படம்தான் புடிக்க முடிஞ்சது. புடிச்சு கீழ போட்டிருக்கேன்.
என் சொந்தக்காரர் ஒருத்தரோட குட்டிப் பையன் (அஞ்சாங்கிளாஸ்) எங்க வீட்டுக்கு வந்த போது, இத்த கைல கொடுத்து, எங்க இத solve பண்ணு பாக்கலாம்னு சொன்னேன்.
அவனும், ஒரு மூலைல ரொம்ப நேரமா ஒக்காந்து, அப்டீ இப்டீன்னு திருப்பிப் பாத்தான்.
நாங்க, அவனப் பத்தி மறந்து, மத்த கதையெல்லாம் பேசிட்டிருந்தோம்.
ஒரு அரை மணி நேரம் இருக்கும், என்னடா முடிச்சிட்டியான்னு கேட்டேன். ஹாங் முடிச்சிட்டேன்னான்.
ஆச்சரியமாயிடுச்சு எனக்கு, அட, சின்னப் பையன் முடிச்சிட்டான், நம்மளால முடியலையேன்னு.
வாங்கிப் பாத்தா, எல்லாம் சரியா இருந்துச்சு.
ரொம்ப, நொந்துப் போயிட்டேன்.
கொஞ்ச நேரம் போச்சு, நானும், எங்க சொந்தக்காரரும், ரொம்ப புளகாங்கிதம் அடஞ்சு, இந்தக் காலத்துப் பொடிசுங்க, சூப்பர்பான்னு பேச ஆரம்பிச்சிட்டோம்.
பயல் எங்களையே மாத்தி மாத்தி பாத்தான்.
கெக்கேபெக்கேன்னு சிரிக்க ஆரம்பிச்சான்.
ஏண்டா என்ன ஆச்சு?ன்னேன்.
நான் ஒழுங்கா fix பண்ணல, கலர் ஸ்டிக்கர பிச்சு, மாத்தி மாத்தி ஒட்டிட்டேன்னான்.
அடக் கடங்காரா, அப்பனையே மிஞ்சிட்டியேடான்னு நெனச்சுக்கிட்டென்.
இந்தக் காலத்துப் பசங்க இருக்காங்களே. என்ன கொடுமைங்க இது?
இந்த Rubiks cubeஐ, 9.56 விநாடிகளில் solve செஞ்சதுதான், இதுவரை உள்ள guinness recordஆம்.
இந்த Rubiksஐ, 10 விநாடிகளில் செஞ்சு முடிச்சேன், கண்ணைக் கட்டிக்கிட்டே செஞ்சு முடிச்சேன்னெல்லாம் பல காமெடி வீடியோக்கள் யூ.ட்யூபில் இருக்கு.
அதுல ஒண்ணு கீழ போட்டிருக்கேன். நல்ல தமாஷ்!
படங்கள் எப்படி?



பி.கு: தசாவதாரம் பதிவு படிக்காதவங்க படிக்க மறவாதீர். உங்கள் பேராதரவு மிக முக்கியம்.