நில்லுங்க. சௌக்யமா?
முக்கியமான ரெண்டு விஷயம் சொல்லப் போறேன் (ரெண்டாவது அதி முக்கியம்). காது கொடுத்து கேளுங்க.
மொத மேட்டரு. தலைப்பின் முதல் வார்த்தையப் பத்தி ~ அதாவது, பாட்ஷா காரு பத்தி :)
பாட்ஷா பெருசா, சிவாஜி பெருசான்னு வச்ச சர்வேல, பாட்ஷா காரு பிச்சு ஒதரிட்டாரு.
நீங்களே கீழ பாருங்க. வாக்காதவங்க, வலது பக்கத்துல இருக்கர பொட்டியில வாக்குங்க.
ஷங்கருக்கு இந்த சர்வே ரிஜல்ட்ட அனுப்பலாம்னு இருக்கேன் :)
ஷங்கரின் முகவரி தெரிஞ்சவங்க பின்னூட்டுங்க. நன்னி :)
ரெண்டாவது, ரொம்ப முக்கியமான மேட்டரு.
என்னடா நம்ம ஊரு இப்படி இருக்கே, இப்படியே பூடுமான்னு ஒரே கவல.
சும்மா பொலம்பி ஒண்ணும் ஆகப் போரதில்லன்னு ஒருத்தர் பின்னூட்டினாரு.
இன்னொருத்தர், பொலம்பி, 'அரிப்பை' சொரிஞ்சு விட்டுக்கலாம், ஆனா, திரும்ப அவனவன் அவனவன் வேலையப் பாக்கப் போயிருவான்னு பின்னூட்டினாரு.
இன்னொரு அனானி, ஒரு நல்ல ஐடியாவ சொன்னாரு. பொலம்பரதோட நிக்காம, இணையம் தந்த வசதியில் ஏதாவது பண்ணலாமேன்னு.
வளத்துவிட்ட சமூகத்துக்கு என்ன பண்ண முடியும்? வரிஞ்சு கட்டிகிட்டு களத்துல எறங்கி பொரட்சி எல்லாம் என்னால பண்ண முடியாது. வருஷத்துக் ஒரு தரம் உண்டியல்லயும், சில dot orgக்கும் கொடுக்கர காசுல ஒண்ணுமே ஆகப் போரதுல்ல.
அதனால, ஒரு முடிவு பண்ணிட்டேன்.
கூடிய விரைவில் ஒரு இணைய தளம் தொடங்கலாம்னு முடிவு. நம்ம அறிவ ஒழுங்கா யூஸ் பண்ணி, சுலபமா செய்யக் கூடியது இது ஒண்ணு தான்.
இணைய தளத்தில், நம் ஊரில் இருக்கும் ப்ரச்சனைகளை (civic problems) மாநிலம், நகரம், ஊராட்சி, பேரூராட்சி, MLA தொகுதி, MP தொகுதி, வட்டம் வாரியா அரங்கேற்றலாம்.
ஒவ்வொரு ப்ரச்சனைக்கும், ப்ரச்சனை சார்ந்த புகைப்படங்கள், வீடியோ போன்ற வகையராக்களை சேர்த்து, நல்ல அடித்தளம் நாட்டலாம்.
மாநில, நகர, தொகுதி, வட்டம் வாரியாக report தயாரித்து, எங்கு ப்ரச்சனைகள் அதிகமாக உள்ளது என்ற சார்ட் எல்லாம் கொடுத்து, ஒரு உபயோகமான தளமாக மாற்றலாம்.
இன்னும் படிப்படியா நறைய பண்ணலாம், ஆனா மொதல்ல ஆரம்பிக்கணும் :)
தனியாளா இதப் பண்ண முடியாது. PhaseI நான் பண்ணி முடிச்சப்பரம், உங்கள்ள சிலர உதவிக்கு அழைக்கிறேன். :)
இப்ப உங்க உதவி தேவை. தளத்துக்கு என்ன பெயர் வைப்பது?
.ORG ஆ இருக்கணும். பெயர் availableஆ இருக்கணும் :)
(availability இங்க பாத்தா தெரியும் http://smallbusiness.yahoo.com/domains/ )
பெயர் catchyயா இருக்கணும், நம் எண்ணத்தை ப்ரதிபலிக்கணும்.
நம்ம ஊரின் ப்ரதிப்லிப்பும் பெயரில் இருக்கணும் - (உ.ம் samachar.com)
janaganamana.org பாத்தேன் - ஆனா, already taken.
myindia.org பாத்தேன் - ஆனா, அதுவும் taken.
fixmyindia.org - எப்படி இருக்கு?
நல்ல பேரா யோசிச்சு சொல்லுங்க.
அப்படியே, சிம்பிளா ஒரு லோகோ வரஞ்சு அனுப்புங்க பாக்கலாம் (உ.ம் இந்திய வரை படத்து மேல, ஒரு band-aid ஒட்டர மாதிரி :) ).
இது எப்படி இருக்கு?

நம்மால முடிஞ்ச ஏதாவது ஒரு மாற்றம் செய்வோம்.
உதவிக்கு நன்றி!
ஐ ஆம் சீரியஸ் - இந்த தீவாளிக்கு ரிலீஸ் :)
பி.கு: உங்க பதிவுல இதப் பத்தி எழுதி, உங்க பெயர் suggestion அங்கயும் சொல்லலாம். எனக்கும் வெளம்பரம் கெடச்ச மாதிரி இருக்கும். நன்னி! :)