மின்னலே முதல், வாரணம் ஆயிரம் வரை அனைத்து கௌதம் மேனன் படங்களும், என் பார்வையில், தரமானவை. ஒரு தனித் தன்மையுடன் தன் முத்திரையை தொடர்ந்து பதித்து வருகிறார் கௌதம். விண்ணைத்தாண்டி வருவாயா இங்க ரிலீஸ் ஆன அன்னிக்கே பாக்கணும்னு திட்டம் இருந்தது. ஹாரிஸுக்கு பதிலா ரஹ்மானை போட்டதில், ஹாரிஸின் பளிச் ஹிட் இல்லாத மாதிரி தெரிந்தாலும், ரஹ்மானின் பாடல்களை மீண்டு மீண்டும் கேட்டபோது ரொம்பவே பிடித்துப் போயிருந்தது.
ஹோசானா, இளமைத் துள்ளல்.
ஓமனப் பெண்ணே, கேக்கும்போதே, த்ரிஷாவை மனதளவில் ஓடவிட்டு கற்பனை பண்ணிப் பாத்தாச்சு.
கார்த்திக் குரலில், 'விண்ணைத்தாண்டி வருவாயா?'ன்னு ஒரு பாட்டும் காதுக்கு சுகமாய் இருந்தது.
கண்டிப்பா அம்சமா இருக்கும்னு முன் முடிவுடன் இருந்தேன்.
ஆனா, பாக்கலாமா வேணாமான்னு ஒரு தடுப்பு, சிம்பு.
சிம்புவின், attitudeஆ, இல்லை, டி.ஆரின் வித்தையான்னு தெரியல்ல, சிம்புவை பிடிப்பதில்லை. சிம்பு படத்தை $12 குடுத்து பாக்கணுமான்னு, மொத நாளு போகாம விட்டுட்டேன்.
சமீபத்தில் ஆணி மிக அதிகமாய் ஆகி, ஏகப்பட்ட குடைச்சல்கள் ஆபீஸில். ப்ரச்சனைகள் பெருகி வழிவதால், 24மணி நேரமும், ஆணி அடித்தல் தேவைப்பட்டது. ஒரே ஆளு, எவ்ளோ ஆணிதான் அடிப்பதுன்னு, மூணு பேரு, ஷிஃப்ட்டு கட்டி அடிச்சோம். இதனால், ஒரே நன்மை, சூர்யோதயத்துக்கு முன் ஆபீஸுக்கு போயி, மதிய வேளையில், மண்டை காஞ்சதும் வூட்டுக்கு வந்திடலாம்.
போன செவ்வாக்கிழமை மதியம் வீட்டுக்கு வரும்போது, சரி, மாட்னி ஷோ பாத்து ரொம்ப நாளாச்சேன்னு, விண்ணைத் தாண்டி வருவாயா போயிடலாம்னு முடிவு பண்ணி, தங்கமணியுடன் கெளம்பி போயாச்சு. தியேட்டர்ல நாங்க ரெண்டே பேருதான்.
செவ்வாய்க்கிழமை 4மணிக்கு, வேர யாரு இருப்பா?
ரெண்டு பேருக்காக படம் போடுவாங்களான்னு யோசிச்சேன். ஆனா, அதையெல்லாம் அவங்க கண்டுக்கலை, வெட்டாம ஒட்டாம, முழுசாவே போட்டாங்க.
படத்தின் ஆரம்பமே அமக்களம். 'ஆரோமலே' பாட்டின், கிட்டார் பிட்டு, படத்தில் ஆங்காங்கே தூவி விட்டுருக்காரு ரஹ்மான். ஒரு கிளர்ச்சியான பிட்டு அது. பரிச்சயமாகவும் இருந்தது. மேஜிக்கல் ம்யூஜிக்.
மாடி வீட்டுப் பெண்ணான மல்லு கிருஸ்துவ த்ரிஷாவை, கண்டதும் காதலிக்கும் ஹிண்டு சிம்புவின் கதை. காதலை வெறுக்கும் பெண்ணின் அப்பா. பல தடவை பல விதமாக எடுக்கப்பட்ட கதை. ஆனா, கௌதம் பாணியில், ஒரு பாலிஷ்டான பாணியில் புதுமையா வந்திருக்கு.
த்ரிஷா அழகு. கொஞ்சம் வயசு தெரியுது. ஆனாலும், அழகு. நடிப்பு பிரமாதம்.
சிம்பு. ஹ்ம் சொல்லவே கஷ்டமா இருக்கு. ஆனாலும் சொல்லிடறேன். யதார்த்தமா நல்லாவே நடிச்சிருக்காரு.
சிம்புவின் நண்பராக ஒரு கேமராமேன் வேடத்தில் ஒருத்தர் வராரு (கணேஷ்). பாக்க, கபாலி கணக்கா பயங்கரமா இருக்காரு. இன்னாடா, வேர ஆளே கெடைக்கலியா கௌதமுக்கு முதல் காட்சியில் நெனைச்சேன். அடுத்தடுத்த காட்சியிலிருந்து, என்னை விட யாருமே இப்படி ஜாலியா பண்ணியிருக்க முடியாதுன்னு நிரூபிச்சிட்டாரு மனுஷன். குட் சாய்ஸ். படத்தில் காமெடி ட்ராக் இல்லாத குறையை இவரு போக்கிடறாரு.குறிப்பா, 'என்னாடா தம்பி'ன்னு அடிக்கடி அவரு சிம்புவை கேட்பது, சூப்பரா பண்ணியிருக்காரு.
படத்தின் காமெராமேன், மனோஜ் பரமஹம்சாவாம். த்ரிஷாவை அழகா காமிச்சிருந்தாலும், பாட்டெல்லாம், கலர்ஃபுல்லா வந்திருந்தாலும் கூட, எனக்கு பெருவாரியான காட்சிகள் பிடிக்கலை. காமெராவை ஏன் இந்த ஆட்டு ஆட்டித் தொலையறாங்க? ஏன் இந்த ஃபாஸ்ட் எடிட்டிங்? வயசான(?) காலத்துல இப்படி பாத்தா தலைதான் வலிக்குது. அவ்ளோ பெரிய ஸ்க்ரீன்ல, இப்படி ஆட்டி ஆட்டி படத்தை காமிச்சா எப்படி ரசிச்சுப் பாக்கரது? ரம்யமான காதல் கதைக்கு, எல்லா காட்சியும் மயிலிறகு கணக்கா ரம்யமா இருக்க வேணாமா?
கேரளா ஆலப்புழாவும், backwatersம் டசக் டசக்னு வெட்டி வெட்டி ஒட்டிய எடிட்டிங்கிலும், வேகக் காமெராவிலும், அனுபவித்து உள்வாங்க முடியவில்லை.
காமெராமேன்களும், எடிட்டர்களும் கொஞ்சம் மாறுங்கப்பா. ராப் மூஜிக் வீடியோ மாதிரி, நம்ம ஊர் பாடல்களை ஏன் படம் பிடிக்கணும்? ஸ்ஸ்ஸ்.
படத்தில் எல்லா காட்சியிலும், த்ரிஷாவும் சிம்புவுமே வந்தாலும், அலுப்பு தெரியாமல், மெல்லமாய் போகிறது.
பெருசுகளுக்கு படம் பிடிக்காது. எம்மைப் போன்ற இளசுகளுக்குத்தான் பிடிக்கும் ;)
திரிஷாவுக்கு, தன் குடும்பம் பெருசா, சிம்பு பெருசான்னு அடிக்கடி குழுப்பம் வருது. அந்த குழப்பத்துடன் கூடிய நடிப்பை, அழகா வெளிப்படுத்தறாரு.
படத்தின் முடிவும் அமக்களம். குழப்பமான முடிவாய் வந்திருக்க வேண்டியது, நல்லபடியா காட்சிகளை அடுக்கி, நச்சுனு முடிச்சிருக்காரு கௌதம்.
நிறைய பேரு, இரண்டாம் பாகம் இழுவைன்னு சொல்லியிருந்தாங்க.
எனக்கென்னமோ, படம் முழுக்கவும் இதமா இருந்தது.
படம் முடியாம, அப்படியே இன்னும் கொஞ்ச நேரம் இழுத்துக்கிட்டே இருந்தா நல்லா இருந்திருக்குமோன்னு தோணிச்சு.
த்ரிஷாவின் மீதான ஜொள்ளா? 'ஆரோமலே' பாட்டின், கிட்டாரா? எதுன்னு தெரியல்லை.
மொத்தத்தில், வசீகரமான படம்.
எளசுகள், கண்டிப்பாய் பார்க்கலாம்.
9 comments:
சர்வேயே சொல்லியாச்சா?
அப்பீலே லேது.. ஹ்ம்ம்.. பாத்துர வேண்டியது தான்!
அநன்யா, கண்டிப்பா பாக்கலாம். ஆனா, ஒரு ரொமாண்ட்டிக் மனசு வேணும் ;)
சிம்பிளான படம். வெள்ளி இரவுக்கு ஏத்த படம்.
மீட்டர் தாருமாறாய் ஓடுது. மீட்டர் கொம்பேனி திவாலாயிடுச்சு போலருக்கே?
"59 users online"
//ஒரு ரொமாண்ட்டிக் மனசு வேணும் ;)// அதென்ன ரொமாண்டிக் மனசு? நாங்களும் யூத்து தான்வே... பாப்போம்ள?
//மீட்டர் கொம்பேனி திவாலாயிடுச்சு//
:)) முடியல!
thiramai illadhavanga cinema-vil win pannum podhu simbukku enna? he is very talented compare to vijay, surya
i like simbu
madhumidha
78 users online ஆ?????
சரி.. மேட்டருக்கு வருவோம். அதேன்னங்க சிம்பு மேல அம்புட்டு கோவம்? சரி சரி அதே காரணத்துக்கு தான் நானும் படத்தை வந்ததும் பாக்கல.
சிம்பு, எங்க பாத்தாலும் (சேனல்லதான்) என்னைய காதல்ல ஏமாத்திட்டாங்க, நான் நம்புனேன், என்னைய விட்டுட்டு போய்டாங்கனு நயன் பேர சொல்லியே சொல்றது, ஐஸ் பேர சொல்லாம mean பண்றது. நான் நல்லவன் தானு கேமரா முன்னாடி கண்ணீர் விட்றது, இது அப்டியே படத்திலயும் இருந்துச்சா அதுனாலையோ என்னவோ திரிஷா அளவுக்கு சிம்பு ஒட்டலை படத்தில். திறமை இருந்தாலும் எனக்கு வேறு நடிகர் பெட்டர் சாய்சா இருந்திருப்பார்.
sweet, simbuvukku prachanaye illai. i just dont like his 'attitude'. தனக்கு திமிரே இல்லைன்னு, திமிரா சொல்றவரு :)
ஆ! வேறு நடிகர், சரியா வந்திருக்க மாட்டாங்க இந்த கேரக்டருக்கு. நல்ல சாய்ஸ்தான் சிம்பு. அளவோடவும் நடிச்சிருக்காரு. ஸோ, மன்னிச்சு விட்ரலாம் ;)
ஒளிப்பதிவை பத்தி இப்படி போட்டிருக்கு, டமில்சினிமாவில்.
///அழகிய நதியில் டைட்டில்கள் மிதக்கிற அந்த முதல் காட்சியிலேயே மனசை அள்ளிக் கொள்கிறார் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா. அதன்பின் வருகிற ஒவ்வொரு காட்சியும் அவரது இருப்பை அழுத்தமாக சொல்லிக் கொண்டே இருக்கின்றன. அதுவும் கேரளாவின் அழகை குளிர குளிர பந்தி வைத்திருக்கிறாரே, ஜில்ல்ல்ல்ல்ல்!//
என் ரசனைதான் சரியில்லையோ? வேற யாராச்சும் பாத்தவங்க சொல்லுங்க.
http://tamilcinema.com/CINENEWS/REVIEW/2010/vv.asp
Post a Comment