அதாவது, சாப்பிட்டு முடிச்ச சில மணி நேரங்களுக்குப் பின்னும், கைமணமும், வாயில் சுவையும் விட்டு வைக்கணும்.
அந்த மாதிரியே, நல்ல படங்கள், நம்மை கொஞ்ச நேரமாவது யோசிக்க வைக்கணும்.
"மும்பை மேரி ஜான்" என்ற ஹிந்திப் படம், இந்த வகையைச் சேர்ந்தது.
மும்பையில் 2006ல் நிகழ்ந்த ரயில் குண்டு வெடிப்புகளால் சிலரின் வாழ்க்கை எப்படி பாதிக்கப்பட்டது என்ற அடிப்படையில் படம் எடுக்கப்பட்டுள்ளது.
இதில் வசீகரித்த விஷயம், எல்லாமே யதார்த்தமாக சொல்லப்பட்ட விதம். எந்த ஹீரோவும் தீவிரவாதியை விரட்டிப் பிடிக்க எல்லாம் முயற்சிக்கலை.
சாமான்ய மனிதன், சாமான்ய மனதுடன் இந்தப் ப்ரச்சனைகளை எப்படி கையாள்கிறான்னு மட்டும் அழகா சொல்லியிருந்தாங்க.
இதன் அடுத்த ப்ளஸ் பாயிண்ட்டு, படத்தின் ஆறு சாமான்யர்களின், கதையும் தனித்தனியா சொல்லப்பட்டாலும், குழப்பமோ அயற்சியோ தராமல் சொல்லப்பட்ட விதம்.
ரிட்டையர் ஆகப் போகும் ஒரு போலீஸ் ஏட்டு,
ஏட்டுடன் பணிபுரியும் பொறுப்பான கான்ஸ்டபில்,
ஒரு நல்ல பொறுப்பான தேசபக்தியுள்ள பணக்கார குடிமகன் (மாதவன்),
இஸ்லாமியரை வெறுக்கும் ஒரு 'இந்துத்வா' இளைஞன்,
சைக்கிளில் டீ விற்கும் ஒரு ஏழைத் தமிழன்,
சென்சேஷனல் செய்திகளைத் தொகுக்கும் தொலைக்காட்சி பெண் நிருபர்,
இவர்கள் ஒவ்வொருவரும் மும்பையில் அன்றாடம் எப்படி வலம்வருகிறார்கள்?
2006ன் குண்டு வெடிப்பிற்குப் பிறகு இவர்கள் வாழ்க்கை எப்படி மாற்றி அமைக்கப் படுகிறது?.
ஒட்டு மொத்த மும்பை மக்களும், குண்டு வெடிப்பை எப்படி எதிர்கொண்டு, தீவிரவாதம் தங்களை விழுங்கிவிடாமல் பார்த்துக் கொள்கிறார்கள்? இதெல்லாம் ரொம்ப சீரா சொல்லியிருக்காங்க.
படத்தின் முடிவில், ஒரு 'ஃபீல் குட்' நெகிழ்வை நமக்குள் புகுத்தி, எவ்ளோ குண்டு வேணா வைங்கடா, நாங்க லேசுல, அதிர மாட்டோம். உங்களால சில உயிர்களையும், சில உடமைகளையும் மட்டுமே தகர்க்க முடியும். மும்பைவாசிகளின் மன திடத்தை, இம்மியளவும் அசைக்க முடியாதுங்கர மெசேஜ், நச்னு சொல்லியிருக்காங்க.
ஆறு கதாபாத்திரங்களைக் கொண்டு, மேலும் பல, சமுதாயத்துக்குத் தேவையான குட்டி குட்டி மெசேஜும் சொல்லியிருக்காங்க.
புதிதாய் தொழிலில் சேர்ந்த, கான்ஸ்டபில், நேர்மையா வேலை செய்ய முடியலையேன்னு வருத்தப் படறாரு. ஏட்டையாவால், கட்டாய லஞ்சம் வாங்க வைக்கப்படறாரு. கடைசியில பொங்கி எழுந்து, நல்லவரா ஆகறாரு.
'இந்துத்வா' இளைஞன் ஆரம்பத்தில் இருந்தே எல்லா இஸ்லாமியரையும் வெறுக்கறாரு. குண்டு வெடிப்புக்குப் பின் அது இன்னும் இரட்டிப்பாகுது. ஆனா, இவர் வெறுக்கும் இஸ்லாமிய இளைஞனே இவரிடம் நட்பு பாராட்டி, ரெண்டு பேரும் ஃப்ரெண்டாகராங்க.
மும்பை வீதிகளில் டீ விற்கும் தமிழன், வளர்ந்து வரும் பொருளாதார 'வீக்கத்தை' காட்டறாரு. மும்பை மாலில், தன் மனைவி குழந்தையுடன் சென்று, அங்கிருக்கும் பர்ஃப்யூமின் விலை 10,000ரூவாய்னு கேட்டதும் ஆதங்கப்படுவதும், சேம்பிளுக்கு வைத்திருக்கும் பர்ஃப்யூமை மனைவி குழந்தைகளுக்கு அடித்து மகிழ்வதும், செக்யூரிட்டியால் விரட்டப் படுவதும் வேதனையான காட்சிகள். ஷாப்பிங் மால் ஆட்களை பழிவாங்குவதாய் நினைத்து இவர், குண்டு வெடிப்புக்குப் பிறகு, ஒவ்வொரு மாலாக தொலைபேசி, உங்க மால்ல குண்டு வெச்சிருக்காங்கன்னு மிரட்டுவது சிரிப்பை வரவழைத்தது. கடைசியில் இவர் விடுத்த தொலைபேசி மிரட்டலால் எல்லோரும் ஓடிவரும்போது ஒரு வயதான மனிதருக்கு ஹார்ட்-அட்டேக் வருவதை பார்த்ததும், தான் செய்த தவரை உணர்ந்து திருந்துகிறார்.
முக்கிய கதாபாத்திரமாய் வரும் தொலைக்காட்சி பெண் நிருபர், ஊரில் நடக்கும் கொலை கொள்ளைகளை, தேடித் தேடி படம் பிடித்து, டிவியில் போட்டுக் காண்பிக்கிறார். பாதிக்கப்பட்டவர்களின் வலி தெரியாததால் மற்றவரின் ப்ரைவஸியெல்லாம் பற்றி கவலைப் படாத யதார்த்த ஊடக ப்ரதிநிதி. குண்டு வெடிப்பில் தன் காதலன் இறந்ததும், தொலைக்காட்சி நிறுவனம், இவரையே, சென்சேஷனல் நியூஸுக்காக பயன்படுத்தும்போது, தவறுகள் புரியவருகிறது இவருக்கு.
குண்டுவெடிப்பைக் காட்டிவிட்டு, அதற்கு தீர்வு என்னன்னு தேடாம, இந்த மாதிரி எவ்ளோ ப்ரச்சனை வந்தாலும், சமாளிச்சு மேலெழ, ஒட்டு மொத்த சமுதாயத்தின் ஒற்றுமைதான் முக்கியம்னு நெத்தீல அடிச்ச மாதிரி சொல்றாரு டைரக்டர்.
ஒரு மாதம் முடிந்து, குண்டு வெடித்த நேரத்தில், மொத்த மும்பையும், தாங்கள் செய்யும் வேலையை அப்படியே போட்டுவிட்டு, இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவது, படத்தின் க்ளைமாக்ஸ்.
நெஞ்சத் தொட்டுட்டாங்க!
மும்பைக்கு ஒரு சல்யூட்!
படத்தை, கண்டிப்பா பாருங்க! உங்க கருத்தும் சொல்லுங்க!
அப்பப்ப, நாட்டுக்கு தேவையான, மெசேஜைத் தாங்கிக் கொண்டும் சில நல்ல படங்கள், இந்த மாதிரி வரணும்.
பொழுது போக்குடன் சேர்த்து, ஒரு 'நல்ல' உணர்வை அப்பப்ப எல்லோருக்கும் ஊட்டினாலே, தீவிரவாதம் எல்லாம் சில வருஷங்களில், இந்தியாவை விட்டு, தலை தெறிக்க ஓடிவிடும்.
24 comments:
mumbai meri jaan, மீனிங்,
மும்பை என் உயிர்?
btw, படிச்சது பிடிச்சுதுன்னா, கீழே, தமிழ்மண டூல்பாரில் (தெரிஞ்சுதுன்னா), ஓட்டை குத்தவும் ;)
//btw, படிச்சது பிடிச்சுதுன்னா, கீழே, தமிழ்மண டூல்பாரில் (தெரிஞ்சுதுன்னா), ஓட்டை குத்தவும் ;)//
பிடிச்சது. குத்திட்டேன். இந்த மாதிரி ஃபீல் குட் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். படம் பாக்கனும்ங்கிற ஆவலைத் தூண்டிடுச்சு உங்க பதிவு. முன்னாபாய் படம்(ரெண்டு பாகங்களும்) பாத்துட்டும் பயங்கர ஃபீல் குட்டா இருந்துச்சு.
சூப்பர் படம் சர்வேசன் இது...
என்னை ரொம்ப பாதிச்ச விஷயம் இது..அதுலயும் மாதவன் குண்டுவெடிப்புக்கு அப்பறம் டிரைநிலேயே போகாம கடைசில்ல வேற வழி இல்லாம போவாரு அப்போ அவரோட பயம் செம நேச்சுரலா இருக்கும்..கடைசில வர மும்பை மேரி ஜான் கர பழைய பாட்டும் நச்சுனு இருக்கும்...
நேரம் கெடைச்சா A Wednesday பாருங்க. இதுவும் ரொம்ப நல்ல படம் :)
கைப்ஸ், நன்னி!
///முன்னாபாய் படம்(ரெண்டு பாகங்களும்) பாத்துட்டும் பயங்கர ஃபீல் குட்டா இருந்துச்சு////
எனக்கு ஏன் முன்னாபாய் அவ்வளவா பிடிக்கலன்னா, இன்னும் புரியல :(
kamal,
rafi பாட்டதான சொல்றீங்க? நல்லா இருந்துச்சு அதுவும்.
மாதவன், திகட்டாத நடிப்ப கொடுத்திருக்காரு. மனுஷன், தான் குண்டாயிட்டாரு. :)
a wednesday, கெடச்சா பாக்கறேன்.
இதே மாதிரி ஒரு விமர்சின பதிவை பார்த்துவிட்டுத்தான் இந்த படத்தைப்பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது, நடிகர்கள் எல்லோரும் அசத்தி இருந்தார்கள். A wednesday அதயும் பார்த்திடுங்க.
சுரேகா இந்த படம் பற்றிய விமர்சனம் எழுதியிருந்தார்,அதை படித்துவிட்டு நானும் படம் பார்த்தேன்.அருமையான படம்
எ wednesday வாங்கி வைத்திருக்கிறேன்,இன்னும் பார்க்கவில்லை
Oppari, nanri! wednesday paakkanum.
Babu, Surekhas URL?
நல்லா இருக்கும் போல இருக்கே. இங்க இந்த படத்த ரிலீஸ் பண்ணல. இங்க முனியாண்டி, பழநி, அழகிய தமிழ் மகன், குருவி, காளை, ஏகன், சத்யம் போன்ற குனச்சித்திரமான படங்கள் தான் ரிலீஸ் பண்ணுவாங்க. DVD கிடைச்சா பாக்கனும். நீங்க A Wednesday படம் பாத்திருகீங்களா? அதுவும் நல்ல படம். வாய்ப்பு கிடைச்சா பாருங்க.
//இங்க முனியாண்டி, பழநி, அழகிய தமிழ் மகன், குருவி, காளை, ஏகன், சத்யம் போன்ற குனச்சித்திரமான படங்கள் தான் ரிலீஸ் பண்ணுவாங்க///
:)) iyyo paavam ;)
வர வர பாலிவுட் மேல வச்சிருந்த மரியாதையின்மை போய்க்கிட்டே இருக்கே. நம்ம ஊரு ஆளுக இதுமாதிரில்லாம் எடுக்க மாட்டாகளா../
டைரடக்கர் பேரு எல்லாம் சொல்லி இருக்கலாமுல்ல..
Dharumi,
Hindi folks are producing far more good numbers than us.
naama, varushaththukku 1 or 2 nalla padam tharom. ambududhen ;)
Nishikanth Kamat is the director. IMDB has more info.
சர்வேசன்,
எனக்கும் அந்தப் படம் மிகப் பிடித்திருந்தது. நீங்கள் சொல்லியது போல் உண்மையிலேயே யோசிக்க வைத்த படம்தான். இந்தப் படத்தைப் பற்றிய எனது பதிவு
http://nareshin.wordpress.com/2008/10/01/%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%9c%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d/
//டைரடக்கர் பேரு எல்லாம் சொல்லி இருக்கலாமுல்ல..//
தருமி சார், இந்தப் படத்தை இயக்கியது எவனோ ஒருவன் படத்தை இயக்கிய நிஷிகாந்த் காமத்.
நல்ல பம்தான் போலிக்கிறது அதே போல் ரயில் குண்டு வெடிப்பை மையபடுத்டித வெட்னஸ்டே என்ற திரைப்படம் பார்த்தேன் மிகவும் அருமை பார்த்து விட்டு சொல்லுங்கள்
jackiesekar, i saw wednesday. nasrudin has performed well. good movie.
நானும் இந்தப்படத்தைப் பற்றிப் பதிவு போட நினைத்திருந்தேன். அருமையான படம் - ஹிந்தியில் சிலவேளைகளில் இப்படி எதிர்பாராத விபத்துகள் நேர்ந்துவிடுகின்றன :-) மீடியாப்பெண்ணுக்கு தனக்கு வந்தவுடன் தான் சோகத்தை உணர்வது, அந்தத் தமிழன் மூலமாக சமூகச் சமச்சீரின்மையை கோடிட்டிருப்பது, ஹிந்துத்வா ஜேம்ஸ்பாண்டுக்கு கிடைத்த சாய் பாபா அடி, ரயில் வெறுப்பை மறக்கடிக்கும் ட்ராபிக் - பல கவிதைகள் - எங்கேயாச்சும் எல்லாரும் சேர்ந்து கைகோத்துகிட்டு க்ளைமாக்ஸ் பைட் போடுவாங்களோன்னு பயந்துகிட்டே இருந்தேன் :-) நல்லவேளையா அதை தவிர்த்திருக்காங்க!
ஒரே குண்டு வெடிப்பை மையமா வச்சு வந்த மூணு படங்கள் - மூணுமே ஸ்டார் வேல்யூ இல்லாத, கொஞ்சம் ஆப் பீட் எனச் சொல்லக்கூடிய ரேஞ்ச் - ஹிந்தி சினிமா நல்லாவே இருக்கு!
வெட்னெஸ்டே & ஆமிர் மிச்ச ரெண்டு..
நான் பொதுவா படங்கள் அதிகம் பார்ப்பதில்லை. உங்களது விமர்சனம் இப்படத்தை கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என்கிற ஆவலை ஏற்படுத்தியது. பார்த்த பின்னர் இங்கே வந்து மறுபடி என் கருத்தைப் பதிவேன்.
பாக்கலாம், ஆனா ரோஜா படத்து வசனங்கள் மாதிரி இல்லாம நல்லா யதார்த்தமா இருக்கும்னு நினைக்கிறேன். கண்டிப்பா பாக்கறேன் :):):)
//படத்தை, கண்டிப்பா பாருங்க! உங்க கருத்தும் சொல்லுங்க//
படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை இந்த குண்டுவெடிப்பு (26-11-2008) தூண்டி விட்டது.
ரெண்டுநாளைக்கு முன்னேதான் இந்தப் படம் பார்த்தேன்.
அடிபட்டு வெளியே தெறிச்சு அடுத்த ட்ராக்கில் விழுந்த ஒருவரை அந்தப் பக்கம் வந்த ரயில் அடிச்சுட்டுப்போனது பார்த்ததும் மனசு 'திக்'ன்னு ஆச்சு.
எல்லாரும் அருமையா நடிச்சுருந்தாங்க.
மீடியா பண்ணும் அட்டகாசம் மக்களுக்குப் புரியுதான்னு தெரியலை.
希望大家都會非常非常幸福~
「朵朵小語‧優美的眷戀在這個世界上,最重要的一件事,就是好好愛自己。好好愛自己,你的眼睛才能看見天空的美麗,耳朵才能聽見山水的清音。好好愛自己,你才能體會所有美好的東西,所有的文字與音符才能像清泉一樣注入你的心靈。好好愛自己,你才有愛人的能力,也才有讓別人愛上你的魅力。而愛自己的第一步,就是切斷讓自己覺得黏膩的過去,以無沾無滯的輕快心情,大步走向前去。愛自己的第二步,則是隨時保持孩子般的好奇,願意接受未知的指引;也隨時可以拋卻不再需要的行囊,一路雲淡風輕。親愛的,你是天地之間獨一無二的旅人,在陽光與月光的交替之中瀟灑獨行.............................................................................................................
有時,你覺得痛。胃痛的時候,接受它,承認這個疼痛是你的身體的一部份,與它和平共處。心痛的時候,接受它,承認這個經驗是你的生命的一部份,與它和平共處。抗拒痛的存在,只會讓它更要證明它的存在,於是你就更痛。所以,.無論你有多麼不喜歡痛的感覺,還是要接納這個痛的事實。與你的痛站在同一邊,不逃避,不閃躲,不再與你的痛爭執,如此,你的痛才會漸漸不再胡鬧,才會乖乖平息下去。.................
got the dvd yesterday. Nice movie.
truth, thanks for letting me know.
kamal could have remade this movie instead of 'the wednesday'. idhula societykku neraya nalla messages irukku.
Post a Comment