recent posts...

Monday, November 24, 2008

லிங்க்குகிறேன், சில பதிவுகளை...

சமீபத்தில் படித்த சில பதிவுகளும், என் கமெண்ட்டுகளும், நன்றி நவில்தல்களும், சிண்டு முடிதல்களும்,... பாப்பமா?

1) முதலில், 'முத்துச்சரம்' ராமலக்ஷ்மிக்கு கோடானு கோடி நன்றீஸ். தன் ப்ரொஃபைலில் என் 'முத்துச்சர'ப் புகைப்படத்தை பயன்படுத்தி என் படத்தை கௌரவப் படுத்தியதர்க்காக ;)
இதற்கு முன் என் 'கோலங்கள்' படத்தை ப்ரொஃபைலில் சேர்த்துக் கொண்ட சேதுக்கரசிக்கும், இக்கணம், பப்ளிக்கா நன்றீஸ் சொல்லிக்கிறேன் ;)

2) தன் மூணு மாச குழைந்துக்கு என்ன பாட்டை தாலாட்டு பாடலாம்னு, கைப்ஸ் ஐடியா கேக்கறாரு. சினிமால, இவ்ளோ சின்னக் குழந்தைக்கு பாடர மாதிரி தாலாட்டு ஏதும் இல்லியாம்.
கைப்ஸ், மொதல்ல, நீங்க உங்களுக்குத் தெரிஞ்ச ஏதாச்சும் தாலாட்டை பாடி, எங்களுக்கு போட்டுக் காமிங்க. அதுக்கப்பரம், நீங்க ஒங்க கொழந்தைக்கு தாலாட்டு பாடி, டார்ச்சர் பண்ணலாமான்னு வேணாமான்னு நாங்க சொல்றோம்.
(பதிவில், வடகரை வேலனின், கமெண்ட்டு ஜூப்பரு - அவரு இன்னா சொல்றாருன்னா..
ஆனாலும் அர்ச்சனாவை இம்புட்டு சோதனைக்கு இப்பவே உள்ளாக்கனுமா. கொஞ்சம் இரக்கம் வையுங்க. பாவம்.
இந்தக் கொடுமைக்குத் தூங்கிற மாதிரி நடிக்கலாம்னு நடிச்சிருக்கும் உங்க குழந்தை.
)

3) பரிசல்காரனின் அவியல் பதிவில் வரும் குட்டி குட்டி துணுக்குகள் நல்லாருக்கும். தொடர்ந்து கலக்கறாரு. சமீபத்திய அவியலில், cable sankarன் பின்னூட்டம் பாத்தேன். ஆமா, இவங்க ரெண்டு பேரும் ஏதோ குறும்பட மேட்டர்ல முட்டிக்கல? அதுக்குள்ள பழம் விட்டுட்டாங்களா? ;)
நல்லா, எல்லாரும் சேந்து இருந்தா, சந்தோஷம்தான். சும்மா தெரிஞ்சுக்கலாம்னு கேட்டேன் ;)

4) Rappன் வாரணம் ஆயிரம் விமர்சனம் அமக்களம். ஆனா, அவங்களுக்கு, படம் அவ்வளவா பிடிக்கலையாம். என்ன கொடுமைங்க இது?
சமீரா ரெட்டி, 'போந்தான்' மாதிரி இருக்காங்களாம்? அது நல்லதா கெட்டதா? கெட்டதா இருந்தா, நானும் குசும்பனும், காசு கலெக்ட் பண்ணி, இனி உங்களுக்கு பின்னூட்டம் வராத மாதிரி செஞ்சுருவோம். சாக்குரத.
நான் விமர்சனம் எழுதினா, மூணு நாலு பேர் வந்து, நலம் விசாரிச்சிட்டு போறாங்க. நீங்க எத எழுதினாலும் 200 பேர் வராங்களே. என்ன கொடுமைங்க இது?
ஊருக்குள், பொருளாதார வீக்கத்தால், ஐ.டி காரனை எல்லாரும் திட்ற மாதிரி, பதிவுலக பின்னூட்ட வீக்கத்தால், உங்களை டரியல் பண்ண ஆள் சேரும் அபாயம் இருக்கு, சாக்குரத ;)

5) சட்டக் கல்லூரி மேட்டரின், ஆணி வேர் மேட்டரை அலசி ஆராஞ்சு, பிரிச்சு மேஞ்சு ஒருத்தர் ஜ்யோவ்ராம் சுந்தர்'க்கு அனுப்பியிருக்காரு. மேட்டர் எல்லாம் நல்லாதான் இருந்துச்சு. ஆனா, சந்தடி சாக்குல, சம்பந்தமே இல்லாம, கௌதம் மேனனை வம்புக்கிழுத்திருப்பதை நான் கன்னா பின்னான்னு கண்டனம் செய்கிறேன்.
நான் பின்னூட்டத்துல, அடிச்சவன் மேலையும் தப்பு, அடிவாங்கினவன் மேலயும் தப்புன்னு சொல்லி ரெண்டு பேரையும் உள்ளப் போடுங்கன்னா, prognosticனு ஒரு பதிவர் வந்து, எனக்கு வரலாறு தெரீலன்னு திட்டிட்டுப் போயட்டாரு. நல்லா இருங்கய்யா. சொன்னா தெரிஞ்சுக்குவோம்ல ;(

6) தமிழ்மண நிர்வாகிகள், ஒரு கண்டிப்பான பேராசிரியர் தொனியில் இது நாள் வரை இருந்தவர்கள். இப்ப திடீர்னு, மொக்கை போட ஆரம்பிச்சிருப்பது, சகிக்கலை. ஒரு 'இது' கொறஞ்சிடும், 'கெத்த' மெயிண்டெயின் பண்ணுங்க, அப்பதான் நல்லது.
'சூடான' இடுகைகள், வருது, போவுது, வருது, போவுது - என்னதான் நடக்குது? கண்டிப்பா இருக்கும்னு தெரிஞ்சா, இந்தப் பதிவுக்கு, 'ச, என்ன பதிவர்கள் இவர்களெல்லாம்?'னு ஏதாவது பில்ட்-அப் கொடுத்திருப்பேன்.

7) நண்பன் ஷாஜியின் பதிவுகள் அருமையா இருக்கு. சமீபத்தில் மைக்கேல் ஜாக்ஸன் இஸ்லாத்தில் இணைந்ததைப் பத்தி போட்டிருக்காரு. பல பெரும் தலைகள், இஸ்லாமியர்கள் ஆனதும், நல்வழியில் சென்றதாய் உதாரணங்கள் கொடுத்திருக்காரு. தல ஜாக்ஸனும், கொஞ்சம் மாறி, மீண்டும் பழைய ஜாக்ஸனாய், புதுப் பாடல்கள் கொடுத்தால், சந்தோஷமே.
வணக்கம் சொல்றது தப்பான்னு ஒரு பதிவு போட்டிருக்காரு. interesting.

8) எனக்குத் தெரிஞ்சு பதிவர்கள்ளையே, ஜார்ஜ் புஷ்ஷை, நல்லவரு வல்லவருன்னு நெனைக்கர ஒரே ஆளு நம்ம VSK சார்தான். அவரின் புஷ் பற்றிய, நிலைப்பாடை பதிவா போடுவாருன்னு ரொம்ப நாள் வெயிட்டிங்க். VSK, மனசு வைங்க. :)

இடைச்சொறுகல்:
9) பதிவு போதை ரமேஷ் பத்தி எழுத மறந்துட்டேன். ஒரு நாளைக்கு 18 பதிவு, குட்டி குட்டியா போடறாரு. சிலது நல்லாருக்கு, பலது, சும்மா, ஐ.எம் மாதிரி இருக்கு.
ஆனா, கவனிச்ச பெரிய மேட்டர் இன்னான்னா, இவரு கூட பாடிகார்ட்ஸ் இருக்காங்களாம், இவரு கோடிகளில்தான் பிஸினெஸ் செய்யராராம், இவருக்கு போலீஸ்ல எல்லாம் ஃப்ரெண்ட்ஸ் உண்டாம். மெய்யாலுமா?
உஷாரு ;)


இப்போதைக்கு அம்புடுதேன்!

;)

36 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராப்பை பார்த்து ஏன் எல்லாரும் இப்படி கேக்கறீங்க.. உங்களுக்கு கூட இவ்வளவு கமெண்டா போஸ்டுக்கு ..வந்து எல்லாரும் நிறைய பின்னூட்டம் போட்டோம்ல..

SurveySan said...

முத்துலெட்சுமி,

இப்படி 'கொள்கை பரப்புச் செயலாளர்' மாதிரி கேள்வி கேக்கறீங்களே? ;)

ராப் ரொம்ப நல்லவங்கதான், ஆனாலும், சமீரா ரெட்டியை ஏதோ சொல்லி திட்டர மாதிரி தெரிஞ்சுது, அதான் ;))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அதெல்லாம் நானும் அந்த விசயத்துக்காக திட்டிட்டேன் தனியா..

rapp said...

just miss:):):) me the 3Rd:):):)

rapp said...

நாங்கெல்லாம் யாரு பின்னூட்டப் புயலாச்சே:):):)

rapp said...

நான் படிச்சு ரொம்பப் பிடிச்ச பயணக் கட்டுரைகள் ரெண்டு பேரோடதுன்னா, ஒன்னு முத்து இன்னொன்னு துளசி மேடம். படிக்கிறா மாதிரி இருக்காது, அவங்க எதிர்ல வாய தொறந்து உக்காந்து ஜாலியா கத கேக்குற பீலிங் வரும்:):):)

rapp said...

அதான, முத்து பாருங்க, பேசாம இவர வெச்சு ஒரு வாழ்த்துக் கவுஜ எழுதி டெர்ரற கெளப்பிற வேண்டியதுதான்:):):)

SurveySan said...

முத்துலெட்சுமி,
வா.ஆயிரத்டை பொறுத்தவரை, நீங்களும் நம்ம கட்சி என்பதை எண்ணி மகிழ்ச்சி. :)

///அதெல்லாம் நானும் அந்த விசயத்துக்காக திட்டிட்டேன் தனியா..///

rapp said...

நீங்கல்லாம் ஒன்னை புரிஞ்சிக்கணும், இப்போ காக்க காக்க படம் முழுக்க ஜோதிகா அழகா இருப்பாங்க, ஆனா அறிமுகப் பாடலான 'ஒமஹமியா'வுல பேயாட்டம் இருப்பாங்க. அதுதான் கடுப்பு:):):) அதுலயும் அழகா காமிக்கலாம்ல. இந்தப் படத்துல சமீராவை படம் முழுக்கவே அப்டி காமிச்சுட்டாரு:):):) எனக்கே அவங்களைப் பிடிக்கும்ங்க:):):)

SurveySan said...

rapp,

////அதான, முத்து பாருங்க, பேசாம இவர வெச்சு ஒரு வாழ்த்துக் கவுஜ எழுதி டெர்ரற கெளப்பிற வேண்டியதுதான்:):):)/////

த.மணம், ப.காரன், கே.சங்கர் எல்லாம், டெரரரை கெளப்பாத வரை எனக்கு ஓ.கே. ;)

rapp said...

//SurveySan said...
முத்துலெட்சுமி,
வா.ஆயிரத்டை பொறுத்தவரை, நீங்களும் நம்ம கட்சி என்பதை எண்ணி மகிழ்ச்சி. :)

///அதெல்லாம் நானும் அந்த விசயத்துக்காக திட்டிட்டேன் தனியா..///
//

சர்வேசன் சார்(சரோஜா பட சார் மாதிரி), அதான் அவங்களே மறந்துட்டு கம்னு இருக்காங்கல்ல, தூண்டிவிட்டு கலவரத்தயா தூண்டறீங்க:):):) ஹி ஹி முத்து நீங்க இந்தப் போஸ்டை மறந்துடுங்க:):):)

SurveySan said...

rapp,

///இந்தப் படத்துல சமீராவை படம் முழுக்கவே அப்டி காமிச்சுட்டாரு:):):) ////

ஆஹா. இந்தப் படத்துல சமீராவ அழகா காட்டாமையே, எனக்கு அவ்ளோ அழகா தெரிஞ்சாங்கன்னா, அவங்கள அழகா காட்டின படத்தை பாத்தே ஆகணும்.

எந்த படம் அது?

btw, எனக்கும், முதல் சீன்ல மூஞ்சிய பாத்ததும், இன்னாதிது, இவங்களா ஹீரோயின்னு தோணிச்சு, ஆனா, அதுக்கப்பரம், அவங்க சிரிக்க ஆரம்பிச்சப்பரம், நானும் சிரிக்க ஆரம்பிச்சிட்டேன் ;)

SurveySan said...

rapp,

///அவங்களே மறந்துட்டு கம்னு இருக்காங்கல்ல, தூண்டிவிட்டு கலவரத்தயா தூண்டறீங்க:):):) ///

;) இன்னும் குசும்பன் உங்க 'போந்தான்' பதிவை படிக்கலன்னு நெனைக்கறேன். அவரு படிச்சாதான் கலவரபூமியாயிடும். :))

SurveySan said...

லேட்டஸ்ட்:

9) பதிவு போதை ரமேஷ் பத்தி எழுத மறந்துட்டேன். ஒரு நாளைக்கு 18 பதிவு, குட்டி குட்டியா போடறாரு. சிலது நல்லாருக்கு, பலது, சும்மா, ஐ.எம் மாதிரி இருக்கு.
ஆனா, கவனிச்ச பெரிய மேட்டர் இன்னான்னா, இவரு கூட பாடிகார்ட்ஸ் இருக்காங்களாம், இவரு கோடிகளில்தான் பிஸினெஸ் செய்யராராம், இவருக்கு போலீஸ்ல எல்லாம் ஃப்ரெண்ட்ஸ் உண்டாம். மெய்யாலுமா?
உஷாரு ;)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராப் டோண்ட் வொர்ரீம்மா.. எனக்கு இந்த போஸ்ட் ல தெரிஞ்சதெல்லாம் ஒரே விசய்ம் தான் ராப் போஸ்ட்ல மட்டும் கமெண்ட் கொட்டுதே.. அதுக்குத்தான் கொ.ப.செ வா வந்திருக்கேன்

SurveySan said...

தலைவர் ரமேஷ் அவர்களே,

'யாரிவன் சர்வேசன்', என் போலீஸ் நண்பர்களை விட்டு அவனை சிறை வைக்கிறேன் பார்னு, கோதால எறங்கிடாதீங்க பாஸு.
அம்பேல் வுட்டுக்கறேன் ;)

தூக்கம் வருது. மீ த எஸ்கேப்பு ;))

அடிச்சு ஆடுங்க.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சர்வேசன் என் போஸ்ட்ல சமீரா வோட பழய பாட்டு போட்டிருக்கேனே பார்க்கலையா.. பாருங்க அங்க இங்க பதிவு படிக்கலைன்னா எப்படி பின்னூட்டமெல்லாம் வந்து குவியும்..

கிரி said...

:-)))

Anonymous said...

:)

ராமலக்ஷ்மி said...

You are welcome Surveysan.
படத்தை பரிசாக வழங்கி விட்டு நான் சொல்ல வேண்டிய நன்றிகளையும் நீங்களே சொல்லி விட்டிருக்கிறீர்கள்:)!

குசும்பன் said...

// சமீரா ரெட்டி, 'போந்தான்' மாதிரி இருக்காங்களாம்? அது நல்லதா கெட்டதா? கெட்டதா இருந்தா, நானும் குசும்பனும், காசு கலெக்ட் பண்ணி, இனி உங்களுக்கு பின்னூட்டம் வராத மாதிரி செஞ்சுருவோம். //

எங்கே சர்வேசன் அப்படி காசு கலெக்ட் செஞ்சா செஞ்ச காசில் ஒரு அனல்மின் நிலையம் கட்டி தமிழ்நாட்டுக்கு மின்சாரம் கொடுத்து பணக்காரன் ஆகிடலாம் அம்புட்டு காசு வேண்டும்.

Truth said...

சமீரா ரெட்டிய எதிர்கறவங்கள எதிர்த்து கட்சி ஆரம்பிக்க போறீங்களா? அதுக்கும் நானும் காசு தறேன். :)

பரிசல்காரன் said...

தலைவா..

பதிவுலகும் அரசியலாய் ரொம்ப நாளாகுது..

இங்கே நிரந்த நண்பர்களும் இல்லை. நிரந்தர எதிரிகளும் இல்லை!

(ஆனா எனக்கு நிரந்தர நண்பர்கள் அதிகம்!)

Poornima Saravana kumar said...

:)

rapp said...

//தமிழ்மண நிர்வாகிகள், ஒரு கண்டிப்பான பேராசிரியர் தொனியில் இது நாள் வரை இருந்தவர்கள். இப்ப திடீர்னு, மொக்கை போட ஆரம்பிச்சிருப்பது, சகிக்கலை. //

super:):):)

கைப்புள்ள said...

//கைப்ஸ், மொதல்ல, நீங்க உங்களுக்குத் தெரிஞ்ச ஏதாச்சும் தாலாட்டை பாடி, எங்களுக்கு போட்டுக் காமிங்க.//

புரியுதுங்க உங்க திட்டம்...லூசாப்பா நீன்னு என் பொண்ணு மனசுக்குள்ள நெனச்சதை பப்ளிக்குல எல்லார் வாய்லேருந்தும் வர வைக்கப் பாக்கறீங்க....அது நடக்காது. உங்க திட்டம் பலிக்காது.
:))

SurveySan said...

முத்துலெட்சுமி,

////பாருங்க அங்க இங்க பதிவு படிக்கலைன்னா எப்படி பின்னூட்டமெல்லாம் வந்து குவியும்..////

அவ்வ்வ்வ். :)
'வேதம் புதிது' ஸ்டைல்ல, பளார்னு அரஞ்ச மாதிரி இருக்கு. :)
இன்னிலேருந்து, ஐ ஆம், ஃபாலோயிங் யுவர் ப்ளாக், இனி மிஸ் பண்ண மாட்டேன்.

SurveySan said...

கிரி, தூயா, நன்னி!

SurveySan said...

குசும்பன்,

//அம்புட்டு காசு வேண்டும்.//

மிகச் சரி.
நிறைய, கொ.ப.செ இருக்காங்க வேர. ;)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மீத 30

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சே ஜஸ்ட் மிஸ்ஸ்...

SurveySan said...

Truth,

///சமீரா ரெட்டிய எதிர்கறவங்கள எதிர்த்து கட்சி ஆரம்பிக்க போறீங்களா? அதுக்கும் நானும் காசு தறேன். :)///

முடிவு கைவிடப்பட்டது ;)
குசும்பன் வேலைக்காகாதுன்னுட்டாரு ;)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\இன்னிலேருந்து, ஐ ஆம், ஃபாலோயிங் யுவர் ப்ளாக், இனி மிஸ் பண்ண மாட்டேன்.// அப்படியா எதோ சட்டுன்னு ஞானம் வந்து சிஷ்யரா சேர்ந்தமாதிரி சொல்றீங்க :))) நன்றி.. நன்றி..இது நல்ல வழியா இருகும்போலயே ..

SurveySan said...

பரிசல்,

///இங்கே நிரந்த நண்பர்களும் இல்லை. நிரந்தர எதிரிகளும் இல்லை!///

ஹிஹி. மிகச் சரி! :)

அப்போ, அந்த மேட்டர் சுமுகமா தீர்த்துவச்சாச்சா?

SurveySan said...

poornimasaran, நன்றி!

rapp,
//super:):):)///

நன்றி. இனி ஹிட் கம்மியானா, த.மணம் மேல பழியப் போட்டுடடலாம் ;)

SurveySan said...

கைப்ஸ்,

/////புரியுதுங்க உங்க திட்டம்...லூசாப்பா நீன்னு என் பொண்ணு மனசுக்குள்ள நெனச்சதை பப்ளிக்குல எல்லார் வாய்லேருந்தும் வர வைக்கப் பாக்கறீங்க....அது நடக்காது. உங்க திட்டம் பலிக்காது.
/////

என்னங்க இப்படி சொல்லிட்டீங்க.

ஸ்டார் சிங்கர்ல வர மாதிரி, உங்களுக்கு, சங்கதி, ராகம் எல்லாம் சொல்லித் தந்து, சூப்பரா மெருகேத்தலாம்னு பாத்தா,...

:)