recent posts...

Wednesday, June 25, 2008

பதிவெழுத ஒரு ஜூப்பர் ஐடியா! வாங்க வாங்க!

என்னடா எழுதலாம்னு மண்டை கொடஞ்சு போகும்போதெல்லாம் Canonம், யூ-ட்யூபும் கை கொடுக்கும்.

சர்வே எடுக்கவும் இப்பெல்லாம் பெரிய மேட்டர் சிக்கரதில்லை.
தசாவதாரம் சர்வே (வலப்பக்கம் பாருங்க), இன்னும் கொஞ்ச நாளுக்கு ஓடும்.

இப்படி ரொம்ப நொந்துபோய் கெடக்கும்போதுதான், தலைக்கு மேல பல்பு எரிஞ்சுது.
ஆணி புடுங்கல், வாழ்க்கை புடுங்கல் போன்ற பல தொல்லைகள் எப்பவும் கூடவே இருந்தாலும், எங்கயோ பொறந்து, எப்படியோ வளந்து, இன்னிக்கு ஓரளவுக்கு சொகமாவே இருக்கரத நெனச்சா மலைப்பாவே இருக்கு.

நான் ஆணிபுடுங்க கத்துக்கிட்ட நிறுவனத்தின் 'We change lives' என்னும் சூளுரை (motto) இன்னிக்கு என்னைப் பொறுத்த வரை உண்மையாவே இருக்கு.

எவரெஸ்ட் சிகரத்தை தொடல, என் குடும்பத்தைத் தவிர வேற யாருக்கும் பெருசா ப்ரயோஜனமா இருந்ததில்லைன்னாலும், என்னளவில் பாத்தா, அந்த நாள் முதல், இந்த நாள் வரை கூட்டிக் கழிச்சு பாத்தா, ஒரு நல்ல முன்னேற்றம் அடைந்த மாதிரிதான் இருக்கு.

நல்லா படிச்ச சேஷாத்ரியும், படிக்கவே கொடுத்து வைக்காத அமலனும் இன்னும் அடிமட்டத்தில் இருக்கும்போது, என் முன்னேற்றம் கொஞ்சம் மலைப்பே.

இந்த 'ஓரளவு' முன்னேற்றத்துக்கு காரணமானவங்க பலர் இருந்தாலும், வாழ்க்கையில் நடக்கும் சில மிகப் பெரிய திருப்புமுனைகள்தான், நம் எதிர்காலத்தை தீர்மானித்து, நமது நாட்களை வேறு மாதிரி அமைய காரணிகளாகும்.

என்னைப் பொறுத்தவரை என் நண்பன் ஒருவனை சந்தித்த 'அந்த நாள்' ஒரு பெரிய திருப்புமுனையை அமைத்துத் தந்தது. (அதைப் பத்தி ஒரு பதிவு கூடிய விரைவில் வரும்).

நம்ம குமரனுக்கு, அவர் M.E படிக்கக் காரணமான நிகழ்வுகள், அவர் வாழ்வின் திருப்புமுனையை தந்ததாம்.

உங்களுக்கு எப்படி?

உங்கள் வாழ்வின் மிக மிக மிகப் பெரீரீரீய திருப்புமுனை எதுன்னு சொல்லுங்க. அதுக்கு காரணமானவங்க யாருன்னு சொல்லுங்க. திருப்புமுனைல, வேற பக்கம் திரும்பியிருந்தா என்ன ஆகியிருக்கலாம்னும் சொல்லுங்க. சுவாரஸ்யமா சொல்லுங்க. உண்மையே சொல்லுங்க.

பதிவெழுத ஜூப்பர் ஐடியா இதுதான்.

எல்லாருக்கும், இதைப் பத்தி எழுத, ஓப்பன் இன்விடேஷன்!

மனம் விட்டு எழுதுங்க.

உங்கள் திருப்புமுனையை அமைத்துத் தந்த அந்த சம்பவம்/நபர்களுக்கு, நீங்கள் மனமுவந்து நன்றி சொல்லும் விதமாக பதிவு இருக்கட்டும்.
அதைப் படிப்பவர்களுக்கு, "ஆஹா, நாமும் இந்த மாதிரி யார் வாழ்க்கையாவது திருப்பி விடணும்"னு தோணட்டும்.


பதிவின் தலைப்பு: "பெரீரீரீய திருப்புமுனை" என்று வைத்து, labelல் "திருப்புமுனை" வைத்தால், தன்யனாவேன்.

எழுதி முடித்ததும் உரலை இங்கு பின்னூட்டினால், எல்லாத்தையும் கோத்து, "பதிவர்களின் பெரீரீரீரீரீ...ய்ய்ய திருப்புமுனைகள்"னு ஒரு பதிவப் போட்டு வரலாற்றில் இடம்பிடிப்பேன் :)

பி.கு1: ஒருத்தர்கூட இந்த ஜோதீல ஐக்கியமாவலன்னா, என் பதிவுலக வாழ்க்கையில் இது பெரீரீரீய திருப்புமுனையாயிடும் சொல்லிப்புட்டேன்! :)

பி.கு2: "சர்வேசன், எப்படிய்யா இப்படியெல்லாம் ஐடியா வருது. ஜூப்பருப்பா" என்னும் பின்னூட்டங்களைத் தவிர்க்கவும். ப்ளீஸ் ஆல்ஸோ அவாய்ட், ஆனந்தக் கண்ணீர்ஸ்.

பி.கு3: இதைப் படிக்கும் வாசகர்கள், உங்கள் அபிமான பதிவர்களிடம், "You gotta do this"னு இந்த உரலை தெரியப் படுத்துங்கள்! :)

பி.கு4: சிறிலின் அறிவியல் சிறுகதைப் போட்டி - பங்கு பெற மறவாதீர். பரிசெல்லாம் தருவாரு. :)

17 comments:

SurveySan said...

ஸ்ஸ்ஸ் நம்ம இடப்பக்க hall-of-fame அன்பர்கள் அனைவருக்கும், "you gotta do this" அனுப்பியாச்சு. :)

கூடுதுறை said...

நல்ல திருப்புமுனை....

இனி தமிழ்மணம் பக்கம் வரமாட்டேன்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பதிவை விட பின்னூட்டம் சூப்பர்..
நானெல்லாம் ஹோம் மேக்கர்லாம் இன்னைக்கு இருக்கும் நல்ல வாழ்க்கைக்கு .. நிச்சயதார்த்தத்தைத் தான் சொல்லனும்.. திருப்புமுனை.. இல்லாட்டி டில்லிக்கு வந்து இப்படி பதிவு போட முடியுமா.. :))

SurveySan said...

கூடுதுறை,

//நல்ல திருப்புமுனை....

இனி தமிழ்மணம் பக்கம் வரமாட்டேன்//

பயப்படாதீங்க. நான் சொன்னவுடனே தொப்புக்கடீர்னு குதிச்சிட மாட்டாங்க. மெதுவாதான் அரங்கேறும் :)

SurveySan said...

//நிச்சயதார்த்தத்தைத் தான் சொல்லனும்.//

அதுவும் ஒரு திருப்புமுனைதான் :)
ஆனா, அதை விட பெரிய திருப்புமுனையும் இருக்குமே?

We The People said...

நான் பாட்டுக்கு சிவனேன்னு ஒதிங்கி தானே இருந்தேன், ஏன் தல வம்படியா திரும்பவும் இழுத்துபோடறீங்க!

இந்தமாதிரி மாதிரி கதை கேட்டாலே நம்மால எழுதாம கண்ட்ரோல் பண்ணமுடியாதே :(((

pudugaithendral said...

கேட்டுப்புட்டீங்க..
போடாட்டிப்போனா எப்படி!

பதிவு போட்டுட்டேன்.

http://pudugaithendral.blogspot.com/2008/06/blog-post_26.html

Sathiya said...

//நல்ல திருப்புமுனை....
இனி தமிழ்மணம் பக்கம் வரமாட்டேன்//
:)))
பதிவு போட இப்படி ஒரு ரோசனையா. நல்ல ஐடியா கொடுத்தீங்க. நன்றி!.

Boston Bala said...

ஏன் "You gotta do this"னு சொல்லணும் ;)

'எனக்காக இதை நீங்க செஞ்சீகன்னா புண்ணியமாப் போவும்'னு கேட்க வைக்கலாமே ;)

SurveySan said...

//இந்தமாதிரி மாதிரி கதை கேட்டாலே நம்மால எழுதாம கண்ட்ரோல் பண்ணமுடியாதே //

adichu aadunga :)

SurveySan said...

//பதிவு போட்டுட்டேன்.
//

kalakkittteenga :)
innum padikkala. padichuttu karuths solren.

SurveySan said...

boston bala,

//ஏன் "You gotta do this"னு சொல்லணும் ;)
'எனக்காக இதை நீங்க செஞ்சீகன்னா புண்ணியமாப் போவும்'னு கேட்க வைக்கலாமே ;)
//


Done! :)

SurveySan said...

//பதிவு போட இப்படி ஒரு ரோசனையா. நல்ல ஐடியா கொடுத்தீங்க. நன்றி!.//

kalakkunga udane :)

நெல்லை சிவா said...

'எடுத்து நான் விடவா..என் பாட்டை..தோழா.தோழா..குடிக்கத்தான் உடனே கொண்டா நீ சோடா..சோடா'ன்னு பாட வச்சீட்டீங்க போங்க.

சோடா குடிக்கிற அளவுக்கு பெரிசா போயிடுச்சு பதிவு..படிச்சுட்டு சொல்லுங்க..

SurveySan said...

நெல்லை சிவா, படித்தேன், கருத்ஸும் அங்கயே சொல்லிட்டேன்.

அருமை. டச்சிங்கா இருந்தது. :)

சரவணகுமரன் said...

சர்வேசன்,

போட்டாச்சி... போட்டாச்சி... :-)

http://kumarankudil.blogspot.com/2008/06/blog-post_27.html

பிரேம்குமார் said...
This comment has been removed by the author.