தங்கமணிகளுக்கு தங்கமணி என்று பெயர் தந்த படம் அக்னி நட்சத்திரம். ஜனகராஜு, 'தங்கமணி ஊருக்கு போயிட்டா எஞ்சாய்'ன்னு கத்திக்கிட்டு அலப்பறை பண்ணுனது எல்லாருக்கும் ஞாபகம் இருக்கும்.
தங்கமணி ஊருக்கு போயி, தனியா கொஞ்ச நாட்கள் கெடைச்சா நல்லாதான் இருக்கும்னு, எல்லாருக்கும் தோன்றுவது இயல்பே (இல்லியா?).
சில உறவுகளையும் நட்புகளையும் காப்பாத்திக்க 'distance is good'னு சொல்லுவாங்க. எப்பவுமே இல்லன்னாலும், கொஞ்ச நாள் இப்படி விலகி 'distance'டா இருந்தா, உறவுக்கு உறம் போட்ட மாதிரி, "பிரிந்தவர் மீண்டும் சேர்ந்துவிட்டால்"னு டூயட் பாடர அளவுக்கு ஒரு வலு கிட்டும். உறவு கெட்டியாகும். பாசத்துக்கு பவர் கிட்டும். வாழ்க்கை மேம்படும்.
நானும் பலமா கனாக் கண்டுக்கினுதான் இருந்தேன்.
என்னென்னமோ பிளானெல்லாம் போட்டேன். அட்வான்ஸ்டா யோசிச்சு, நச் போட்டியெல்லாம் கூட ஆரம்பிச்சு வச்சேன். தெனம் ஒரு பதிவு 'தங்கமணி இல்லாத நாட்கள் 1,2,3,4,5...'ன்னு எடுத்து ஒரு காமெடிக் கதம்பமா தொடுக்கலாம்னும் நெனச்சேன்.
அந்த நாளும் வரத்தான் செய்தது.
ஆனா பாருங்க, என்ன மாயமோ தெரீல, என்ன கொடுமையோ புரீல, 'தங்கமணி ஊருக்கு போயிட்டா' எஞ்சாய்னு கத்திக்கினே ஏர்போர்ட்லேருந்து வீட்டுக்கு வந்தவன், காலியா இருக்கர வீட்டை பாத்ததும் ஆஃப் ஆயிட்டேன்.
கொடுமை அதோட நின்னுதா? ராத்திரி எட்டு மணிக்கு டாண்ணு பசிக்குது. கொஞ்ச நாளைக்கு, 'ஸ்டாக்'ல இருக்கர தோச மாவையும், 'சாம்பாரையும்' வச்சு ஓட்ட முடிஞ்சது.
அப்பாலிக்கா, சாம்பார் போரடிச்சு போய், சமைக்க வேண்டிய கட்டாயம்.
கொடுமைல பெரும் கொடுமை, இந்த பாத்திரம் தேய்கிரது. என்னதா டிஷ் வாஷரெல்லாம் இருந்தாலும், கைல தேச்சு வச்சாதான் எல்லாம் வெளங்குது.
காலைல எழுந்து ப்ரேக்ஃபஸ்ட்டையும் நாமளே பண்ணிக்கிட்டு, மதியானத்துக்கும் எதையாவது ஏற்பாட்டை பண்ணிக்கிட்டு, பொட்டிய தூக்கி ஆஃபீஸுக்கு போலாம்னு ஷூவை தேடினா, ஸாக்ஸை காணும். தொவைக்க வேண்டியதெல்லாம் அப்படியே கெடக்குது.
திரும்ப டயர்டா சாயங்காலம் வூட்டுக்கு வந்தா, சாப்பாட்டை ரெடி பண்ணவே எட்டு ஒம்போதாயிடுது. இதுல எங்கேருந்து வலைய மேயரது? பதியரது?
இந்த நேரம் பாத்து ஆஃபீஸ்லையும் ஆணியப் புடுங்க்கோ புடுங்குன்னு புடுங்க வுடறாங்க. சிவாஜிய ப்ராஜக்ட் மேனேஜராக்கி கிண்டலடிச்ச வெனை.
வார நாட்களாவது பரவால்ல, ஆஃபீஸ், ஆணி, சமையல்னு ஓடிடுது.
வீக் எண்டு கொடுமையிலும் கொடுமை.
இன்னும் எப்படித்தான் மிச்சம் இருக்கர நாட்களை ஓட்டரதுன்னு நெனச்சா மேல் மூச் கீழ் மூச் வாங்குது. யார் கண்ணு பட்டுதோ ?
நான் 'எஞ்சாய்'னு கத்தரேனோ இல்லையோ, என் சுற்றமும் நட்பும், 'சர்வேசனின் தங்கமணி ஊருக்கு போயிட்டா, எஞ்சாய்'னு, லைன் கட்டி நிக்கரானுவோ.
வூட்ல, கை கட்டி வாய் பொத்தி, ஜெயில் கைதி வாழ்க்கை வாழர 'அடக்கமான' ரங்கமணிகள் இவர்கள்.
பாவம், அவங்களாவது 'எஞ்சாய்' பண்ணட்டும்னு, என் தனிமையை பல்லக் கடிச்சுக்கிட்டு, பொறுத்துக்கிட்டு தியாகச் சுடரா மாறிட்டேன்.
மெழுகுவத்தி எரிகின்றது...
தனிமை கொடுமை.
தங்கமணிகள் இனிமை.
ஹாப்பி வெள்ளி! :)