recent posts...

Tuesday, November 24, 2009

நச் கதைகள் - டாப்20, விமர்சனம்

இதை எப்படி அணுகுவது என்ற குழப்பத்தை தீர்த்துக்கொள்ளவே எனக்கு சில நேரம் பிடித்தது.
கதைகளில் 'நச்' பலவகையில் கையாளப்பட்டிருக்கும், அட்லீஸ்ட் இரண்டு வகையாகவாவது இருக்கும்.

அ) கதையின் போக்கிலேயோ கதாபாத்திரத்துக்கோ ஒரு திடீர் திருப்பம் ஏற்படுவது. அந்த தடால் முடிவு வாசகருக்குத் தரும் ஒரு மினி (இன்ப/துன்ப/திடுக்) அதிர்ச்சி. 'அட'ன்னு சொல்லவைக்கும்.
ஆ) கதை எல்லாக் கதைகளையும் போல் பயணித்து, கடைசியில், வாசகரை ஏமாற்றும் விதமாய் அமைவது. அதாவது, நாம ஹீரோ ஒரு காலேஜ் பையன்னு நெனச்சுக்கிட்டு படிப்போம், கடைசீல பாத்தா, ஹீரோ ஒரு தெருவோர 'நாய்'னு முடிச்சிருப்பாங்க. கதையின் முடிவில், புன்முறுவலையும் ஒரு அசடு வழிதலையும் வாசகருக்கு ஏற்படுத்தும்.

இதில் 'O Henry' வகை கையாடல், 'அ' வகையைச் சேர்ந்தது.

கதை, அ. வகையா, ஆ. வகையான்னு பாத்தெல்லாம் மார்க் போடப் போறதில்லை. எந்த வகையாயிருந்தாலும், 'நச்' திருப்பம், ஒரு 'பன்ச்' தருதான்னு பாத்தேன்.

சரி, நாம மட்டும் இப்படி மார்க் போட்டு டாப்20ஐ தேர்ந்தெடுத்தா, நம்மள வூடு கட்டி அடிப்பாங்கன்னு தெரிஞ்சுது. அதனால, இன்னொரு தியாகி தேவப்பட்டாரு. வலைவீசி தேடி, 'சென்ஷி'யை பிடிச்சாச்சு.
அவரும் எல்லா கதைகளையும் பொருமையா படிச்சு, அவரின் டாப்20ஐ கட்டம் கட்டி அனுப்பினாரு.

எங்கள் இருவரின் டாப்20ல், காமனா வந்த கதைகள், ஆட்டோமேடிக்காக தேர்ச்சி பெற்றது. மற்றவைகளை, மீண்டும் அலசி, ஃபைனல் லிஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

சில கதைகள், எனக்குப் பிடிக்காமல் போனது, சென்ஷிக்கு பிடித்திருந்தது.
அவருக்கு பிடித்தது, எனக்கு பிடிக்காமலும் போயிருந்தது.
எங்க ரெண்டு பேருக்கும் பிடிக்காதது, பின்னூட்ட வாசகர்களுக்கு பிடித்திருந்தது.
ஸோ, இதிலேருந்து இன்னா தெரியுதுன்னா, எல்லாம் சப்ஜெக்ட்டிவ் டு த ரீடர்ஸ் டேஸ்ட்.
ஆனா, ஏதாவது ஒரு ஃபார்முலா வைத்துதானே ஆகணும். அதனால, நம்ம ஃபார்முலா

டாப்20க்கு - சென்ஷி + சர்வேசன் மதிப்பெண்கள்
டாப்2க்கு - வாசகர்கள் வாக்குகள் + சென்ஷி + இன்னும் 2 நடுவர்கள் (அவங்க பேரு அப்பாலிக்கா சொல்றேன்).

இனி, எல்லா கதைகளுக்கும், எங்களாலான விமர்சனத்தைப் பாருங்கள்.
பச்சைகலரில் சாயம் பூசப்பட்ட கதைகள் டாப்20ல் தேர்ச்சி பெற்ற கதைகள்.
இவற்றில் வெற்றிக் கதையை தேர்ந்தெடுக்க, கூடிய விரைவில் தேர்தலும், இன்னும் நடுவர்களின் கருத்தும் கலந்தடித்து, தீர்ப்பு கூறப்படும்.

இப்போதைக்கு, விமர்சனங்களைப் படியுங்கள்.
டாப்20ஐ, மீண்டும் ஒரு முறை படியுங்கள். தேர்தல் கூடிய விரைவில் நடத்தும்போது, உங்கள் வாக்கை போட, மனதளவில் ரெடி ஆகிக்கோங்க.

பங்கு பெற்ற அனைத்துக் கதாசரியர்களுக்கும் என் கோடானு கோடி நன்றிகள்.
கலக்கிபுட்டீங்க!

1. நெல்லி மரம் - சதங்கா (Sathanga)
ச: கோயிலில் சந்தித்த பெண் பின் அண்ணனுக்கு மனைவியாகியதை 'நச்'சென சொன்ன விதம் அருமை. போட்டி கான்ஸெப்ட்டுக்கு உறம் போட்ட விதம் தொடக்கக் கதை. நன்று.

செ: நிச்சயம் எதிர்பார்த்திராத ஒரு நச்தான். ஆண்பால் கதை சொல்லி இல்லைன்னு நம்ப வைக்கற இடம் கதையை மகிழ்வா உணர வைக்குது. ஆனாலும் இது மாத்திரம் போதுமா நச் கதை வெற்றிக்கு...


2. அசைன்மென்ட் - கிஷோர்
ச: கதாப்பாத்திரத்துக்கு ஏற்படும் நெருக்கடியும், நமக்கு கிஷோர் கொடுக்கும் 'நச்' திருப்பமும் ரசிக்கம் படி இருக்குது. ஆனா, நச் அறிந்தபின், இந்த பாத்திரம் எப்படி இப்ப்படியெல்லாம் யோசிக்கமுடியும் என்று லாஜிக் யோசிக்கும்போது, இடிக்கிறது.

3. கடைசி இரவு - ராம்குமார் அமுதன்
ச: கல்யாணத்துக்கு காத்திருக்கும் பெண். மாப்பிள்ளையை காணவில்லை. இளைஞன் தற்கொலை செய்து கொள்கிறான்னு, விரு விருன்னு பயணிக்கும் கதையில், 'நச்' பாதியிலேயே ஊகிக்க முடிவதால், கெத்து கொறஞ்சுடுது. ஆ வகைக் கதை.

செ: சுஜாதாவின் பழையகதை வாசனையில் இன்னொரு புதுக்கதை.

4. புவனேஷ்வரி மாமி - சர்வேசன் (போட்டிக்கல்ல, சும்மா லுலுவாய்க்கு)
ச: அடேங்கப்பா. இந்த மாதிரியெல்லாம் கூட ஒரு கதாசரியரால் கற்பனை செய்யப்பட்டு கதை புனையப்படுவது உலக வரலாற்றிலேயே இது முதல் முறை. இந்த வருட சாகித்ய அகாடமி விருது இந்த கதைக்கு நிச்சயம் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. இது திரைக்காவியமாய் வரர்போகும் நாள் நீண்ட தொலைவில் இல்லை. (ஹிஹி)

5. உயிரின் உயிரே - R. Gopi
ச: வாசகரை கடைசியில் ஏமாற்றும் வகைக் 'நச்'. கதையில் கருத்ஸெல்லாம் சொல்றது ப்ளஸ் பாயிண்ட்டு. ஆனா, இது ஒரு ஃபோர்ஸ்ட் 'நச்', இயற்கையா அமையாத மாதிரி ஒரு தோணல்.

6. தொழில் - ராமலக்ஷ்மி
ச: பல நாள் திருடன் ஒரு நாள் எப்படியும் ஆப்டுக்குவான். என்னதான் தில்லாலங்கடித்தனம் பண்ணாலும், யாராவது எங்கையாவது எப்படியாவது கண்டுக்குவாங்க. 'நச்' இருந்தாலும், ஒரு யதார்த்த நச்சுத்தன்மை இல்லை. அவசரத்தில் உருவாக்கபட்ட நச்சோ?

7. recession ஐயா recession - ramachandranusha(உஷா)
ச: நாங்களும் காஸ்ட் கட்டிங் பண்றோமுன்னு, 'பந்தா' பண்ண வேண்டிய அவசியத்தில் இருக்கும் MNCக்களில் நடக்கும் கூத்தில், சாமான்யன் பாதிக்கப்படும் சோகத்தை, சுட்டியிருக்கிறார். கருத்ஸ் சொல்ல நினைத்து கதை எழுதியதாலோ என்னமோ, 'நச்'சின் வீச்சு கம்மி.

8. வைதேகி காத்திருப்பாள் - T.V.Radhakrishnan
ச: கால்செண்டரில் வேலை செய்யும் ஐயங்காராத்துப் பெண் கதையின் நாயகி. சாதியை தூக்கி ஆடும் சிலர் இருப்பதைச் சொல்லும் கதை. அழகா நகர்ந்த கதையில், நச் எப்படி இருக்கும்னு ரொம்ப ஏங்கிப் போய் கடைசி வரியை படிச்சா, ஏமாற்றமாய்தான் இருந்தது. இன்னும் கொஞ்சம் வேற மாதிரி ஏதாவது சொல்லிருக்கலாம்ம்.

9. நெஞ்சு பொறுக்குதில்லையே - ஷைலஜா
ச: நாட்டாமை கதை, நல்லாத்தேன் இருக்குது படிக்க. கதர் சட்டை போட்ட நாட்டாமை, புள்ளையை சரியா வளக்காம, வரவங்அ போரவங்களுக்கெல்லா லட்ச ரூவா கொடுத்து சரி பண்றது, ஒட்டலை.

10. திருப்பம் - சின்ன அம்மிணி
ச: எதிர்பாரா திருப்பம் இறுதியில். ஆனா, அந்த திருப்பத்தை வந்தடைய வேண்டிய மற்ற உபகரணங்கள் முந்தைய பத்திகளில் இல்லாதது, கதைக்கு வலு சேர்க்காமல் போனமாதிரி இருக்குது.

செ: நிச்சயம் யாருமே எதிர்பாராத நச் முடிவு..!

11. கண்ணால் காண்பதும் - பெயர் சொல்ல விருப்பமில்லை
ச: ஏழை காதலன், பணக்கார காதலி, வில்லன் அப்பா கொண்ட கதைக் களம். ஊரை விட்டு ஓடும் காதலனும், ஓடாமல் நின்று விட்ட காதலியும் நல்லாத்தான் இருந்தது. ஊகிக்க முடிந்த நச்தான் என்றாலும், இது கதாசிரியரின் குற்றமல்ல. நச்சு இருக்கும் என்ற எதிர்பார்ப்பினால் வந்த வாசகனின் பிழை இது.

12. அப்பா சொன்ன நரிக்கதை - நிலா ரசிகன்
ச: இலைமறைவு காயா அருமையாச் சொல்லியிருக்காரு, ரெண்டாவது அப்பா செய்யும் கொடுமையை. அங்கங்க வச்ச 'லீட்' அருமை. இரண்டாம் முறை வாசிக்க வைத்தது. இதுவே 'நச்'சின் சத்தை காட்டுது

செ: தனிமையில் தவிக்கும் மனதிற்கு ஆறுதலாய் கை கொடுக்கும் அத்தனை உள்ளங்களும் நல்லதாய் மாத்திரம் இருப்பதில்லை. முடிவு சிறிய வலி.

13. ஆவணி பௌர்ணமி - நானானி
ச: வாலிப இளங்காளைகள், தவிர்த்து வெறுத்து ஒதுக்கும் தினத்தை மையமாக கொண்ட கதைக் கரு. ப்ராக்டிக்காலிட்டி கம்மியான அப்ரோச். முழு சினிமா எடுக்க முடியாது, ஆனா, காமெடி ட்ராக் ஓட்டலாங்கர கதைக் கரு. நச் இருக்கு. ஆனா, பச்னு ஒட்டலை.

14. நொடிப் பொழுதில் - Pappu
ச: இவரு ரொம்ப நல்லவராமாம். கடலை போடறான் என்று எண்ணிய பெண்ணிடம், திடுதிப்பென்று பழமாய்ப் போன விடலையின் கதை. 'சிறு'கதையில் 'பெரு' கதையின் வர்ணனையுடன் ஒரு ஸாஃப்ட் நச்.

15. ஆல்ப்ஸ் கொ(ம)லைக் காற்று வந்து - முகிலன்
ச: சீட்டின் நுனிக்கே இஸ்துக்கினு வரும் வர்ணனை. ஆனா பாருங்க, நச் இப்படி இருக்கும்னு உள்ளூர ஒரு 'இது' உருவாயிடுது. நச்சில் பி.எச்.டி வாங்கிய எனக்கு மட்டும்தான் இப்படி இருக்கும்போல. 'வழக்கம் போல்' நச்சாக்காமல், வேறு மாதிரி முடித்திருந்தால், ஸ்பார்க் ஏறியிருக்கும். உ.ம். சங்கர் பட சூட்டிங்கில் இது நடக்குது. தூர நின்னு படம் புடிச்சா, சங்கரின் அடியாட்கள் தேடி வந்து காமிராவ புடிங்கிப்பாங்க்யன்னு...

16. ஜாக்கிரதை மழை பெய்கிறது - Vidhoosh
ச: நல்ல விறு விறு. எதிர்பார்த்தது போல் நச்சும் இருந்தது. பாகவுந்தி. ஆ வகை நச்தான் ஒரு மைனஸ்

17. சதிராடும் மேகங்கள் - அரவிந்தன்
ச: நல்ல வாசிப்பு அனுபவம். காட்சிகள் கண் முன் நடப்பது போல். சமுதாயம் ஒதுக்கிய ஒருவரின் ஆட்டோ பயோகிராஃபி. ஆனா, நச் எண்டிங்?

18. ஆதவன் - நான் ஆதவன்
ச: குசும்பான நச். நச் என்ன என்பதை பின்னூட்டம் வழியே சொல்லித் தெரியப் படுத்த வேண்டிய அவல நிலைக்கு உந்தித் தள்ளப்பட்டுள்ளார் ஆசிரியர். ரூம் போட்டு யோசிக்கராங்கப்பா...

19. இக்கணம் இக்கதை - Nundhaa
ச: வித்யாசமான கதை. என் அறிவுக்கு, இதன் 'நச்' என்னன்னு புரியல்ல. இவருதான் அவரைக் கொன்னாரா? இல்ல, வேர ஏதாவது உள்குத்து நச் இருக்கா. சபைல தெரியாதுன்னு சொன்னா, மதிப்பு கொறஞ்சுடும். அதனால, நல்ல கதைன்னு சொல்லி எஸ்ஸுகிறேன் ;)

செ: கதையின் முடிவு ஆரம்பத்திலிருந்து தொடர்கிறது. சிறப்பான உத்தி. கதைப்புத்தகங்களின் வழியே கதையை நகர்த்தி கதையோடு கதையை முடித்தது அருமை.

20. யாரோ ஒருத்தி - குகன்
ச: மசாலா தடவப் படவாத, சிம்பிளான நச் கதை. சைட் அடிப்பவரின் அசடு வழிதலும், கடைசியில் அவரின் உண்மை முகம் வெளிப்படுதலு நல்ல கதை அம்சம்.

21. செவப்புத் தோல் - ஈ.ரா
ச: முடிவு ஓரளவுக்கு ஊகிக்கக் கூடிய கதைகளில் இதுவும் ஒண்ணு. ஆனா, விறு விறுன்னு எழுத்து நடை. குட்.

22. படுக்கை - பினாத்தல் சுரேஷ்
ச: ஷார்ப்பான நச். எமக்கு சப்ஜெக்ட் மாட்டர் தெரியலன்னாலும், ரெண்டு மூணு தபா படிக்க வைக்கும் நச். ஜூப்பர்

23. அன்னா மரியா குமாரசாமி - செந்தழல் ரவி
ச: தலைப்பையே நச்செனப் பெற்ற கதை. சிம்பிளான நரேஷன். போரடிக்காத நடை. சைட் அடித்தல் என்னும் மகாத்மியம் விறு விறுப்புக்கு பஞ்சம் வைக்கவில்லை. நச், பன்ச் கம்மின்னாலும், மரியாவை மனதளவில் சைட் அடிக்கத் தொடங்கியதால் ஒரு கிறக்கம் வரத்தான் செய்தது.

24. ரெட் லைன் - வண்டிக்காரன்
ச: வேக நடை. கண்முன் காட்சி விரிகிறது. ஆயிரம் இருந்தும், வசதிகளும் இருந்தும், 'நார்மலான' நச் பாதையை தேர்ந்தெடுத்து, வாட்டி விட்டார் கதாசரியர். ரூம் போட்டு யோசிச்சு, வித்யாசமான முடிவை சொல்லியிருந்திருக்கலாம் (அடுத்த வருட போட்டிக்கு, இந்த 'முடிவு' வரக்கூடாதுன்னு ஒரு ரூல் போடணும் :))

25. பச்சை நிற பக்கெட் - Thirumalai Kandasami
ச: உண்மையின் தழுவல்னு சொல்லிட்டாரு. வாழ்க்கைல அடிபட்டிருக்காரு போல. நல்ல நகைச்சுவை. வடிவேலு ரேஞ்சுக்கு டயலாக். ஆனா, பன்ச் தேடிப் பாத்தேன் கிடைக்கல்ல.

26. கடைசியில் ஒரு திருப்பம் - மணிகண்டன்
ச: ஹ்ம். என்னத்தச் சொல்ல. ஆனா, எது இருக்கோ இல்லியோ, ஷார்ப்பா ஒரு திருப்பம் வச்சுட்டாரு. அந்தளவுக்கு சந்தோஷம்தேன்.

27. விடை கொடு எங்கள் நாடே - சங்கர்
ச: நன்று. நச்-சும் உள்ளது. நம்பும்படியான ஒரு ஸைன்ஸ் ஃபிக்ஷன்.

28. மில்லியன் காலத்துப் பயிர் - சத்யராஜ்குமார்
ச: நல்ல கற்பனை. புத்திசாலித்தனமான குட்டிக் கதை, வித் எ மெசேஜ். ஆனா, கல்யாண நாளுன்னெல்லாம் வருதே? எப்படி?

செ: எதிர்பாராத நச்!

29. டிஸ்லெக்சியா - Vinitha
ச: மெசேஜ் இருக்கு. ஆனா, ஒரு கதைக்கான மேட்டர் இல்லை. இன்னும் கொஞ்சம் விரிவு படுத்தியிருக்கலாம்.

30. அவரு..அவரு..ஒரு - வருண்
ச: ஐ லைக்ட் இட். சிரிப்பூட்டிய முடிவு. பின்னூட்டத்தில் சொல்லியிருந்ததைப் போல், இன்னும் எடிட் பண்ணியிருந்தா, நச் கூடியிடுக்கும்

31. வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் - கெக்கேபிக்குணி
ச: கொஞ்சம் திகிலான நச். ரங்கமணிகள் சாக்கிரதை.

32. ஜனனி - படுக்காளி
ச: நல்ல கதை. நல்ல நடை. ஆனா, நச்-தான் புரியல்ல எனக்கு. காட்சியெல்லாம் அருமையா விவரிச்சிருக்காரு. மாதவன் ஆக்ஸிடண்டீல் செத்தான். இடிச்சவனும் சாராயம் குடிக்கறான். ஆனா, நச் புரியல்ல.

33. எக்ஸ்பிரஸ் இளமதி - SUREஷ் (பழனியிலிருந்து)
ச: ஏதோ உள்குத்து வச்சு கதை. ஆனா, எனக்கு புரியல்ல. திருமணம் செய்து கொள்ளவிருக்கும் மகப்பேறு மருத்துவரைப் பாத்து, உங்க பசங்களும் டாக்டருக்குத்தான் படிக்கறங்களான்னு கேக்கறாங்க. ஹ்ம். முப்பதுகளில் இருப்பவரைப் பாத்து ஏன் அப்படி கேக்கறாங்க்ய?

செ: இயல்பான வேக ஓட்ட நடை

34. ஒரு கிராமத்தின் காலைப் பொழுது - சயந்தன்
ச: ஈழத்துச் சோகம். காலை நேரத்து காட்சிகளை படிக்கும்போது, கண்முன் விரிகிறது, பச்சைப் பசேல் என்ற ஊர். இறுதியில் சோகமே பிரதானம். நச் இல்லை.

செ: சரியான ஓட்டம் உள்ளது. நச் கொஞ்சம் கம்மி.

35. புகை - kalyanaraman raghavan
ச: நச் ஓவர் டோஸா தெரியல்ல. நச்சின் வீச்சு பெருசா இல்லைன்னா, நச் இல்லைனே சொல்லத் தோணுது. குடிகாரத் தந்தையின் மனமாற்றம், சந்தோஷத்தைத் தந்தாலும், ஈர்ப்பைத் தரலை. பொண்டாட்டியை முடியை பிடிச்சு அடிக்கர குடிகாரன், மகளின் வார்த்தைக்கு டக்குனு மனமிறங்குவான் என்பது இடிக்குது.

36. வசவும் திட்டும் சாம்பலும் - கே.ரவிஷங்கர்
ச: யதார்த்தமான நடை. யதார்த்தமான விஷயங்கள். யதார்த்தமாவே முடிவு. ட்விஸ்ட் மிஸ்ஸிங்?

செ: இயல்பான கதை சொல்லல். பட் நோ நச்!

37. 72877629 - கே.பி.ஜனார்த்தனன்
ச: ஆபீஸரின் தில்லாலங்கடித்தனத்தை மேலாளர் போட்டுடைக்கும் கதை. கொட்டப்பாக்கு, எலுமிச்சம்பழம், எல்லாம் நல்ல வாசிப்பனுபவம். நச்சும் இருக்கு, ஆனா டூ-மச்சா இல்லை.

38. ஜாதி கேடயம் - இரும்பித்திரை அரவிந்த்
ச: புவனேஷ்வரி புரீது. ஆனா, நச் எங்கே?

39. காமம் கொல் - Cable Sankar
ச: வில்லங்கமான ஆசாமியாரின் கதை. விறு விறுப்பு குறைவு. இளைஞனைப் புடிச்சது நச் திருப்பம்தேன், ஆனா, மைல்டா இருக்கு.

செ: செல்வன் இதை மாதிரி நிறைய ”டச்”களை முன்னாடியே உபயோகிச்சுருக்காரு. ஆனாலும் ஆதினம்ன்னு சொல்ல ஒரு தில்லு வேணும் :)

40. அந்த இரண்டு ரூபாய் - வி.நா.வெங்கட்ராமன்
ச: பணக்கார அல்ப்பைகள் பத்தி ரொம்பவே குட்டியா சொல்லியிருக்காரு. ரொம்பவே குட்டி. கதையளவு இல்லாமல், துணுக்கு மாதிரி இருக்கு.

41. டிஷ்யூங் - கார்த்திகைப் பாண்டியன்
ச: யாரோ துப்பாக்கியால் சுடுவாங்கன்னு தலைப்பு சொல்லிடுது. அதாலயோ என்னவோ, சப்புனு போயிடுது முடிவு.

42. சாப்ட்வேர் - ப்ரசன்ன குமார்
ச: ரூம் போட்டு யோசிக்கறாங்க்யப்பா... ஆ வகை. ஆனா, தலைப்புக்கும் கதைக்கும் உள்ள கனெக்ஷ்ன்?

43. போகமாட்டேன் - புதுவை சந்திரஹரி
ச: ஒரு குட்டி துணுக்கு அளவுக்கே சங்கதி உள்ளது. சிறு கதைக்கு, இன்னும் ஒரு சில வரிகளும், இன்னும் கொஞ்சம் கூட சத்தும் தேவை. முடிவு குட்.

44. நறுமண தேவதை - எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன்
ச: நல்ல சுவாரஸ்யமான கதை. முடிவு வேர எதிர்பார்த்தேன். இதுவும் நல்லாவே இருந்தது. ஆனா, ஐந்து நாள் முடிஞ்சு ஆறாவது நாள்தான் ப்ரியாவை அமுக்கப் போறான்னு கதைல இல்லியே?

செ: புதிய களம். நல்ல விறுவிறுப்பான துவக்கம். முடிவை இன்னும் கொஞ்சம் யோசித்திருந்தால் நிச்சயம் இதுதான் முதல் பரிசுக்கு வந்திருக்கும்

45. கறுப்பு ஞாபகம் - ஆதிமூலகிருஷ்ணன்
ச: ஜாலியான கதை. திருப்பமும் இருக்கு. அனுபவபூர்வமா ரசிச்சு எழுதின மாதிரி இருக்கு.

46. சன்யாசம் கூறாமல் கொள் - சாம்ராஜ்ய ப்ரியன்
ச: நல்ல நடை. ஆனா, இஞ்சினில் அடைப்பு ஏற்பட்ட மாதிரி, அப்பப்ப திக்கி ஓடுது. கடைசியில் கிராஷ் ஆயிடுது.

47. காமம் வழிந்தோடும் உடல் - graham
ச: நல்ல வித்யாசமான முயற்சி இது. அக்கீரோ குரோசோவோ ரஷ்மோன் விருமாண்டி ஸ்டைலில். சின்ன குழுப்பம், வசந்தை மூணு வருஷம் காதலிச்சு அப்பாலிக்கா போட்டுத் தள்ளறாங்களா? அரவிந்த் அடுத்த இலக்கா?

48. லாரி விபத்து - MSV Muthu
ச: பெரீரீய்ய்ய கதை. நல்ல நச் மூடிவு. பெருசா இருக்கரதால 1/2 தாண்டியதும், ஸ்ஸ்ஸ்னு ஒரு அலுப்பு வந்துடுது. ஆனா, கதையில் ஒரு விறுவிறுப்பு இருப்பதால், மீதிப் பாதியையும் படிக்க வைத்தது. குட்.

49. மாத்தி யோசி - நாஞ்சில் பிரதாப்
ச: டேக் இட் ஈஸி பாலிஸி கதை. பஸ் ஸைட்டு அல்வாவாகிப் போனதும் பாலிஸி வித்து வந்தவரை லாபம் சொல்லும் ஃப்ரெண்டு சூப்பர். நச் கம்மி.

50. பாராட்டு - ஸ்வர்ணரேக்கா
ச: சிம்பிளான கதை. நல்ல நரேஷன். முடிவும் ஜாலியான நச்.

51. நானே நானா - சுப.தமிழினியன்
ச: விரக்தியின் உச்சகட்டம். தனிமை விரும்பியின் வாழ்க்கைக் குறிப்பு. படிக்கவே பயமா சோகமாயிடுது. நச் மிஸ்ஸிங்?

52. அடுத்த வீட்டுப் பெண் - Mohan Kumar
ச: பெண்ணடிமைத்தனம் இன்னும் நடக்கத்தான் செய்யுது. முடிவு சோகம். எனக்கு நச் கம்மியா தெரிஞ்சது, ஆனா, வாசகர்கள் பலரையும் கவர்ந்திருக்கு. ஓவ்வொருத்தருக்கு ஒரு புரிதலை தரும் போலருக்கு. குட்டிக் கதை. நல்ல கதை.

செ:கொடுமை செய்யும் கணவன் வாய்த்தாலும் அவனுக்கு வார்த்தைகளில் மதிப்பை கொடுத்து செத்துப்போகும் பெண்ணின் கதை. முடிவில் அந்தப் பெண்ணில் இயலாத்தன்மையை கொடுத்து விட்ட சமூகம் மீது கோபம் வருகிறது

53. சட்டை - முரளிகண்ணன்
ச: ப்யூட்டிஃபுல் ரீட். என்ன்னமா யோக்கராய்ங்கப்பா. கட்டமும் இல்லாம கோடும் இல்லாம ஒரு சட்டை. அதைத் தேடிக்கிட்டு ஒரு ஹீரோ. முடிவு நச்!

செ: மனித ஆசையின் அளவீடுகளுக்கு உள்ள இடைப்பட்ட மதிப்பீட்டை உணர்த்தும் கதை. நகைச்சுவை பிரதானப்படுத்தப்படாமல் மனங்களின் தூண்டுதல்கள் நிராகரிக்கும் பேராசைப்படும் உணர்வுகளை இயல்பாக எடுத்துச் சொல்கிறது

54. ஐ லவ் யூ - சுவாசிகா
ச: சூப்பரா பயணித்த கதை, ரிவர்ஸ் கீயரில் ஓட ஆரம்பிச்சுடுச்சு. குசும்புத்தனமான நச். எனக்கு ஒட்டலை.

55. வெள்ளை உருவத்தில் வில்லன் - பின்னோக்கி
ச: வெகுவாய் ரசித்தேன். வயதானாலும் மேனி எழில் மாறா கமலா சூப்பர். வில்லன் வெரி டேஞ்சரஸ் ஃபெலோ.

செ: யாருக்கு யார் வில்லனாக மாறுகிறார்கள் என்பதைக் குறித்த நச் முடிவு..

56. அபரஞ்சிதா - அடலேறு
ச: அடேயப்பா. என்னா வர்ணனை, இன்னாமா எழுத்து. அபரஞ்சிதாவை உடனே பார்க்கும் ஆவலை தூண்டியது. நச் பெருமூச் விடவைத்தது.

செ: கதையின் முடிவிற்காக எழுதப்பட்ட கதையெனத் தோன்றுகிறது. பேசாமல் ரிவர்சபிள் போல கதையின் முடிவிலிருந்து ஆரம்பம் வரை படிக்க ஆரம்பித்தால் அருமையான புனைவு...

57. முதல் காதல் - chelladhurai
ச: முதல் காதலின் தீவிரத்தை காட்டறாரு. பிரிந்தவர் மீண்டும் சேர்ந்துவிட்டால்... நல்லாத்தான் இருக்கு. ஆனா, 'நச்' மிஸ்ஸிங்.

58. நெப்போலியன் மேல சத்தியம் - நசரேயன்
ச: நண்பர்கள் ஏப்ரல் ஃபூலாக்கும் கதைக் கரு. நீளமா இருப்பதாலோ, கதாபாத்திரங்களின் பெயர் விசித்திரமாஅ இருப்பதாலோ என்னவோ, கதையோடு ஒன்ற முடியல்ல.

59. இயந்திரம் - காவேரிக்கரையோன் MJV
ச: ஃபேமிலி ஸ்டோரி. அழுத்தமான அப்பாவுக்குள் இருக்கும் ஸாஃப்ட் ஸ்பாட் பற்றிய நச். தெளிந்த நீரோடை மாதிரி பயணிக்குது கதை.

செ: இன்னொரு எதிர்பார்த்திராத நச் முடிவு.. ஆனால் முடிவை செதுக்குவதில் அதிகம் அவசரப்பட்டிருக்கிறார். இன்னும் கொஞ்சம் யோசித்திருந்தால் தந்தைகளுக்கான ஒரு சிறப்பான கதையை கொடுத்திருக்கலாம்.

60. இந்தியா எப்படி உருப்படும்??? தொழில் - அன்புடன் அருணா
ச: பந்தா பண்றதுக்காக டொனேஷன் கொடுக்கும் பார்ட்டீஸின் கதை. குட்டிக் கதை. ஓ.கே.

61. நடிகையின் கதை - சாணக்கியன்
ச: பெரீய்ய்ய கதை. ஆனா, சுவாரஸ்யமான உரையாடல். நச்சும் குட். நடிகையின் ப்ராக்டிகல் அப்ரோச் பிடிச்சிருக்கு

62. Blackhole - இரா.வசந்த குமார்
ச: நல்ல ஃபிக்ஷன். முடிவு எப்படி நச் ஆகுதுன்னுதான் புரியலை. ஓரளவுக்கு திருப்பம் இருந்ததலும், நச் ஆக்கர அளவுக்கு பன்ச் இல்லியே?

செ: அறிவியல் புனைகதை. எதிர்பார்த்திராத முடிவு. ஆனால் எதிர்பார்த்த நச் இல்லை..

63. பள்ளிக்குப் போக மாட்டேன் - ஷக்திப்பிரபா
ச: வாத்தியின் சுய சரிதை. நல்ல நடை. முடிவும். ஓ.கே. டயலாக்கெல்லாம் பளிச்னு போட்டு, விஷுவலா படிக்க ஈஸியா இருக்கு.

செ: சுவாரஸ்யமான கதை சொல்லலில் வெற்றிப் பெற்று விட்டிருக்கிறார். இது இல்லாவிட்டால் அது என்று எதிர்பார்த்த திருப்பமாகத்தான் முடிவு இருக்கிறது.

64. ஒரு கிளி உருகுது.. உரிமையில் பழகுது.. - தமிழ்ப்பறவை
ச: அமக்களம். செம ரொமாண்ட்டிக். குட் நச்.

65. திருடன் - Parameswerey Namebley
ச: ஏதோ இண்ட்ரஸ்டிங்கா வரப் போவுதுன்னு கடைசி பேராவை படிச்சா, சப்புனு பறந்து போயிடுச்சு.

66. நசிந்தப் பூக்கள் - நீச்சல்காரன்
ச: சைல்ட் லேபரை சாடிய எழுத்தாளரின் புத்தகத்தை அச்சடிக்கும் அச்சகத்திலும் சைல்ட் லேபரர்ஸாம். நல்ல மேட்டர்.

67. திடீர் பாசம் - உண்மைத் தமிழன்
ச: நல்ல நரேஷன். பயபுள்ளையின் பயம் நம் கண் முன்னே. ஆனா, நச் தான் சப்பையாய், உப்பு சப்பில்லாமல்.

68. ஹோம் வொர்க் - ஸ்ரீதேவி
ச: ஹோம் வொர்க் எழுதா விச்சு, எப்படி எஸ்கேப் ஆகரான்னு அழகா சொல்லியிருக்காரு. ஆனா, லாஜிக்ல ஓட்டைன்னு பின்னூட்டன் நக்கீரர்கள் பாயிண்ட்டை புடிச்சுட்டாங்க.

செ: தினப்படி விசயத்தை அசாதாரணமாக சொல்லியதை விட கடைசியாக அம்மாவிற்கு நன்றி சொன்ன விதத்திற்காகவே சட்டென்று மனதைத் தொடுகின்றது. அருமையான கதையில் ஒன்று.

69. நிபுணன் - யோசிப்பவர்
ச: மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கரளவுக்கு ஜாலியான ஃபிக்ஷன். ஆரம்ப வரிகளே புன்முறுவல், சுவாரஸ்யம் குறையாமல் போச்சு

70. நிமித்தகாரன் (அ) கனவுகளின் காதலி - Sridhar Narayanan
ச: ரூம் போட்டு யோசிப்பவர்களில் இவரும் ஒருவர். என்னமா சுத்தி விட்டிருக்காரு. இடை இடையே வரும் ஹீரோவின் நையாண்டி டயலாக் சூப்பர். தந்தத்தில் சீப்பு சிரிப்பை வரவழைத்தது. முடிவு நச்!

செ: அசத்தலான பரிச்சுக்குரிய கதைகளில் ஒன்று. எது கனவு எது நினைவு என்று பிரித்துப் பார்த்தலை வாசகரிடம் ஒப்படைக்கும் அரிய வகையில் நேர்த்தியான ஒன்று.



டாப்20 கதைகள்:
1. நெல்லி மரம் - சதங்கா (Sathanga)
3. கடைசி இரவு - ராம்குமார் அமுதன்
10. திருப்பம் - சின்ன அம்மிணி
12. அப்பா சொன்ன நரிக்கதை - நிலா ரசிகன்
19. இக்கணம் இக்கதை - Nundhaa
30. அவரு..அவரு..ஒரு - வருண்
34. ஒரு கிராமத்தின் காலைப் பொழுது - சயந்தன்
39. காமம் கொல் - Cable Sankar
44. நறுமண தேவதை - எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன்
45. கறுப்பு ஞாபகம் - ஆதிமூலகிருஷ்ணன்
52. அடுத்த வீட்டுப் பெண் - Mohan Kumar
53. சட்டை - முரளிகண்ணன்
55. வெள்ளை உருவத்தில் வில்லன் - பின்னோக்கி
56. அபரஞ்சிதா - அடலேறு
59. இயந்திரம் - காவேரிக்கரையோன் MJV
63. பள்ளிக்குப் போக மாட்டேன் - ஷக்திப்பிரபா
64. ஒரு கிளி உருகுது.. உரிமையில் பழகுது.. - தமிழ்ப்பறவை
68. ஹோம் வொர்க் - ஸ்ரீதேவி
69. நிபுணன் - யோசிப்பவர்
70. நிமித்தகாரன் (அ) கனவுகளின் காதலி - Sridhar Narayanan

70 கதைகளைப் படிச்சு, இப்படி அலசி ஆராய்வது, லேசு பட்ட வேலையில்லை என்பதை, நானே செய்து அனுபவித்ததால், நல்லாவே தெரியுது.
ஆர்வத்துடன், இந்த வேலையை செய்து, முதல் சுற்றுக்கு கதைகளை நகர்த்திய சென்ஷிக்கு நன்றிகள் பல.
இனி வாக்களிக்கப் போகும் வாசகர்களுக்கும், புதிய நடுவர்களுக்கும் அட்வான்ஸ் நன்றீஸ்.
இந்த போட்டி பற்றிய விவரத்தை விளம்பரம் செய்த அன்பர்களுக்கும் நன்றீஸ் பலப் பல.


பி.கு: நிறை குறைகளை தெரியப்படுத்துங்கள். சரி செய்ய முடிந்ததை சரி செஞ்சுடலாம்.
தேர்தல், வரும் வெள்ளி அன்று ஆரம்பம்.

41 comments:

SurveySan said...

போட்டிக்கான விளம்பரம் செய்த அன்பர்கள், இனி இந்தப் பக்கத்துக்கு விளம்பரம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நன்றீஸ்.

ராம்குமார் - அமுதன் said...

அட... டாப் 20 ல நம்ம கதை.... மிகுந்த மிகுந்த மகிழ்ச்சி.... ரொம்ப நன்றி சர்வேசன் / சென்ஷி....

Unknown said...

அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருக்கும் அத்தனை பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//33. எக்ஸ்பிரஸ் இளமதி - SUREஷ் (பழனியிலிருந்து)

ச: ஏதோ உள்குத்து வச்சு கதை. ஆனா, எனக்கு புரியல்ல. திருமணம் செய்து கொள்ளவிருக்கும் மகப்பேறு மருத்துவரைப் பாத்து, உங்க பசங்களும் டாக்டருக்குத்தான் படிக்கறங்களான்னு கேக்கறாங்க. ஹ்ம். முப்பதுகளில் இருப்பவரைப் பாத்து ஏன் அப்படி கேக்கறாங்க்ய?

செ: இயல்பான வேக ஓட்ட நடை//


இது ஒரு பிரச்சாரக் கதை.

மருத்துவரைப் பார்த்து அந்தக் கேள்வி கேட்டவர் அவரது வகுப்புத்தோழி. அவர் தனது மகளுக்கு திருமணம் முடித்து அவரது பிரசவத்திற்கு முன்பரிசோதனை செய்யவந்திருக்கிறார். தனக்கு மகள் இருப்பது போல தனது தோழிக்கும் வயது வந்த குழந்தைகள் இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது தவறில்லையே?.

ஆனால் மகப்பேறு மருத்துவர் படிப்பிற்காக தனது இளமையை தொலைத்துவிட்டு நிற்கிறார். இது புருனோ கொடுத்த சுட்டியைப் படிக்கும்போது இன்னும் தெளிவாகப் புரியும்

SurveySan said...

SUREஷ்,

தகவலுக்கு நன்றி. நீங்க சொன்ன மேட்டராத்தான் இருக்கும்னு தோணிச்சு.

ஆனா, கதைப்படி, முப்பதுகளில்தானே இருக்காங்க? அந்த வயசுக்காரங்களுக்கு எப்படி கண்ணாளம் கட்டிக்கும் வயதில் பெண் இருக்க முடியும்?
யோசிச்சு பாத்தா , சாத்யக் கூறுகள் இருக்கு.

21 வயசுல கல்யாணம் ஆகி, 18 வயசு பொண்ணிருக்கலாம். ஆனா, இல்லீகல் ஆச்சே ;)

SurveySan said...

SUREஷ்,

i stand corrected. உங்க பசங்களும் டாக்டருக்குத்தான் படிக்கறங்களான்னு கேக்கறாங்க. இதுக்கு கண்டிப்பா கொஞ்சூண்டு வாய்ப்பிருக்கலாம். அந்தம்மா ரொம்ப சின்ன வயசுலையே கல்யாணம் பண்ணியிருந்தா.

விளக்கத்துக்கு நன்னி :)

MJV said...

முதல் இருபதில் என் கதை வந்தமை குறித்து மகிழ்ச்சி. என் கதையெல்லாம் வெற்றி பெறுதோ இல்லையோ, நீங்களும் சென்ஷியும் எடுத்து கொண்ட முயற்சி, பொறுமையான அலசல் இப்படி எல்லாவற்றுக்குகாகவும் மிக பெரிய நன்றி மற்றும் வாழ்த்துக்கள். நிறைய பெற கதை எழுத தூண்டியிருக்கீங்க...

thamizhparavai said...

அனைத்துக் கதைகளையும் படித்து எதிர்பாராத வேகத்தில் முதற்சுற்று முடிவுகளை அறிவித்ததற்கு நன்றி...
என் கதையும் ‘ஒருகிளி உருகுது...உரிமையில் பழகுது’... டாப்-20 இல் தேர்வு செய்து ஊக்கப் படுத்தியதற்கு நன்றிகள்...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//21 வயசுல கல்யாணம் ஆகி, 18 வயசு பொண்ணிருக்கலாம். ஆனா, இல்லீகல் ஆச்சே ;)//

12ம் வகுப்பு முடித்ததும் திருமணம் என்பது இன்னும் பல இடங்களில் இருக்கிறது. 10-15 ஆண்டுகளுக்கு முன் பத்து முடித்ததும் திருமணம் மிகச் சாதாரணமாய் நடந்துகொண்டிருந்தது.


//ஆனா, இல்லீகல் ஆச்சே ;)////

யாராவது எதிர்ப்பு தெரிவித்தால் மட்டுமே.....

கோமதி அரசு said...

அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருப்பவர்களுக்கு வாழ்த்துக்கள்..
நச் க்காக திருப்பம் என்ற தலைப்பிலே எழுதி சர்வேசன் நச் போட்டிக்காக என்று மட்டும் எழுதி வைத்திருந்தேன். உங்கள் பதிவில் இணைக்கவேண்டிய விசயம் தெரியாமல் விடுபட்டுவிட்டது. முதல் சுற்று முடிவு தலைப்பைப் பார்த்தே என் கதைக்கான ஒரு வரி விமர்சனம் இல்லை மற்றும் விடுபட்ட விவரம் தெரிந்து கொண்டேன். இருந்தாலும் முதன் முதலில் கதை எழுதத்தூண்டிய உங்களுக்கு நன்றி..

http://mathysblog.blogspot.com/2009/10/500-2009.html

SurveySan said...

கோமதி அரசு, அடடா, சாரி ஃபார் தி மிஷாப்.
பலப் பல பதிவுகளும், விளம்பரங்களும் போட்டு, சில தவிர்க்க முடியா தவறுகள் நடந்துடுது. சாரி.

நானும் இன்னும் தெளிவா ரூல் பக்கத்தில் சொல்ல்யிருந்திருக்கனும்.

உங்க கதையை படித்தேன்.
தம்பியை ராங்க் சைட் அடித்த புதுப்பெண், நல்ல நச் முடிவு.
டாப்20ல் வந்திருக்குமான்னு, சென்ஷியை கேக்கணும் ;)

☀நான் ஆதவன்☀ said...

சர்வேசன் முதலில் வாழ்த்துகள். உங்களுக்கும் 20 பேருக்கும். கொஞ்சம் விளையாட்டாக எழுதிய கதை என்னுடையது. சிரத்தை எடுத்து மெருகேற்றியிருக்கலாம் என்று இப்பொழுது தெரிகிறது. 20 கதைகளில் உள்ள சில பல “நச்”சை விட தேர்ந்தெடுக்கபடாத சில கதைகளில் ‘நச்’ எனக்கு நன்றாக இருந்தது. அனைவருக்கும் மீண்டும் வாழ்த்துகள் :)

Thamira said...

ஹைய்யா.. நானும் பச்சைக்கலர்ல இருக்கேன்.! நன்றி தேர்வுக்குழு.!

(ஆமா, அதென்ன எனக்கு மட்டும் சென்ஷியின் கமெண்ட் இல்லை? நல்லதோ, கெட்டதோ.. வாங்கிப்போடுங்க சொல்லிப்புட்டேன்.! மற்ற எல்லோருக்கும் ரெண்டு, எனக்கு மட்டும் ஒன்றா? நல்ல கதையாக இருக்குதே..)

thamizhparavai said...

//(ஆமா, அதென்ன எனக்கு மட்டும் சென்ஷியின் கமெண்ட் இல்லை? நல்லதோ, கெட்டதோ.. வாங்கிப்போடுங்க சொல்லிப்புட்டேன்.! மற்ற எல்லோருக்கும் ரெண்டு, எனக்கு மட்டும் ஒன்றா? நல்ல கதையாக இருக்குதே..) //
ரிப்பீட்டேய்ய்ய்....

ராமலக்ஷ்மி said...

தேர்வான 20 நச் எழுத்தாளர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! முடிவை மட்டும் அறிவிக்காமல் அத்தனை கதைகளுக்கும் விமர்சனம் தந்திருக்கும் தேர்வுக் குழுவினருக்கும் என் பாராட்டுக்கள்:)!

Cable சங்கர் said...

அட நானுமா..?
எனக்கொரு சந்தோஷம்.. நம்ம ஆதியோட கதையும், முரளீகண்ணன் , அதிபிரதாபன் கதையும் லிஸ்டுல நம்மோட இருக்கு..:)

Anonymous said...

நானும் டாப் 20ல இருக்கேன். சென்ஷியும் இருக்காரா குழுவுல. பயம்மா இருக்கே.

Sridhar V said...

எழுபது கதைகளை படித்து Objectiveஆ கருத்து சொல்றதெல்லாம் மிகவும் சிரமமான வேலை. நடுவர் குழுக்கு நன்றிகள் பல.

உங்களோட குட்டி குட்டி ரெவ்யூக்கள் சுவாரசியமா இருந்தது. எனது கதைக்கு சொன்ன பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.

வருண் said...

***கோமதி அரசு said...

அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருப்பவர்களுக்கு வாழ்த்துக்கள்..
நச் க்காக திருப்பம் என்ற தலைப்பிலே எழுதி சர்வேசன் நச் போட்டிக்காக என்று மட்டும் எழுதி வைத்திருந்தேன். உங்கள் பதிவில் இணைக்கவேண்டிய விசயம் தெரியாமல் விடுபட்டுவிட்டது. முதல் சுற்று முடிவு தலைப்பைப் பார்த்தே என் கதைக்கான ஒரு வரி விமர்சனம் இல்லை மற்றும் விடுபட்ட விவரம் தெரிந்து கொண்டேன். இருந்தாலும் முதன் முதலில் கதை எழுதத்தூண்டிய உங்களுக்கு நன்றி..

http://mathysblog.blogspot.com/2009/10/500-2009.html***

நான் உங்க கதையை படிச்சேன். இங்கே லிஸ்ட்ல இல்லாததை நான் கவனிச்சேன். ஆனால் அதே தலைப்பில் இன்னொரு கதை (சின்ன அம்மணி??) இருந்ததால், எதுவும் தலைப்பை மாத்தீட்டீங்களா என்னனு புரியலை எனக்கு.

உங்க பின்னூட்டத்தில் நானே இணைக்கிற விதத்தை சொல்லி இருக்கலாம்தான்! :(

வருண் said...

***30. அவரு..அவரு..ஒரு - வருண்
ச: ஐ லைக்ட் இட். சிரிப்பூட்டிய முடிவு. பின்னூட்டத்தில் சொல்லியிருந்ததைப் போல், இன்னும் எடிட் பண்ணியிருந்தா, நச் கூடியிடுக்கும்**

டாப் 20க்குள் கொண்டு வந்தமைக்கும் உங்கள் விமர்சனத்திற்கும் நன்றி, சர்வேசன்! :)

சென்ஷி said...

முதல் 20ல் தேர்வாகியிருக்கும் எழுத்தாளர்களுக்கு வாழ்த்துகள்..

@ சுரேஷ் (பழனியிலிருந்து)

உங்கள் கதையை புருனோவின் பதிவு படிக்காமலேயே புரிந்து கொள்ள முடிந்தது.

@ கோமதி அரசு..

:-(

உங்களுடைய கதையை சர்வேசனுடைய போட்டியில் இணைக்கவில்லை என்று தெரிந்தபோது மிகவும் வருத்தமாக இருந்தது. மன்னிக்க....

@ நான் ஆதவன்..

நச் இல்லாமல் இருக்கக் கூடிய இந்த 20ல் இல்லாத பல கதைகள் மிகச்சிறப்பான கதையமைப்பை கொண்டிருந்தது. ஆனால் முடிவு எதிர்பாராத திருப்பத்தை கொண்டிருக்க வேண்டும் என்பது விதியாதலால் அவற்றை இணைக்க வில்லை. முடிந்தவரை விரைவில் இந்த 20க்கான விரிவான விமர்சனம் தருகிறேன்.

@ ஆதிமூலகிருஷ்ணன் & தமிழ்ப்பறவை

தேர்ந்தெடுக்கப் பட்ட 20 கதைகளுக்கான சிறிய அளவிலான விமர்சனம் எழுதி விரைவில் வெளியிடுகிறேன்.

-சென்ஷி

Beski said...

நன்றி ச மற்றும் செ.

//44. நறுமண தேவதை
ச: நல்ல சுவாரஸ்யமான கதை. முடிவு வேர எதிர்பார்த்தேன். இதுவும் நல்லாவே இருந்தது. ஆனா, ஐந்து நாள் முடிஞ்சு ஆறாவது நாள்தான் ப்ரியாவை அமுக்கப் போறான்னு கதைல இல்லியே?//
திரும்பப் படிக்க வைக்கலாம்னு ஒரு முயற்சி..
:)

//செ: புதிய களம். நல்ல விறுவிறுப்பான துவக்கம். முடிவை இன்னும் கொஞ்சம் யோசித்திருந்தால் நிச்சயம் இதுதான் முதல் பரிசுக்கு வந்திருக்கும்//
ரைட்டு.

CS. Mohan Kumar said...

டாப் 20 ல் நம்ம கதையும் தேர்வு செய்தமைக்கு நன்றி. தங்கள் கருத்துக்களும் சரியே. 20 கதைகளை வாசித்தேன். அப்பா சொன்ன நரிக்கதை - By- நிலா ரசிகன் - நிச்சயம் முதல் மூன்றுக்குள் வர கூடிய கதை. பார்க்கலாம்.. எனது ஊகம் சரியாகிறதா என..

Unknown said...

நான் சிலாகித்துப் படித்த ஒரு சில நல்ல கதைகள் வந்திருக்கிறது.20 பேருக்கும் வாழ்த்துக்கள்.

ஆனால் ரொமப வருத்தம் என்னவெனில்
இதில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கதை ஒன்று.தாங்க முடியவில்லை.இதை விட
அற்புதமான கதைகள் இருக்கு.

என்னாச்சு சென்ஷி? சர்வேசன்?

SurveySan said...

ரவிஷங்கர்,

ஐ ஃப் தெ பிஹோல்டர் ப்ரச்சனையா இருக்கலாம்.

எந்தக் கதைன்னு, ஈ.மடலில் எனக்கு தெரியப்படுத்துங்கள். விளக்கம் தர முடீஞ்சா சொல்றேன் :)

நன்றி.

surveysan2005 at yahoo . com

Shakthiprabha (Prabha Sridhar) said...

சர்வேசன், சென்ஷி அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் என் நன்றிகள். :)

இன்ப அதிர்ச்சியாக இருந்தது. நன்றி.
நான் அனுபவித்து மெச்சிய சில கதைகள் டாப் 20 இல் இருப்பது மேலும் சந்தோஷத்தைத் தருகிறது.

அன்புடன்,
ஷக்தி

சத்யராஜ்குமார் said...

20 பேருக்கும் வாழ்த்துக்கள். சிறப்பாக நடத்தி வரும் சர்வேசன் & சென்ஷி அவர்களின் உழைப்புக்கு நன்றியும், பாராட்டுக்களும்.

ஈ ரா said...

அன்புள்ள சர்வேசன் மற்றும் சென்ஷிக்கு..

பல பேரை கதை எழுதத் தூண்டி அனைத்தையும் படித்து விமர்சனம் செய்து ஒரு சிறப்பான பணியை செய்திருக்கிறீர்கள்.. தொடர்ந்து அருமையாக செயல்பட வாழ்த்துக்கள்..

இரண்டாம் சுற்றுக்கு தேர்வான நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்...

நன்றி..

அன்புடன் ஈ ரா

பின்னோக்கி said...

அட ! என் கதை (??!!!)யும் தேர்வு ஆனது ஒரு இன்ப அதிர்ச்சி. நன்றி சர்வேசன் & சென்ஷிக்கு.

இவ்வளவு கதைகளை படித்துவிட்டு தேர்வு செய்வது மிகவும் கடினமான வேலை.

எல்லாக் கதைகளையும் ரசித்தேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Unknown said...

//எந்தக் கதைன்னு, ஈ.மடலில் எனக்கு தெரியப்படுத்துங்கள். விளக்கம் தர முடீஞ்சா சொல்றேன் //

நன்றி சர்வேசன்.நடந்தது நடந்து விட்டது.மறப்போம்.

நான் 70 கதைகளுக்கும் விமர்சனம் எழுதி வைத்தேன்.ஆனால் வெளியிடவில்லை.

ஆனால் இப்போது 20 தவிர்த்து மீதி
50 கதைகளின் விமர்சனம் வெளியிடலாமா? மீதி 20, டாப்-2 வந்த பிறகு வெளியிடலாம் என்று நினைக்கிறேன்.

செய்யலாமா? ஏதாவது ஆட்சேபணை?

SurveySan said...

ரவிஷங்கர்,

டபுள் ஓ.கே.
மொத்த எழுபதுக்கும் போட்டால் சிறப்பா இரூக்கும், வெறும் ஐம்பதோரு நில்லாமல்.

குறிப்பா, புவனேஷ்வரிய மறந்துடாதீங்க. :)

Anonymous said...

//ஆனா, அந்த திருப்பத்தை வந்தடைய வேண்டிய மற்ற உபகரணங்கள் முந்தைய பத்திகளில் இல்லாதது, கதைக்கு வலு சேர்க்காமல் போனமாதிரி இருக்குது.//

சர்வேசன், கொஞ்சம் அதிகமா அதைப்பத்தி சொன்னா நச் Effect குறைவாயிடுமோன்னு நினைச்சு தான் லேசா சொல்லீட்டு விட்டு விட்டேன். அடுத்த முறை இதை கவனத்தில எடுத்துக்கறேன்.

Unknown said...

//டபுள் ஓ.கே.
மொத்த எழுபதுக்கும் போட்டால் சிறப்பா இரூக்கும், வெறும் ஐம்பதோரு நில்லாமல்//

20க்கும் சேர்த்து எழுதினால்,தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படும்.அதனால் வேண்டாம்.
காண்டு வைப்பார்கள்.

//குறிப்பா, புவனேஷ்வரிய மறந்துடாதீங்க.//

பின்னிடலாம் போங்க.

நன்றி

மணிகண்டன் said...

ஐயா - என்னோட கதை பச்சைல வந்து இருக்கு. தேங்க்ஸ். மற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். அடுத்தமுறை நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.

ஸ்ரீ தேவி said...

//ஆனா, லாஜிக்ல ஓட்டைன்னு பின்னூட்டன் நக்கீரர்கள் பாயிண்ட்டை புடிச்சுட்டாங்க.
//
//ஸ்ரீ... எனக்கு ஒரு டவுட்....
அது விச்சுவின் அம்மா கோல நோட் என்று அவனது டீச்சர் எப்படி கண்டுபிடித்தார்...
விஷாலின் பெயர் அதில் இருந்ததோ....//

Statistical Survey of Kola Notes என்ற பிரபல அமைப்பு எடுத்த சர்வேபடி தொண்ணூறு சதவீத பெண்கள் தங்கள் குழந்தைகளின் முடிந்த வருட நோட்டுகளையே கோல நோட்டுகளாக உபயோகிக்கிறார்கள். மீதி பத்து சதவீதம் பழைய டைரியை உபயோகிக்கிறார்கள். எனவே விச்சுவின் நோட்டிலும் அவன் பெயர் இருந்ததால் லாஜிக்கல் மிஸ்டேக் இருப்பதாக எனக்குப் படவில்லை! (மேற்படி சர்வேயை நம்பாதவர்கள் தங்கள் நண்பர்கள் உறவினர்கள் வீட்டு கோல நோட்டுகளை சரிபார்க்கவும்)

- ஸ்ரீ தேவி

SurveySan said...

மணிகண்டன்,
மஞ்ச பச்சையா தெரிஞ்சா, கொம்பேனி பொறுப்பில்லை :)
பங்களிப்பிற்கு நன்றி.

SurveySan said...

ஸ்ரீதேவி,

////Statistical Survey of Kola Notes என்ற பிரபல அமைப்பு ////

கதையில் இருந்த நச்சை விட, இது பெரிய நச்சா இருக்கே :)

Swami said...

அன்புள்ள சர்வேசனுக்கு,

விமர்சனதுக்கும் உங்கள் நேரத்திற்கும் நன்றிகள் பல

போட்டியின் அடுத்த கட்டதிற்கு முன்னேறிய அனைவருக்கும் வாழ்த்துகள்

பெனாத்தல் சுரேஷ் அவர்களின் கதையை தேர்வு செய்யாததில் சிறு வருத்தம்..எனக்கு அந்த கதையின் திருப்பம் பிடித்திருந்தது

ஆனால் நடுவர்களின் தீர்புக்கு இரு வேறு கருத்துகள் இல்லை..நீங்கள் கூறியது போல ‘எல்லாம் சப்ஜெக்ட்டிவ் டு த ரீடர்ஸ் டேஸ்ட். ’

அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me

ஸ்வர்ணரேக்கா said...

சர்வேஷன்ஜி.. சென்ஷிஜி.. போட்டிக்கும், கதையெல்லாம் படிச்சு போட்ட விமர்சனத்துக்கும்.. நன்றி.. நன்றி..

ரவிஷங்கர்ஜி...
உங்க விமர்சனத்தை கண்டிப்பா சொல்லுங்க...

சாணக்கியன் said...

/* ச: பெரீய்ய்ய கதை. ஆனா, சுவாரஸ்யமான உரையாடல். நச்சும் குட். நடிகையின் ப்ராக்டிகல் அப்ரோச் பிடிச்சிருக்கு
*/

உங்களுக்கு கதை பிடித்திருப்பது மகிழ்ச்சி சர்வேசன். ஆனால் பெரீய்ய கதை என சொல்வது எதனால்? 976 வார்த்தைகள் என வேர்ட் காட்டுகிறது. வசனங்கள் அதிகம் இருப்பதால் நிறைய வரிகள் ஒன்றின் கீழ் ஒன்றாக ஒரு வரி இடைவெளி விட்டு எழுதப்பட்டு இருக்கின்றன. மேலும் எனது டெம்ப்ளேட்டில் இடது மார்ஜினும் வலது மார்ஜினும் சற்று பெரியதாகவே உள்ளன...

நடுவராக நீங்களே பங்கேற்றது போட்டியை கொஞ்சம் நீர்த்துப்போகச் செய்துவிட்டது என நினைக்கிறேன். மேலும் கடைசி முடிவை எடுக்கப்போகும் நடுவர் நீங்கள் இல்லையெனும்போது மேலும் சிக்கல். ஏனெனில் உங்களிருவரால் தேர்ந்தெடுக்கப் படாத கதை இறுதி கட்ட நடுவருக்கு பிடித்தமானதாக இருக்கலாம் அல்லவா? :-)

எப்படியிருப்பினும் உங்கள் கலைச்சேவைக்கு வாழ்த்துகளும் நன்றியும்!

SurveySan said...

சாணக்யன்,

///உங்களுக்கு கதை பிடித்திருப்பது மகிழ்ச்சி சர்வேசன். ஆனால் பெரீய்ய கதை என சொல்வது எதனால்?/////

அதை படிக்கும்போது, பல உரையாடல்கள் மாறி மாறி வந்துகொண்டே இருப்பதை போல் ஒரு பீலிங் வந்தது.
ஆனா, இது நான் பல கதைகளை ஒரே மூச்சில் படிக்கும்போது ஏற்பட்ட பீலிங்கா கூட இருக்கலாம் :)

/////னெனில் உங்களிருவரால் தேர்ந்தெடுக்கப் படாத கதை இறுதி கட்ட நடுவருக்கு பிடித்தமானதாக இருக்கலாம் அல்லவா? :-)/////

எந்த creative போட்டிக்கும் வெற்றியாளரை தெரிவு செய்ய, ஒரு 'perfect approach' கிடையவே கிடையாது. அது உங்களுக்கும் தெரியும் :)