recent posts...

Monday, June 16, 2008

SSM ~ Same Sex Marriage ~ கேயானவர்!

California'ல ஓரினத் திருமணங்கள் சட்ட ரீதியா அனுமதிச்சிருக்காங்க. பல வருஷ போராட்டத்துக்குப்பரம், இங்க இருக்கர 'gay' மக்களுக்கு இந்த அங்கீகாரம் கெடச்சிருக்கு.

அமெரிக்கா வரும் வரைக்கும், இந்த மாதிரி ஒரு விஷயம் உலகத்தில், இருக்கரதே தெரியாமத்தான் இருந்தேன். ஆனா, திருநங்கைகள் பத்தி மட்டும் ஒரு இளக்காரமான பார்வை இருந்தது. அதுவும், இணையத்துக்கு வந்த பிறகு, அவங்க பக்க சோகங்களும், உண்மைகளும் தெரிஞ்சதும் மாறியிருந்தது.

சில வருஷங்களுக்கு முன், அமெரிக்கா வந்ததும், பசங்க கொடுத்த முதல் 'கல்ச்சர் ஷாக்', "மச்சி, அவன் கிட்ட சாக்கிரதையா இருந்துக்கோ, ஆளு gay"ங்கரதுதான்.
"அப்படீன்னா?"ன்னு அப்ராணியா கேட்ட எனக்கு, தேவைக்கு அதிகமாவே வெளக்கம் கொடுத்து, உஷார் படுத்தினாங்க.

அடடா, இப்படியெல்லாம் கூட இருக்காங்களான்னு வியப்பா இருந்தது.

உண்மைகள் தெரியாமல், சீ-சீ-இந்தப் பழம் புளிக்கும்னு பல விஷயங்கள் நாம ஒதுக்கி வைப்பதுண்டு. அந்த மாதிரி ஒரு விஷயம் தான் இந்த கேயிசம்.

நான் வேலை செய்த அலுவலகத்தில், எனக்குத் தெரிஞ்சு ரெண்டு பேரு, இந்த வகையராவா இருந்தாங்க. ஒருத்தர், பல வருஷமா, ஜோடியுடன் வாழ்பவர்; இன்னொருவர் திருமணம் ஆகி, குழைந்தையெல்லாம் பிறந்த பிறகு, தன் உண்மை நிலை அறிந்து, கேயானவர்.

இவங்க ரெண்டு பேரும், தங்கள் உண்மை நிலையை மறைச்சு வச்சதெல்லாம் இல்லை. ரொம்ப ஓப்பனாவே எல்லாருக்கும் தங்களின், கேயிசத்தை தெரிவித்து வாழ்ந்தவங்க தான்.

ஆரம்பத்தில், எனக்கென்னமோ, இதெல்லாம் இவனுங்க கொழுப்பெடுத்து இல்லாத ஒண்ணை மனதில் கற்பித்துக் கொண்டு, ஒரு பாசாங்கு வாழ்க்கை வாழர மாதிரி பட்டுது. என்ன சுத்தி இருக்கும் நண்பர்களில் பலரும் அவ்வாரே நெனைச்சுக்கிட்டு இருந்தாங்க.

ஆனால், சில வருடங்கள் இவங்களோடயெல்லாம் ஒண்ணா வேலை செஞ்சு, அவங்க பழக்க வழக்கங்களையும், அவங்க மேனரிஸம் எல்லாம் பாத்த பிறகு ஒரைச்ச ஒரு விஷயம், இந்த கேயிசம், இயற்கையின் கோளாறான விளையாட்டில் ஒன்றென்பது.

இது ஒரு பயோ-நிலை ரீதியான உடலில் ஏற்படும் மாற்றத்தினால் விளையும் நிகழ்வு என்பது, சமீபத்தில் நிரூபணமாயுள்ளதாம்.
இன்னிக்கு வந்த ஒரு செய்தி, இந்த மாதிரி இருப்பவர்களின் மூளை ஸ்கேன் செய்ததில், கே-ஆண்களின் மூளையும், நார்மல்-பெண்களின் மூளையிலும் பல ஒற்றுமைகள் இருக்காம்.
அதே மாதிரி, லெஸ்பியன்-பெண்களின் மூளையும், நார்மல்-ஆண்களின் மூளையிலும் பல ஒற்றுமைகள் இருக்காம்.
இவர்களின், செக்ஸுவல் நாட்டத்தை இந்த மூளை ஒற்றுமைகள் குறிப்பிடுதாம்.

இயற்கையின் பலகோடி கோளாறுகளில் இதுவும் ஒண்ணு போலயிருக்கு.
கோளாறுகளினால் ஆன இந்த விசித்திரங்கள் கொஞ்சம் கசப்பான விஷயம் தான்.
ஆனா, இதற்குள், வேறு வழியில்லாமல், இழுக்கப்படுபவர்களின் நிலமை ரொம்பக் கஷ்டம்.

அமெரிக்கா மாதிரி, மெத்தப் படித்த 'அதிமேதாவிகள்' வாழும் நாட்டிலும் கூட, இது ஒரு கேலியான விஷயமாகவே பாக்கறாங்க.
மற்ற நாடுகளில், இந்த நிலையில் மாட்டிக்கிட்டவங்க நெலமை ரொம்பவே கஷ்டம்.

இவங்களும், சகஜ நிலை வாழ்க்கைக்குள் வந்து, சாதாரணமாய் வாழ, சில நூறு ஆண்டுகள் ஆகலாம்.

ஆனா, அதுக்குள்ள, மாத்திரை மருந்து கண்டுபிடிச்சுடுவாங்க.
பிறப்பிலேயே, இதக் கண்டுபிடிச்சு, பெற்றோர்கள், தங்கள் சிசுக்களை, இப்படியோ, அப்படியோ மாற்றும் நிலை கூட உருவாகலாம். யாரு கண்டா?

என்னங்க சொல்றீங்க?

6 comments:

Anonymous said...

remove the picture.

SurveySan said...

anony,

Get used to it :)

G.Ragavan said...

இங்க நெதர்லாந்து வந்தப்போ அப்பட்டமாகத் தென்பட்ட விஷயங்கள்ள இதுவும் ஒன்னு.

ஆனா இங்க அதப் பெரிய விஷயமாவே எடுத்துக்கிறதில்லை. அலுவலகத்துலயே இருக்காங்க. சரி. அது அவரவர் விருப்பம். தலையிட நமக்கு உரிமையில்லை.

ஆனா பிறப்புலயே இப்பிடியிருக்குங்குறது உண்மையிலேயே புதிய செய்தி.

ஒரு கேள்வி. இங்க நூத்துக்குப் அஞ்சு பேரு ஓரினச்சேர்க்கைன்னு வெச்சுக்குவோம். இது பிறப்பால வர்ரதுன்னா... இதே விகிதாச்சாரம்...அல்லது கிட்டத்தட்ட இதே அளவு.... இந்தியாவுலயும் இருக்கனும்ல? அவங்கள்ளாம் என்ன பண்ணுவாங்க?

நீங்க போட்டிருக்குற படத்தை மாத்தனும்னு தேவையில்லை. அன்பைப் பரிமாறிக்கொள்வதில் முத்தம் முதலிடம். இருக்கட்டும். தப்பில்லை.

SurveySan said...

இந்தியாலயும் இதே அளவு இருக்கணுங்கர அவசியம் இல்லைன்னே தோணுது.
இது மரபணு சம்பந்தப்பட்ட விஷ்யமா? இல்ல, மற்ற பழக்கவழக்கங்களால் அமையும் மாற்றமா? தெரியல. போகப் போகத் தெரிய வரலாம்.

இன்னொரு விஷயம், இந்தியால, இந்த ப்ரச்சனை உண்மையிலேயே பலருக்கு இருந்தாலும், இதை இனம் கண்டுகொள்லாமல், அவங்க 'நார்மலா' வாழத்தான் முயற்சி பண்ணுவாங்கன்னு தோணுது.

VSK said...

ஒரு சின்ன திருத்தம் சர்வேசன்!

//இதை இனம் கண்டுகொள்லாமல், அவங்க 'நார்மலா' வாழத்தான் முயற்சி பண்ணுவாங்கன்னு தோணுது.//

அவங்களை நார்மலா வாழத்தான் வற்புறுத்தும் நம் சமூகம். அவங்களும் மறைச்சே வாழுவாங்க.
இது நானே பார்த்த உண்மை.

இன்னொன்று. இவர்களால் இரட்டை நிலை வாழ முடியும். அதாவது ஒரு பெண்ணுக்கு சுகம் கொடுத்துக் கொண்டே ஒரு ஆணுடனும் கூட!

மேற்குலகில் அதை விரும்புவதில்லை.

இதுதான் வித்தியாசம்!

SurveySan said...

//இன்னொன்று. இவர்களால் இரட்டை நிலை வாழ முடியும். அதாவது ஒரு பெண்ணுக்கு சுகம் கொடுத்துக் கொண்டே ஒரு ஆணுடனும் கூட!//

very true.
ஆனா, இரட்டை நிலை வாழ்க்கை வெறும் "கேயானவர்கள்" மட்டும் செய்வதல்ல. 'நார்மலா' இருக்கர பலரும் செய்யும் extra-marital affairsதான் தினம் தினம் படிக்கறோமே :)


வருகைக்கு நன்னி!