recent posts...

Friday, January 16, 2009

Hail Mary - ஒரு குட்டிப் பதிவு

குட்டியூண்டு பதிவு எழுதி ரொம்ப நாளாச்சு. இப்பெல்லாம், பதிவு எழுத ஒக்காந்தா வார்த்தைகள் அதிகமா சொரக்குது.
என் பழைய பதிவுகளின், ஒரே ஒரு நல்ல தன்மையே, குட்டியா சட்டுனு படிக்க முடியரதுதான்னு யாரோ ஒருத்தர் முன்ன ஒரு நாள் சொன்ன ஞாபகம்.
என்ன பண்றது, நானும் எழுத்தாளனா வளந்துதானே ஆகவேண்டி இருக்கு ;)

'குட்டி' மேட்டருக்கு வரேன்.
பல வருஷங்களா இந்த சாமியார்களின் தொல்லை தாங்க முடியரதில்லை.
'அம்மா பகவான்' ஒரு வயசான ஜோடீஸ், தினம் தினம் பேப்பர்ல, பெரிய பெரிய விளம்பரம் தராங்க. ஒவ்வொரு சிட்டியிலும் 'ப்ரார்த்தனைகளுக்கு'ன்னு ஒரு செல் பேசி எண். அப்பரம், ஒவ்வொரு ப்ரர்த்தனைக்கும், ஒவ்வொரு 'தரிசனத்துக்க்கும்' ஒவ்வொரு கூலியாம். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.
இவ்ளோ ஈஸியா எஸ்டாப்லிஷ் பண்ணி, எப்படிதான் கூட்டம் கூட்டறாங்களோப்பா. சூப்பர்!

அப்பரம், 'அம்மா' அமிர்தானந்தமயி விளம்பரங்கள் அதிகமா வருது. 'அம்மா வருகிறார்' ரீதி விளம்பரங்கள். அதைவிட பெருசா, அவங்க இஞ்சினியரிங் காலேஜுக்கு, அப்ளிகேஷன் மட்டும் 1000ரூவாயாம்.
இவ்ளோ ஈஸியா எஸ்டாப்லிஷ் பண்ணி, எப்படிதான் கூட்டம் கூட்டறாங்களோப்பா. சூப்பர்!

அப்பாலிக்கா, கேபிள் டிவியில் வரும் 'காட்'டிவி வகையராக்கள். கண்ணை மூடிக்கினே அவங்க நமக்காக ப்ரார்த்தனை பண்றாங்க. 1000 பேருக்கு ஆசி/miracle வழங்க ப்ரார்த்தனை செய்ய்யப் போறேன். யாரந்த 1000 அதிர்ஷ்டசாலிகள், உடனே அழைச்சு, 1000ரூவாய கொடுத்து உங்க பேரை பதிவு செய்யுங்கள். இடம் சீக்கிரம் காலியாகுது. உடனே அழையுங்கள். ப்ளா ப்ளா ப்ளா.
இவ்ளோ ஈஸியா எஸ்டாப்லிஷ் பண்ணி, எப்படிதான் கூட்டம் கூட்டறாங்களோப்பா. சூப்பர்!

இப்ப USAirways விமானம், பறவையால் தாக்கப்பட்டு பழுதடைந்தவுடன், அதன் 40 வருட அனுபவம் வாய்ந்த பைலட்டால், லாவகமா ஹட்ஸன் நதியில் இறக்கப்பட்டு, எல்லாரும் தப்பிக்க வச்சிருக்கு. சினிமால வர மாதிரியான நிகழ்வுகள், அசால்ட்டா செஞ்சு காமிச்சிருக்காரு அந்த பைலட்டு.
ஆனா, அந்த தில்லாலங்கடி பண்ரதுக்கு முன்னாடி, பயணிகளிடம் பேசிய பைலட், விளக்கவுரை கொடுத்ததும், "Hail Mary"ன்னு நம்ம ஊர், 'முருகா!' ஸ்டைல்ல சொல்லிட்டுத்தான் ப்ளேனை எறக்கியிருக்காரு.
உடனே, எல்லா பேப்பரிலும், இதை, 'miracle'னு முத்திரை குத்திட்டாங்க.

விமானிக்கு, Hail Maryயால், நன்மையா. Maryக்கு விமானியால் நன்மையா?

எது எப்படியோ, இந்த நிகழ்ச்சியை வைத்து, இன்னும் பல சுவிசேஷ கூட்டங்களில், வசூல் மழை நடத்தப்படும் என்பதில் யாருக்கும் ஐயம் வேண்டாம்! :)

Hail Mary!

சபரிமலை ஐயப்ப ஜோதி, 'miracle தெய்வ ஜோதி' அல்ல, சில ஆதிவாசிகள் ஏற்றி அணைக்கும் விளக்குன்னு இவ்ளோ வருஷத்துக்கு அப்பரம், இப்பதான் ஒத்துக்கிட்டது ஞாபகத்துக்கு வருது.
இவ்ளோ ஈஸியா எஸ்டாப்லிஷ் பண்ணி, எப்படிதான் கூட்டம் கூட்டறாங்களோப்பா. சூப்பர்!

சுவாமியே சரணம்!

11 comments:

SurveySan said...

நானும் எப்பயாச்சும் கோயிலுக்கு போர சராசரி பக்தன் தான்.

ஆனா, சில விஷயங்கள் எல்லாம் பாக்கும்போது, கோவிக் கண்ணனார் வழிக்கு போயிடலாமோன்னு தோணுது.

தெய்வம் இனி மெல்லச் சாகுமோ? அதுக்குதான் இந்த சாமியார்ஸ் எல்லாம் இவ்ளோ கஷ்டப்படறாங்களோ?

SurveySan said...

அடடா, பதிவு இஸ் நாட் ஸோ குட்டி.

என்னுள் வளர்ந்து வரும் எழுத்தாளனை, அடக்க முடியாது போலருக்கே, எழுத்து வந்து கொட்டுது ;)))

Unknown said...

In daily papers we can see that after attending amma bhagavan prayers they were able to finish off their debts...better instead of taking personal loans we can attend these vara deekashai and clear all the loans..howz the idea!

ஆ! இதழ்கள் said...

தெய்வம் இனி மெல்லச் சாகுமோ? அதுக்குதான் இந்த சாமியார்ஸ் எல்லாம் இவ்ளோ கஷ்டப்படறாங்களோ?//

சாமியார்கள் பண்றதுக்கு சாமி என்னங்க பண்ணும். என்னையத் தவிர யாரையும் கும்பிடாதனு சொல்லி சொல்லிதான் பாத்துச்சு. ஆனா இவிங்க ”நான் தான் அவன்” அப்பிடினுல்ல புருடா விட்டு சாமிக்கே சங்கடத்த குடுக்குறாங்ய.

சாமியத் தவிர யாரையும் கும்பிடாதீங்க, சாமி உங்க கிட்ட என்னைக்காவது பணம் கேட்டுச்சா?

தயவு செய்து சாமிய படுத்தாதீஙகபா...
:)

ஆ! இதழ்கள் said...

மேலேயுள்ள அனைத்து கேள்விகளும் உங்களுக்கு இல்ல சர்வே. சாமியார்கள follow பண்றவங்யலுக்கு.

சாமியார்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சாமிய ஒண்ணும் செய்ய முடியாது... கரீக்கட்டா?

SurveySan said...

mannar, thanks for the visit. newspapers should be instructed to follow some kind of scrutiny before publicising those ads.

SurveySan said...

///தயவு செய்து சாமிய படுத்தாதீஙகபா...
:)//

;) சாமிய சாமியார்கள்தாங்க படுத்தராங்க. நாம எல்லாரும் கொழம்பிதான் போயிருக்கோம்.
எவ்ளோ சாமியாருங்க. பக்கத்துக்குப் பக்கம் வித்யாசமான வெளம்பரம் தராங்க.

SurveySan said...

ஆ! இதழ்கள்,

//சாமியார்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சாமிய ஒண்ணும் செய்ய முடியாது... கரீக்கட்டா?//

சொல்லமுடியாது. இப்படியே போயிக்கிட்டு இருந்தா, நம்பிக்கை கொறையத்தான் செய்யும்.

தெரியாமத்தான் கேக்கறேன், இவங்க ஊர் ஊரா விசிட் அடிச்சு, நல்ல சேதி சொல்றாங்கன்னே வச்சுப்போம். அதுக்கு ஏன் வெளம்பரம் பண்ணி ஆளைச் சேக்கணும்?
யாருக்கு இதனால் லாபம்?

ரவி said...

ஜ்ன்ஹ்ஜ்ஞ்ஜ்ஹ்ஜ்

ரவி said...

மாடரேஷன் இருக்கான்னு செக் பண்ணேன்...

ஏன்னா ஒரு ரகசிய மேட்டர் என்று எழுதி அதை சொல்லி அதுக்கப்புறம் மாடரேஷன் இருக்கா இல்லையான்னு பாத்து அதை டெலீட் பண்ணி..

ச்சே..

ஆங் மேட்டர்...

நமீதாவுக்கு திருப்பதியில ரகசிய கல்யாணமாம்..

ராகுல் ட்ராவிட்டோட..

Anandha Loganathan said...

After looking at the heading , I thought it was post about "Hail Mary" song by 2pac.

But if you get a chance it is worth to listen to that song.