recent posts...

Wednesday, January 09, 2008

எழுதியதில் பிடித்தது - விளம்பர விளையாட்டு

எல்லாரும் ஆளுக்கொரு வெளையாட்டு வெளையாடிட்டிருக்காங்க. மொக்க டாக், படம் புடிச்சதுல புடிச்சது, அது இதுன்னு ஜாலியாதான் இருக்கு.

நானும் நேத்துதான் ஒரு வெளையாட்ட வெளையாடிட்டு வந்தேன்.

எழுத ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஓடிப்போயிடுச்சு. ஆரம்பிச்ச மொத நாள்ள இருந்த எழுத்து பொலம தான், இன்னிக்கும் இருக்கு.
'வெற்றி' வேர வந்து திட்டிட்டுப் போயிட்டாரு - தங்கிலீஷ கலக்காம எழுதினாதான்யா நீ உருப்படுவன்னு. அதுவும் சரிதான். இந்த வருஷத்துல கொஞ்சமாவது மெனக்கெட்டு எழுதணும்னு முடிவு.

ஜிம்முக்கெல்லாம் போயி ஒடம்ப தேத்தலாம்னு முடிவு.
போன வருஷம் வாங்கின கிட்டார தூசு தட்டி, ரெண்டு மூணு பாட்டாவது வாசிக்கக் கத்துக்கலாம்னு முடிவு.
ரோம் பாக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. இந்த வருஷம் அது நிறைவேத்தணும்னும் ஒரு முடிவு.

இப்படி பல ஆசைகள் இருக்கு இந்த வருஷம், அதனால, எழுத்துப் பணியை (ஹிஹி), கொஞ்சம் ஸ்லோ டவுன் பண்ணிட்டு, மத்தத கவனிக்கலாம்னும் முடிவு. (நடக்குதான்னு பாப்போம்). பதிவுகள பாக்கலன்னா, கைகால் எல்லாம் ஒதருதே, எல்லாருக்கும் அப்படிதானா? :)

இப்டீ யோசிச்சுக்கினு இருக்கும்போது தோணிச்சு, 'ஒரு வருஷமா இன்னாத்த அப்படி எழுதிட்டோம்னு' -ஆர்க்கைவ்ல பாத்தா, ஒண்ணும் பெருசா இல்ல.

எல்லாரும், என்னமா எழுதராங்க, நமக்கு ஏம்பா பெருசா எழுத வரலன்னு ஒரே பீலிங்.
சிறில் ஒரு கவிதை எழுதி அனுப்புன்னாரு. ரைமிங்கா முடியர மாதிரி கவிதைய எழுதிட்டு படிச்சா, எனக்கே காறித்துப்பணும் போல இருக்கு. அப்படி இருக்கு நம்ம பொலம.

ஹ்ம். இந்த ஜென்மத்துல எழுத்தாளனாக முடியாதுன்னு புரிஞ்சுடுச்சு. நமக்கு இந்த ஜென்ம சாப்பாடு, ஆணி புடுங்கரதுலதான்னு தெளிவாயிடுச்சு.

சரி, ஏன் இந்த பொலம்பல்? இப்ப என்ன விளையாட்ட பத்தி சொல்ல வரன்னுதான கேக்கறீங்க?

ஒரு வருஷம் ஓடிப்போச்சே, இந்த ஒரு வருஷத்துல, எழுதிக் கிழிச்சதுல, எது ரொம்பப் பிடிச்சதுன்னு சொல்லணும். அது ஏன்னும் சொல்லோணும். இதுதான் வெளையாட்டு.

யாரும், இந்த விளையாட்ட இதுவரைக்கும் ஆரம்பிச்சிடலயே? காப்பிரைட் நம்மளுதுதானே?

மொதல்ல, நான் எழுதியதில் பிடிச்சது எதுன்னு சொல்லிட்டு, இன்னும் 5 எழுத்தாளர்களை, இதே இக்கட்டுல மாட்டி விடணும்.

2007ல் என் பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்தது:

எட்டெல்லாம் பத்தாது சார்... அதியப் பிறவி நான்

என்ற எனது சுயசரிதைப் பதிவு தான்.

எனக்கு ஏன் இது ரொம்ப பிடிச்சதுன்னா, என் மற்ற பதிவுகளை போல் ஈ ஓட்டாமல், பதிவு போட்டதும், சட் சட்னு பின்னூட்டமா வாங்கித் தள்ளிச்சு.
என் சுயசரிதையில் இடம்பெற்ற சம்பவங்களில் சில, பல பதிவர்களை ஊக்கப் படுத்தியதாகவும் கேள்விப் பட்டேன்.
எனக்கே கூட இப்ப பதிவ படிக்கும்போது, மெய் சிலிர்க்குது. நானா இப்படின்னு.

என் பெருமைகள் போதும், இனி அவங்கவங்க எழுதினதுல, அவங்கவங்களுக்குப் பிடிச்சத சொல்லச் சொல்லி ஒரு 5 பேரை கூப்பிடறேன்.
ஐவர் என்றதுமே நினைவுக்கு வருவது, நமது 'நச்' நடுவர் குழுதான். ஆட்டையில் சேரும் படி கேட்டுக்கறேன் ஐயாக்களே.
பதிவுக்கு "எழுதியதில் பிடித்தது - தொடர்"னு label பண்ணிடுங்க.

உங்க 'எழுதியதில் பிடித்தது' பதிவ போட்டதும், இங்க வந்து ஒரு பின்னூட்டம் போட்டுடுங்க. நான் எல்லாத்தையும் கோத்து வைக்கப் போறேன், ஒரே பக்கத்துல. நன்றி!

1) CVR
2) தருமி
3) வெட்டிப்பயல்
4) பாஸ்டன் பாலா
5) ஆசீஃப் மீரான்


நல்லாருக்கா ஐடியா?
உங்க சிறந்த பதிவை விளம்பரப் படுத்த ஒரு சான்ஸா இத எடுத்துக்கிட்டு கலக்குங்க :)

11 comments:

SurveySan said...

சீண்ட மாட்டீங்களே.

டெஸ்ட் கமெண்ட் :)

தருமி said...

"எழுதியதில் (சனி) பிடித்தது - தொடர்"

என்று எழுதலாமாங்க...?

வெட்டிப்பயல் said...

ஆஹா...

இந்த விளையாட்டு சூப்பரா இருக்கே :-)

Anonymous said...

kandippa seenda maattom

தென்றல் said...

ஒண்ணே ஒண்ணு தான ;)

/சீண்ட மாட்டீங்களே./

;)

SurveySan said...

Dharumi,

//"எழுதியதில் (சனி) பிடித்தது - தொடர்"
என்று எழுதலாமாங்க...?//

ஹீ ஹீ. நீங்களே இப்படி கேட்டா எப்படி? நான் எழுதனதெல்லாம் அப்பரம் என்ன பிடிச்சு அலையும் ;)


வெட்டி, சூப்பராதான் இருக்கும். ரூம் போட்டு யோசிச்சேனுல்ல ;)


தென்றல், இப்போதைக்கு ஒண்ணு. தேவப்பட்டா ஜாஸ்தி ஆக்கிக்கலாம் :)

அனானி, நெக்குலு?

CVR said...

Tag பதிவு போட்டாச்சு அண்ணாச்சி!!

Boston Bala said...

நிரம்ப சிந்தித்து, வெட்டி ஒட்டியதைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.

எழுதினால்தான் பதிவா :)

இங்கே

அழைப்புக்கும் வாய்ப்புக்கும் நன்றிகள் பல :)

Anonymous said...

http://blog.balabharathi.net/?p=74

பேரா. தருமியின் சொல்லுக்கு அடி பணிந்து..

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பல வாசகர்கள் + பதிவர்கள் ஒருமுனைப்பாகச் சொன்னது; எனக்கும் மிகப் பிடித்தமான பதிவாக...இதோ சர்வேசனுக்கு சமர்ப்பணம்! :-)

Tag-ஐப் போட்டாச்சுங்க அண்ணாச்சி!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Post a Comment (not moderated)//
ன்னு சொல்லிட்டு, மாடரேட் செய்யுதுங்களே அண்ணாச்சி! என்னாச்சி? சர்வேசன் சொன்ன சொல்லு மீறலாமா? :-)

முந்தைய பின்னூட்டத்தின் சுட்டி - Tag பதிவின் சுட்டி தான்!
2007 Best Kanna Best-இன் சுட்டி இதோ: அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்