிய "என் காதலி யார் சொல்லவா" என்ற பாடலை, கண் சிமிட்டும் நேரத்தில் தேடிப்பிடித்து பதிவுல போட்டுட்டாரு.
பாட்ட கேட்டா மெய் சிலிர்க்குது போங்க. Really!!!!

நீங்களும் உங்க விருப்பத்தை கேளுங்க. ஆனந்தப் படுங்க.

சண்டை சலசலப்பை குறைப்போம். ஜாலியாக வாழக் கற்றுக் கொள்வோம்!

என்ஸாய் மக்கள்ஸ்!!!!!!

கானா பிரபா சாரே, Hats Off to you!

10 comments:

கானா பிரபா said...

ரொம்ப நன்றி தலைவா ;-)

கோபிநாத் said...

\\அந்த தென்றலாய் வருடும் பதிவர்களில், சமீபமாய் முதல் இடத்தில் இருப்பவர் நண்பர் கானா பிரபா.\\\

உண்மை....உண்மை....உண்மை ;-))))

வாழ்த்துக்கள் பிரபா

SurveySan said...

கானா பிரபா,

ஏதோ என்னால முடிஞ்சது செஞ்சேன் :)
இன்னும் பலரும் உங்க வழியை பின்பற்றி இதமான பதிவுகள் தரட்டும்.

தென்றல் said...

வாழ்த்துக்கள் பிரபா..!

Surveyசன், நன்றி!!

வெற்றி said...

க.க,

/* ஊர்ல ஆயிரம் ப்ரச்சனை, அலுவலகத்தில் தலைவலி,... தொலைக்காட்சியில் 24 மணி நேரமும் குப்பைக் கூளம் என்று திரும்பிய பக்கமெல்லாம் எரிச்சலூட்டும் விஷயங்கள். :)

இது போதாதுன்னு தமிழ்மணம் படிக்க வந்தா, சமீக காலமா, இங்கயும் ஜனரஞ்சகமான நல்ல பதிவுகள் மிஸ்ஸிங்.
ஒண்ணு, சண்ட போடறாங்க, இல்லன்னா வெத்து வெட்டு பதிவுகள் எழுதறாங்க. */

உண்மை. சமீப காலமாக தமிழ்மணம் பற்றிய என் கருத்ஹ்தும் இதுதான். இருப்பினும் நீங்கள் சொன்னது போல், அத்தி பூத்தாற் போல் சில நல்ல பதிவுகளும் வந்து கொண்டு தான் இருக்கிறது.

இதில் கானா பிரபாவின் முயற்சி மிகவும் ஜனரஞ்சகமானதும் கூட.

பிரபாவிற்கு என் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

SurveySan said...

தென்றல், வெற்றி,

கருத்துக்கு நன்றி.

கானா பிரபா தொடர்ந்து கலக்குவார்.
மற்றவர்களும் ஜோதியில் ஐக்கியமாகட்டும்.

பேசாம எல்லாரும், 'படித்ததில் பிடித்தது' என்று வாரத்துக்கு ஒருமுறை, மற்ற பதிவுகளை ரெக்கமண்ட் பண்ணலாம். அப்படி செய்ய ஆரம்பிச்சாலே, பல பதிவுகள் கண்ணுல படும், எழுதரவங்களுக்கும் ஊக்கம் பிறக்கும்.

பாரதிய நவீன இளவரசன் said...

பிழைப்பிற்காக வெளிநாட்டில் வந்து வேலை பார்க்கும் என்னைப் போன்ற சிலருக்கு சில சமயங்களில் குடும்ப நிகழ்வுகளும், நாட்டு நடப்புகளும் தரும் வேதனைகளிலிருந்து விடுபடும் முயற்சியாகத் தான் இந்த internet பக்கம் போகச் செய்கிறது. மற்றபடி இதில் யார் மீதும் காழ்ப்புணர்ச்சியோ, அட அந்த மாதிரி எண்ணமோ எள்ளளவும் வைத்துக்கொள்வதில்லை. நல்ல பாடல்களைக் கேட்கும் (நினைக்கும்) வாய்பினைத் தரும் கானா பிரபாவிற்கு வாழ்த்துக்கள்.

அருண்மொழிவர்மன் said...

இதை தாண்டி கானா பிரபா புதிய பதிவர்களுக்கு தரும் ஆதரவும் குறிப்பிடவேண்டியவிடயம். எனது வலைப்பதிவில் சில சிக்கல்கள் வந்தபோது தானாக முன்வந்து ச்னக்கு உதவியவர் அவர்.

SurveySan said...

prince, அருண்மொழி,

வந்தனம் + நன்றீஸ்.

Sowmya said...

Muthan muthala unga valaipathivukkul en varugai. :) adeyappa..! ega patta vishayangal ..mikka nandru :)